வாழ்க்கையை மீட்டெடுக்கும் கற்பனை

ஜோ ஜெர்மனியால் கைப்பற்றப்பட்ட Prague நகரத்திலிருந்து தப்பித்து வந்திருக்கிறான். ஹூடினி (Houdini) போல் புகழ் பெற்ற ‘Escape Artist’ஆக பயிற்சி எடுத்துள்ள அவன், ஓவியக் கல்லூரியில் பயின்றுள்ள ஓவியனும்கூட. தன் குடும்பத்தையும் அமெரிக்காவிற்கு அழைத்து வருவதே ஜோவின் லட்சியமாக உள்ளது. இந்த இருவரின் சந்திப்பு, அவர்கள் கூட்டாக காமிக்ஸ் துறையில் அடையப்போகும் வெற்றிகளுக்கு அச்சாரம் இடுகிறது. அவர்கள் உருவாக்கும் காமிக்ஸ் நாயகர்கள்/ கதைகளுக்கு சவால் விடும் அற்புத சாகசங்கள் அவர்கள் வாழ்க்கையில் நடக்கின்றன. இங்கு சாகசம், போன்ற வார்த்தைகள் பக்கத்திற்கு பக்கம் சண்டைகள், பரபரப்பு போன்றவற்றைக் குறிக்கவில்லை. ஷேபன் (Chabon) ஒரு இடத்தில் “cabinet of mysteries that was the life of an ordinary man” என்று சொல்வது போல்…

உயிர்த்தெழும் நினைவுகள்/கடந்த காலம்

சில நினைவுகளை வேண்டுமென்றே ஒதுக்கி வைத்தாலும் சரி காலப்போக்கில் தானாகவே மங்கினாலும் சரி, அவை நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்து தக்க நேரத்தில், நாமே எதிர்ப்பாராத போது வெளிவருகின்றன. அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் போல கடந்த காலம் பற்றி சொல்வதற்கு எப்போதும் ஏதாவது மிச்சம் இருந்து கொண்டே இருக்கிறது.

சொல்லப்பட்ட கதையும், சொல்லில் வராத கதைகளும்

இதில் எந்தவகை உணர்வாக இருந்தாலும் அது இயல்பாகக் கிளர்ந்து எழ வேண்டும் என்பதைத்தான் முக்கியமானதாக நான் எண்ணுகிறேன். வாசகர் தன் மேதமையைக் காட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகக் கதையைப் பார்க்காமல், படைப்பைப் பற்றித் தான் உண்மையாக உணர்வதை, அதைப் பகிர்வதற்கான ஒரு வடிகாலாக அவரது எதிர்வினை இருப்பது நல்லது.

'டிசம்பர் பத்து' – ஜ்யார்ஜ் சாண்டர்ஸ்

அவரின் மற்றப் படைப்புக்களை படித்து விட்டு ஸாண்டர்ஸ் பாணி என்று இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். ஒன்று சமகாலத்திய அரசியல்/சமூகப் போக்குக்களைக் கூர்ந்து கவனித்து அவற்றைப் பற்றிய அவதானிப்புக்களைத் தன் கதைகளின் கருப்பொருட்களாக (themes) பெரும்பாலும் வைத்துள்ளது. இன்னொன்று இந்தக் கருப்பொருட்களை குறியீடுகளாகக் கொண்ட கதைகளாக மாற்றி, ஒரு புதிய உலகை உருவாக்கும் அவருடைய அசாதாரணமான கற்பனைத் திறன்.

அந்தரங்கச் சுரங்கம்: ஸாங்க்டம்-டெனீஸ் மைனாவின் நாவல்

நாவலின் இறுதி முக்கிய முடிச்சு அவிழும் இடத்திற்கான முன்னெடுப்புக்களை(lead) இயல்பானதாக உருவாக்க மினா முயன்றாலும், சற்று அள்ளித்தெளித்த அவசர கோலம் போல் தோன்றுகிறது. ஆனால் நாவலை மொத்தமாக பலவீனமாக ஆக்கி இருக்கக்கூடிய சூழலை மினா மீட்டு விடுகிறார். அந்த முக்கிய வெளிப்பாடு (revelation) நடந்த பின், நாவல் இப்படித்தான் பயணிக்கும்/பயணிக்கமுடியும் என நாம் நினைத்தால் அதற்கு மாறாக செல்கிறார் மினா.

