பொதுவாக, புனைகதைகளைப் புனைக்கதைகளாகவே கருதுவதுதான் எக்காலத்திற்கும் ஏற்றது. புனைக்கதை அரை நிஜத்தைத்தான் கூறுகிறது. அரை நிஜம் நிஜமாகாது. ஆனால் புனைக்கதையின் ஒரு தனிக்குணமான அந்த அரைநிஜம்தான் புனைக்கதைக்கு உயிரூட்டுகிறது.
ஆசிரியர்: அசோகமித்திரன்
இரண்டு விரல் தட்டச்சு
”நீ எப்போ கத்துண்டே?” என்று நான் கேட்டேன்.
“இந்த ஊருக்கு வந்தப்புறம்தான். இது தெரிஞ்சுக்கலேன்னா நம்பளுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடைக்குமான்னு சொல்லமுடியாது.”
“நான் கொஞ்சம் அடிக்கிறேன்.”
“ரொம்ப அழுத்தி அழுத்தி அடிக்காதே. இது பழசு. ஒரு குழந்தை மாதிரி இதை வச்சுக்கணும். இது போல உபயோகமான பொருள் உலகத்திலேயே கிடையாது.”
இப்படித்தான் எங்கள் வீட்டில் ஒரு டைப்ரைட்டர் வந்து சேர்ந்தது. அவ்வளவு பெரிய மேஜையே அப்பா வாங்கினது டைப்ரைட்டருக்குத்தானோ என்று தோன்றியது. அப்பா எவ்வளவு சொல்லியும் எனக்கு இரண்டு விரல் கொண்டுதான் அடிக்க வந்தது. “நீ அடிக்கறதைப் பாத்தா ஒனக்கு எவனும் வேலை தர மாட்டான்,” என்று அப்பா ஒரு முறை கோபித்துக்கொண்டார். நானும் எவ்வளவோ முயன்றேன். மோதிர விரல், சுண்டு விரல் விரைத்து நின்றன.
கோட்டை
மாட்டை வைத்துக்கொண்டு நாங்கள் பட்ட பாடு யாருக்கும் தெரியவில்லை. உலகிலேயே நாங்கள் மட்டும்தான் கறந்த பாலைக் குடிப்பது போல எல்லாரும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். நாங்கள் பல நாட்கள் எங்கள் அண்டை அயல் வீட்டாருக்கு இலவசமாக மோர் கொடுத்திருக்கிறோம். மோருக்கு முதலில் பாலைக் காய்ச்சவேண்டும். பால் ஆறிய பிறகு துளி தயிர் விட்டு அதைத் தயிராக்க வேண்டும். அப்புறம் தயிர் கடைய வேண்டும். மிகுந்த நேரமும் பொறுமையும் தேவைப்படும் பணி அது.
காலத்தின் கட்டணம்
ஐராவதம் என்ற ஆர். சுவாமிநாதன் அவர் ‘கோணல்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையிலிருந்து எனக்கு அறிமுகமானார். அவரை ஒரு பையன் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் முன்னுரையில் நல்ல மனமுதிர்ச்சியை உணர முடிந்தது. அப்போது அவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு சென்னை தியாகராயநகர் நடேசன் தெருவில் வசித்துவந்தார். ரிசர்வ் வங்கியில் “காலத்தின் கட்டணம்”
பேனாவே ஊன்றுகோலானதும்
நான் எழுதிய முதல் கதையை அப்படி ஒரு நம்பிக்கை இருந்ததால்தான் விடாமல் மாற்றி மாற்றிப் பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். சுமார் இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (1953) ஒரு சிறுகதைப் போட்டி அறிவிப்பைப் பார்த்தேன். முப்பது பக்கங்களில் ஒரு சிறு கதையை (!) எழுதி முடித்து அனுப்பினேன். அது ஓராண்டு காலம் கழித்துத் திரும்பியது.
நோயினால் மட்டுமல்ல
நோயாளி மெதுவாகத் தலையைத் தூக்குகிறார். அவருக்கு உதவி தேவைப்படுகிறது. அவருக்குக் குரல் எழும்பவில்லை. கையைத் தூக்குகிறார். அப்பக்கமாக நர்ஸ் ஒருத்தி போகிறாள். நோயாளி கையைச் சொடுக்கிய மாதிரி நர்ஸின் கவனத்தைப் பெறுகிறார்.
