கன்னட அரசன் சிக்க தேவராஜன். இவனும் நரசிம்மனைப்போல புதிய நீர்தேக்கங்களை ஏற்படுத்தி தமிழ்நாட்டுக்கு நீர் கிடைக்காமல் செய்தான். அப்போது தஞ்சையை ஆண்டுகொண்டிருந்த சரபோஜியும் மதுரையை ஆண்டுகொண்டிருந்த ராணி மங்கம்மாளும் அந்த நீர்தேக்கங்களை உடைக்க கூட்டாகப் படையை அனுப்பிவைத்தனர். ஆனால் படை அங்கு போய்ச்சேருவதற்கு முன்னாலேயே பெருவெள்ளம் ஏற்பட்டு நீர்த்தேக்கங்கள் தாமாகவே உடைந்துபோயின.
Category: பயணக்கட்டுரை
ஈரநிலம்
அதற்குள் இரும்பு கழி கோபுர சிப்பியை உடைத்திருந்தது. அதன் உள்ளில் இருந்து நண்டு போன்ற ஏதோ ஒரு ஜீவராசி சூரியனில் பள பளக்கும் மஞ்சள் நிறக் கல் ஒன்றை அதன் துடிக்கும் கால்களால் நகர்த்திக் கொண்டிருந்தது. கல்லை, உடைந்த ஓட்டில் இருந்து, எடுத்து ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையே பிடித்து, சூரியனை நோக்கி காண்பித்து, ‘கலர் பாத்தீங்களா? புஷ்பராகக் கல். அதிர்ஷ்ட கல். மோதரம் செஞ்சு விரல்ல மாட்டுனீங்கன்னா மனசுக்கு ரொம்ப அமைதி கிடைக்கும். அவ்வளவு சக்தி’ என்று நிமிடத்தில் ஜோதிடராக உரு மாறினான் இளைஞன்.
கல்வெட்டுகள்
ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன் அசோகரின் கல்வெட்டை மறைத்திருந்த சிறு காடு இன்று ஒரு பூங்காவாக உருவெடுத்திருக்கிறது. இயற்கையிடமிருந்து பாதுகாக்க ஒரு மண்டபமும், மனிதனிடமிருந்து காக்க இரும்புக் கம்பி தடுப்புகளையும் தாங்கி நிற்கிறது இன்று. சுற்றிலும் அலங்காரப் புல் தரை. விளிம்பில் இருந்த புதர்களை செதுக்கிக் கொண்டிருந்தார் முண்டாசு கட்டியத் தோட்டக்காரர். ஒரு சிறு பாறையில் சாய்ந்து நின்ற அலைபேசியில் இருந்து ஹிந்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.
ஜெய் ஜகந்நாத்!
மரக் கம்பங்களை நட்டு, அவற்றை தெய்வமாகப் பாவித்து, அந்தத் தெய்வங்களைச் சுற்றி ஒரு சிறு சந்நிதியை நிறுவி வழிபடுவது என்பது இந்தப் பிராந்தியத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தொல்குடிகளின் மரபு என்கின்றனர் சரித்திர ஆய்வாளர்கள். ஸ்தம்பேஷ்வரி (ஸ்தம்பம் – கம்பம்) காந்துணிதேவி என்று பல பெயர்கள் கொண்டுள்ள இந்த மூர்த்தங்கள் இன்றும் வழிபாட்டில் உள்ளன. இப்படி நெடுங்காலமாக திரண்டு வரும் நம்பிக்கையின் ஒரு வெளிப்பாடு தான் பூரி ஜகந்நாதரின் அமைப்பு என்பது ஆய்வாளர்களின் பார்வை
இன்றைய ஆஸ்த்ரியா – ஒரு விரைவுப் பார்வை
வியன்னா மக்கள், அதிகம் தங்களது செல்வத்தை வெளிக்காட்டாதவர்கள் என்றே பட்டது. சுறுசுறுப்பாக, நகரம் எங்கும் பொதுப் போக்குவரத்தில் பயணித்த வண்ணம் இருக்கிறார்கள். ஹோட்டல் இளைஞர், எங்களுக்கு வியன்னாவின் மிக முக்கிய சப்வே ரயில் பாதைகள், ட்ராம் மற்றும் பஸ் பற்றி பயணத்தில் விளக்கிக் கொண்டே வந்தார். ஒரு முக்கிய ரயில் ஸ்டேஷனில் என்னிடம், “இங்கு இறங்கினால், டான்யூப் நதியில் படகுகள் மூலம் பயணிக்கலாம். இங்கிருந்து பக்கத்து நாடான ஸ்லோவாக்கியாவிற்குக் (Slovakia) கூடப் பயணம் செய்யலாம்” என்றார்.
கொடைகளின் தாயகம் குச்சிங்
அம்மையிடமிருந்து தொப்புள்கொடி வழியாகப் பிள்ளை எப்படி உயிர்ச்சத்துகளை எடுத்துக்கொள்கிறதோ, அப்படி இந்த உயிரினமும், பிரண்டைக்கொடியிலிருந்து தனக்குத்தேவையானச் சத்துகளை உறிஞ்சி, பின் மொட்டு வைக்கிறது. ஒரு இரஃப்லேசியா துவான் முதே பூ மலர ஒன்பது மாதங்கள் எடுக்கும். விரிந்தப் பூவின் விட்டம் ஒரு மீட்டர் அளவுக்குக்கூட இருக்கும். ஆனால் மலர்ந்த பின்னர் ஏழு நாட்களுக்குள் அது உதிர்ந்து விடும்.
