வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் மூத்த மகனாக இருந்த அந்த ஆணின் உள்ளுறைந்திருந்த விலங்கொன்று அப்போதிலிருந்து விழித்துக்கொண்டது. அம்மா ஒருபோதும் அந்த இணை வைத்தலை மனத்திலும் கனவிலும் நினைத்து விடக்கூடாது என்பதை இத்தனை வருட தாம்பத்ய வாழ்வில் அப்பா என்கிற பெரும் வன்முறையாளர் கணம் கணமாக நினைத்துக் கொண்டே தான் இருந்தார். தன் எல்லாச்செயல்களிலும் அதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அம்மாவை வதைத்துக்கொண்டே இருந்தார்.
Category: கட்டுரை
பிராட்டம்மா எழுதிய நாவல் ‘சோபாவதி’
விண்ணப்பம் என்ற பெயரில் கனுபர்த்தி வரலக்ஷ்மம்மா எழுதிய முன்னுரையில் இந்த நாவலின் கருப்பொருளாக அவருடைய பதினான்காவது வயதில் அவருடைய வீட்டிற்கு வந்த ஒரு முதிய பெண்மணி தன் தாய்க்குக் கூறிய கதையை எடுத்துக் கொண்டதாகக் கூறுகிறார். பிற பெண்டிர் மோகத்தில் அலைந்த கணவனிடம் மகள் பட்ட கஷ்டங்களைப் பற்றி அவர் கூறிய விஷயமே தனக்கு நாவல் எழுதுவதற்கு ஊக்கப்படுத்தியது என்று குறிப்பிடுகிறார். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதி அப்படியே விட்டு விட்டதாகவும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிழிந்து போகும் நிலையிலிருந்த பிரதியை மீண்டும் எழுதி அச்சேற்றியதாகவும் கூறுகிறார்.
ஆலமர் அவை – அறிதலின் எல்லைகள்- நிறைவுப் பகுதி
அறிவார்ந்த கட்டுமானம் ஒன்று, நம்மால் நினைக்க முடியாதது, ஆனால், பௌதிக உண்மைகளை அறிய உதவும் முக்கியமான ஒன்று- இதைத்தான் இந்தக் கட்டுரை வெளிப்படையாகச் சிந்திக்கிறது. நாம் அறியக்கூடிய சாத்தியங்கள் உள்ளன என்றாலும், நாம் அதைச் செய்ய முடியாமல் போவதற்கு, அத்தகு அறிவைப் பற்றிய சிந்தனையே நம்மிடம் இல்லை என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆயிரம் இதழ்கள்
அன்னையை ஆயிரம் கண்கள் (ஸகஸ்ராக்ஷி) கொண்டவள் என்று வணங்குகிறோம். ஆதிசேஷனுக்கு ஆயிரம் நாவுகள் இருப்பதாகச் சொல்வார்கள். ‘பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரி என்று லலிதா சகஸ்ரநாமம் அன்னையைத் துதிக்கிறது. இவைகள் வெறும் பெயர்கள் மட்டுமல்ல, மொழிகளைக் குறிப்பவையும் கூட. இதில் மொழியியலும் அடங்கியுள்ளது. ரிக் வேதம் கூறும் நான்கு வடிவங்கள் இவை. வாக்கு நான்கு வடிவங்கள் எடுக்கிறதென்றும், அவற்றில் மூன்று மறைந்திருக்க ஒலி வடிவாக ஒன்று மட்டும் வெளிப்படுகிறது என்றும் அந்தத் தொல் வேதம் சொல்கிறது.
இந்திய கீதத்தின் சின்னம் – 1
தேசியக் கொடிக்கு சத்ரபதி சிவாஜியின் குங்குமப்பூ நிறத்தைப் போன்ற முழு ஆரஞ்சு வண்ணத்தையே உபயோகிக்கலாமா என விவேகமாகச் சிறிது காலம் சிந்தித்தது. இது மௌமார் கடாஃபியின் முழு பச்சைக் கொடியைப் போலிருந்திருக்கும். ஆனால் முஸ்லிம்கள் ஆதரிக்கும் ஒரு இயக்கம் இந்தப் படிகம் போன்ற தெளிவான சின்னத்தை விரும்பாததால் தூர தள்ளி வைக்கப்பட்டது. 1907ல் ஷ்டுட்கார்டில்நடந்த சோஷலிச மாநாட்டில் திருமதி. பிகாஜி காமா1 சூரியனையும் சந்திரனையும் கொண்ட வடிவமைப்பை அறிமுகப்படுத்தினார்.
சந்தனம்
சந்தன மரம் அடர்த்தி மிகுந்தவை நீடித்த நறுமணம் கொண்டவை என்பதால் செதுக்கு வேலைகளுக்கும், சிற்பங்களை உருவாக்கவும் பயன்படுகிறது. காய்ச்சி வடிகட்டுதல் மூலம் முதிர்ந்த சந்தன மரங்களிலிருந்து சந்தன எண்ணெய் எடுக்கப்பட்டு நறுமண திரவியங்கள், சோப்புக்கள், மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, வழிபாட்டு பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்காக பல்லாண்டுகளாகப் பயன்படுகிறது
கோர்பச்சோவ் ஒரு பாகற்காய்
கோர்பச்சேவை நினைந்துருகும் நினா குருசேவா விடுத்த இரங்கல் செய்தி இது: “ரஷ்யாவின் மாபெரும் குடியாட்சியாளர் கோர்பச்சேவே. எனது முப்பாட்டன் குருசேவே தனது வழிகாட்டி என்று கோர்பச்சேவ் என்னிடம் தெரிவித்ததார். கோர்பச்சேவ் ஈந்த கொடையைக் காப்பாற்றத் தவறியதன் மூலம் அவருக்கு நாம் துரோகம் இழைத்துவிட்டோம். ரஷ்யா பின்னோக்கி நடைபோடும் இவ்வேளையில் நாம் கோர்பச்சேவையும் இழந்து, எமது நம்பிக்கையையும் இழந்து தவிக்கிறோம். ”
வாசகர் கடிதம்
கொழும்பு பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயிலப் புகுந்தபொழுது மெய்யியல் என்ற கலைச்சொல்லை அறிந்துகொண்டேன். அது philosophy க்கு நிகரான தமிழ்ச்சொல். தத்துவம் வடமொழி என்பது தெரிந்ததே. ஒரு மெய்யியல் மாணவனாகிய எனக்கு இவை மூன்றும் ஒன்றையே குறிப்பவை.
