என் கனவு

“பணத்தை அந்தப் பெண்ணிடம் கொடுக்காதே மைக்கேல், நீயே நேரில் போ. அவள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதைக் கொஞ்சம் பார்.. அவளைப் பார்க்க வேண்டாம் என்று நினைத்தால் பார்க்க வேண்டாம். அவன் அங்கே இல்லை, யாருமே அங்கே இல்லை”
மைக்கேல் இவானோவிச் உடல் நடுங்க ஆவேசமாகக் கத்தினார்.
“என்னை ஏன் இப்படி வதைக்கிறாய்.. இது விருந்தினர்களுக்கு இழைக்கும் பாவமில்லையா”
அலெக்ஸாண்ட்ரா டிமிட்ரேய்வ்னா இடத்தை விட்டு எழுந்திருந்தாள். அவ்வாறு அவரிடம் முறையிட்டதில் நெகிழ்ந்து போயிருந்ததால் அவள் கண்களில் கண்ணீர் வரப் பார்த்தது.

மூன்று துறவிகள்

‘’ஒருவர் குள்ளமாக முதுகு வளைந்து இருப்பார்; ஒரு மதகுருவுக்குரிய அங்கியை அணிந்திருக்கும் அவர் மிக மிக வயதானவர்;அவருக்கு நிச்சயம் நூறு வயதுக்கு மேல் இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது.வெண்மையான அவரது தாடியில் கூட இலேசான பச்சை நிறம் படர ஆரம்பித்து விட்டது,அவ்வளவு வயதானவர் அவர்;ஆனால் எப்போதும் ஒரு புன்முறுவலுடனேயே அவர் இருப்பார்; அவரது முகம் அப்போதுதான் சொர்க்கத்திலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்த தேவதையின் முகம் போன்ற பிரகாசத்துடன் இருக்கும்.இரண்டாமவர் உயரமானவர்;அவரும் கூட வயதானவர்தான்.அவர் குடியானவனைப் போன்ற கிழிசலான ஆடைகளை உடுத்தியிருப்பார்.அகலமான அவரது தாடி பழுப்புக்கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும்.அவர் நல்ல வலுவானவர்.நான் அவருக்கு உதவி செய்ய வருவதற்குள் ஏதோ ஒரு பாத்திரத்தை நிமிர்த்துவதைப் போலத் தனியாகவே என் படகை நிமிர்த்தி வைத்து விட்டார் அவர்.அவரும் கூட அன்பானவர்;கலகலப்பானவர். மூன்றாமவர் உயரமானவர்;பனியைப் போன்ற வெண்மையான அவரது தாடி அவரது முழங்கால் வரை நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும்.உரம் படைத்த அவரது கண்ணிமைகள் சற்றே முன் துருத்தியபடி தொங்கிக் கொண்டிருக்கும்.;தன் கழுத்தைச் சுற்றித் தொங்க விட்டிருக்கும் ஒரு பாயைத் தவிர வேறு எதையும் அவர் அணிவதில்லை’’

கரடி வேட்டை

தனக்குத் தீங்கு செய்யாமல் ஒதுங்கிப் போன பிறகும் கூட மூர்க்காவேசத்துடன் விரட்டி விரட்டி அந்த மிருகத்தை அழித்துத் தீர்த்த பிறகே அடங்கும் அவனது வெறியை அப்பட்டமாக முன் வைக்கிறது லியோ டால்ஸ்டாய் எழுதியிருக்கும் ‘கரடி வேட்டை’என்னும் சிறுகதை. விலங்கு – மனிதன் என்னும் இரு நிலைகளை எதிரெதிரே வைத்து உண்மையில் யார் விலங்கு என்னும் தேடலுக்குள் இட்டுச் செல்கிறார் டால்ஸ்டாய். இந்தப் படைப்பில் விவரிக்கப்படும் சம்பவம், டால்ஸ்டாய் தன் வாலிபப் பருவத்தில் நேரடியாகவே கண்டுணர்ந்த வேட்டை அனுபவம் எனவும் இது நடந்து இருபது ஆண்டுகளுக்குப் பின் வேட்டையாடுவதை அவர் நிறுத்தி விட்டார் என்றும் குறிப்புக் கிடைக்கிறது.

காகசஸ் மலைக் கைதி – 6

ஒருநாள் அவன் அந்தக் குழியின் தரையில் அமர்ந்து கொண்டு, விடுதலை பற்றி யோசித்த வண்ணம் மிகவும் மனந்தளர்ந்து இருந்தான்; அப்போது திடீரென்று அவன் மடியில் ஒரு கேக் விழுந்தது, பின் இன்னுமொன்று, பின் ஏராளமான செர்ரிப் பழங்கள் என விழுந்தன. அவன் மேலே அண்ணாந்து பார்த்த போது அங்கு டீனாவைக் கண்டான். அவள் அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு ஓடி விட்டாள். உடனே ஜீலின் சிந்திக்கலானான், ‘டீனாவால் எனக்கு உதவ முடியாதா?’

