நிராயுதபாணியான உள்ளூர் வாசிகளுக்கு முன் நான் ஒரு வெள்ளைக்காரனாய், கையில் துப்பக்கியை வைத்துக் கொண்டு இங்கே நிற்கிறேன். பார்ப்பவர்க்கு நான் ஒரு கதாநாயகன். உண்மையில் நான் ஒரு முட்டாள் பொம்மை. என்னை ஆட்டுவிக்கும் கயிறு பின்னால் நிற்கும் மஞ்சள் முக பொம்மலாட்டக்கார்களிடம் உள்ளது! ஒரு வெள்ளைக்காரன் சர்வாதிகாரியாகும் போது அவன் பறிப்பது மற்றவர்களின் சுதந்திரத்தை அல்ல; தன் சுதந்திரத்தை என்று அப்போது அறிந்து கொண்டேன்.
Category: இதழ்
எடைப் புதிருக்கு விடை என்ன?
ஊதிய உடலை இளைக்க வைப்பது எப்படி என்பது விஞ்ஞானிகளுக்கே கொஞ்சம் சவாலாகத்தான் இருக்கிறது. இதற்கு வழக்கமாகச் சொல்லப்படும் அறிவுரை என்னவென்றால் ‘உட்கார்ந்து தீனி தின்னாதே; ஓடியாடு; உடற்பயிற்சி செய்’ என்பதாகும். ஆனால் காலம் காலமாக நிலவி வரும் இந்தப் பொன்மொழி இப்போது பொலிவிழந்து வருகிறது என்கிறார், க்ரெட்சென் ரெனால்ட்ஸ்
பேரன்பின் தேவதை வருகை
யாவர்க்கும் மகிழ்வைத் தரும்
மந்திரங்களை உதிர்த்தது
பின்னர்
தவறவிட்ட விலைமதிக்கமுடியாதவொன்றை
தேடிச் செல்வது போல
மிகத் துரிதமாகத் தன் நிலம் நாடி
தொன்ம பயிர்நிலங்கள் தாண்டி
மீண்டும் பறந்தது
பெங்களூர் to பெங்களூரு
எம்.ஜி.ரோடு, கமர்ஷியல் ஸ்ட்ரீட் பிளாட்பாரங்களில் சன்னாவை தட்டையாக்கி, எலுமிச்சை சாறு வெங்காயம், கொத்துமல்லியுடன் கலந்து, பேப்பரை ஜோக்கர் குல்லா மாதிரி செய்து சென்னா மசாலா என்று தருகிறார்கள். சாப்பிட நன்றாக இருக்கும். சாப்பிட்டபின் நாக்கின் மேல் பகுதி சதை கொஞ்சம் உரியும் அவ்வளவு தான். வீட்டில் கிளி வளர்த்தால் இதை கொடுக்கலாம் சீக்கிரம் பேச்சு வரும்.
பனிச்சறுக்குப் பயணம்
எல்லா ஆரம்பங்களும் ஒன்றுதாம். அனைத்தும் மறக்கப்படுகின்றன.
நீங்கள் செய்துள்ளது மறத்தல். அதை மீட்க முடியாது.
இப்போது அல்லது எப்போதுமாய். உள்ளுக்குள் நீங்கள்
போட்டுள்ள வார்ப்பு அது.
புத்திசாலியான முட்டாள்-II
1970களில் யூரி கெல்லர் ஒரு மகத்தான நிகழ்வாக அலையடித்தார். “மன சக்தியால்” அவர் கரண்டிகளை வளைத்தார். முத்திரையிடப்பட்ட உறைகளிலிருந்த சித்திரங்களை “ஞானப்பார்வையால்” கண்டறிந்து வரைந்தார். பிரிட்டனின் மிகச்சிறந்த அறிவியலாளர்கள் அவருடைய அதீதமன ஆற்றல்களுக்கு சான்று பகர்ந்தனர். ஜேம்ஸ் ராண்டி என்கிற தொழில்முறை மாயாஜால நிபுணர் கெல்லரை போலவே கரண்டிகளை வளைக்கும் வரை. ஆனால் ராண்டி அந்த வித்தைக்கு அதீதமனசக்தி தேவையில்லை என்பதையும் தேர்ந்த கையசைவுகளும் பார்ப்பவர்களின் கவனத்தை சிதறடித்து அதனை செய்ய தெரிந்திருக்க வேண்டும் என்பதுமே அவசியம் என விளக்கிய போது அறிவியலாளர்களின் முகங்களில் ஈயாடவில்லை.