எதிர்வளர்ச்சி
இயந்திரப் பொருளாதாரத்தினால் சில தலைமுறைகளாக நம் உடைமைகளின் எண்ணிக்கை அதி வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதற்கேற்ப நம் வருமானம் பணவீக்கத்தையும் தாண்டி அதிகரித்து இருக்கிறது. நமக்குப் புதுப்புது விருப்பங்கள். அவற்றில் பல அவசியங்களாக மாறிவிட்டன. அவற்றை நிறைவேற்ற புதுப்புது தொழில் நுட்பங்கள். நாளை இன்றைவிட சிறப்பாக இருக்கும் என்பது அரசியல் கோஷம் மட்டுமல்ல. அது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு, சமுதாயத்தின் முக்கிய அங்கம். புதிய தொழில் முயற்சிகளுக்கு அதுவே ஊக்கம். ஊர்திகள் வீடுகள் வாங்குவதற்குத் தேவையான கடன், ஓய்வுக்காலத்தில் உழைப்பில்லா வருமானம், உலகெங்கும் கூடிக்கொண்டே போகும் பங்குச் சந்தைகளின் மதிப்பு போன்ற பணத்தினால் அளக்கக்கூடிய எல்லா பரிமாற்றங்களுக்கும் அது தான் அஸ்திவாரம். அது இல்லை யென்றால் வர்த்தக மற்றும் அரசியல் நிறுவனங்களின் திட்டங்களும் இல்லை.
பிரிவினைத் துயர்: பன்மொழி இந்திய இலக்கியங்கள் வாயிலாக
இந்திய தேசிய பிரிவினையின் போதும், அதற்குப் பிறகும், மக்கள் அனுபவித்த துயரை, பல எழுத்தாளர்கள், நாவல்கள், கதைகள் மற்றும் கவிதைகள் வாயிலாக வெளிப்படுத்தினர். இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை “அம்ருத் மஹோத்ஸவ்” ஆக கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நம் முன்னால் இருந்த சவால்களையும், அதில் நாம் கண்டடைந்த “பிரிவினைத் துயர்: பன்மொழி இந்திய இலக்கியங்கள் வாயிலாக”
வைக்கோல் மாந்தர்களும் பேசா பிராட்டிகளும்: பாழ்நிலத்துக்குப் பிந்தைய கவிதைகள்
பாகம் 1 1. ஹாலோ-மென் எலியட்டின் சர்வதேசப் புகழும் The Waste Land கவிதையும் ஒன்றி இருப்பதால் “வாழ்க்கை குறித்த ஓர் தனிப்பட்ட முக்கியமற்ற பிலாக்கணத்திற்கான வடிகால்… வெறும் சந்தநயமான முணுமுணுப்பு” என்று அவர் அப்பெருங்கவிதையைப் பற்றிய பின்னோக்கிய மதிப்பீட்டொன்றில் கூறியது பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம். நவம்பர் 1922-லேயே அவர் “வைக்கோல் மாந்தர்களும் பேசா பிராட்டிகளும்: பாழ்நிலத்துக்குப் பிந்தைய கவிதைகள்”
புல்லரிசிப் பூஞ்சை
1692ன் ஒரு துரதிர்ஷ்டவசமான நாளில் இளம் சிறுமிகளான பெட்டியும் அபிகெய்லும் வலிப்பு, உடல் நடுக்கம், தனக்குத்தானே பேசிக்கொள்வது, திடீரென உச்ச ஸ்தாயியில் அலறுவது என பல அசாதாரணமான இயல்புகளுடன் பித்துப் பிடித்தவர்களைப்போல் நடந்துகொண்ட போது ஊர்மக்கள் அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்து விட்டதாக நம்பினர். கிராமத்து மருத்துவர் வில்லியமும் அதையே உறுதி செய்தார்
கான மயிலாட, மோனக் குயில் பாட
இந்தக் கணக்கீட்டின்படி, இந்த வெற்றிகரமான மீம்ஸ் போர்கள், சென்ற பத்தாண்டுகளாக அமெரிக்க அரசியலை வடிவமைத்து வந்திருக்கின்றன; ஆனால், அதில் நேரடியாக ஈடுபட்டவர்களின் வாழ்க்கையும் சிதைந்திருக்கிறது. ஆக்ரோஷமான போராளிகள் குற்றச்சாட்டுக்களை, சிறை தண்டனையை, திவாலாகும் நிலையை, குடும்பத்தை, தங்கள் பெருமிதங்களை இழக்கும் அவலத்தை இப்போது சந்தித்து வருகிறார்கள். ஆனால், அவர்களின் கருத்து, மீம்ஸ் வடிவில் வெளிப்பட்ட கருத்து, நம் சமூகத்தின் குருதியில் புனலாகப் பாய்ந்து கொண்டுள்ளது. Learn to Code, It’s about Ethics in Journalism, Race is Real, It’s Ok to be white, Critical Race Theory, Let’s go Brandon, Blue Lives Matter, A Deep State Operates extra legally inside the US Govt. இவையெல்லாம் கவர்ச்சிகரமாக மக்களை ஈர்த்தன. பெரும்பாலானவை வெள்ளைத் தோலின் மேன்மையைப் பறை சாற்றும் வண்ணம் எழுதப்பட்டவை.