சோ(வ்)லுக்குக் குட்பை
சியோலின் நவீன வாழ்க்கை முறை, ஷாப்பிங் மோகம், அழகு கலாச்சாரம், உணவு என அனைத்தும் ஒன்றிணைந்த இடம் மியோங்டாங். மாலையில் உணவுச் சந்தையாக அவதாரமெடுக்கிறது. ஆக, கூட்டத்திற்குப் பஞ்சமில்லை. இது ஒரு சந்தைத் தெரு மட்டுமல்ல, கொரியாவிற்குச் செல்லும் ஒவ்வொரு பயணியும் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டிய இடமும் கூட!
யூகான் – ஒரு ஆர்க்டிக் வாழ்க்கை முறை
குளிர், அனைத்து கனேடியர்களுக்கும் பரிச்சயம். ஆனால், வெறும் 2 மணி நேர வெளிச்சம் என்பது ஒரு ஆர்க்டிக் அம்சம். நீண்ட, இருண்ட குளிர்காலத்தில், வீட்டில், பல பிரத்யேக மின் விளக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். இவை அவர்களுக்கு சூரிய ஒளி தரும் Vitamin D -ஐ கொடுக்கிறது. வீட்டிற்குள் பிரகாசமாக வைத்திருப்பதால், அவர்களின் மனநிலையும் ஓரளவிற்கு சரியாகிறது. சூரிய ஒளியின் மிக முக்கிய ஒரு அம்சத்தை, யூகான் பயணம் கற்றுத் தந்தது.
தென்கொரியப் பயணம் – சியோல் அனுபவங்கள்
ஓடோடி வரும் குதிரைகள், ஆயுதங்களைச் சுமந்த வீரர்கள், வண்ணமயமான உடைகள், கட்டுக்கோப்பான நடைமுறைகள், பாரம்பரிய ஆயுதங்கள், இசை என்று ஒரு விழாவைப் போல காட்சிப்படுத்தியிருந்தார்கள். கடமையாக அனைத்தையும் வீடியோ எடுத்துக் கொண்டோம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நின்றதில் அப்பொழுதே கால் வலிக்க ஆரம்பித்து விட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் உள்ளே சென்று பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்கப் பார்க்க இன்பம்.
‘யூ அஸ் ஹோட்டல்’ செக்விபோ நகர்
000 வருடங்களுக்கு முன் கடலில் வெடித்த எரிமலை உருவாக்கிய ‘Tuff Cone’ என்ற அரிய பாறை வகை தான் இந்த Ilchulbong கிரேட்டர். 600 மீட்டர் அகலம் கொண்ட பாறை கடல் மட்டத்திலிருந்து 182 மீட்டர் உயரத்தில் பச்சைப்பசேல் என்றிருக்கிறது! கண்ணுக்கு குளிர்ச்சியாக சுற்றிலும் நீல வண்ண கடலும், சிலுசிலு கடற்காற்றும், பசுமைத்தோட்டமுமாய் ரம்மியமாக இருந்தது! இங்கு 240-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.
சாயா – தோசை – ஆப்ரேஷன் சிந்தூர்
வாழ்ந்த இடம் என்பது சாதாரண வார்த்தை. அண்ணனின் அரியணையில் தான் அமரமாட்டேன் என சொல்லி அயோத்தி நகரில் கூட வாழாமல், ஊரின் ஒதுக்குப்புரத்தில் ஒரு துறவியைப்போல் அண்ணனின் வனவாசம் முடிந்து வரும்வரையில் அண்ணனின் பாதுகைகளையே அண்ணனாகவும் , அரசனாகவும் கருதி அதையே அரியணையில் ஏற்றி அண்ணன் திரும்பி வரும்வரையில் ஒரு காபந்து அரசை நடத்தி அண்ணனுக்காக காத்திருந்த இடம்.
தென்கொரியப் பயணம்-1: ஜெஜூ தீவு
சியோலில் இருந்து ஒரு மணிநேர தொலைவில் இருக்கிறது ‘இஞ்சான்’ நகரம். உயர் அடுக்குமாடிக் கட்டிடங்களுடன் தென்கொரியாவின் பெருநகரங்களில் ஒன்று. வெளியே வந்தவுடன் எனக்கு முன்பே வேறொரு விமானத்தில் ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே வந்து சேர்ந்திருந்த மகளைக் கண்டதும் ஒரே சந்தோஷம். இப்பொழுது ‘ஜெஜூ’ தீவு செல்ல உள்நாட்டு ‘கிம்போ’ விமான நிலையம் செல்ல வேண்டும். அதற்கு சப்வே ரயிலைப் பிடிக்க வேண்டும். ஆங்கிலத்தில் வழித்தடங்கள் பற்றின விவரங்கள் தெளிவாக எழுதப்பட்டிருந்தன.
வாலில்லாக் குரங்குகளும், பட்டாம்பூச்சிகளும்
டார்ச்சின் வெளிச்சத்தில் மரத்தில் இருந்த அணிலின் இரு விழிகள் தான் ஒளிப் புள்ளிகள் என்று புரிந்தது. மெலிதான வெளிச்சத்திற்கு என் கண்கள் சற்று பழக அணிலின் மற்ற அங்கங்கள் உரு கொண்டன. புசு புசுவென்ற அதன் வால் காற்றில் ஆடுவது தெரிந்தது. உடல் முழுதும் சிவப்பு ரோமங்கள் டார்ச் ஒளியில் தாமிரம் போல ஜொலித்தது.
