நவீனத் தமிழ் இலக்கியத்தில் அசோகமித்திரனின் பங்கு….

இதோ 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதையைப் படித்தப்போதும், இப்போது எழுதிய கதையைப் படித்த போதும் எனக்கு என்ன தோன்றுகிறது.  முதலில் ஆச்சரியம்.  முதல் கதையைப் படித்தப்போது அவருடைய தனித்துவம் தெளிவாகத் தெரிகிறது.  கதையில் அவர் பயன் படுத்திய வார்த்தைப் பிரயோகம் அபாரமாக இருக்கிறது.  கதையில் அவர் கொண்டுவரும் மௌனம் குறைவாக இருக்கிறது.

ஒற்றன் – அசோகமித்திரன்

This entry is part 4 of 72 in the series நூறு நூல்கள்

“மனமிருந்தால் யாவரும் கேளிர் என்பதுதான் எவ்வளவு சத்தியமானது!” இது அசோகமித்திரன் நாவல் அறிமுகத்தில் வியக்கும் வரிகள். தமிழில் எழுதுபவர்கள் அனைவரும் பெருமிதமாக சொல்லும் ஒரு சொற்றொடர் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்”. தேய்வழக்காகி, அர்த்தமில்லாததாக ஆன ஒரு சொல்லை நவீனத் தமிழிலக்கியத்தில் அழியாத் தடம் பதித்தவர் உபயோகிக்கும்போது பொருள் “ஒற்றன் – அசோகமித்திரன்”

அசோகமித்திரனுடன் ஓர் உரையாடல்

நாவல் வடிவத்துக்கே சில குறைகள் உண்டு.
அது நீளமா போயிடறதாலயே, கதையை வேறே வேற காலகட்டங்கள் சொல்றதாலயே, அதுலே கொஞ்சம் பிழைகள் வருவதற்கான சாத்தியங்கள் உண்டு. பர்ஃபக்ட் நாவல்னு தேர்ந்தெடுக்கறது ரொம்ப கஷ்டம். உலக இலக்கியத்திலே எனக்கு தெரிஞ்ச அளவிலே, அப்படி பர்ஃபெக்ட்னா – சின்ன நாவல்கள்லதான் கண்டுபிடிக்க முடியறது. ஆல்பர்ட் காமு எழுதினது, ‘த அவுட்சைடர்’ன்னு ஒண்ணு எடுத்துண்டாக்க, அது அப்படியே, ஒண்ணுமே பிரிக்கவே முடியாது, சேர்க்க முடியாது. கரெக்ட்டா இருக்கும். காஃப்காவோட நாவல்களும் கரெக்டா இருக்கும். ஆனா காஃப்காவே ஒரு லாங்கர் பீஸா, இன்னும் நீளமா எழுதணும்னு ஆசைப்பட்டிருக்கார் – அவருக்கு சார்ல்ஸ் டிக்கன்ஸ் மாதிரி எழுதணும்னு ஆசை, சார்ல்ஸ் டிக்கன்ஸ் அவரோட சமகாலத்தவர் இல்லை, செத்துப் போயிட்டாரு, ஆனா அவர் எவ்வளவு பேரை சந்தோஷப்படுத்தினார்… அந்த மாதிரி தானும் எழுதணும்னு அதை நினைச்சு ஒண்ணு எழுதினார், ‘அமெரிக்கா’னு. ஆனா அது அவ்வளவு வெற்றிகரமா வரலை. அது என்னன்னா இந்த நீளமும் – அதுலே ஏதோ சங்கடம் இருக்குனு எனக்கு தோணறது, இல்லே. என்னால பெருசாத்தான் நினைக்க முடியும், எழுத முடியும்னா இதுலெ ஒண்ணும் நாம யாரையும் தடை சொல்ல முடியாது. அதுதான் உத்தமமானதுன்னு சொன்னாக்க உத்தமமானதுன்னு நாம ஒத்துண்டுட்டா போறது.