மல்லவரபு சுப்பம்மா, வேமூரி ஆண்டாளம்மாள், வேங்கட செல்லாயம்மா & காஞ்சனபல்லி கனகாம்பா
ராவோஜியும், ஆண் வேடத்தில் இருந்த லட்சுமிபாயும் சகதேவராவிடமிருந்து சேதுபிண்டாரியைக் காப்பாற்றுவது ஒரு அம்சம். பிரியம்வதா என்ன ஆனாள், சேதுபிண்டாரி எதனால் நாவலின் கரு பொருளுக்கு மையமானான் என்பதைக் கூறும் கதைப்பகுதி இரண்டாவது பாகத்தில் இருந்திருக்கலாம். நாவலில் முதல் பாகம் மட்டுமே இப்போது கிடைக்கிறது. ஸ்ரீனிவாசம்மாவின் வரலாற்று அறிவு, சரித்திரப் பார்வை, பூகோள அறிவு, காடுகளைப் பற்றிய புரிதல் போன்றவை இந்த நாவலில் அழகாக வெளிப்படுகின்றன.
பனியூழிகள்-கண்டுபிடிப்பும் ஆய்வுகளும்
நீண்டகாலத் தாழ்வெப்பநிலை காரணமாகப் புவியின் கணிசமான நிலப் பரப்புகள் சில/பல மில்லியன் ஆண்டுகள் உறைபனியால் மூடிக் கிடந்த காலங்களில் ஐஸ் ஏஜஸ் (ice ages) எனப்படும் பனியூழிகள் சம்பவித்தன. பனியூழி என்ற சொல்லாடல், தோலாடை அணிந்த கற்கால மனிதன் உணவு தேடி, பனிபடர்ந்த விரிந்த நிலப்பரப்பில் முற்றிலும் நம்பிக்கை இழந்தவனாக அலைந்து திரியும் காட்சியை உங்கள் மனக்கண் முன் நிறுத்தக் கூடும். ஆனால் மனித இனம் தோன்றி ஓங்கி உயர்ந்தது எல்லாம் கடந்த 300000 (3 லட்சம் ) ஆண்டுகளுக்குள் தான். அதற்கு முன்பே பெரும்பாலான பனியூழிகள் முடிந்து விட்டன.
ஜெயந்தி சூரம்மா & தேவமணி சத்யநாதன்
தெலுங்கில் நாவல் செயல்முறையை எடுத்து வந்தார்களே தவிர, ஆரம்ப காலங்களில் அதனை எந்தப் பெயரால் அழைப்பது என்பதை அறிந்திருக்கவில்லை. சில நாட்கள் அதற்கு முன்னால் அறிந்திருந்த பிரபந்தம் என்ற இலக்கிய வடிவின் சிறப்பைக் கூறும் உரைநடைச் செய்யுள் என்ற பொருளில் ‘வசனப் பிரபந்தம்’ என்று அழைத்தார்கள். கந்துகூரி வீரேசலிங்கம், ‘ராஜசேகர சரித்திரம்’ என்ற நாவலுக்கு விமரிசனம் எழுதுகையில், ‘காசீபட்ட ப்ரஹ்மய்ய சாஸ்த்ரியின் நவல’ என்ற பெயரை பயன்படுத்தினார். புதிய என்ற பொருள் படும் ‘நவ’ என்ற சொல்லின் ஆதாரத்தோடு நாவல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அருகாமையில் விளங்கும் ‘நவல’ என்ற சொல், அன்று முதல், நாவல் என்ற முயற்சியின் தெலுங்குப் பெயராக நிலைபெற்றது. ‘நவல’ என்பது தேசியச் சொல். ‘பெண்’ என்பது அதன் பொருள்.
சரியும் அதிகாரமும், புரவலர்த் தேவையும்
அனைத்தையும் விட பழமையின் மதிப்பு தெரிந்தவர்கள் இந்தியர்கள். சிலைகளை அழிப்பதை விட, அவைகளைக் கடத்துவதில் பண வரவு அதிகம் எனக் கண்டு கொண்டார்கள். இன்றும் தொடரும் அவலம் இது. வெளி நாட்டிற்குக் கடத்தப்படும் இந்தச் சிலைகள், அங்கே நல்ல நிலையிலிருக்கும் என்ற காரணத்தைச் சொல்லி அதை மறைமுகமாக நியாயப்படுத்துபவர்களும் இங்கே உண்டு. எதையும் உருவாக்க அறிவும், உழைப்பும் வேண்டும்; அழிப்பதற்கு, தூண்டப்பட்ட உணர்ச்சிகளே போதும். வரலாறு என்றென்றும் உண்டு; ஆனால், நாம் விரும்பும் வகையில் அது இருப்பதில்லை. அதிலிருக்கும் சில கசடுகளுக்காக நாம் நம் சக்தியை வீணடிப்பது தேவையா, இல்லாத அர்த்தங்களை அதில் ஏற்றுவது தேவையா, அல்லது மனதைப் பண்படுத்தி இணைந்து வாழ்க்கையை வாழ்வது நல்லதா என்பதை சிந்திப்போம்.
மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம் (இரண்டாம் பகுதி)
வெள்ளையரின் தலையில் இந்த வேலையை கட்டுவது ஒரு சுலபமான மாற்று வழி. அதிலும் நம்பிக்கையானவர்களாக இருந்தால் இன்னுமே வசதி. ஃப்ராலி புத்திசாலித்தனமாக தன்னை ஹிந்து என அறிவித்து கொள்வதோடு பண்டிட்.வாமதேவ சாஸ்திரி என்ற பெயரை வைத்துக் கொண்டுள்ளார்.வேதம், ஜோதிடம், ஆயுர்வேதம் ஆகியவற்றில் இவரது புலமையை கண்டு ஹிந்துக்கள் இவரை ஒரு பார்ப்பனராகவே ஏற்றுக் கொண்டுள்ளனர். அவரது மனைவி இந்தியர்;ஒரு “யோகினி”யும் கூட. மாறாக, எல்ஸ்ட் தான் ஹிந்துவல்ல என்பதை வலியுறுத்துகிறார். ஏனென்றால், யாரையும் ஹிந்து மதத்திற்கு “மாற்ற முடியாது” அது பிறப்புடன் இணைந்தது என்பதையும், ‘ஹிந்துயிசம் பூகோள அமைப்புடன் ஆழமாக இணைந்த ஒன்று’ என்பதையும் அறிந்தவர்.