நேஷனல் ஜியாகிரஃபிக் புகைப்படப் போட்டி
உலகின் பிரபலமான புகைப்படப் போட்டிகளில் ஒன்று வருடந்தோறும் நேஷனல் ஜியாகிரஃபிக் நிறுவனம் நடத்தும் புகைப்படப்போட்டி. ஆரம்பநிலை ஆர்வலர்களிலிருந்து தேர்ந்த கலைஞர்கள் வரை பங்குபெறும் இப்போட்டிக்கு உலகெங்கிலுமிருந்து புகைப்படங்கள் வந்து குவிகின்றன. அப்படிக் குவிந்த புகைப்படங்களிலிருந்து சில நல்ல புகைப்படங்களை பாஸ்டன்.காம் சேகரித்து வெளியிட்டிருக்கிறது. அவற்றை இங்கே பார்க்கலாம்.
வாசகர் எதிர்வினை
இதுவரை ராமன் ராஜாவின் கட்டுரைகளை படித்து படித்து மகிழ்ந்து வந்தேன். எனக்கு ராமன்ராஜா அறிமுகம் ஆனதே சொல்வனத்தில்தான். இந்த வார கட்டுரை அவரது நகைச்சுவைத் திறனுக்கும் அவரது அறிவியலை ஜனரஞ்சகமாய் சொல்லும் பாங்குக்கும் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு என்பேன்.
பயங்கரவாதத்தின் ரணங்கள் – 26/11
26/11 என குறிப்பிடப்படும் அந்த பயங்கரவாத போர் இந்தியாவின் மீது நிகழ்த்தப்பட்டு ஓராண்டு முடியும் இத்தருணத்தில் உலகளவிலும், ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் அந்நிகழ்வின் பாதிப்பு குறித்து பேச வேண்டியது அவசியம். இந்திய சமூகத்தின் தனி ஒரு மனிதனை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசாங்க அமைப்பையும் அசைத்துப் பார்த்திருக்கிறது. நமது அரசு அமைப்புகளின் தடித்தனத்தையும், தவறுகளையும் வெளிக்காட்டியிருக்கிறது. கூடவே நம் சமூகத்து குறைபாடுகளையும்.
ஆடு
மணியக்காரனின் வீட்டின் முன்னால் ஆடுகள் கட்டிப்போடப்பட்டிருந்தன. இந்த ஆடுகளை யார் அறுத்துத்தருவார்? எல்லோரும் மரசெருப்பே போட முடியுமா? யாருக்கும் தோல் செருப்பு வேண்டாமா? தோல் எடுத்து தந்தால் கீழ் சாதியா? மாமிசம் சாப்பிடுபவனெல்லாம் கீழ் சாதியா என்று அவள் மனத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. திடீரென்று திரும்பி நெடுமாறன் என்ன சாப்பிடுறான். வெறும் பருப்புசாதம் சாப்பிட்டுட்டு சண்டை போடப்போவானா என்று கிழத்தி நாகம்மையை கேட்டாள்.
புரிந்து கொள் – 3
ஒரு பயங்கரக் கும்பல் வாஷிங்டன் மாநகரத்து மெட்ரோ ரயில் அமைப்பை வெடி குண்டு வைத்துத் தாக்க்த் திட்டமிட்டிருந்தது சி ஐ ஏ இயக்குநருக்குத் தெரிந்திருந்தது. இருந்தும் அவர் அந்த வெடிகுண்டுத் தாக்குதலை நடக்க விட்டார். அதைச் சாக்காக வைத்து, மிகக் கடுமையான எதிர் நடவடிக்கைகளை அக்கும்பலின் மீது செலுத்த நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவது அவர் திட்டம். இறந்த பல பயணிகளில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் இருந்தான்.