அறிவிப்பு

இது சொல்வனத்தின் நூறாவது இதழ். இம்மகிழ்ச்சித் தருணத்தில் இதைச் சாத்தியமாக்கிய வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்புவோருக்கும் எங்கள் இதயப் பூர்வமான நன்றி. தமிழ் செம்மொழியாய் இருப்பதற்கு அடிப்படையில் இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அநாதி காலமாக இம்மொழியில் சிந்தித்து, பேசி, எழுதி வரும் கோடிக் கணக்கான சாமான்ய மக்கள். இன்னொன்று இதன் செழுமையையும், வளமையையும், சீரிளமைத் திறனையும் தம் எழுத்துகளின் மூலம் தொடர்ந்து கட்டிக் காத்து வரும் இலக்கிய கர்த்தாக்கள். பாரதியுடன் துவங்கிய நவீன கால தமிழ் இலக்கியத்தின் முதன்மை இடத்தில் இருக்கும் சிகரங்களில் ஒருவரான திரு. அசோகமித்திரன் அவர்களின் சிறப்பிதழாக இந்த நூறாவது இதழை வெளிக் கொணர்வதில் பேருவகையும், பெருமிதமும் கொள்கிறோம்.

ஔவியம் பேசேல்

எடுத்துக்காட்டுக்கு பங்கஜம் பங்கயம் ஆவதும், ஸர்ப்பம் சர்ப்பமாவதும். இலக்கணத்துக்கு அடங்கி, தமிழுக்குள் வேற்றுமொழிச் சொற்கள் பிரிவேசிப்பதன் தன்மை இதுதான். நான் சொல்ல வருவது, பல அரபுச் சொற்களும் வட சொற்களும் தமிழ்ச் சொல்லாக உருமாற்றம் பெறுவதற்கு ஔ எனும் இவ்வெழுத்து உதவி இருக்கிறது. அது மொழிக்குப் பெரிய தொண்டு என்று கருதலாம். ஆனால், ‘அப்ப அந்த மூதி மொழிக்குள்ளே என்னத்துக்கு? தூக்கிக் குப்பையிலே கடாசு’ என்றும் தனித்தமிழ்வாதி எவரும் உரைக்கக் கூடும்.

வாசகர் மறுவினை

அவள் அதை வைத்துக் கொண்டு காய்கறிகள் மட்டுமா நறுக்குவாள்,
தான் யார் யாரோடு என்ன பேச வேண்டுமென்று நினைக்கிறாளோ அந்தந்த மனிதர்கள் அந்த அருவாமணையாக உருவெடுத்து அவள் அன்பை, வசவுகளை, எரிச்சலை, சில வேளைகளில் அபூர்வமாக மன்னிப்பைத் தலை குனிந்து நின்று கேட்டுக் கொள்வதை அருகே இருந்து பார்த்திருக்கிறோம் இளவயதில்…

காகசஸ் மலைக்கைதி – பகுதி 3

ஒரு தடவை அவன் ஒரு தார்த்தாரியனைப் போன்ற பொம்மையை மூக்கு, கைகள், கால்கள், தார்த்தாரிய உடைகள் இவற்றுடன் உருவாக்கி, கூரையின் மேல் காட்சிக்கு வைத்தான். தார்த்தாரியப் பெண்கள் நீர் கொண்டு வர வெளியே வந்தபோது, எஜமானனின் பெண்ணான டீனா அவர்களைக் கூப்பிட்டு அதைக் காட்டினாள்; அவர்கள் தங்கள் பாத்திரங்களைக் கீழே வைத்து விட்டு நின்று கொண்டு அதைப் பார்த்துச் சிரித்தனர். ஜீலின் அந்த பொம்மையை எடுத்து அவர்களிடம் நீட்டினான். அவர்கள் சிரித்தனரே தவிர தைரியமாக அதை வாங்கிக் கொள்ளவில்லை. அவன் அந்த பொம்மையைக் கீழே வைத்து விட்டு, என்ன தான் ஆகிறதென்று பார்க்கலாம் என்று கொட்டிலினுள் சென்று விட்டான்.

