பைனரி ஆப்ஷன் எனும் ஒரு புதைகுழி

உலகம் முழுக்க பண பரிவர்த்தனைகள் அதாவது ஒவ்வொரு நாடும், நாட்டு மக்களும் இன்னொரு நாட்டின் கரன்சியினை ஏதோ ஒரு காரணத்திற்கு வாங்குகிறார்கள் அல்லது விற்கிறார்கள். அதை வாங்கும்போதும், விற்கும்போதும் என்ன விலைக்கு போகும் என்பதை தீர்மானிப்பது கடைசியாய் இருக்கும் இரு எண்கள். எடுத்துக்காட்டாக ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என்பது பேச்சு வழக்கில் நாம் சொல்வது. அதனை பண பரிவர்த்தனையின்போது 65.12864 என்றோ 64.98765 என்றோ இருக்கும். இந்த கடைசி இரு எண்கள் லட்சணக்கணக்கான டாலர்கள் பரிவர்த்தனையின்போது பெரும் வித்தியாசத்தை உண்டாக்கும். இந்த கடைசி இரு எண்களை மட்டும் வைத்து கிட்டத்தட்ட சூதாடுதலே…

ஈராக்கில் தொழில் தொடங்கலாமா!

ஈராக்கில் போலிஸ் ரிப்போர்ட் பெறுதல் என்பது சாத்தியமே இல்லை. ஒரு சிறு எடுத்துக்காட்டாக இத்தாலியைச் சேர்ந்த ஒரு கம்பனி பாஸ்ராவை ஒட்டியுள்ள ஓரிடத்தில் எண்ணெய் கொண்டுசெல்லும் குழாய் அமைக்கும் பணிக்கு வந்தது. அவர்களின் கொடவுனில் இருந்து ஐந்து லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களும், புத்தம் புது ஏர்கண்டிஷனர்கள் பலவும் காணாமல் போயின. எடுத்தவர் யாரெனத் தெரியும். ஆனால், சொல்ல முடியாது. சொன்னால் மறுநாளே கொலை செய்யப்படுவீர்கள். போலிஸில் சென்று பொருட்கள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்தால் யார் மீது சந்தேகம் என எழுதிக்கொடுக்கச் சொல்வார்கள். நீங்கள் கொஞ்சம் தைரியமான ஆளாய் இருந்து ஈராக்கியின் பெயரையோ அடையாளத்தையோ சொன்னால் அவர்களே திருடிச்சென்றவனிடம் நம்மை காட்டிக்கொடுப்பதுடன் நாம்தான் திருடி விற்றுவிட்டோம் என்ற திசையில் கேஸைக் கொண்டு செல்வார்கள். மேலும், போலிஸ் பேப்பர் என்ற ஒன்று கிடைக்கவே கிடைக்காது. போலிஸின் அறிக்கை இன்றி காப்பீடு நிறுவனங்களும் இழப்பீடுகளைத் தராது.
இதே நிலைதான் வாகன விபத்துகளுக்கும். முழுக்க முழுக்க கட்டைப்பஞ்சாயத்து முறையே ஏதேனும் விபத்து நேர்ந்துவிட்டால். இஸ்லாமிய முறைப்படி பழிக்குப்பழியாக பதில் கொலை, அல்லது ரத்தப்பணம் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் உறுப்பினரிடமிருந்து வசூலிக்கப்படும்.
மத்திய கிழக்கில் பிற நாடுகளில் இந்தப் பணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனமே கொடுத்துவிடும்.

யஸிதி இனப்பெண்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உரை

ஐ எஸ் ஸின் கொடூரம் ஏதோ வாய்ப்பு கிட்டியதால் நடந்த ஒரு நிகழ்வல்ல. . ஐ எஸ் ஸை சேர்ந்தவர்கள் இவ்வாறான கொடூரங்களை அரங்கேற்ற முன் திட்டமிட்டே வந்திருந்தனர். கற்பழிப்புகள், கட்டாயமாகச் சிறுவர்களைத் தம் படையில் சேர்த்தல், அவர்கள் கைப்பற்றிய புனித்தலங்களை தரைமட்டமாக்கி அழித்தல், குறிப்பாக யாஸிதி பெண்களையும், சிறுமிகளையும் கற்பழிப்பு மூலம் சிதைத்து அழித்து அவர்கள் ஒருபோதும் சாதாரணமான, இயல்பான வாழ்வுக்குத் திரும்ப முடியாமல் ஆக்குவது ஆகிய வன்முறைச் செயல்கள் மூலம் யாஸிதி இனமக்களின் அடையாளத்தைச் சுத்தமாக ஒழிப்பதே அவர்கள் திட்டம்.

ஷியாவா? ஸுன்னியா??