டேவிட் ஃபாஸ்டர் வாலெஸ் (1962-2008) – எழுத்தாளர் அறிமுகம்

இவர் படைப்புக்களின் வடிவம், அதில் உள்ள உத்திகளில் ஜான் பார்த், பிஞ்சன், காடிஸ் போன்றோரை சற்றே நினைவு படுத்துவார். வாசகன் அப்படியே கதைக்குள் மூழ்கி விட வேண்டும் என்பது போன்ற கோட்பாடுகளுக்கு நேர்மாறாக, ஆசிரியர் இடையிடையே வாசகனுடன் உரையாடி அவன் ஒரு கதையைத் தான் படித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வை ஏற்படுத்துவது, நாவலுக்குள் இன்னொரு நாவலோ அல்லது சிறுகதையோ ஒரு கதாபாத்திரத்தால் எழுதப்படுவது, அடிக்குறிப்புக்கள், அடைப்புக்குறிகள் பயன்படுத்துவது என பல யுத்திகள் இவர் படைப்புக்களில் உண்டு.

வேலை சிதைக்கும் மனிதர்- ஜாஷுவா ஃபெர்ரிஸின் நாவலில் அலுவலகம்

தொண்ணூறுகளின் மத்தியில்/இறுதியில் வேலைக்கு சேர்ந்து விட்டவர்களுக்கு, 95 முதல் 2000 வரையிலான ஆண்டுகளை ‘It was the best of times, it was the worst of times,’ என்று குறிப்பிட்டால் புரியும். அதற்கு முன் நினைத்தே பார்த்திராத சம்பளம், அதைத் தவிரவும் பல சலுகைகள், என அவர்தம் பெற்றோர் பல பத்தாண்டுகள் வேலை செய்து ஈட்டிய ஊதியத்தை வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்திலேயே பார்த்த காலம். 2000இல் உலக பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டு, வேலை சூழல் முற்றிலும் மாறியது. கனவுகள் துர்சொப்பனங்களாக மாறின, மிக அதிக சம்பளம் என்பது போய், வேலை நிலைத்தால் போதும் என்ற நிலை.

It Happened in Boston? – புத்தக விமரிசனம்

நாவலின் முதல் வாக்கியத்திலிருந்தே ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. இது அதி புனைவா, மர்ம நாவலா, திகில் நாவலா, கலைஞர்கள், கலை உலகம், அதில் நடக்கும் மோசடிகள் பற்றியதா, அல்லது ஒரு சிதைந்து கொண்டிருக்கும் மனதின் நாட்குறிப்பா என்று இறுதி வரை எந்த முடிவுக்கும் வரமுடியாமல், நாவலின் பெயரிடப்படாத கதைசொல்லியை, அவன் மனதை நாம் பின்தொடகிறோம். ஒரு கதையை நேர்கோட்டில் நடக்கும் சம்பவங்களாக எழுதி, பக்கங்களை முன் பின்னாக மாற்றிப் பிரசுரித்தால் எப்படிஇருக்குமோ அப்படி உள்ளது இது.

மீட்பரிடம் தம்மை ஒப்புக்கொடுக்கும் ஆடுகள்

அவுட்டர் ஹார்னர் நாட்டின் ஜனாதிபதிக்கு ஏழு வயிறுகள், ஐந்து மீசைகள், இன்னர் ஹார்னர் நாடோ ஒரே ஒரு ஆள் மட்டும் நிற்கக்கூடிய அளவிற்கு சிறிய நாடு. என்னடா இது என்று நீங்கள் திடுக்கிட்டால் , நீங்கள் ஸாண்டர்ஸின் உலகிற்குப் புதியவராக இருப்பீர்கள். தயக்கமில்லாமல் இந்த உலகில் நீங்கள் நுழையலாம், நாம் கற்பனை கூடச் செய்ய முடியாத உருவகங்களாகவும், குறியீடுகளாகவும் விரியும் ஒரு அபத்தமான, ஆனால் அலாதியான உலகு அவர் விரிப்பது. அதே நேரம் நம் உலகிற்கும் நெருக்கமான, அதனாலேயே பீதியளிக்கும் உலகை அதில் நீங்கள் காண்பீர்கள்.