தவளைகளின் பாடல்

பிராம்மணர்கள் உச்சாடனம் செய்யும் வேத ஒலிகள். வேத சமுதாயத்தின் முதன்மையான சடங்குகள். இருந்தாலும் தவளைகளின் ஒலிகளுடன் இணைத்து சிலேடையாக காட்டுகின்றன இப்பாடல்கள். ஏன்? இதை இயற்றியவர்களின் நோக்கம்தான் என்ன?

ஆயிரம் வருடங்கள் வாழ்வது எப்படி?

சொல்வனம் நூறாவது இதழ் வெளிவரும் இந்த வேளையில், அடுத்து ஆயிரமாவது இதழ் வரும் நேரம் வெகுதூரத்தில் இல்லை என்று யோசித்தபோது மனிதர்கள் நிகழ்காலத்து நூறு வருட வாழ்நாள் எல்லையை தாண்டி ஆயிரம் வருடங்கள் வாழமுடியுமா என்பது பற்றி எழுதத்தோன்றியது.

பயணத்தின் அடுத்தகட்டம்

இதெல்லாம் தான் என் வாழ்க்கை. அதற்கு அர்த்தம் தரும் கணங்கள். இந்த பழைய நினைவுகள் அவ்வப்போது மனதை வருடிச் செல்லும் போது மனத்திரையில் காட்சி தரும்போது ஒரு மெல்லிய இசை, மந்திர ஸ்தாயியில்,விளம்ப காலத்தில் இழையோடும். இந்த நினைவுகளை காற்றோடு கரைந்து விடாது நான் பதிவு செய்வது இந்த இதமான வருடல்களை இந்த எழுத்து இருக்கும் வரையாவது வாழ வைக்கும் என் ஆசையில் தான்.

மகரந்தம்

சீன ஜனாதிபதியின் மருமகன் எங்கெல்லாம் சொத்து வைத்திருக்கிறார் என்னும் தகவல் கசிந்திருக்கிறது. அவர் மட்டுமல்ல. அவரைப் போல் அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களின் 21,000த்து சொச்ச சொந்தபந்தங்களும் வெளிநாடுகளில் எங்கெல்லாம் செல்வம் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் எவ்வளவு பணம் என்பதையும் வெளியிட்டிருக்கிறார்கள். சீன நாட்டை விட்டு நான்கு ட்ரில்லியன் டாலர்கள் எப்படி சென்றது என்பது மட்டும் தெரியவில்லை. ஆனால், எவரிடம் சென்றடைந்திருக்கிறது என்பதை இப்போது அறிய முடிகிறது.

டைகர்

அலுவலகத்தில், மற்றவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தோம். கிட்டதட்ட எல்லோருமே எங்களைப் போன்ற விடுதிகளில்தான் இருந்தார்கள். இத்தனைக் கச்சிதமான அலங்காரங்களுடன் எல்லோரும் ஒவ்வொரு பொந்துகளிலிருந்து வந்துகொண்டிருந்தார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது.

லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் நேர்காணல்

ஒரு புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு மொழியாக்கம் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. மூல ஆசிரியரின் சொற்சித்திரங்கள் எனக்குப் பழக வேண்டியது மிக அவசியம். எல்லாவிதமான படைப்புகளையும் ஆங்கிலத்து மொழிமாற்றம் செய்கிறேன் என்றாலும், மெளனியின் படைப்பு அமைதிக்கும், அம்பையின் படைப்பு ஆழத்துக்கும் வித்தியாசம் இருக்குதானே? ஆங்கிலத்தில் படிக்கும்போது இந்த வித்தியாசத்தை வாசகரிடம் கடத்த வேண்டியது அவசியம்.

பேனாவே ஊன்றுகோலானதும்

நான் எழுதிய முதல் கதையை அப்படி ஒரு நம்பிக்கை இருந்ததால்தான் விடாமல் மாற்றி மாற்றிப் பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். சுமார் இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (1953) ஒரு சிறுகதைப் போட்டி அறிவிப்பைப் பார்த்தேன். முப்பது பக்கங்களில் ஒரு சிறு கதையை (!) எழுதி முடித்து அனுப்பினேன். அது ஓராண்டு காலம் கழித்துத் திரும்பியது.