கல்விக் கடனும், 2022 ஆம் ஆண்டின் அமெரிக்க நாடாளுமன்ற இடைத் தேர்தலும்
இச்செலவுகள் இரண்டும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து மக்களை அலைக்கழித்துக் கொண்டிருப்பதால் தேர்தலின் மையப்புள்ளியாகவும் கல்லூரி மாணவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தி வருகிறது. அதிகரித்து வரும் கட்டணத்தால் கல்லூரிக்கல்வி என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருப்பதும் இந்நிலையை மாற்ற தேசிய, மாநில, கல்லூரி அளவில் பல இலவச நிதிச்சலுகைகள் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தாலும் தற்போது கடன் வாங்கினால் மட்டுமே கல்வியைத் தொடர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது என்பது தான் நிதர்சனம். இதில் தேசிய, மாநில அரசுகளின் பங்கு என்ன? இந்த நிலையை எப்படி மாற்றப் போகிறார்கள் என்பது தொடர் விவாதமாகவே இருந்து வருகிறது.
சிலையெடுத்தான் சிலை எடுத்தான்
மகாபாரதத்தில் ஒரு காட்சி- போர் முடிந்து வெற்றி வீர்ர்களாக ஆனால் வருத்தத்துடன், தங்கள் பெரியப்பாவைச் சந்திக்க வருகிறார்கள் பாண்டவர்கள். திருதராஷ்டிரன், தன் புதல்வர்களைக் கொன்ற பீமனைக் கட்டி அணைக்க வருகையில் இரும்பாலான பீம உருவினை கண்ணன் பேரரசரின் முன் நிறுத்துவான்; வெறுங்கைகளாலேயே அதை திருதராஷ்டிரன் நொறுக்கி விடுவான். நிஜ பீமனின் உயிர் இப்படியாகத் தப்பிக்கும்.காமாலைக் கண்ணிற்கு காண்பதெல்லாம் மஞ்சள்.
பிராணஜீவிதம்
நாம் எப்படி மனம் போன போக்கில் இருக்கிறோமோ, அப்படியே இயற்கையும் நடக்க ஆரம்பித்துவிட்டது. பருவநிலை மாற்றங்களை எல்லா நாட்டினரும் அனுபவிக்கின்றனர். மழை மாதங்களில் மழை பெய்வதில்லை, பெய்தாலும் பெருவெள்ளமாக மாறி கடலில் சென்று சேர்கிறது.ஆல், அரசு, பனை, புன்னை போன்ற மரங்கள் நெடுங்காலம் வாழக்கூடியவை.மண் அறிப்பைத்தடுப்பவை. காற்றின் மாசைக்கட்டுக்குள் வைப்பவை. பருவ நிலை மாற்றத்தைக்கட்டுக்குள் வைக்க உதவுபவை
எங்கிருந்தோ—இறுதிப் பகுதி
பாரதத்தில், ஆறு மார்க்கங்கள் முதன்மையாகத் தொகுக்கப்பட்டு சனாதன தர்மத்தின் கீழ் வந்தது. சூர்ய வழிபாடு ‘சௌரா’ என்று அழைக்கப்படுகிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் ‘சௌராஷ்ட்ரான மந்த்ராத்மனே! சௌ வர்ண ஸ்வரூபாத்மனே! பாரதீச ஹரிஹராத்மனே! பக்தி முக்தி விதரணாத்மனே!’ என்று சௌராஷ்டிர இராகத்தில் துதிக்கிறார்.
ஸாகே!
ஜப்பானிய தொன்மங்களிலும் ஸாகே இடம்பெற்றிருக்கிறது. ஒரு கிராமத்தில் யமட்டா நோ ஒரோச்சி (Yamata-no-Orochi) என்னும் எட்டுத்தலைகள் கொண்ட நாகமொன்று ஒவ்வொரு வருடமும் ஒரு இளம்பெண்ணை விழுங்க வரும், எட்டாவது வருடம் அப்படி விழுங்க வருகையில் கிராமத்தினரின் அழுகையை அந்த வழியே வரும் கடலின் கடவுளான சுசானோ கேட்கிறார். அவர்களுக்கு உதவ முன்வரும் அவர் அந்த மாநாகத்துக்கு எட்டு மாபெரும் பீப்பாய்களில் கடும் ஸாகே மதுவை நிரப்பி வைக்கிறார். ஸாகே மீது விருப்பம் கொண்டிருந்த மாநாகம் எட்டுத்தலைகளையும் பீப்பாய்களுக்குள் நுழைத்து ஸாகேவை அருந்தி மயங்குகையில் கடவுள் அதன் தலைகளை வெட்டிக்கொல்கிறார் ஜப்பானிய குழந்தைகள் மிக இளமையிலேயே கேட்டு மகிழும் கதைகளில் இதுவும் ஒன்று
சிலை கொய்தலும் சில சிந்தனைகளும்
சுக்ரீவன்- கும்பகர்ணப் போரில் முன்னவன், பின்னவனின் மூக்கையும், செவியையும் கடித்து பங்கம் செய்துவிடுகிறான். பின்னரும் நடக்கும் யுத்தத்தில் தன் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டும் கவலையுறாத கும்பன், தோல்வி நிச்சயம் என்ற தருணத்தில் ‘என் உடல் பாகங்களற்றுப் போய்விட்டது; ஆனாலும், குறைபட்ட நாசியோடும், செவியோடும் பிறர் நகைக்கும் விதத்தில் என்னை யாரும் பார்க்க வேண்டாம்; என் கழுத்தை நீக்கி கடலுள் என் தலையைப் புதைத்துவிடு, இராமா என்று வேண்டுகிறான்.
காசில் கொற்றம்
நமது தேட்டம் காசு என்ற சொல்லில். ‘காசில்லாதவனுக்கு வராகன் பேச்சென்ன?’ என்றோர் பழஞ்சொல் இருப்பது தெரியும். எல்லாத் தமிழ்ச் சொல்லும் வராகன் மதிப்புடையது என்பதும் அறிவோம். ஆனால் இன்றைய தமிழர்களின் சொற் பயன்பாட்டு நிலை ‘காசுக் கூண்டு கரிக் கூண்டாய்ப் போச்சு’ என்றே கூறிவிடலாம். ஆனால் காசு எனும் சொல்லுக்கு சமூகத்தில் இன்றிருக்கும் மதிப்பு என்ன?
