ரோபாட்களுக்கு விருப்பு வருமா?- ஜூடேயா பேர்ல்:நேர்காணல்

பேர்ல்: ரோபோட்டுகள் நிகழ்வுச் சான்றுகளுக்கு மாறாக, “நீ இன்னும் நன்றாகச் செய்திருக்க வேண்டும்,” என்பதுபோல், ஒன்றுடனொன்று தகவல் பரிமாறிக் கொண்டால், அப்போது அது முதல் தடயமாக இருக்கும். கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் ரோபோட் அணி ஒன்று இந்த மொழியில் பேசிக் கொள்ளத் துவங்கினால் அப்போது அவற்றுக்கு சுய இச்சை உணர்வு இருக்கிறது என்பது நமக்குத் தெரிய வரும். “ நீ பந்தை எனக்கு பாஸ் செய்திருக்க வேண்டும்- உனக்காகக் காத்திருந்தேன், ஆனால் நீ பாஸ் செய்யவில்லை!”. “நீ செய்திருக்க வேண்டும்,” என்று சொன்னால், நீ என்ன செய்தாயோ, உன்னை அப்படிச் செய்யச் செய்த உந்துதல் எதுவாக இருந்தாலும் அதை நீ கட்டுப்படுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று பொருள். ஆனால் நீ கட்டுப்படுத்தத் தவறிவிட்டாய் என்று சொல்வது, எனவே முதல் அறிகுறி உரையாடலாய் இருக்கும்; அடுத்தது, இன்னும் நல்ல கால்பந்தாட்டம்.

வெங்கட் சாமிநாதன் மறைவைத் தொடர்ந்து – திலீப்குமாருடன் ஓர் உரையாடல்

1990களில் நாம் ஒரு திருப்புமுனையை எதிர்கொண்டோம். சமூக, அரசியல் தளத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் இலக்கியத்திலும் எதிரொலித்தன. வெங்கட் சாமிநாதன் கலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்தவர். ஆனால், இலக்கியம் சமூகப் பிரக்ஞையும் அரசியல் விழிப்பும் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கியது. ஒரு புத்தகத்தைப் பற்றி வெங்கட் சாமிநாதன் என்ன எழுதியிருக்கிறார் என்று கேட்கும் நிலை மாறி, அவர் எழுதினால் நல்லது, எழுதாவிட்டால் ஒன்றும் மோசமில்லை என்ற நிலை உருவானது. அதுவரை சிறுபத்திரிக்கைச் சூழலில் இயங்கி வந்த வெங்கட் சாமிநாதன் முழுமையாக புறக்கணிக்கப்பட்டார்.

மொழியாக்கங்கள் குறித்த உரையாடல்- பகுதி 2

மகாலிங்கம் என்பவர் சினுவா அச்செபேவின் “Things Fall Apart” என்ற நாவலை மிக அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். கடந்த காலத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் சாகித்ய அகாதெமியினர் இந்தி மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துப் பதிப்பித்த பல நூல்களும் தரமாக இருக்கின்றன. கிருஷ்ணமூர்த்தி வங்க மொழி நூல்களை மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலம் என்று பார்த்தால், N. கல்யாணராமனின் “Farewell to Mahatma” மிக நன்றாக வந்திருக்கிறது. அடுத்து பதிப்பிக்கப்படவிருக்கும் பூமணியின் வெக்கை நாவல் மொழிபெயர்ப்பு மிக உயர்ந்த தளத்தைத் தொட்டிருக்கிறது. பத்மா நாராயணன் லா.ச. ராவின் அபிதா நாவலை மிக நன்றாக மொழிபெயர்த்திருக்கிறார். இவர்கள் இருவர் பெயரையும் சொல்லக் காரணம், இவர்கள் ஒரு வகையில் முன்னோடிகளாக இருக்கின்றனர்- பூமணியையும் லா.ச. ரா வையும் வாசிக்கத்தக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாது என்ற மூடநம்பிக்கையை இவர்கள் தகர்த்திருக்கின்றனர். ரசித்து வாசிக்கப்படக்கூடிய சரளமான ஆங்கில மொழியாக்கங்களை அளித்திருக்கின்றனர். அவசியம் படித்துப் பார்க்க வேண்டிய நூல்கள் இவை.