சொல்லெழும் கல்வனம்
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அதிமானுடர்களின் கல்சமாதிகள் மட்டுமே இதுவரை தென்பட்டதால், திடீரென பெயரற்ற முகமற்ற ஒரு போர் வீரனின் கல்லறையை கண்டதும் வியப்பில் நின்று விட்டேன். முதல் உலகப்போரில் சண்டையிட்டு யுத்த களத்தில் உயிரழந்த அந்த போர் வீரனின் கல்லறையை சுற்றி சிகப்பு பாப்பி (Poppy) பூக்களும், மலர்வளையங்களும் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கற் கோவில்கள், கொலைக் களங்கள்
மனித மனம் ஆக்கத்தின் உச்சத்தைத் தொட்ட இடம் அங்கோர் வாட் என்றால் அது கீழிறிங்கி தீவினை எனும் அதல பாதாளம் சேர்ந்த இடம் அங்கிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாட்டம்பாங் (Battambang) பகுதியில் ஒரு சிறு மலையில் உள்ள குகை தான் அது. அதன் உள்ளளவு சிறியது தான். ஆனால், அதன் கூரை நம் தலைக்கு ஏறக்குறைய 100 அடி மேலே குடை போல விரிந்திருக்கிறது. குகையின் விதானத்தின் நடுவில் ஒரு பெரும் துவாரம்.
அழகிய இலண்டன்
லண்டன் வரலாற்றில் 1666ல் நான்கு நாட்களுக்கு நடந்த பெரும் தீவிபத்து காரணமாக நகரில் பல கட்டடங்களும் பல்லாயிரக்கணக்கான வீடுகளும் பல தேவாலயங்களும் எரிந்து சேதமடைந்துள்ளன. மக்கள் வீடின்றி தெருவில் நிற்க, பலரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆற்றைக் கடந்து சென்றிருக்கிறார்கள். ‘லண்டன் பிரிட்ஜ்’ செல்லும் வழியில் தீவிபத்து நடந்த இடத்திற்கு அருகில் ஒரு நினைவுத்தூணை பார்த்துவிட்டு வாருங்கள் என்று எங்களை இறக்கிவிட்டார் அந்த பேருந்து ஓட்டுநர். நாங்களும் தகவல்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.
சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்
மழைத்தூறல் ஆரம்பிக்க, பறவைகள் கோட்டைக்குள் பதுங்க ஓடிவருவதைப் பார்க்க அழகு. ‘சிலுசிலு’ தென்றல், மழையில் நனையும் மலை, மரங்கள், கருமேகங்களை விலக்கி வெளிவர எத்தனிக்கும் சூரியன், மங்கிய மஞ்சள் வெயிலில் அசைந்தாடும் புற்கள் என்று கோட்டையிலிருந்து கண்ட காட்சிகள் அருமையாக இருந்தது! ‘Catherine Called Birdy’ என்ற ஆங்கிலப்படத்தை அங்கே எடுத்திருக்கிறார்கள் என்று அங்கே இருந்தவர்கள் கூறினார்கள்.
கிளாஸ்கோ
இங்கிலாந்தின் ‘கம்ப்ரியா’வில் உள்ள ‘காக்கர்மவுத்’ என்ற அழகான நகரத்தில் அமைந்துள்ள ‘வேர்ட்ஸ்வொர்த் ஹவுஸ் & கார்டன்’, ஆங்கில இலக்கிய உலகின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்திற்கு அஞ்சலி செலுத்துகிறது. வேர்ட்ஸ்வொர்த் பிறந்து தனது ஆரம்பக் காலங்களை கழித்த இந்த வரலாற்று இல்லம், 18ம் நூற்றாண்டுக்கே அழைத்துச் சென்று புகழ்பெற்ற காதல் கவிஞரின் வாழ்க்கையை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்
அடுத்து நாங்கள் நிறுத்திய இடம் ‘World War II Commando Memorial’. இரண்டாம் உலகப்போரின் பொழுது அந்தப் பகுதிகளில் தங்கி பயிற்சி அளித்த நேச நாட்டுப் படைவீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அருகே போரில் இறந்த வீரர்களின் நினைவிடமும் இருந்தது. அங்கிருந்து பிரிட்டனின் உயரமான மலையான ‘Ben Nevis’ காட்சி தருகிறது. உச்சியில் பனிக்காலத்தின் அடையாளமாகச் சிறிது பனி. அந்த மலையில் ஏற குறைந்தது ஒன்பது மணிநேரங்கள் ஆகலாம். வேண்டாம். தூரத்திலிருந்து பார்க்க அழகாக இருக்கிறது. என்ன? ஒருகாலத்தில் எரிமலையாக இருந்த மலை. உச்சியில் அதன் அடையாளங்களைக் காண மக்கள் செல்வார்கள் என்று அங்கிருந்த பயணிகள் கூறினார்கள்.
மலங்கி மடுவாகலி
அவர்கள் வேட்டையாட வரும் போதெல்லாம், காட்டு யானைகள் ஓரிடத்தில் மரத்தை உலுக்கி பூமாரி பெய்து அதை வலம் வந்து மீண்டும் காட்டுக்குத் திரும்புவதைப் பார்த்தார்கள். வியப்பினால் உந்தப்பட்டு அந்த மரத்தின் அடியில் கோடாரியால் வெட்ட சிவலிங்கத் திருமேனியிலிருந்து குருதி கொப்பளித்து, அவனது ஐந்து முகம் போலவே ஐந்து திசைகளிலும் சிதறியிருக்கிறது
இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்
ஸ்காட்லாந்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹைலேண்ட்ஸ்ன் கரடுமுரடான அழகு, காலத்தால் அழியாத வசீகரம். பரந்து விரிந்த நிலப்பரப்பில் விரவியிருந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்க, ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தும் வசதிகள் வழியெங்கும் இருக்கிறது. கோடைக்காலத்தில்அழகு மேலும் மெருகேறியிருக்கலாம். நாங்கள் சென்ற மழைக்காலத்தில் அப்பொழுதுதான் மரங்கள் துளிர் விட ஆரம்பித்திருந்தது.