தஞ்சை மறுவிஜயம்
அந்த இரவால் பாதிக்கப்படாத தொழிலாளியே அந்தக் கிராமத்தில் கிடையாது. அவர்களுடைய பயங்கர இழப்புகளைப் பற்றி அமைதியாகச் சொல்கிறார்கள். வருடத்தில் ஒழுங்காக மூன்று மாதம், நான்கு மாதம்தான் வேலை கிடைக்கும். அப்போது நாள் ஒன்றுக்கு ரூபாய் மூன்று கூலி. இந்தக் கூலியை விட்டால் வேறு வழியில்லை. இந்தக் கூலியை வைத்து ஒரு குடும்பமே ஒரு வருட காலத்தைத் தள்ள வேண்டும். எங்களுக்கென்று கையகல நிலம் ஒதுக்கினால் கால் வயிற்றுக் கஞ்சிக்கு அகும். அதற்கும் வழியில்லையென்றால் இருப்பதற்குச் செத்து மடியலாம் என்று உணர்ச்சி வசப்படாமல் கூறுகிறார்கள்.
குழந்தைகள்
அப்பெட்டியில் நிறையப் பேர் நின்றுகொண்டுகூடப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். வந்தனாவின் கண்ணுக்கு நிறைய பெண்களே தென்பட்டார்கள். சிவப்பு, கறுப்பு, மாநிரம், உயரம், குட்டை, தலைவாரிப் பின்னிக் கொண்டவர்கள், முடி வெட்டிக் கொண்டு நடிகைகள் போலத் தலைமயிர் வைத்துக்கொண்டவர்கள், புடவை கட்டியவர்கள், ஜீன்ஸ் அணிந்தவர்கள், நெற்றிக்குப் பொட்டு இட்டுக் கொண்டவர்கள், இட்டுக் கொள்ளாதவர்கள்..எவ்வளவுதான் தைரியசாலிகள் போல இருந்தாலும் கல்யாணம் செய்து வைக்க அப்பா அம்மா உதவி வேண்டியிருந்தது.
எதற்கு மொழிபெயர்ப்பு?
தமிழரில் மிகப் பலருக்கு இரண்டாம் மொழிப் பரிச்சயம் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. அவர்களுக்கு மொழிபெயர்ப்புகளும் கிடைக்காமல் போய் விட்டால் அது பெரும் இழப்பே. மொழிபெயர்ப்புகள் மூல மொழி அறிந்தவர்களுக்கு இல்லை. மொழிபெயர்க்கப்பட்ட மொழிக்காரர்களுக்குப் படிக்கக் கிடைக்கும் முயற்சி..
சபாஷ்… சரியான போட்டி
இரண்டாம் உலக யுத்தத்துக்கு ஐரோப்பா தயாராகிக் கொண்டிருந்த நாட்களில்தான் இந்தியாவில் அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவில் இசை மற்றும் நாட்டியம் சில புதிய இயந்திர சாதனங்களால் தேர்ந்த அல்லது பயிற்சி பெற்ற ரசிகர்கள் மட்டுமல்லாமல் அணைத்து மக்களும் பகிர்ந்து கொள்ளக் கூடியதொரு சூழ்நிலையை உருவாக்கியது. பேசும் படம், இடைத் தட்டு, வானொலி ஆகிய சாதனங்கள் பொழுதுபோக்கு அம்சங்களைவிடப் பாரம்பரியக் கலாசார வெளிப்பாடுகளை அதிகம் நம்பியிருந்தன. ஒரு சிறிய டீக்கடையானாலும் அங்கு ஒரு கிராமபோன் நாள் முழுவதும் ஒலித்துக் கண்டிருக்கும்.
’துருவ நட்சத்திரம்’ – குறித்து இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன்
சொல்வனத்தின் சமீபத்திய வெளியீடான ‘துருவ நட்சத்திரம்’ புத்தகம் குறித்து மூத்த படைப்பாளிகளின் கருத்துகள்.
க.நா.சுப்பிரமணியன் பற்றிய புதிய நூல்
க.நா.சு தொகுத்து வெளியிட்ட நூல்கள் ஒவ்வொன்றிலும் அவருடைய விரிவான அறிமுகக் கட்டுரை இருக்கும். இலக்கியக்கட்டுரைகள் என்றால் எளிதில் புரிந்துகொள்ள முடியாதபடி இருக்க வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம் ஏற்பட்டுவிட்டது. க.நா.சு இலக்கியவாதிகள் மட்டுமல்லாமல் அனைவரும் அந்த
விவாதத்தில் பங்கு பெறவேண்டும் என்று நினைத்தவர். ஆதலால் எளிய நடையில் அவருடைய கட்டுரைகள் இருக்கும்.