ஸுன்னி இஸ்லாமியர்கள் மெஜாரிட்டியாய் இருக்கும் நாடுகளில் ஷியாக்கள் எப்போதும் வறுமைக்கோட்டில் இருப்பார்கள். அவர்கள் மீது வன்முறை ஏவிவிடப்படும். அவர்களை கொலை செய்தலை அரசே நியாயப்படுத்தும். இறைவன் ஒருவனே என்பதை ஏற்றுக் கொண்டுள்ளோம், அதே போல இமாம் ஹுசைனும், இமாம் அலியும் போல முகமது நபிக்கு பின்னர் வந்த 12 இமாம்களை வணங்குவதும் எங்கள் உரிமை, அதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது ஷியாப்பிரிவு இஸ்லாமியர்களின் வாதம். அதற்காக உயிரையும் கொடுக்க தயங்கமாட்டோம் என்பதே ஷியாக்களின் நிலைப்பாடு. ஏக இறைவனை ஒத்துக்கொள்ளும் ஷியாக்கள் பிற இமாம்களை அல்லாவை வணங்குவது போல…

குர்திஸ்தான் – ஈராக்கின் காஷ்மீர்

ஈராக்கின் காஷ்மீர் என ஏன் சொன்னேன் என்றால், குர்திஸ்தானின் மலை முகடுகளும் எர்பில் நகரமும் பனிப்பொழிவுடன் பார்க்கவே ரம்மியமாக இருக்கும். மலைவாழிடங்களின் தொழில்களான மாடுவளர்ப்பு, ஆடுவளர்ப்பு, கார்பெட்டுகள் செய்தல் என குளிர்காலத்தில் எர்பில் நகரமும் அதன் சுற்றுவட்டாரங்களும் அழகாகி விடுகின்றன. மேலும் குளிர்காலச் சுற்றுலா நடத்தும் அளவுக்கு சுற்றுலாத் துறையையும் வலிமையாக வைத்திருக்கின்றனர்.
டூரிஸ்ட்டுகள் வருவதற்கு முக்கியக் காரணம் தட்பவெப்பம். மேலும் ரம்மியமான இயற்கைச் சூழல். மெயின்லேண்ட் ஈராக்கில் தங்குவதற்குப் பயப்படும் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான வசதியான இடமாக இருப்பதால் எர்பிலுக்கு எப்போதும் கூட்டம் உண்டு.

ஈராக் – ஓர் அறிமுகம்

ஈராக்கின் வரலாற்றை முடிந்தவரை சுறுக்கினால் மேலுள்ள அளவே சொல்ல முடியும். ஈராக்கில் நான் 2012 செப்டம்பரில் முதன்முதலாய் வந்தேன். நாளொரு குண்டுவெடிப்பும், பொழுதொரு கடத்தலுமாய், அரசாங்கம் என்ற ஒன்றிருக்கிறதா என்ற ஐயம் ஏற்படும் வகையிலும், எங்கெங்கு காணினும் லஞ்ச, லாவண்யங்கள் தலைவிரித்தாடும் ஒரு தோற்றுப்போன நாட்டையே கண்டேன்…
நம்மூரில் தனியார்ப் பேருந்துகள் வாடிக்கையாளர்களை அழைப்பதுபோல நஜஃப், கர்பெலா, பாஸ்ரா, எர்பில் எனப் புறப்பட தயாராக இருக்கும் வண்டிகளில் இருந்து இன்னும் ஒரு சீட்டுதான் பாக்கி, இரண்டு சீட்டுதான் பாக்கி என கூவிக்கூவி அழைத்துக்கொண்டிருப்பார்கள். ட்ரைவர் அருகில் உள்ள சீட்டில் வசதியாக அமரவேண்டுமெனில் பின்னாலிருக்கும் இருக்கைகளைவிடக் கூடுதலாக எட்டு டாலர் வசூலிக்கப்படும். என்னைப்போன்ற வெளிநாட்டவர்களே பெரும்பாலும் அந்த சீட்டுகளில் அமர்வார்கள். இல்லையெனில் பின்னால் இருக்கும் சீட் எல்லாம் நிரம்பிவிட்டால் வேறு வழியின்றி அதே காசுக்கு அழைத்துச் செல்வார்கள். பாக்தாத்திலிருந்து பஸ்ரா செல்ல கட்டணம் 35,000 ஈராக்கி தினார். (30 டாலர்கள்.) தூரம் 540 கிலோமீட்டர்.