எடின்புரஃஹ் – செயின்ட் ஆண்ட்ரூஸ் பயணக்குறிப்புகள்
கடற்கரைக்கென்றே ஒரு வாசம் உண்டு. முகர்ந்தும் முகராமலும் கொண்டே கரையோரம் ஒதுங்கியிருந்த கடற்பாசி, ஓடுகளைத் தாண்டி சிறிது தூரம் மணலில் நடந்தோம். இளம்பெண்கள் இருவர் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தவர்களைச் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் மட்டுமே அப்பொழுது அங்கு இருந்தோம். பொங்கி எழும் அலைகளின் ஓசையைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.
எடின்புரஃஹ் பயணக்குறிப்புகள்
அழகான சாலைகளின் ஓரம் மஞ்சள் Daffodil பூக்கள் வசீகரிக்க, இலைகளுடன் மரங்கள் இருந்திருந்தால் அந்த இடமே சொர்க்கபுரி தான்! கதிரவன் மறைய, போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்கத் தயாராகிக் கொண்டிருந்தது வானம். அதிசயமாக ஓரிரு வண்டிகள் கடந்து சென்றது. மலைகளில் பனி இறங்கி மரங்களை அணைத்து நின்றது அழகு! குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து விட்டோம்
யார்க் , கிராஸ் ஹேட்ரியன்ஸ் வால் பயணக்குறிப்புகள்
எங்களுடைய பெரும்பாலான பயணங்களில் குறிப்பாக, ஐரோப்பாவில் தம்பதியர் சமேதமாக ஊரைச்சுற்றிப் பார்க்க வருபவர்கள் பலரும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருந்தார்கள். நாம் ஐம்பதிலும் ஆசை வரும் என்று பாடினால் அவர்கள் அறுபதிலும் ஆசை வரும் என்று பாடுகிறார்கள். பொறாமையாக இருக்கிறது! “வயசான அக்காடான்னு ஒரு இடத்தில உட்காரணும்”என்று சொல்லாத ஆட்கள் இருக்கும் வரையில் இவர்கள் உலகம் சுற்றும் வாலிபர்களாக இருக்கிறார்கள்.
பயணங்கள்- லண்டன்
இங்கிலாந்து வீடுகளில் அழகான தோட்டங்களும் சிறிது புல்தரையும் இருக்கிறது. அமெரிக்காவில் புல்தரைகளுக்குத் தான் முதலிடம். அதற்குப் பிறகு தான் தோட்டங்கள். இங்கும் நுழைவாயிலில் அழகான பூந்தோட்டம். வளைத்து வளைத்துப் பூக்களைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். கற்கள் பதித்த தரை. 16ம் நூற்றாண்டாய்ச் சேர்ந்த பழைய வீட்டினை அழகாகப் பராமரித்து வைத்திருக்கிறார்கள். ஷேக்ஸ்பியரின் தந்தை ஆட்டுத்தோலினால் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதில் விற்பன்னராக இருந்திருக்கிறார். அவருடன் சில வருடங்கள் தங்கி தொழிலைக் கற்றுச் செல்லவும் மாணவர்கள் இருந்திருக்கிறார்கள்
காமரூபம்
படகில் இருந்தவர்கள் பல கோணங்களில் தங்களை படம்பிடித்து கொண்டிருந்தார்கள். சியாமீஸ் இரட்டையர்கள் போல, தோள்கள் சேர்ந்து, தலைகள் ஒட்டி, மேல்தட்டின் தடுப்பு கம்பிகளின் மீது அமர்ந்து செல்ப்பீ எடுத்து கொண்டிருந்தது ஒரு வடக்கத்திய ஜோடி. நீரில் படிந்த அவர்களின் நிழல்களை கூட புகைப்பட சட்டத்திற்குள் கொண்டு வர சாய்ந்தும், நிமிர்ந்தும், நெளிந்தும் நடத்திய நடனம் வயிற்றில் புளியை கரைத்தது.
ஆழி
ஹிமாலயம் என்பது இந்தியாவின் மேற்கு வடமேற்கு பகுதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு பகுதி வரை சுமார் 2400 கிமீ பரப்பளவில் விரிந்திருக்கும் அற்புத சாம்ராஜ்ஜியம். வானம் தொட்டு நிற்கும் பனிமலைத் தொடர்களாலும் ஆழமான பள்ளத்தாக்குகளாலும் நிரம்பிய பூலோக சொர்க்கம். சுமார் அறுபத்தைந்து மில்லியன் ஆண்டுகளுக்கு இந்து மகா சமுத்திரத்தில் அமிழ்ந்திருந்த “ஆழி”
காசி
காசியில் இறந்து கங்கையில் எரியூட்டப்பட்டால் சொர்கத்திற்குச் செல்லலாம் என்ற நம்பிக்கை உள்ளது. “மணிகர்ணிகா படித்துறையில் இறந்தவர்களின் சடலம் வந்து கொண்டே இருக்கும். சதா பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். ஆற்றில் சடலங்கள் மிதக்கும்” என்று முன்பு கதை கதையாகச் சொல்வார்கள். இப்பொழுது அப்படியில்லை. மின்சார எரியூட்டி வந்தபிறகு படித்துறைகள் சுத்தமாகி உள்ளது. ஆனாலும் படிகளில் மரக்கட்டைகள் குவிந்திருந்தன.