விதைகளின் கதைகள்
இந்தியாவின் பாரம்பர்ய நெல் விதைகளை அந்நிய சக்திகளுக்கு வழங்கியது உண்மையானால் அது போற்றக்கூடிய விஷயமாகத் தெரியவில்லை. அவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட இந்திய நெல்ரகங்கள் in Situ-வாகக் காப்பாற்றப்பட்டு உலகில் எந்த நாட்டிலாவது சாகுபடி செய்யப்பட்டிருந்தால், அதைப் பாராட்டலாம். யாருக்கும் பயனில்லாமல் அமெரிக்க விதை வங்கிகளில் உகந்த குளிர்சாதன வசதியுடன் நைட்ரஜன் நீர்ம ஆவிக்குள் முடங்கிக் கிடந்தால் யாருக்கு என்ன லாபம்? ஒரு காலனி நாடாக இருந்த இந்தியாவிலிருந்து இந்தியச் செல்வங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்குக் கொள்ளை போனது சரி. 20-ம் நூற்றாண்டில் இந்திய விடுதலைக்குப்பின் நிகழ்ந்த விதைக்கொள்ளைக்கு என்ன சொல்லித்திட்டுவது?
உள்நாக்குகள் மாநாட்டின் பதினான்கு தீர்மானங்கள்
உடனே எதுவும் பதிலளிக்க முடியாமல் சிறிது நேரம் மகள் உள்நாக்கு அமைதியாக இருந்தது. சிறிது நேர யோசனைக்குப் பிறகு, “”ஒரு நல்ல தலைமையை உருவாக்க முடியாத, இவர்தான் தலைவர் என்று ஒருவரைக் காட்டமுடியாத எந்தக் கூட்டமும் எதிலும் வெற்றிப்பெற்றதாக சரித்திரம் இல்லை. நம்மில் தலைமைக்கே சாத்தியம் இல்லை என்கிறபோது, நமக்கான தேவைகளை எப்படிச் சாத்தியப்படுத்த முடியும்?”
பதிமூன்றாம் எண்ணும், உற்சாக நம்பிக்கைகளும்
சிறுவயதிலிருந்து தொடர்ந்து அழுத்தி உந்தப்பட்டு, பிராபல்யத்தை நோக்கிப் பயணிக்கும் ஒவ்வொருவருமே சந்திக்கும் மனவலியை அகாஸி சந்தித்திருக்கிறார். இதே மனவலியை நாம் இப்போது தொலைக்காட்சிகளில் நடைபெறும் பாட்டுப்போட்டிகள், நடனப்போட்டிகள் வழியாக நம் குழந்தைகள் மீதும் சுமத்திக் கொண்டிருக்கிறோம். வெற்றிபெற்ற குழந்தைக்குக் கிடைக்கும் பிராபல்யம், பணம், விளம்பரங்கள் வழியாக ஒவ்வொரு குழந்தை மீதும் நாம் ஒரு பெரிய பாறாங்கல்லைப் போன்ற மன அழுத்தத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம்.
தாராசுரம் கோயிலில் கார்ல் சாகன்
பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த விஞ்ஞானத்தின் பார்வையையும் இந்திய தொன்மங்களின் பார்வையையும் ஒப்பிட்டு பேசுகிறார் கார்ல் சாகன்
மகரந்தம்
டார்வின் பலவிதங்களில் மிகவே வித்தியாசமான அறிவியலாளர். இன்றைய சூழலில் டார்வின் அவரது ஆராய்ச்சி பயணத்துக்கு நிதி கேட்டிருந்தால், அறிவியல் செயல்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் இன்றைய விதிகளின் படி அது நிராகரிக்கப்பட்டிருக்கும் என வேடிக்கையாக குறிப்பிடுவார்கள். டார்வினின் வாழ்க்கை ஒரு பாசமிக்க கணவனாக, பெரும் அன்பு கொண்ட தந்தையாக, எதிலும் பொருந்தாத ஒரு மாணவனாக, பெற்றோரால் வேலைக்காகாது என நினைக்கப்பட்ட மைந்தனாக இருந்தவர்.
வடுவூர் துரைசாமி ஐயங்காரின் ’வித்யா சாகரம்’
நாவலில் இருந்து அந்தக் காலக் கட்டத்தில் நிலவிய பல சமூகச் செய்திகளை நாம் ஊகித்து அறிய முடிகிறது. முக்கியமாக, ஜமீன்தார்கள் போன்ற பணக்காரர்களிடமும், ஆதிக்க ஜாதிகளிடமும் தாசிகளின் செல்வாக்கு, தாசிகளின் ஆதிக்கத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் போன்றன இந்த நாவலின் மூலம் தெரிய வருகின்றன.