நோயினால் மட்டுமல்ல

நோயாளி மெதுவாகத் தலையைத் தூக்குகிறார். அவருக்கு உதவி தேவைப்படுகிறது. அவருக்குக் குரல் எழும்பவில்லை. கையைத் தூக்குகிறார். அப்பக்கமாக நர்ஸ் ஒருத்தி போகிறாள். நோயாளி கையைச் சொடுக்கிய மாதிரி நர்ஸின் கவனத்தைப் பெறுகிறார்.

நியூஸ் ப்ரிண்ட் புலி – புலிக்கலைஞன் சிறுகதையை முன்வைத்து

ஆனால், சினிமாப் புலியாட்டங்களெல்லாம் அசோகமித்திரன் காட்டும் சித்திரத்தின் அருகே நிற்கமுடியாது. அந்தக் கதையில் வருகிற பாத்திரங்கள் மட்டுமல்ல, வாசிக்கும் நாமும் புலி நம்மைக் கடித்துவிடுமோ என்று பதறித் தவிக்குமளவு ஒரு நிஜமான கர்ஜனையை எழுத்தில் கொண்டுவந்திருப்பார்.

திலீப்குமாருடன் ஒரு சந்திப்பு

அசோகமித்திரன் தற்காலத்து முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். நவீனத்துவ இலக்கியத்தின் முதன்மைப் பிரதிநிதிகளில் ஒருவர். தன் சமகால தமிழ் புனைவு மொழியின் திசையையும் வீச்சையும் மிக அடக்கமாகவும் தன்முனைப்பின்றியும் கட்டமைத்தவர். அவரை நெடுங்காலம் நெருக்கமாக அறிந்திருக்கும் திரு திலீப் குமார் அவர்கள், சொல்வனம் கேட்டுக் கொண்டதன் பேரில் அசோகமித்திரன் குறித்து உரையாடச் சம்மதித்தார். நானும் திரு ரவிசங்கரும் அவரது அலுவலகத்தில் அவரைச் சந்தித்தோம்.

சன்னமான குரல்

“எனக்கு….இந்த ஆன்மீகம், தேடல் போன்ற வார்த்தைகளில் எல்லாம் நம்பிக்கையில்லை. சொல்லப் போனா அந்த மாதிரி வார்த்தைகளே எனக்குக் கொஞ்சம் பயம். பாருங்கோ, நான் ஒரு நல்ல டூத் பேஸ்டையே ரொம்பக் காலமா தேடிண்டிருக்கேன் அதுவே இன்னும் கிடைச்ச பாடில்ல, இதுல ஆன்மிகமெல்லாம்எப்படித் தேடறது”.

செகந்திராபாதிலிருந்து

கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் தேவைப்பட்ட கதைக்களத்தை உருவாக்கினார். அவர் மனிதர்களை விவரித்ததில் ஒரு மெய்ம்மை இருந்தது. எப்படியோ அவரால் மனிதர்களை மறைக்கும் அரசியல், சமூக, சமயப் பூச்சுகளை நீக்கி அவர்களை சாமானியர்களாகக் காட்ட முடிந்தது. அது ஒரு தமிழ் பிராமணர் மனைவியாக இருந்தாலும் சரி, திரைப்படங்களில் நடிக்கும் எக்ஸ்ட்ரா, தொழிலில் திண்டாடும் முஸ்லிம் பிசினஸ்மேன், ரப்பர் ட்யூபைச் செருப்பாகப் போட்டுக் கொண்டு சாலைப்பணி செய்யும் தொழிலாளி என்று யாராகவும் இருக்கட்டும், அவர்களை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. புற அடையாளங்களை நீக்கி மனிதர்களின் அடிப்படை மானுடத்தை வெளிப்படுத்தினார் அசோகமித்திரன்.