மனதை லேசாக்கிய மலேசியப்பயணம்
முதலில் முருகன் கோவில், அதற்குப்பக்கத்தில், விநாயகர், சிவன் அம்பாள் என்றிருக்கும் தனிக்கோவில், பெருமாளுக்கென தனி கோவில், நெஞ்சில் இராமனை சுமந்தபடியிருக்கும் ஆஞ்சநேயர் என்று இந்த கோவில் வளாகம் மெல்ல மெல்ல, பலகோவில்களில் கூட்டமாக மாறி இருக்கிறது.வாசலில் பல மலர்மாலைகள் விற்கும் கடைகளையும், லட்டு, ஜிலேபி, முறுக்கு என விற்கும் பணியாரக்கடைகளையும், இளநீரை சீவித்தரும் கடைகளுமாக அடிவாரம் எப்போதும் போல பரபரப்பாக இருந்தது.
ரிஷிகேஷ்
விடுதியிலிருந்து கங்கைக்கரையோரம் முழுவதும் செல்லும் நீண்ட நடைபாதைக் குப்பைகள் இன்றி நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது. பெரிய பெரிய மரங்கள். ஆற்றங்கரை படிக்கட்டுகளின் ஓரம் சிறு கோவில்கள் அந்தச் சூழலை மேலும் ரம்மியமாக்க, நடைபாதையின் நடுநடுவே வரும் செங்குத்தான படிகளில் மேலேறினால் சிறிய, குறுகிய தெருக்களில் பெரிய வீடுகள்! அதிர்ஷ்டசாலிகள்! தினமும் புண்ணிய நதியைத் தரிசிக்கும் பாக்கியவான்கள்! வீடுகளைக் கடந்தால் பிரதான ‘வீரபத்ர’ சாலை. இருபுறமும் மரங்கள். ஏகப்பட்ட மருந்தகங்கள், பல்பொருள் கடைகள், விடுதிகள், புழுதியைக் கிளப்பிக் கொண்டுச் செல்லும் எலெக்ட்ரிக் ரிக்க்ஷா…
பத்ரிநாத் – ரிஷிகேஷ்
பத்ரிநாத்தில் உடலை ஊடுருவும் அதிகாலை குளிர் நாங்கள் எதிர்பாராத ஒன்று! இதற்கு கேதார்நாத்தே தேவலை என்று நினைக்க வைத்து விட்டது. கிட்டத்தட்ட கேதார்நாத் உயரத்தில் தான் பத்ரிநாத்தும் இருக்கிறது. நாங்கள் தங்கியிருந்த விடுதியின் மாடி அறையில் இருந்து பனிபடர்ந்த மலைகள் கதிரவனின் பொற்கதிர்களால் ஜொலிக்கும் தரிசனமும் கிடைக்க.. ஆகா! பார்க்குமிடங்களெல்லாம் பரமாத்மா. கண்ணெதிரே நீலகண்ட மலையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தது. இதோடு ‘சார்தாம்’ கோவில்கள் யாத்திரை முடிந்தாலும் அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தியாவின் கடைசி கிராமமான ‘மனா’, புனித நதி சரஸ்வதி, பஞ்ச பிரயாகைகளைத் தரிசனம் செய்யாமல் யாத்திரை முழுமை பெறாது என்பதால் அங்குச் செல்ல தயாரானோம்.
குப்தகாசி – பத்ரிநாத்
கங்கோத்ரி, யமுனோத்ரி பகுதிகளில் இருந்த மலைப்பகுதி போலன்றி ‘பச்சைப்பசே’லென மலைத்தொடர்கள் கண்களுக்கு இதமாக காட்சியளித்தது. இந்தப் பிரதேசத்தை ‘மினி ஸ்விட்ஸர்லாந்து’ என்று அழைக்கிறார்கள். பனிக்காலத்தில் பனிச்சறுக்கு செய்ய பயணியர்கள் அதிகம் வரும் இடம் என்றும் தெரிந்து கொண்டோம். நாங்கள் நின்றிருந்த மலை மீதிருந்து எதிரே ‘நந்தா தேவி’ மலைச்சிகரங்களை வெண்பஞ்சு மேகங்கள் உரசிச் செல்லும் காட்சி மனதைக் கொள்ளை கொண்டது.
கேதார்நாத்
மேடுகளைக் கடந்து சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு குடியிருப்புக் கட்டடங்களும் கடைகளும் இருந்தது. அங்கிருந்து கோபுர தரிசனம்! ‘சிவசிவ’ என்று கைகூப்பி வணங்கினோம். அனைவர் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர்! “பார்த்தீங்களா! நாம் பத்திரமா வந்து சேர்ந்துட்டோம்!” என்று அவர்களுடைய மற்ற குழுவினரையும் சந்தித்துப் பேசி அறிமுகப்படுத்திக் கொண்டோம். நினைத்தபடி சித்தன் குடியிருக்கும் மலையில் பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தோம்! வார்த்தைகளால் சொல்லிட இயலாத பேரானந்த பெரு அனுபவம் அது!
உத்தரகாசி -குப்தகாசி
இந்த ‘சார்தாம்’ யாத்திரை முழுவதும் ஒரே ஒழுங்குவரிசையில் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் எனச் செல்கிறது. அதனால் யாரென்றே அறிந்திராத அன்பர்களை அங்கு தொடர்ந்து சந்தித்து அளவளாவ மகிழ்ச்சியாக இருந்தது. அதிகாலைப் பயணம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதுவும் இமயமலைப் பயணம் அழகான ரசிக்கத்தக்க காட்சிகளுடன் கண்களையும் மனதையும் நிறைவு செய்து கொண்டிருந்தது. மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் குறுகிய சாலையில் ஏகப்பட்ட வளைவுகள். அதிகாலைப் போக்குவரத்து அதிகம் இல்லாததால் பிரச்சினையில்லை. இல்லையென்றால் திகிலான பயணமாகத் தான் இருந்திருக்கும். அனுபவமுள்ள ஓட்டுநர் என்பதை எங்கள் டிரைவர்ஜி அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருந்தார்.
