‘யூ அஸ் ஹோட்டல்’ செக்விபோ நகர்

This entry is part 2 of 5 in the series தென்கொரியப் பயணம்

000 வருடங்களுக்கு முன் கடலில் வெடித்த எரிமலை உருவாக்கிய ‘Tuff Cone’ என்ற அரிய பாறை வகை தான் இந்த Ilchulbong கிரேட்டர். 600 மீட்டர் அகலம் கொண்ட பாறை கடல் மட்டத்திலிருந்து 182 மீட்டர் உயரத்தில் பச்சைப்பசேல் என்றிருக்கிறது! கண்ணுக்கு குளிர்ச்சியாக சுற்றிலும் நீல வண்ண கடலும், சிலுசிலு கடற்காற்றும், பசுமைத்தோட்டமுமாய் ரம்மியமாக இருந்தது! இங்கு 240-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.