இன்றைய ஈராக் – ரம்மாதி நகரம் வீழ்ந்தபின்

ஐஎஸ் பிடியில் இருக்கும் யசிதி இனப்பெண்கள் படும் கொடுமைகளைத்தவிர. குர்துகள் குறித்து சமீபத்தில் செய்திகள் எதையும் படித்திருக்க மாட்டோம், ஏனெனில் குர்திஸ்தானின் பெஷ்மெர்கா படைகள், ஐஎஸ் படைகளை அடித்து நொறுக்கி வருகின்றனர். அவர்களின் பகுதிக்குள் (குர்திஸ்தான்) நுழைய முயலும் எந்த ஐஸ் படையும் சுத்தமாக அழிக்கப்படுகிறது. ஐஎஸ் செய்த அத்தனை கொடூரங்களையும் பெஷ்மெர்காவும் தன்னிடம் சிக்கும் ஐஎஸ் படைகளுக்குச் செய்கிறது. அதனால், குர்திஸ்தானை ஒட்டிய பகுதிகளில் எந்த புது நிலப்பகுதியும் இழக்கப்படவில்லை. ஓரளவுக்கு ஈராக்கின் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன பெஷ்மெர்கா படைகள்.

ஈராக் விவசாயம் – போருக்குப் பின்

உலகிற்கே நாகரிகத்தையும், விவசாயத்தையும் கற்றுக்கொடுத்த மெசபடோமியா நாகரிகம் இன்றைக்கு உணவுக்கு வெளிநாட்டில் இருந்து ஏராளமாய் இறக்குமதி செய்கிறது. இன்று ஈராக்கின் விவசாய நிலங்களாக இருப்பவை சுமேரியர்கள் உருவாக்கியது. ஒருகாலத்தில் நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட அறுபது சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி இருந்தனர். இன்றைக்கு நிச்சயம் ஐம்பது சதவீதத்திற்கும் குறைவாய் இருக்கும் என்றே நினைக்கிறேன். சரியான கணக்கு ஏதும் அரசால் எடுக்கப்படவில்லை.

ஈராக்கில் ஜனநாயகம்

“ஜனநாயகம் வரும்வரை, அதாவது அமெரிக்கா உள்ளே புகும் முன்னர், ஒரு சில உதிரிக்குழுக்கள் தவிர பலருக்கு ஷியா மற்றும் ஸுன்னி பிரிவினர் எதிரிகள் என்பதே தெரியாது. சதாமின் இரும்புப் பிடியில் ஈராக்கியர்களுக்கு மதப்பிரிவுசண்டை போடக்கூட நேரமில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் பிழைத்திருக்கவும், குடும்பத்தைப் பட்டினியின்றி வைத்திருக்கவுமே ஓடிக்கொண்டிருந்தபோது பிரிவினைகளை பற்றி சிந்திக்க நேரமிருக்கவில்லை. ஷியா, ஸுன்னிகள், கிறிஸ்தவர்கள், அசிரியர்கள், துர்க்மான்கள் இன்னும் சில பிரிவுகள் என எல்லோரும் ஒற்றுமையாய்த்தான் இருந்தோம். நாட்டில் வளமிருந்தும் எங்கள் கைகளில் காசில்லாமல் இருந்ததாலும், அடிப்படைவாதத்தைத்தான் குரான் சொல்லிக்கொடுக்கிறது என்பதை எங்கிருந்தோ புதிதாய் வந்தவர்கள்…

ஈராக் எனும் குருக்ஷேத்திரம்

ஈராக்கில் ஆபத்துக்கு அஞ்சாமல் அங்கு மிகச் சமீபகாலம் வரை தொடர்ந்து பணியாற்றியவர் ஜெயக்குமார். இக்கட்டுரை அவரின் நேரடி அனுபவங்களையும், கிட்டிய தகவல்களையும் சார்ந்து எழுதப்படுகிறது. இனி கட்டுரையின் ஒரு பகுதி: ‘உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத எண்ணம் கொண்டோர் அனைவரும் அணி அணியாக தங்களை ஐ எஸ் ஐ எஸ்ஸில் இணைத்துக்கொண்டு வருகின்றனர். இந்தக்கூட்டத்தில் சேர்பவர்கள் உலகின் இந்தப் பகுதியில்தான் என்றில்லாமல் உலகம் முழுக்க இருந்து வந்து சேர்கிறார்கள். இந்தியாவிலிருந்தும்கூட ஆட்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். மும்பை கல்யானைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இந்த வாழ்க்கைமுறை பிடித்திருக்கிறது, இனி இந்தியாவுக்கு திரும்பப்போவதில்லை எனச் சொல்லி இருக்கிறார்.’

ரகு ராய் – பேட்டி

உண்மையில் இது ஒரு நாடே அல்ல. திரும்பிப்பார்த்தால் நீதி வழங்க 25 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இது ஒரு கௌரவமோ அல்லது சுயமரியாதையோ அற்ற நாடு. ஆண்டர்சனை முதலில் தப்ப விட்டுவிட்டு அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் நம்மை சமமாக மதிக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? சரிசமமாக நடத்தத் தகுதியற்றவர் நீங்கள். பிரிட்டிஷ் பெட்ரோலியக் கிணறு கசிவில் இறக்கும் பறவைக்கு இருக்கும் மதிப்பு கூட இந்த விபத்தில் இறந்த மக்களுக்கு இல்லை.