புனைவாற்றல் மிக்க வாழ்வியல் கட்டுரைகள்

`நான்` என்கிற அடையாளத்துடன் அவரது கட்டுரைகள் வெளிவந்தாலும் தன்னைப் பற்றிய பிரதாபங்கள் எவற்றையும் அவர் அதில் விட்டுச் செல்வதில்லை. தன்னைப்பற்றி அவர் எங்கேயும் பெருமிதம் கொள்வதில்லை. அரசியல் நிலைப்பாடு என்று எதையும் அவர் எடுப்பதில்லை. ஆனால் மனித செயல்பாடுகளின் நாகரிகம் குறித்த ஓர் உள்ளார்ந்த அரசியல் நோக்கு அவரது எழுத்துகளில் ஆங்காங்கே வெளிப்பட்டுக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அதிர்வின்றி எதையும் நிதானமாகப் பார்க்கும் அவரது எழுத்துகள் எல்லாத் தரப்பு வாசகர்களையும் கவர்கிறது. இன்றும்கூட ஒரு கட்டுரைத்தொகுப்பிலோ பண்டி

தஞ்சை மறுவிஜயம்

அந்த இரவால் பாதிக்கப்படாத தொழிலாளியே அந்தக் கிராமத்தில் கிடையாது. அவர்களுடைய பயங்கர இழப்புகளைப் பற்றி அமைதியாகச் சொல்கிறார்கள். வருடத்தில் ஒழுங்காக மூன்று மாதம், நான்கு மாதம்தான் வேலை கிடைக்கும். அப்போது நாள் ஒன்றுக்கு ரூபாய் மூன்று கூலி. இந்தக் கூலியை விட்டால் வேறு வழியில்லை. இந்தக் கூலியை வைத்து ஒரு குடும்பமே ஒரு வருட காலத்தைத் தள்ள வேண்டும். எங்களுக்கென்று கையகல நிலம் ஒதுக்கினால் கால் வயிற்றுக் கஞ்சிக்கு அகும். அதற்கும் வழியில்லையென்றால் இருப்பதற்குச் செத்து மடியலாம் என்று உணர்ச்சி வசப்படாமல் கூறுகிறார்கள்.

அசோகமித்திரனும் காலத்தின் குழந்தைகளும்

க‌தை நாய‌க‌ன் பிடிக்க‌ப் போகும் ர‌யில், ர‌யில் இல்லை. வ‌ய‌தின் பெட்டிக‌ள் இணைக்க‌ப்ப‌ட்ட‌ கால‌த்தின் ஓட்ட‌ம் என்ப‌து போல‌த் தோன்றுகிற‌து. இந்த‌ யோச‌னையின் க‌ங்குக்கு விசிறி வீசுவ‌து போல‌, “இப்படி ஓடிக்கொண்டே இருந்தால் ரயிலைப் பிடித்து விட முடியுமா? முடியலாம். ரயிலின் வேகம் குறைவாக இருந்து, தன் வேகம் அதிகமாக இருந்தால். ஆனால் ஒரு சூத்திரத்தின்படி பின்னால் ஓடுகிறவன் முன்னே போவதை எட்டிப்பிடிக்க முடிவதில்லை. இருந்த போதிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

குழந்தைகள்

அப்பெட்டியில் நிறையப் பேர் நின்றுகொண்டுகூடப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். வந்தனாவின் கண்ணுக்கு நிறைய பெண்களே தென்பட்டார்கள். சிவப்பு, கறுப்பு, மாநிரம், உயரம், குட்டை, தலைவாரிப் பின்னிக் கொண்டவர்கள், முடி வெட்டிக் கொண்டு நடிகைகள் போலத் தலைமயிர் வைத்துக்கொண்டவர்கள், புடவை கட்டியவர்கள், ஜீன்ஸ் அணிந்தவர்கள், நெற்றிக்குப் பொட்டு இட்டுக் கொண்டவர்கள், இட்டுக் கொள்ளாதவர்கள்..எவ்வளவுதான் தைரியசாலிகள் போல இருந்தாலும் கல்யாணம் செய்து வைக்க அப்பா அம்மா உதவி வேண்டியிருந்தது.