கார்ட்டூன் – இதழ் 13
வாழ்க்கையெனும் ஓடம்
சுவர்கள் இல்லா அறைகளுக்கு கதவுகள் எதற்கு? ஆனாலும் கதவுகளை திறந்தே செல்ல வேண்டுமென்பது இங்கும் மரபாக இருக்கின்றது. அந்த மரவீட்டில் இரண்டு ஜென் துறவிகள். ஒருவர் வயதானவர். இன்னொரு துறவிக்கு ஆறு வயது இருக்கலாம்.சுற்றி மலைகள். ஒரு ஏரி. நடுவே மரவீடு. இவர்கள் இரண்டே பேர். 103 நிமிடங்கள் ஓடும் திரைப்படத்தில் அதிகம் போனால் இவர்கள் பேசும் வசனம் இரண்டே பக்கம்தான் வரும். தென்கொரிய இயக்குநர் கிம் கி டக்கின் முத்திரைப் படைப்பான இந்தப் படத்தின் திரைக்கதை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது.
சிவப்பு மை
”திரு வூ? நம்ம எல்லாரும் ஹாயா உட்கார்ந்துகிட்டு அழகழகான பாறைகளையும் மேகக் கூட்டங்களையும் விதவிதமா வரைஞ்சுகிட்டு தாலாட்டிக்கிட்டு, அக்கடான்னு கெடந்தமானா, இந்த ராஜ்ஜியம் என்ன கதியாவும்?”
“குலாபி டாக்கீஸ்” திரைப்படத்தை முன்வைத்து
கன்னட சமூகத்தில் ராஜ்குமாரும், இருக்கிறார்தான். அவரை தெய்வமாக்கிய கன்னட சினிமாவும் சினிமா ரசிகர்களும் உண்டுதான். அவருக்கு கன்னட அரசியல் தலைமையும் தலை வணங்குகிறார்கள்தான். ஆனால் அங்கு கிரீஷ் காஸரவல்லிக்கும் இடம் இருக்கிறது. பி.வி.காரந்துக்கும், கே.வி.சுப்பண்ணாவுக்கும் இடம் இருக்கிறது. ஆனால் இங்கு அம்மாதிரி யாருக்குமே இடம் இருப்பதில்லையே? நமக்கு ரஜினிகாந்தும், கமலஹாசனுமே, எல்லாமாக, காஸரவல்லியிம், ராஜ்குமாருமாக இருக்கிறார்களே. எத்தகைய கலாசாரத்தை நாம் உருவாக்கியிருக்கிறோம்? காஸரவல்லியின் குடும்பம் யக்ஷகானாவுடன் நெருங்கிய உறவு கொண்டது. கே.வி.சுப்பண்ணாவும் காஸரவல்லியின் உறவினர் தான். ஆனால் காஸரவல்லியோ, கே.வி.சுப்பண்ணாவோ, யக்ஷகானா தான் நவீன கன்னட நாடகத்திற்கும் சினிமாவுக்கும் உறபத்தி ஸ்தானம், யக்ஷகானாவை பிரதி செய்து கோமாளித்தனம் பண்ணுவது தான் எங்கள் பணி என்று கிளம்பவில்லையே? ஏன், நாம் மட்டும் இப்படி?
இறைத்தூதுவன்
இந்த புதுசெல்போனில்
பிரியமானவர்களின்
மனதின் குரலோடு
ரகசியமாக பேசலாமென்றான்.
பதிலேதும் சொல்லாமல்
புன்னகையோடு பார்த்தேன்.
கடவுளுடன் பன்னிரு நடனங்கள்
இது பல நாட்டு இசை வகைகளை நேர்மையாக அணுகுவதாலும், தேர்ந்த மேற்கத்திய இசைக்கோர்ப்பாலும் முக்கியமான இசைப்படைப்பாகிறது. ஒரு வட்டப்பாதையில் மீண்டும், மீண்டும் சுற்றிவரும் ட்யூனும், பின்னணி இசைக்கோர்வையும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை வடிவமைப்பை வெகுவாக நினைவூட்டுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவைப் பின்னணியாகக் கொண்ட ’Bombay Valentine’ என்ற இசைக்கோர்வை அச்சு அசலாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு போலவே இருக்கிறது.