பால் ஆஸ்டரின் தி ந்யூ யார்க் ட்ரிலொஜி

மனிதனின் சுயம்/அடையாளம் (identity) பற்றிய கேள்விகள் நேரடியாகவும், குறியீடுகளாகவும் மூன்று கதைகளில் முழுதும் உள்ளன. பெயர் மட்டுமா ஒரு மனிதனின்/பொருளின்/இடத்தின் அடையாளம் என்ற கேள்வியும், பெயர் மாற்றினால் அந்த அடையாளமும் மாறி விடுமா என்ற கேள்வியும் மூன்று கதைகளிலும் எழுப்பப்படுகின்றன.

மைகெல் கானலி

கானலியின் நாவல்களில் உள்ள ஒரு சிறப்பம்சம், சட்டச் செயல்முறைகள் (legal process), விசாரணை நடைமுறைகள் பற்றிய விவரிப்புகள். பொதுவாக குற்றப் புனைவுகள் விசாரணை, அதன் இறுதியில் குற்றவாளி கைது என்று முடியும். ஆனால் இவர் நாவல்களில் நாம் அதிகம் அறியாத விசாரணை நடைமுறைகள் பற்றி குறிப்புகள் இருக்கும். உதாரணமாக சம்பவ புத்தகம் (incident book ). இந்த புத்தகம் விசாரணை அதிகாரி வைத்திருப்பது, இதில் குற்றம் முதலில் அவர் கவனத்துக்கு வந்தது முதல், விசாரணையின் ஒவ்வொரு அடியையும் குறித்து வைப்பார். அதே போல் குற்றவாளி கைது செய்யப்பட்ட பின் நடக்கும் விசாரணை பற்றியும் துல்லிய விவரிப்பு இருக்கும்.

அர்னல்டூர் – ஐஸ்லேன்ட் குற்றப் புனைவு எழுத்தாளர்

ஐஸ்லேன்ட் என்றவுடன் நினைவுக்கு வருவது என்ன? எங்கும் பனி படர்ந்த பிரதேசம், கடுங் குளிர், மக்கள் தொகையும் குறைவாக உள்ளதால் அதன் தனிமையும் வெறுமையுமே நம் நினைவுக்கு வருகின்றன. மற்றபடி அந்நாட்டை பற்றி நமக்கு அதிகம் தெரியாது, அந்த நாட்டு இலக்கியம் குறித்தும் நாம் பெரிய அளவில் அறிவதில்லை. ஆனால் இந்நாட்டிற்கு நீண்ட இலக்கியப் பாரம்பரியம் உண்டு.

ஹென்னிங் மான்கெல் – பன்முக ஆளுமை கொண்ட முன்னோடி

மான்கெல் வெறும் குற்றப் புனைவு எழுத்தாளர் மட்டுமல்ல, அவரின் ஆளுமை இன்னும் விரிவானது. ஒரு முழுமையான பார்வையைத் தரவேண்டும் என்பதற்காக அவருடைய நாடகப்பணி, பிற எழுத்துக்கள் பற்றி இத்தனை விரிவாகச் சொல்கிறேன். இன்ஸ்பெக்டர் வலாண்டர் தொடரைத் தவிர, தனி நாவல்கள், சிறாருக்கான இரு தொடர் நாவல்கள், நாடகங்கள், திரைக்கதைகள் என பலவற்றில் மான்கெல் ஈடுபட்டுள்ளார்.