காகசஸ் மலைக் கைதி – 5

எல்லாம் முழுவதுமாக அமைதியான உடன், ஜீலின் சுவற்றினடியே குழியினுள் சப்தமின்றித் தவழ்ந்து வெளியே போய், கஸ்டீலினிடம் ரகசியக் குரலில், “வா!” என்றான். கஸ்டீலினும் தவழ்ந்து வெளியே வந்தான்; ஆனால் வரும்பொழுது அவனது காலில் ஒரு கல் இடறவே, சப்தம் ஏற்பட்டது. எஜமானனிடத்தில் துஷ்டத் தனம் மிகுந்த ஓல்யாஷின் என்ற பெயர் கொண்ட, புள்ளிகள் நிறைந்த ஒரு காவல் நாய் இருந்தது. ஓல்யாஷின் இந்த சப்தத்தைக் கேட்டதும் குரைத்தபடி குதிக்க ஆரம்பிக்கவே, மற்ற நாய்களும் அதனுடன் சேர்ந்து கொண்டு அதையே செய்தன.

காகசஸ் மலைக்கைதி – பகுதி 4

‘நல்லது,’ என எண்ணினான் ஜீலின், ‘இப்போது எனக்கு வழி தெரிந்து விட்டது; ஆகையால் தப்பிச் செல்ல வேளை வந்து விட்டது.’ அவன் அன்றிரவே தப்பி ஓடிவிட எண்ணினான். இரவுகள் இருளாக இருந்தன- அது தேய்பிறை நிலவாகும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாகத் தார்த்தாரியர்கள் அன்று இரவே வீடு வந்து விட்டனர். அவர்கள் வழக்கமாக மாட்டு மந்தைகளை ஓட்டிக் கொண்டும், உற்சாகமாகவும் திரும்பி வருவர். ஆனால் இந்த முறை மாட்டு மந்தைகள் இல்லை. அவர்கள் கொண்டு வந்தது …

காகசஸ் மலைக்கைதி – பகுதி 3

ஒரு தடவை அவன் ஒரு தார்த்தாரியனைப் போன்ற பொம்மையை மூக்கு, கைகள், கால்கள், தார்த்தாரிய உடைகள் இவற்றுடன் உருவாக்கி, கூரையின் மேல் காட்சிக்கு வைத்தான். தார்த்தாரியப் பெண்கள் நீர் கொண்டு வர வெளியே வந்தபோது, எஜமானனின் பெண்ணான டீனா அவர்களைக் கூப்பிட்டு அதைக் காட்டினாள்; அவர்கள் தங்கள் பாத்திரங்களைக் கீழே வைத்து விட்டு நின்று கொண்டு அதைப் பார்த்துச் சிரித்தனர். ஜீலின் அந்த பொம்மையை எடுத்து அவர்களிடம் நீட்டினான். அவர்கள் சிரித்தனரே தவிர தைரியமாக அதை வாங்கிக் கொள்ளவில்லை. அவன் அந்த பொம்மையைக் கீழே வைத்து விட்டு, என்ன தான் ஆகிறதென்று பார்க்கலாம் என்று கொட்டிலினுள் சென்று விட்டான்.

காகசஸ் மலைக் கைதி – 2

ஒரு சிறிய பெண் ஓடோடி வந்தாள்: அவளுக்குப் பதின்மூன்று வயதிருக்கலாம்; மெலிந்து ஒல்லியாக, கரிய தார்த்தாரியனை ஜாடையில் ஒத்து இருந்தாள். அவள் அவனுடைய மகள் என்பது புலனாகியது. அவளுக்கும் கரிய விழிகளுடன் முகம் பார்க்க நன்றாக இருந்தது. அகலமான கைகளையுடைய நீளமான ஒரு நீல நிறச் சட்டையை இடுப்பில் கட்டும் கச்சையில்லாமல் அணிந்திருந்தாள். அவளுடைய ஆடையின் ஓரங்களிலும் முன்புறத்திலும் சிகப்பு நிறத் துணியால் தைக்கப் பட்டிருந்தது. அவள் காற்குழாயும் செருப்புகளும் அணிந்து அதன் மீது உயரமான குதிகால்களைக் கொண்ட காலணிகளையும் அணிந்திருந்தாள். அவள் கழுத்தில், வெள்ளி ருஷ்யக் காசுகளாலான ஒரு மாலை இருந்தது. அவள் தலையைத் துணியால் மூடவில்லை; அவளது கருநிறத் தலைமுடி ரிப்பனால் பின்னப்பட்டு ஜரிகைப் பின்னலாலும் வெள்ளிக் காசுகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

காகசஸ் மலைக் கைதி-1

காகசஸ் பகுதியில் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. சாலைகள் இரவில் மட்டுமின்றிப் பகலிலும் கூடப் பாதுகாப்பற்றி-ருந்தன. யாராவது ரஷ்யன் அவனது கோட்டையிலிருந்து சிறிது தூரம் நடந்தாலோ, அல்லது குதிரையில் சவாரி செய்தாலோ, தார்த்தாரியர்கள் அவனைக் கொல்லவோ அல்லது மலை மீது இழுத்துச் சென்று விடவோ செய்தார்கள். அதனால் வாரத்திற்கு இருமுறை ராணுவ வீரர் குழு ஒன்று ஒரு கோட்டையிலிருந்து புறப்பட்டு அடுத்த கோட்டை வரை அணிவகுத்துச் செல்லும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.