கங்கோத்ரி
வலது புறம் துள்ளியோடும் பாகீரதி ஆற்றுக்கு அரணாக பச்சைப்பசேலென இமயமலை. மலையின் ஈரம் காயாத சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தோம். வெயிலைப் பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. நடுநடுவே சாலைகளில் உடைப்பு ஏற்பட்டிருந்ததால் எதிரே வரும் வண்டிக்கு வழியை விட்டு நகர்வதில் சிரமம் இருந்தது. இத்தகைய சூழலை அனுபவமிக்க ஓட்டுனர்கள் மிக அருமையாக கையாளுகிறார்கள். பைக்கில் பவனி வரும் கூட்டம் இந்த யாத்திரையில் அதிகம் காண முடிந்தது. எப்படித்தான் இப்படிப்பட்ட சாலைகளில் ஓட்டுகிறார்களோ என்று அதிசயித்தோம். சில இடங்களில் சாலைகளை நன்கு விரிவாக்கம் செய்திருக்கிறார்கள்.
உத்தரகாசி
பால்கனி கதவைத் திறந்தால் ‘சிலுசிலு’ காற்றில் சாம்பல் நிற ‘பாகீரதி’ பாறைகளின் மேல் பாய்ந்தோடிக் கொண்டிருந்தாள். சுற்றிலும் இமயமலை! பல வண்ணங்களில் உத்தரகாசி நகர கட்டடங்கள் என்று கண்ணுக்கு விருந்தாகக் காட்சிகள். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு விடுதியின் பின்வாசல் வழியே நடந்து சென்று ‘ஜில்’லென்றிருந்த நதியைத் தொட்டு அவளை வழிபடும் பாக்கியத்தைத் தந்ததற்கு நன்றி கூறி வணங்கினோம். கோவிலில் ஜோதிர்லிங்க, சக்தி பீட திவ்ய தரிசனம். மனதில் இருந்த கவலைகளும் தெளிவான நதியின் ஓட்டத்தில் மெல்ல கரைந்து விடாதா என்று ஏக்கமாக இருந்தது. செங்குத்தான படித்துறைகளில் நிறைய படிகள். கவனமாக இறங்க வேண்டியுள்ளது.
யமுனோத்ரி
யமுனா நதிப் பாலத்தைக் கடந்து யமுனோத்ரிக்குச் செல்லும் வழியில் வழியில் ‘கருட கங்கா’ என்று கிளை நதி ஒன்று வருகிறது. கோடைக்காலத்தில் பனி படர்ந்து அழகாக இருக்கும் பகுதி நாங்கள் சென்றிருந்த பொழுது நதியாக ஓடிக் கொண்டிருந்தது. தூரத்திலிருந்தே தெரியும் ஆசிரமங்களில் தங்கும் வசதிகளும் இருக்கிறது. கோவிலை அடைத்தாற்போல தெரியும் நீல வண்ண கட்டடங்களும் அழுக்குத் தார்ப்பாய்கள் போர்த்திய குடில்களும் குப்பை மூட்டைகளும் திருஷ்டிப்பொட்டாக கண்களை உறுத்தியதில் வருத்தமாக இருந்தது. எத்தனை ரம்மியமான இடத்தில் இருக்கிறது இந்த புண்ணியத்தலம்! ஏனோ நமக்குக் கோவிலைப் பற்றின அக்கறையோ அந்தச் சூழலைக் காக்க வேண்டிய பொறுப்போ இருப்பதாகத் தெரியவில்லை. யாரிடம் சென்று முறையிடுவது? திருந்த வேண்டியது நாம் தானே?
சிவன்ன சமுத்திரம்
இந்தக் கோவிலில் இன்னொரு ஆச்சரியமும் உண்டு. இங்கே சிற்பிகளின் பெயர்களை சிற்பங்களின் அடியிலேயே பொறித்து கவுரவப் படுத்தியிருக்கிறார்கள். ஏறக்குறைய 800 வருடங்கள் கழித்து பெங்களூரிலிருந்தும், மைசூரிலிருந்தும் வந்தவர்கள் தங்களின் கருப்புக்கண்ணாடிகளை நெற்றியின் மேல் உயர்த்தி வைத்து, நகப்பூச்சு மின்னும் விரலால் கற்களில் பொறித்திருக்கும் கன்னட லிபியை வருடி, பாலேயா, சவுடேயா, நஞ்சைய்யா, என்ற இந்த சிற்பிகளின் பெயர்களை வாய் விட்டு உச்சரித்ததைப் பார்த்த பொழுது இது அந்த மகத்தான கலைஞர்களுக்கு நாம் செய்யும் சிறு மரியாதை என்று என் மனதில் பட்டது.