அது அவள் அவன்
தினமும் எங்கள் வீட்டுக்கு வந்து போகும் சண்முக அண்ணனைக் கண்டாலே ஜாக்கனுக்கு ஆகாது. அவன் வருவது தெரிந்தாலே ஜாக்கனை கட்டிப் போடுவோம். ஆனாலும் கடும் கோபத்துடன் இவனை குதறியே தீருவது என்று கட்டியிருக்கும் சங்கிலி கழுத்தை அறுக்க, பாய்ந்தப் பாய்ந்து குரைப்பான்.எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் சண்முக அண்ணன் ஒரு நாள் ஜாக்கன் ஒரு நாய் என்பதையும் மறந்து, ‘ஒன் வயசென்ன என் வயசென்னலே’ என்று தன்னிலை மறந்து கோபப்பட்டான்.
கார்ட்டூன்
புத்திசாலியான முட்டாள்-I
கார்டனர் முன் வைக்கும் எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். ஐசக் நியூட்டன் விவிலிய அடிப்படைவாத சிருஷ்டியை உண்மையென நம்பி அதனைக் குறித்து சில நுணுக்கமான கணித ஆராய்ச்சிகளைச் செய்தது; ஷெர்லாக் ஹோம்ஸை உருவாக்கிய சர் ஆர்தர் கோனன் டாயில் சில பதின்ம சிறுமிகள் எடுத்த புகைப்பட தேவதைகளை உண்மையென நம்பி அது குறித்து ஒரு நூலையே எழுதியது அத்துடன் பாபி ஃபிஷரின் தீவிர யூத வெறுப்பு.
சென்னையில் அட(டை) மழை!
இருபது அடிக்கு ஒரு குடையை கவுத்துவைத்து அதில் குடை வியாபாரம் செய்துக்கொண்டிருந்தார்கள். “அறுபது, எழுபது” என்று விற்ற குடைவியாபாரிகள் எல்லோரும் சொட்ட சொட்ட நனைந்திருந்தர்கள். அந்த மழையிலும் “அதோ அந்த பச்சை கலர் கொடுங்க” என்று மக்கள் வாங்கிக்கொண்டிருதார்கள். குடை அன்று சென்னை மக்களின் கை, கால் மாதிரி ஒரு புதிய உறுப்பானது.
செவ்வாய் கிரகப் புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தை 2006 ஆம் வருடத்திலிருந்து சுற்றிவரும் Mars Reconnaissance Orbiter என்ற நாசா செயற்கைக்கோள், அதிலிருக்கும் HiRISE என்ற உயர்தொழில்நுட்பக் கேமரா வழியகப் பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியிருக்கிறது. செவ்வாய் கிரகத்தின் கோள்பரப்பை சற்று நெருக்கமாகக் காட்டும் புகைப்படங்களின் தொகுப்பை பாஸ்டன்.காம் வெளியிட்டது. அவற்றை இங்கே காணலாம்.
நிழல் நந்தி
எத்தனையோ அழகான காட்சிப்படிமங்களை நாம் வெகு சாதாரணமாகக் கடந்து சென்று விடுகிறோம். சிறப்பான பல கட்டடக்கலை சாதனைகள் நம்மில் சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்துவதில்லை. தென்னிந்தியாவின் சில கோயில்களில், வருடத்தின் ஒரு சில குறிப்பிட்ட தினங்களில் மட்டும் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழுமாறு வடிவமைத்திருப்பார்கள். சூரியன் இறைவனை பூஜை செய்வதான ஐதீகம் மட்டுமே கவனத்தைக் கவருகிறதே தவிர, வானியல், கணிதம், கட்டடக்கலை சார்ந்த அந்த வடிவமைப்பின் அற்புதம் நம் மனதின் மேற்பரப்பைக் கூடத் தீண்டுவதில்லை. வற்றையெல்லாம் நம் கண்களால் கண்டறிந்து ரசிக்க முடிந்தால் அதுவே சிறந்த மன எழுச்சியைத் தரும். அதைப் புகைப்படமாக்குவதெல்லாம் ஒரு சாதாரண தொழில்நுட்பம் சார்ந்த பின்நிகழ்வுதான். ஒளியையும், கோணங்களையும் ரசிக்க முடியும் மனோபாவமே பிரதானம். அப்படி ஒரு கோணத்தை நாம் கண்டுகொள்ள முடியும்போது, சிற்பத்தின் புன்னகையை ரசிக்க முடியும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த கலைஞர்களின் கலையுணர்வை நம்மால் தரிசிக்க முடிகிறது.