அசோகமித்திரன் தந்த கதைப் புத்தங்களின் கதை

நான் அசோகமித்திரனை முதலில் சந்தித்தது வரலாற்று ஆசிரியர்களால் அடிக்கடி நினைவு கூறப்படக்கூடிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக இல்லாவிட்டாலும் என்னுடைய எழுத்து இலக்கிய ஜாதகத்தில் மாற்றம் எற்பட்ட காரணமாயிற்று. தமிழில் நான் எழுதியதை முதலில் அவர்தான் பிரசுரித்தார். என்னை எழுதும்படி ஊக்குவித்தார். ஊக்குவித்துக் கொண்டே இருக்கிறார்.

அயோவா, அன்று வேறு கிழமை, அசோகமித்திரன்…

அவர் கதைகளில் கீழ்தட்டு மத்திய தர மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தின் ஊடே வெளிப்படும் மனிதாபிமானம், உறவில் ஏற்படும் சிக்கல்கள், எதிர்மறையான பாத்திரங்கள் மூலம் தீட்டப்படும் சித்திரங்கள் மிக அழகாக அங்கதத்துடன் சொல்லப்பட்டிருக்கும்.

நானும், அசோகமித்திரன் அவர்களும்

அசோகமித்திரனின் வீச்சும், பரப்பும், ஆழமும், இன்னமும் பூரணமாக ஆராயவோ எழுதவோபடவில்லை. அவரை நகர மத்யதர வாழ்க்கையைப் பற்றி எழுதுபவர் என்றவர்களுக்கும், அவரை வறுமையில்வாடுபவராக எழுதியவர்களுக்கும் அவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை. தாம் தோராயமாய் அனுமானித்ததை உண்மை போல் சொல்கிறார்கள். வறுமையில்இருப்பது வேறு, வாடுவது வேறு.

அசோகமித்தி​ரனின் “கிணறு” சிறுகதையை முன்வைத்து

தாகூரின் “பசித்த கற்கள்” அசோகமித்திரனின் “கிணறு” சிறுகதையிலிருந்து ஒரு விதத்தில் வித்தியாசமானது.யதார்த்தத்தில் அழுத்தமாக காலூன்றியிருக்கும் அசோகமித்திரனின் மற்ற கதைகள் போன்றே“கிணறும்” யதார்த்தத்தில் நிலை கொண்டது. கதை உள்ளே கதை என்ற உத்தியில் அமைந்திருக்கும்“பசித்த கற்கள்” மாற்று மெய்ம்மை பாவனையுடன் கற்பனாவாதத்தின் கொண்டாட்டமாக எழுதப்பட்டிருக்கும்

அமைதியின் அசாதாரணக் கூர்மை

அசோகமித்ரன் ஆங்கில மொழியுலகில் ஓரளவுக்கு நேரடியாக இயங்கிவந்தபோதும் அவருடைய உச்சம் தமிழில்தான் நிகழ்ந்திருக்கிறது. மந்தமான, நோய்க்கூறு மனநிலை வாய்த்த பிராந்திய அரசியல் சூழலிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருடைய படைப்புலகத்திற்கு புதிய வாசல்களை நிர்மாணித்த புண்ணியம் அவருடைய மொழிபெயர்ப்பாளர்களான லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம், கல்யாணராமன் மற்றும் கோமதி நாராயணன் போன்றோரைச் சேரும். இத்தனைக்கும் மொழிமாற்ற பிரசுரங்களில் கடைநிலையில் வைத்து கௌரவிக்கப்படும் ஆன்மாக்கள் மொழிபெயர்ப்பாளர்கள்தான்.

உயிர்த்தெழும் நினைவுகள்/கடந்த காலம்

சில நினைவுகளை வேண்டுமென்றே ஒதுக்கி வைத்தாலும் சரி காலப்போக்கில் தானாகவே மங்கினாலும் சரி, அவை நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்து தக்க நேரத்தில், நாமே எதிர்ப்பாராத போது வெளிவருகின்றன. அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் போல கடந்த காலம் பற்றி சொல்வதற்கு எப்போதும் ஏதாவது மிச்சம் இருந்து கொண்டே இருக்கிறது.