பர்கோட்
முதன்முதலாக யமுனை ஆற்றைக் கடந்து செல்ல பச்சை வண்ணம் அடித்த பாலம் ஒன்றில் ‘கடகட’ சத்தத்துடன் கடந்து மழையால் துவம்சம் செய்யப்பட்ட சாலைகளில் பயணம். மலைராணி முந்தானை சரியச் சரிய, யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சிறு நகரத்தைக் கடந்து மீண்டும் மலையில் பயணம். சுற்றிலும் பசுமை போர்த்திய மலைகள். இப்பவோ எப்பவோ என்று காத்துக் கிடக்கும் கருமேகங்கள். ‘நௌவ்கான்’ என்ற ஊரில் சாலையோரத்தில் ஒரே ஒரு தேநீர்க்கடையை அம்மா, அப்பா, மகன் என்று மூவர் நிர்வகிக்கிறார்கள். அவர்கள் சொல்வது தான் விலை. சாப்பாடும் தயார் செய்து தருகிறார்கள். அப்பா டீ போட, அம்மா சமையலையும் மகன் கடைக்கு வருபவர்களையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
காசி தமிழ் சங்கமம் பேரானந்த அனுபவம்
அழகான கங்கையில் சூரிய உதயத்தை பார்த்தபடி முன்னோர்களை நினைத்து குளித்து வழிபட்டோம். அங்கிருந்து காஞ்சி சங்கர மடத்தில் தேநீர், பிஸ்கட் அளித்தனர் அங்கு வெங்கட்ரமண கனபாடிகளைப் பார்த்து பேசி அறிமுகம் செய்து கொண்டோம். பாரதி நான்கு வருடங்கள் மூன்று மாதங்கள் வாழ்ந்த சிவமடம் கிருஷ்ண சிவன்- குப்பம்மாள் இல்லம் சென்றோம். அங்கு விரைவில் ஒரு நூலகமும் பாரதி சிலையும் அமைவதற்காக கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன. கே. வி. கிருஷ்ணன் அவர்களின் மகன், மகள் ஆகியோரை பார்த்துப் பேசினேன். கோவில் அருகில் உள்ள பாரதி சிலையை தற்போது நாட்டுக்கோட்டை நகரத்தார் பராமரித்து வருகிறார்கள்.
தினந்தோறும் சித்திரைத் திருவிழா: ஹரித்வார்
“எலே இந்த வழியாத்தான் போகணுமாம்” என்று யாரோ தமிழில் பேசியது காதில் விழுந்தது. நடுத்தர மற்றும் வயதான தாத்தா பாட்டிகள் ஒரு இருபது பேர் போல நம் மக்கள் வந்திருந்தார்கள். ரோப் கார் ஏறுமிடத்திற்கு வரிசையில் நின்று ஏறி விட்டோம். பழனியில் ரோப் காரில் சென்று வந்த அடுத்த நாள் அங்கு நடந்த விபத்துப் பற்றி செய்திகளில் பார்த்தது கண்முன்னே வந்து சென்றதால் கொஞ்சம் பயமாக இருந்தது எனக்கு. கீழே பார்த்தால் பசுமையான காடு. பறவைகளின் இன்னிசை கீதம் மலைகளில் எதிரொலிக்க, மலை முகடுகளைத் தழுவிச் சென்று கொண்டிருந்தது மழைமேகங்கள். கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகான அருவிகள் என்று இயற்கைக்காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. கோடைக்காலத்தில் எப்படி இருக்குமோ தெரியாது. மழையில் குளிர்த்த மரங்களும் மனிதர்களும் நகரமும் புத்துணர்ச்சியாய் காண்பவர்களையும் தொற்றுக் கொள்கிறது!
கங்கா தேசத்தை நோக்கி
இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தாய்மண்ணில் கால் பதித்து உற்றார், உறவினர்களையும், கோவில் குளங்களையும் பார்த்து விட்டு வந்தால் தான் அடுத்த இரு வருடங்களை நிம்மதியாக கழிக்க முடியும் என்ற மனநிலையிலேயே இருந்து பழகி விட்டதால் 2018 மதுரை விசிட்டிற்குப் பிறகு 2020 கோடை விடுமுறைக்காக ஆவலாக காத்திருந்தோம். “கங்கா தேசத்தை நோக்கி”
சிதைந்த நகரமும் சிதையாத் தொன்மங்களும்
கிருஷ்ண தேவ ராயர் காலத்திலேயே ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் வாழ்ந்த தலைநகரம் சில நாட்களிலேயே இடுகாடானது; போர்துகீச யாத்ரி டாமிங்கோ பேஸ் விஜயநகரில் நாட்டியம் ஆடும் பெண்கள் கூட செல்வ செழிப்போடு இருந்தனர் என்று குறிப்பிட்ட அளவிட இயலாத செல்வம் சூறையாடப்பட்டது; சிற்பங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டதோ என்று ஐயப்படும் அளவிற்கு செதுக்கப்பட்ட பல கோவில்கள் இடித்து நொறுக்கப்பட்டன. இருநூற்று ஐம்பது வருட காலம் தென் இந்தியாவிற்கு ஒரு அரணாய் இருந்த சாம்ராஜ்யத்தை பேரிருள் கவ்வியது.
காலக் கணிதம்
உலகின் மிகப் பெரிய கல்கட்டுமான சூரியக்கடிகாரம் ஜெய்ப்பூரில் உள்ளது. இது யுனெஸ்கோவால் உலகக் கலாசாரச் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது. ஜந்தர் மந்தர் என்ற அழகான பெயரில் இயங்கும் இது, முன்- நவீன வானக்கண்காணிப்பகங்களில், துல்லியமாகக் கிரகங்கள் மற்றும், விண்ணகப் பொருட்களின் இயக்கங்களை கணிப்பதற்கும், அறிவதற்கும் உலகத்தில் சிறந்த ஒன்று என யுனெஸ்கோவும், மற்ற வானியலாளர்களும் பாராட்டுகின்றனர். 4609 ஏக்கரில் 19 வானியல் கண்காணிப்புக் கருவிகள் உள்ள ஜந்தர் மந்தர் 1729-ல் கட்டப்பட்டது.