பறக்கும்தட்டு – மீண்டும் ஒரு விவாதம்
கடந்த சில வருடங்களாக இந்தக் கருத்தோட்டத்தில் ஓர் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு வித்திட்டது 2017 ஆம் ஆண்டில் பிரபல நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை. ஹெலன் கூப்பர், ரால்ப் ப்ளூமெந்தால் மற்றும் லெஸ்லி கீன் எழுதிய இந்தக் கட்டுரை அந்த ஆண்டு உலகம் முழுவதும் பலரால் வாசிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. அதன் சாராம்சம் இது தான்.
கடந்த பல வருடங்களாக இந்த நிகழ்வுகளை கண்காணிக்க பென்டகனில் (அமெரிக்க ராணுவ தலைமையகம்) ஓர் அமைப்பு பல கோடி டாலர்கள் செலவில் பயனாற்றிக் கொண்டிருந்ததை இந்தக் கட்டுரை வெளிச்சம் போட்டுக் காண்பித்தது. மேலும் இந்த அமைப்பு சேகரித்து வைத்திருந்த பல காணொளிகளில் இரண்டை கட்டுரையாளர்கள் வெளியிட்டிருந்தனர். மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த இக் காணொளிகளில் அமெரிக்கப் போர் விமானங்கள் அடையாளம் தெரியாத விண்கலன்களை விமானியறையில் உள்ள அதி நவீன கதுவியிலும் (radar), அகச்சிவப்பு படமியிலும் (infra-red camera) பதிவு செய்யப்பட்ட காட்சிகள் உள்ளன.
காய்ச்சல் மரம் (சிங்கோனா)
ஒவ்வொரு கோடையிலும் மினுங்கும் பச்சை இலைக்குவையுடன் தெரியும் ஒவ்வொரு மரத்தையும் தேடித்தேடி பார்ப்பான். மாமனி ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் பனி மூடிய மலை முகடுகளில் ஏறி அழகிய இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த மலர் கொத்துக்கள் தெரிகிறதா என்று தேடுவான். 28 மரவகைகள் கண்டறிந்தும் அவன் தேடிய ஒன்று கிடைக்கவில்லை இன்னும்.மமானிக்கு அந்த வருடத்தின் வசந்தம் அதிர்ஷ்டத்தை கொண்டு வருமென்று நம்பிக்கை இருந்தது. தேடியதை கொடுத்தால் இன்னும் சில அல்பகாக்களை எஜமான் அவனுக்கு கொடுப்பாரென்பதால் மட்டும் அல்ல, அந்த மரத்தை காண்கையில் அவருக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்காகத்தான் அதைத் தேடுகிறான்.
நீலமலைக் கள்ளன்
பக்தி, இலக்கியம், சிற்பக்கலை, கட்டிடக் கலை. சித்திரக் கலை, ஆடற் கலை எதைச் சொல்ல எதை விட? சென்னை, தில்லி போன்ற மாநகரங்களை ஒப்பிடுகையில் மிகச் சிறிதான புவனேஷ்வரில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இடையறாத கோயில் கட்டுமானங்கள் நடந்து வந்திருக்கின்றன. இன்றைக்கு மிஞ்சியிருக்கும் 500 கோயில்களில் முந்நூற்றிலாவது வழிபாடுகள் நடை பெறுகின்றன. பல கோயில்களில் சிவனே முக்கிய தெய்வம். ஆனால், சக்திக்கும், விஷ்ணுவிற்கும், சூரியனுக்கும் அருமையான கோயில்களும் உள்ளன. எங்கள் கோயில்களில் ரேகா விமானங்கள் பிரசித்தி பெற்றவை. நேர்க்கோட்டில் புடைப்பாக காணப்படுவதை ரேகா விமானங்கள் என்போம்.
விஞ்ஞானத் திரித்தல்கள் – முடிவுரை
இந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கிய நாட்களில், புனைப் பெயரில் எழுதலாமா என்ற ஒரு எண்ணமும் இருந்தது. ஆனால், இன்று விஞ்ஞானத் திரித்தல்களைப் பற்றி வியாபாரங்கள் கவலப்படுவதே இல்லை என்ற அளவிற்கு இந்த நோய் பரவி விட்டதால், அதைக் கைவிட்டேன். இந்தக் கட்டுரைத் தொடரில் உள்ள சில விஷயங்கள் சிலருக்கு நெருக்கமாகப் புரிய வாய்ப்புண்டு, மற்றவை, வாசகர்களின் வாழ்க்கையில் கட்டுரை சார்ந்த நிகழ்வைச் சந்தித்தால், அக்கட்டுரையுடன் ஒரு தொடர்பு ஏற்பட வாய்ப்புண்டு. டால்கம் பவுடர் திரித்தல்கள் பற்றிய ஒரு கட்டுரையைப் படித்த வாசகர், எனக்கு, தனிப்பட்ட முறையில், பவுடரைப் பயன்படுத்தும் பழக்கத்தை விட்டு விடுவதாக எழுதியிருந்தார். இப்படி எழுதிய இத்தனை கட்டுரைகளை வாசித்த வாசகர் சிலருக்கு இப்படி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டால், அதை இந்த கட்டுரைத் தொடரின் உண்மையான வெற்றியாக நினைக்கிறேன்.
செந்தணல்
சீனா, ஆப்ரிகாவின் கொம்பு (Horn of Africa) என அழைக்கப்படும் நாடுகளில் தன் வணிக ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது. ஆப்ரிகாவின் வடகிழக்கிலுள்ள தீபகர்ப்ப நாடுகள் இவை; செங்கடலின் தெற்கு எல்லையில் இவை அமைந்துள்ளன. எதியோப்பியா (Ethopia) சீனாவின் இராணுவ வன்பொருட்களுக்கான சந்தை. ஜெபோடியில் (Djibouti) தன் இராணுவத் தளத்தை அமைத்துள்ளது சீனா. எரித்ரியா, (Eritrea) எதியோப்பியா, சோமாலியா, (Somalia) ஜெபோடி ஆகிய நாடுகளில் கட்டுமானத்திற்கெனவும், பிற முதலீடுகளாகவும் $14 பில்லியன் கடன் வழங்கியுள்ளது சீனா. இந்த ஆப்பிரிக நாடுகளில், இரும்புத் தாது, தங்கம், விலையுயர்ந்த நவரத்தினங்கள், இயற்கை வாயு, அதிக அளவில் இருப்பதுதான் சீனாவின் இத்தகைய ஆர்வத்திற்கும், முன்னெடுப்பிற்கும் காரணம்.