குற்றப்புனைவுகளின் எல்லையை விரிவாக்கிய இயன் ரான்கின்

1980களில் மேற்கு ஐரோப்பாவின் மிக மோசமான போதைப்பொருள் பிரச்சினைகளில் ஒன்றாக எடின்பரா இருந்தது. அது ஹெராயின் வர்த்தகத்தின் முக்கியமான அளிபாதையாக இருந்தது. அது தவிர எய்ட்ஸால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்களும் அங்குதான் இருந்தனர். யாரும் அதைப் பற்றிப் பேசுவதாக இல்லை. யாரும் அது குறித்து எதுவும் செய்வதாகவும் இல்லை. பிரச்சினைகள் பார்வைக்கு மறைவாக இருந்ததால் எல்லாரும் எல்லாமும் நன்றாக இருப்பதான பாவனையில் இருந்தனர். சரிதான், இந்த நிஜ உலக சமகால விஷயங்களை யாராவது நாவல்களில் எழுதியாக வேண்டும் என்று நான் நினைத்தேன். ஏனென்றால் அதை அப்போது எவரும் செய்து கொண்டிருக்கவில்லை

கோலின் டெக்ஸ்டர் – ‘இன்ஸ்பெக்டர் மோர்ஸ்’

இன்ஸ்பெக்டர் மோர்ஸ் தொடரில் உள்ள சுவையான நகைமுரண் என்னவென்றால் டெக்ஸ்டரின் பாத்திரப்படைப்பே நாவல்களின் மையக்கருவிலிருந்து நம் கவனத்தைத் திசைதிருப்பிவிடும். அந்த அளவுக்கு மோர்ஸ் இந்த தொடர் முழுவதும் வியாபித்துள்ளார். மோர்ஸ் எப்படிப்பட்ட ஆசாமி? இதை ஒற்றை வரியில் சொல்ல முடியாது. இன்ஸ்பெக்டர் மோர்ஸ் கதாபாத்திரத்தைப் பெரும்பாலும் தன்னையொத்த விருப்பு வெறுப்புகள், குணநலன்கள் கொண்டவராகவே டெக்ஸ்டர் சித்தரித்திருக்கிறார்.

வால் மக்டர்மிட் – மரபை உடைத்த பெண்குரல்

பொதுவாகச் சமீப காலம் வரை, பெண்களும், பாலியல் சிறுபான்மையினரும் பொதுவெளியிலும், படைப்புத்துறையிலும் எள்ளலாகவே சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள். குறிப்பாக குற்றப்புனைவுகளில் பாலியல் சிறுபான்மையினர் ஒன்று குரூர மனம் கொண்டவர்களாக, குற்றவாளிகளாக இருப்பார்கள் அல்லது குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். ஆனால் மக்டர்மிட்டின் படைப்புகளில் பெண்கள் மற்றும் பாலியல் சிறுபான்மையினர், முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள். அவர்களுடைய பாலினம், பாலியல் தெரிவுகள் அவர்களுடைய தொழில்முறை வாழ்க்கையை அதிகம் பாதிப்பதில்லை.

குற்றப்புனைவு – ஓர் அறிமுகம்

குற்றப்புனைவின் சிறந்த நாவல்கள் இன்று இலக்கியப் புத்தகங்கள் என்ன பேசுகின்றனவோ, அவற்றையே பேசுகின்றன. அறநெறிகளைக் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. சாதாரண மனிதர்களை அசாதாரணமான சூழலில் நிறுத்தியபின், ‘இச்சூழலில் நீங்கள் இருந்திருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?’ என்று வாசகர்களைக் கேட்கின்றன. ‘இப்படிப்பட்ட குற்றங்கள் நடப்பதை அனுமதிக்கும் உலகில் வசிப்பதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?’ என்று கேட்கின்றன. இலக்கியத்தையும், குற்றப்புனைவையும் நான் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. சில சிறந்த குற்றப்புனைவுகள் சிறந்த இலக்கியப்படைப்புகளாகவும், சில சிறந்த இலக்கியப்படைப்புகள், சிறந்த குற்றப்புனைவுகளாகவும் இருக்கின்றன.