துவாரகையில் இருந்து மீரா
நான் இதே துவாரகையில் கிரிதாரியுடன் கலந்தேன். எத்தனை உயிரோட்டத்துடன் அவன் கோயில் அமைந்திருக்கிறது! கடல் மட்டத்திலிருந்து நாற்பதடி உயரத்தில் கோமதி ஆற்றங்கரையில் மேற்குத் திசை நோக்கி எழுந்துள்ள இந்தக் கோயில் முதலில் கண்ணனின் பேரனால், கண்ணன் வசித்த ‘ஹரி நிவாசை’ கோயிலாக்கிக் கட்டப்பட்டது. ராப்டி தேவியின் (முதல் கட்டுரையில் வந்த பெண்) கணவரைப் போரில் வென்ற முகம்மது பெகேடா தான் இந்தக் கோயிலையும் இடித்து அழித்தார்.
சிவன் ஆடிய களம்
எண்பதுகளின் முற்பகுதியில் இந்திய கிராமங்களுக்குள் டிவி நுழையாத காலம். நகரத்தில் வசதியான சில வீடுகளில் மட்டுமே கறுப்பு வெள்ளை டிவி இருந்தன. வேகமாய் பெருகிய ஜனத்தொகையும் வேலையில்லா திண்டாட்டமும் சமூகத்தின் பிரதான பிரச்னையானதால், கிரிக்கெட் பற்றிய புரிதலோ விவாதங்களோ மக்களிடம் அப்போது இருக்கவில்லை
நவகைலாயங்கள்
நவ திருப்பதிகளுள் ஒன்றான ‘அருள்மிகு மகரநெடுங்குழைக்காதன்’ திருக்கோவிலுக்கு வந்து சென்ற இனிய நினைவுகளுடன் தென்திருப்பேரையில் நவ கைலாய புதன் ஸ்தலத்தில் வண்டியில் காத்திருந்தோம்…
அழகான கோவில் பிரகாரம். அரசமர பிள்ளையார். நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகள் அலங்கரிக்க பெரிய கோவில் மதிற்சுவர்கள். கோவில் திறந்தவுடன் உள்ளே சென்று விட்டோம். ஏழாவது கைலாய தலத்தில் தாமரை பீடத்தின் மேல் கைலாச நாதர். அம்மன் அழகிய பொன்னம்மை தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். நவக்கிரகங்கள், முருகன் சந்நிதிகளும், கொடி மரமும் பலி பீடமும் உண்டு. நவ கைலாயங்களில் இரண்டாவது பெரிய கோவில்.
..அருகே அங்கன்வாடி அரசுப் பள்ளியில் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாக வெள்ளந்தி குழந்தைகள் கூட்டமாகச் செல்லும் ஆடுகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வாசலில் நின்றிருந்தார்கள். மழையைக் கண்டதும் அகவும் மயில்கள் அந்த இடத்தை மேலும் அழகாக்கிக் கொண்டிருந்தன.
பாஸ்னியக் காப்பி
‘யானைகளின் யுத்தத்தில் அழிவது எறும்புகளே’ என ஒரு சொலவடை உண்டு. அதேபோல அமேரிக்கா – சோவியத் ரஷியா வல்லரசுகளுக்கு இடையேயான பலப்பரீட்சை பெரும்பாலும் அவர்களால் தூண்டிவிடப்பட்ட சிறிய நாடுகளின் யுத்தங்கள் வாயிலாக வெளிப்பட்டது. இந்த ‘கோல்டு வார்’ அல்லது மறைமுக பனிப்போரில் சிக்காமல் இந்தியா, எகிப்து, யூகோஸ்லாவியா, கானா மற்றும் இந்தோனேஷியா ஆகிய வளரும் நாடுகள் தங்களுக்குள்ளே ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் கூட்டமைப்பே “கூட்டு சேரா இயக்கம்”.
தடக் குறிப்புகள் -2
“நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்பா, மகனே. மர லாரிகள் இந்தச் சாலையில் போகிறதே அவங்கல்லாம் உன் மேலே வண்டியை ஏத்திக் கொல்றதுக்குத் தயங்க மாட்டாங்க. நெடுஞ்சாலை 98 இல், ரெண்டு வருஷம் முன்னே ஒரு சைக்கிள்காரர் இப்படித்தான் செத்தார், அப்ப என்ன நடந்ததுன்னு எனக்குச் சரியாத் தெரியாது, ஆனால்-”
நான் அவரைத் தடுத்தேன், என்ன நடந்ததுன்னு எனக்குச் சொல்லாதீங்க, என்றேன்.
“ஆனா, அது நெஜம்மா நடந்தது.”
இந்த சாலைகள் வழியே நான் சைகிள் ஓட்டிக் கொண்டு போகிற போது, அப்போது அங்கே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதில் எனக்குச் சிறிதும் ஈடுபாடு இல்லை என்று சொன்னேன்.
தடக் குறிப்புகள்
“சாதாரண மக்களை” பேட்டி எடுத்து, அவற்றை ஒரு டேப் ரிகார்டரில் பதிவு செய்வது நோக்கம். அதன் மூலம் நாட்டின் மாநகர்கள், சிறு நகரங்கள், மற்றும் தொலை தூரங்களில் கிடக்கும் இடங்களின் “பின்னலிணைப்பை”ப் புரிந்து கொள்வது மேம்படும். அமெரிக்கா என்பது என்ன? நம்மை அமெரிக்கர்கள் என்று அழைத்துக் கொள்வதன் அர்த்தம்தான் என்ன? மானியத் தொகையை என் வாழ்வின் அடுத்த ஓரிரு வருடங்களை அமெரிக்காவுக்கான “தேடலில்” செலவிடப் போகிறேன் என்று நான் சொன்னபோது, அந்த மேஜையின் ஒரு கோடியில் அமர்ந்திருந்த ஒருவர் (ஏளனமாக) தன் கண்களை மேல்நோக்கிச் சுழற்றியதை நான் பார்த்தேன். இன்னொருவர் சிரிக்கவும் செய்தார்.