ஆவியுனுள்ளும் அறிவினிடையிலும்
எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. காளி என்பவள் அளப்பரிய ஆற்றல் உள்ளவள்- ஊழிப் பெருந்தீ. அவளை அனைத்துமாக வழிபடுவது காலந்தோறும் பழகிய ஒன்று. அவள் நவீன யுகத்தில், பெண் விடுதலையெனக் கருதப்படும் பேதைப் போதைகளின் ஆதிக்கத்திலில்லை- தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் படைப்பாளி காளியின் வாயில் ‘சிகரெட்டை’ வைத்து சமீபத்தில் காட்சிப்படுத்தினார். இதை ஃபெமினிசம் என அவர் நினைத்திருப்பாரேயானால் அவருக்கு எந்தக் கொள்கையிலும் தெளிவில்லை எனத்தான் நினைக்கத் தோன்றுகிறது.
யூகலிப்டஸ்
இந்த நவீன தேவதைக் கதையின் பெயர் ’’யூகலிப்டஸ்’’. 1 ஏராளமான உயரிய இலக்கிய விருதுகளை பெற்ற இந்த நாவலை ஆஸ்திரேலியரான முர்ரே பெயில் (Murray Bail) எழுதினார்.ஆஸ்திரேலிய நிலப்பரப்பின் செழுமையான விவரிப்பு, பெண்மையின் அழகு, ஆஸ்திரேலியாவின் அடையாளங்களில் ஒன்றான யூகலிப்டஸின் சிற்றினப் பெயர்களில் அமைந்திருக்கும் அத்தியாயங்கள், அபாரமான மொழிவளம் ஆகியவை கொண்ட ’யூகலிப்டஸ்’ மிக அழகிய காதல் கதை; இளமைப்பெருக்கில் இரு ஆணும் பெண்ணும் கொள்ளும் காதலும், ஆஸ்திரேலியர்களுக்கு இயற்கையாகவே இருக்கும் யூகலிப்டஸ் மீதான காதலும் இணைந்த வசீகரமான கதைக்கரு கொண்டது யூகலிப்டஸ்.
புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 22
இந்தத் தொழில்நுட்பங்கள் யாவும், காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவை ரசாயன முறைகளில் உள்வாங்கி, பூமிக்கடியில் புதைக்கும் முயற்சிகள். சில தொழில்நுட்பங்கள், தாங்கள் உருவாக்கிய கரியமில வாயுவைக் கொண்டு, மற்ற பயன்களுக்கு உதவுவது. இதனால், கரியமில வாயு தேவைப்படும் தொழில்கள், இயற்கையை அழிக்கத் தேவையில்லை. உதாரணத்திற்கு, உலகில் ஏராளமாக விற்கும் குளிர்பானங்கள் கரியமில வாயுவைக் கலந்துதான் விற்கின்றன!
மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம்
புராண இலக்கியவியலர், தேவதத் பட்டநாயக் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார் “ ஏன் பல இந்தியர்களுக்கு மேற்கத்திய மீட்பாளர்கள் தேவையாக உள்ளது? அக்கட்டுரை குழப்பமுடையதாகவும் புராண இலக்கியத்தை அதிகமாக வலியுறுத்துவதாகவும் இருந்தது. அது, இராமாயண மஹாபாரத எழுத்தாளருடைய தொழிலுக்கே உரித்தான அபாயம். எப்படியிருந்தாலும், எவருக்கும் தீங்கு செய்யும் எண்ணத்துடன் எழுதப்பட்டதல்ல. எனவே, அக்கேள்வி பதிலை எதிர்பார்த்து வைக்கப்பட்டுள்ளது. ஆகவே,,மேற்கத்தியர்கள் நிலைப்பாட்டைப் பற்றிய சில உன்னிப்பான கவனிப்புகளையும் பிறகு எனது நிலைப்பாட்டையும் இங்கு தருகிறேன்.
நீதி வழுவா நெறிமுறை
எக்ஸ் :அப்ப, ஜன நாயகம் படுத்துருதில்ல. அப்பன், ஆத்தா, மகன், மகள், மருமகங்க, பேரன், பேத்தி, மச்சினன், நாத்தானாருன்னு குடும்ப நாயகம்தான நாடு பூரா நடக்குது.
வொய் : எல்லா ஸ்டேட்லயுமா அப்டி நடக்குது?
எக்ஸ் : அதுவாய்யா கேள்வி? முக்காவாசி அப்படித்தான் நடக்குது. வொறவுமுறயில கண்ணாலம் கட்டி சொத்த பெருக்கறமாரி, நாட்ட இவனுங்களே கூறு போட்டுக்குறாங்க. இத விட நீதிபதிகள அமத்தறதுல கூட சொந்த பந்த நீக்குப் போக்கு நடக்குது.