மொழியாக்கங்கள் குறித்த ஓர் உரையாடல் – பகுதி1

மொழிபெயர்ப்புகள், ஒரு பண்பாட்டில் உள்ளதை வேறொரு பண்பாட்டுக்குக் கொண்டு செல்கின்றன. அடிப்படை மனித உணர்வுகள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் புறச்சூழல்கள் மற்றும் வரலாறு சார்ந்த பல்வேறு காரணங்களால் வெவ்வேறு மக்களிடையே பல்வகைப்பட்ட பண்பாட்டு வேற்றுமைகளைப் பார்க்க முடிகிறது, அடிப்படை மானுட உணர்வுகளே வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன. ஒரு பண்பாட்டின் செறிவு என்பது நுண்விவரங்களில்தான் இருக்கிறது. ஆனால், மனித மனம் எதையும் எளிமைப்படுத்தியே புரிந்து கொள்கிறது, பிற பண்பாடுகளைப் புரிந்து கொள்ள அது உதவாது.

திலீப்குமாருடன் ஒரு சந்திப்பு

அசோகமித்திரன் தற்காலத்து முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். நவீனத்துவ இலக்கியத்தின் முதன்மைப் பிரதிநிதிகளில் ஒருவர். தன் சமகால தமிழ் புனைவு மொழியின் திசையையும் வீச்சையும் மிக அடக்கமாகவும் தன்முனைப்பின்றியும் கட்டமைத்தவர். அவரை நெடுங்காலம் நெருக்கமாக அறிந்திருக்கும் திரு திலீப் குமார் அவர்கள், சொல்வனம் கேட்டுக் கொண்டதன் பேரில் அசோகமித்திரன் குறித்து உரையாடச் சம்மதித்தார். நானும் திரு ரவிசங்கரும் அவரது அலுவலகத்தில் அவரைச் சந்தித்தோம்.

காற்றின் சிறகினிலே… – சாரல் விருது விழா

நாஞ்சில் நாடன் உரையில் குறிப்பிடத்தக்க விஷயம் அவர் வண்ணநிலவனைப் புதுமைப் பித்தனின் நேரடி வாரிசு என்று அறிவித்ததுதான். “புதுமைப்பித்தனையும் கடந்து சென்றுவிட்ட எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் வண்ணநிலவன்தான் புதுமைப்பித்தனின் நேரடி வாரிசு” என்று அவர் குறிப்பிட்டார். வண்ணதாசனைப் பற்றி நிறைய எழுதிவிட்ட காரணத்தால் அன்றைய உரை முழுக்க முழுக்க வண்ணநிலவனுக்காக இருந்தது. “வண்ணநிலவன் இல்லையென்றால் நாஞ்சில் நாடன் என்ற நாவலாசிரியன் இன்று உங்கள் முன் நின்று கொண்டிருக்க மாட்டான்” என்று வண்ணநிலவனின் தாக்கத்தை வெளிப்படுத்தினார் நாஞ்சில்.

வெங்கட் சாமிநாதன்- வாதங்களும் விவாதங்களும், புத்தக வெளியீட்டு விழா

“வெங்கட் சாமிநாதன்- வாதங்களும் விவாதங்களும்” என்ற இந்தத் தொகுதி அவரது பங்களிப்பை அனைத்து கோணங்களிலும் அணுகி, அதன் நிறை குறைகளைப் பதிவு செய்திருக்கிறது. தமிழ் பண்பாட்டின் ஐம்பது ஆண்டு கால விமரிசனக் குரலை அதன் எதிர்வினைகளின் வழியாக அடையாளப்படுத்தும் இந்த நூல் இவ்வாண்டு மட்டுமல்ல, தமிழில் இதுவரை வெளிவந்த எந்த நூலுக்கும் இணையான முக்கியத்துவம் கொண்ட ஒன்று. இதைத் தொகுத்த திரு பா.அகிலன், திலீப் குமார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியவர்கள் நம் நன்றிக்குரியவர்கள்.