கர்மத்தின் வகையறிதல்

எனவே கிருஷ்ணரின் கூற்றுப்படி இருப்பது இரண்டே இரண்டு யோகங்கள்தாம். கர்மயோகம், மற்றும் ஞானயோகம். விளக்குவதற்கு வசதிக்காகவும், ஒரு குறிப்பிட்ட யோகம் எம்முறையில் பயிலப்படுகின்றது என்பதைப் பொறுத்தும் அவற்றுக்கு வெவ்வேறு பெயர்கள் கொடுப்பது வழக்கத்தில் இருந்து வருகின்றது. எனவேதான் ராஜயோகம், பக்தியோகம், உபாசனாயோகம் என்ற பிரிவுகளும் பேசப்படுகின்றன. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் மேற்கூறப்பட்ட மூன்று யோகங்களையும் கர்மயோகம் என்ற பிரிவுக்குள் அடக்கி விடலாம்.

யோகாப்பியாசம் இந்துக்களுடையதா?

முதலாவதாக, யோகம் இந்துக்களை சேர்ந்ததுதான். ஹிந்து மதம் என்பது இந்தியாவில் உள்ள, உருவ வழிப்பாட்டை அடிப்படையாகக்கொண்ட மத மரபுகள் அனைத்தும் சேர்ந்ததாகும். தொன்றுதொட்ட காலமாக இருந்துவரும் மரபுகளும் இதில் அடங்கும். எனவே, யோகம் இந்து மதத்தைவிடப் பழமையானது எனும் தீபக் சோப்ராவின் கூற்று வேடிக்கையான ஒன்று.