கருக்கலைப்பு உரிமை- அமெரிக்க அரசியலின் வினோதங்கள்
இவர்களில் கணிசமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள். வேலை இழப்பு, குடும்ப வன்முறை காரணமாக தனித்து விடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பொருளாதார பின்னடைவில் சிக்கியவர்கள் என பட்டியல் நீளுகிறது. இந்த தீர்ப்பின் மூலமாக இனி இவர்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள முடியாதவர்களாகி விடுவர். இந்த வருடத்தில் மட்டும் 100,000 பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாதவர்களாகி விடுவர் என்றொரு ஆய்வறிக்கை கூறுகிறது. இதனால் இந்தப் பெண்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும். இவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலை பாதிப்புகள், பொருளாதார சிக்கல்கள், விருப்பமில்லாத உறவில் நீடிக்க வேண்டிய கட்டாயம், குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களை வளர்க்க போதுமான ஆதரவில்லாத நிலமை என பெண்களுக்கான பாதிப்புகளுக்கான தீர்வுகள் அல்லது மாற்றுத் திட்டங்கள் எதனையும் இந்த தீர்ப்பு பேசவே இல்லை.இச்சட்டம் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களைக் கூட கருத்தில் கொள்ளவில்லை என்பதே பெண்களின் மீதான வன்முறை தான். மேலும், கருத்தடை செய்து கொள்பவர்களுக்கும் கருவைக் கொன்ற குற்றவாளியாக கருதி தண்டனைகள் வழங்குவதும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
இகபானா மலர்களின் வழி
உலகெங்கிலும் இன்று மத எல்லைகளை கடந்த மலர்களின் பயன்பாடு இருக்கிறது. தெய்வங்களின் மலர் இருக்கைகள், கோவில்களின் கல்தூண்களின் மலர்ச்செதுக்குகள், தென்னிந்திய கோலங்களின் மலர் வடிவங்கள், மலர்க்களங்கள், குகை ஓவியங்களின் மலர் வடிவங்கள் என பண்டைய நாகரிகங்களின் மலர்களின் பயன்பாட்டினை குறித்த பற்பல சான்றுகள் உள்ளன. எகிப்திய கல்லறைகளில் பெரும்பாலானவற்றில் மலர்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். கி.மு.2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக உருவாக்கப்பட்ட பிரபல அஜந்தா குகை ஓவியங்களில் கைகளில் ஒற்றை மலரொன்றை ஏந்தியிருக்கும் இடை ஒசிந்த ஓவியம் உலக பிரசித்தி பெற்றது.
புவி சூடேற்றத்திற்கான தீர்வுகள் – பகுதி 21
நாம் எவ்வளவு முயன்றாலும், இந்த விஷயத்தில், இயற்கையைப் போன்ற அளவை நம்மால் எட்ட முடியாது – அது ஒரு 4 பில்லியன் ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னேற்றப்பட்ட விஷயம்! இயற்கையின் இந்த அருமையான சேவையைக் குலைத்த நம்மால், அதற்கு உதவவும் முடியும். முதல் காரியமாக, இயற்கையிடம் மிஞ்சியிருக்கும் கரியமில வாயு உள்வாங்கும் அளவை மேலும் குறைக்க மாட்டோம் என்று ஒவ்வொரு மனிதனும் நினைக்க வேண்டும். இன்னொரு யதார்த்தையும் நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். மனிதர்கள், நிலப் பிராணிகள். கடல் நமது வீடல்ல. அதனால், 17% உள்வாங்கும் கடலுக்கு உதவுவதை விட 24% சதவீதம் உள்வாங்கும் நிலத்திற்கு மேலும் உதவுவது நமக்கு சாத்தியம்!
பேயவள் காண் எங்கள் அன்னை
இன்று நீர் கங்கை ஆறெங்கள் ஆறே! ஹூக்ளி என்பது இங்கு அதன் பேரே! என் ஆன்மீக குரு மற்றும் கணவருமான ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சருக்கு இந்த ஹூக்ளியின் மேற்கரையில் 40 ஏக்கரில் மிக அழகிய கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இதனுள் எனக்கும், ஸ்வாமி விவேகானந்தருக்கும், தனித்தனியே கோயில்கள் உள்ளன. வளாக முகப்பினுள்ளேயே என் கோயில்! பரமஹம்சருக்கு இவ்விதம் ஆலயம் அமைத்து சமூக நல்லிணக்கதிற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென விவேகானந்தர் விழைந்தார். உலகம் முழுதும் பார்த்தவராதலால், இந்தியாவில் பின்பற்றப்படும் மும்மதங்களான இந்து, இஸ்லாம், கிருத்துவம் ஆகியவற்றைச் சுட்டும் படியும், முன்னர் நிலவி வந்த பௌத்த, சமண சமயங்களைக் காட்டும் வகையிலும் அவரது கோயில் கட்டுமானம் இருக்கிறது
காஃபி
அந்த காஃபி பயிர்களே இந்தியாவில் முதல் முதலாக பயிரிடப்பட்டவை. பாபா புதான் கொண்டு வந்தது காஃபியின் இரு முக்கியமான சிற்றினங்களில் ஒன்றான அரேபிகா வகை. அவற்றிலிருந்து கிடைத்த பழங்களின் கொட்டைகளை பாபா மெக்காவில் தான் கேட்டறிந்த முறைப்படி பக்குவப்படுத்தி வறுத்து அரைத்து பானமாக்கி உள்ளூர் மக்களுக்கு கொடுத்தார். காஃபி பானமும், பயிரும் அதன்பிறகு கர்நாடகாவில் பிரசித்தி பெற்றது
அணுவிற்கணுவாய்
இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் பாரதத்தில் அணுவியல், அணுத்தன்மை, புவியீர்ப்பு, இயக்க விதிகள், அணுவின் அமைப்பு என்பதைப் பற்றிய சூத்திரங்கள் இருந்திருக்கின்றன என்று சொன்னால் பலருக்கு வியப்பாக இருக்கலாம். ‘வைசேஷிகம்’ என்பது அணுவைப் பற்றி மகரிஷி கனாதா (Kannada) எழுதிய சூத்திரங்கள் அடங்கிய நூல். சூத்திரங்கள் என்பவை புரிவதற்குக் கடினமாக இருக்கும் விஷயங்களை, சுருக்கமாக, நினைவில் நிற்பதற்கு ஏற்ற வழியில், அதே நேரம் ஆழ்ந்த பொருளுடன் சொல்வதாகும். நம் திருக்குறளை நினைவில் கொள்ளுங்கள்.
புவி சூடேற்ற தீர்வுகள் – பகுதி 20
மின்சக்தி உற்பத்தியில் கரி மிகவும் மலிவான மூலப்பொருள். பல நாடுகள், கரியை நம்பிய நாடுகள். அனல் மின் நிலையங்களை மூடினால், தகுந்த மாற்று அமைப்பு உருவாக்குவது மிகவும் கடினமான விஷயம். உதாரணத்திற்கு, சமீப இந்திய மின்சார விரிவாக்கம், பெரும்பாலும், இயற்கை வாயுவை மூலமாகக் கொண்டது. சைனா, இன்னும் தன்னுடைய ராட்சச கரி சார்ந்த மின் நிலையங்களை மூடத் தொடங்கவில்லை. சொல்வது எளிது. ஆனால், செய்வது மிகவும் கடினம். நீர், காற்று மற்றும் சூரிய ஒளி குறைந்த பகுதிகள், அணு மின் நிலையம் ஒன்றே வழி. இதற்கான முதலீடு அதிகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?
ஜிந்த் கௌராகிய நான் இந்திய விடுதலையில் எங்கள் பங்கினைப் பற்றிச் சொல்ல வேண்டிய நேரமிது. கண்ணீராலும். செந்நீராலும் வளர்த்த விடுதலையின் விலையை அனைவரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் அறிய வேண்டும். ஜாலியன் வாலாபாக்கின் சுவர்களில் இன்றும் கூட குண்டுகள் துளைத்த ஓட்டைகளை நீங்கள் பார்க்கலாம். இந்த இடமே தனித்த “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?”
ஓரிரவில் அமெரிக்க நிலப்பரப்பு இருமடங்கான அதிசயம்
தேர்ந்த அரசியலறிஞரும் மூத்த அமெரிக்க தலைவருமாகிய இவர், ஒரு பெரிய மாகாணத்தையே எவ்வித சண்டை சச்சரவும் செய்யாமல் மற்றொரு நாட்டிடமிருந்து சரியான தருணத்தில் அவர்கள் கேட்ட விலையை கொடுத்து தன்னாட்டுடன் இணைத்துக் கொண்டார். அதன் நிலப்பரப்பு 828800 சதுர மைல். தற்போது, ஆர்கன்ஸா, மிசோரி,அயோவா,ஒக்லஹாமா,
நான் யார் யாரென்று சொல்லவில்லை
ஒரு திரைப்படப் பாடல் இவ்வாறு தொடங்கும்- ‘நான் யார் யாரென்று சொல்லவில்லை; நீ யார் யாரென்று கேட்கவில்லை’. ஆனால், கேட்காவிட்டாலும், சொல்லாவிட்டாலும் ‘நான் யார்?’ என்ற கேள்வி மனிதர்களுக்கு எழுந்து கொண்டுதான் இருக்கிறது. விஞ்ஞானமும், மெய்ஞானமும் அதற்கான விடைகளைத் தேடியவாறு இருக்கின்றன.
கல்வித் துறைக் கொடுமையாளர்கள்
அந்த இடத்தை அடைவதற்கே, கருத்தியல் ரீதியான கட்டாயக் கோட்டில் கால் பிறழாமல் நடந்தவர். அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ இந்துக்களை தங்கள் தூண்டிலில் மாட்ட விழையும் நிறுவனம் எதிர்ப்பாளர்களை கல்வி உலகத்தில் நீண்ட நாள் காலூன்ற விடாது. எதிர்பார்த்தது போலவே, முந்தைய தலைமுறை கல்வியாளர்களின் நிலையையே இவரும் விரிவுபடுத்துகிறார். உதாரணம், அவுரங்கசீப்பிற்கு வெள்ளை பூச்சு.இது அவருக்கு கடினமான வேலையாக தெரியவில்லை. ஏனென்றால் அவர் தான் கூறுவதை உண்மையாகவே நம்புபவர் எனத் தோன்றுகிறது
பெண்களும் கற்புப் பூட்டும்
கற்புபெல்ட் என்பது உலோகத்தினால் ஆன உள்ளாடையாகும். பெண்களது பாலியல் உறுப்பான யோனியை மறைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதற்கு பூட்டும் சாவியும் உள்ளது. இது பல்வேறு வடிவங்களில் உள்ளது. அவற்றில் சில சிறுநீர், மலம் கழிப்பதற்கு ஏற்பவும் வடிவமைத்துள்ளது. இவை வரலாற்றின் இடைக்காலத்தில் பெண்களின் பாலியல் ஒழுக்கத்தை பாதுகாக்க பயன்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பெல்ட் அணிந்த பெண்கள் தங்கள் கணவரின் அனுமதியின்றி உடலுறவு கொள்ள முடியாது.
ஆரோக்கிய பச்சை
கூம்பு வடிவத்தை கொண்டிருக்கும் இம்மலையின் பாறைகளில் தொற்றி ஏற வேண்டி இருந்ததால் புஷ்பாங்கதனும் பிறரும் மலையேற்றத்தின் நடுவில் களைப்பும் சோர்வுமடைந்தனர். மர நிழல்களிலும் பாறை மறைவுகளிலும் பலமுறை அமர்ந்து நீரருந்தி ஒய்வெடுத்துக் கொண்டனர். ஆனால் உடன் வந்த காணிகள் ஒருமுறைகூட சோர்வடையாதது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது .பழங்குடியினர் அவ்வப்போது மடியில் கட்டிக்கொண்டிருந்த கருமையான சிறிய பழங்களை எடுத்து உண்பதை அவர்கள் கண்டார்கள்
அமெரிக்க இடைத் தேர்தல்களுக்கான முதல் சுற்று- 2022
தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று காங்கிரஸில் பெரும்பான்மை உறுப்பினர்களுடன் அமெரிக்காவின் 46வது அதிபராக 2020 ஜனவரியில் பொறுப்பேற்று இரண்டு வருடங்களையும் பூர்த்தி செய்துவிட்டது பைடன் அரசு. குழப்பமான கால கட்டத்தில் பதவியேற்று கோவிட் கலவரங்களுக்கிடையில் தான் சிறப்பாக செயல்படுவதாக அதிபர் பைடன் கூறினாலும் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்திருக்கிறார் என்பது தான் உண்மை. மக்களின் ஏமாற்றம் இடைத்தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதைத் தான் வரும் நவம்பரில் நடைபெறவிருக்கிற தேர்தல் தீர்மானிக்கப் போகிறது.
புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 19
ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். அடுத்த சில கட்டுரைகளை வாசித்தால், உங்களது இந்தக் குழப்பம் முற்றிலும் குறையும். அதற்கு முன்னர், சில விஷயங்களை இந்த உலகப் பிரச்சினையில் நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