சாத்தியத்தை மீறிய சத்தியங்கள்
மனித ஜினோம் ப்ராஜெக்ட் ஆரம்பித்தபோது ‘இதனால் யூஜெனிக்ஸ் சாத்தியமாகும், நல்ல குடிமக்களைப் பிறப்பிக்க முடியும்’ என்றார்கள். பரம்பரை வியாதிகளைப் போக்குவதுடன், குற்றங்களைக் குறைத்து, சமுதாயத்தில் போக்கிரித்தனத்தை ஒழிக்க முடியும் என்று சொல்லப்பட்டது. 1989ல் ‘சயன்ஸ்’ பத்திரிகையின் தலையங்கத்திலேயே, ‘இனி மன நோய்கள் ஒழிந்துவிடும், ப்ளாட்பாரத்தில் படுத்துத் தூங்குபவர்கள் குறைந்துவிடுவார்கள்’ என்று சிவலிங்கத்தின் முன்னால் நின்ற மாணிக்கவாசகர் மாதிரி நெக்குருகினார்கள். நடந்ததா ?
புரிந்து கொள் – 2
என்னை சிஐஏ மேன்மேலும் சோதனைகள் நடத்துவதற்குப் பயன்படுத்த விரும்பலாம், மற்ற நோயாளிகளையும் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து இப்படியே பயன்படுத்த விரும்பும். அதற்குப் பிறகு வெளியாட்களில் தானாக முன்வருபவ்ர்கள் சிலரை சிஐஏ பொறுக்கி எடுத்து, அவர்கள் மூளைகளுக்குப் பிராணவாயு கிட்டாமல் அடைத்து வைத்து சேதமாக்கி, பின் மீட்டு எடுக்க ஹார்மோன் கே சிகிச்சை அளிக்கும். எனக்கு சிஐஏ உடைய சொத்துப் போலாக விருப்பமில்லை.
வடுவூர் துரைசாமி ஐயங்கார்
வடுவூரார் ஒரு வினோதமான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார். ஃபேரோக்கள் என்ற எகிப்திய மன்னர்கள் தமிழ் நாட்டில் இருந்து எகிப்து என்ற மிசிர தேசத்திற்குச் சென்ற வடகலை ஐயங்கார்கள்தான் என்பதை ஆதாரங்களுடன் நிறுவி, தி லாங் மிஸ்ஸிங் லிங்க் என்றொரு 900 பக்க ஆராய்ச்சி நூலை எழுதி அவரே பதிப்பித்து வெளியிட்டதாகவும், அந்த நூல் விலைபோகாதபடியால் தன் சென்னை வீட்டை விற்று விட்டு கிராமத்துக்கே திரும்பி விட்டதாகவும் க. நா. சு நினைவு கூறுகிறார்.
வீழ்ந்த அதிகாரம், இணைந்த உள்ளங்கள்
பெர்லின் சுவரின் தோற்றமும், வீழ்ச்சியும் குறித்த ஆவணப் படம்
மகரந்தம்
“மனுசன் குரங்கிலிருந்து வந்தான் அப்படீன்னா ஏன் குரங்கு இன்னும் மனுசனாக மாட்டேங்குது?” என்று அசட்டுத்தனமாக கேட்டுவிட்டு பெரிய அறிவாளியாக புளித்த ஏப்பம் விடும் படைப்புவாதிகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.
வேளாண்மை உயில்: ருஷியாவில் மண்ணுயிர் ஆய்வு
பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்த ஸ்பேரயர் கொண்டு காடுகளில் ‘மருந்து’ அடிப்பதில்லை. காடுகளில் உள்ள விலங்குகளும் தாவரங்களுக்கும் நோய் வருவதுண்டு. ஆனால் மருத்துவ உதவியின்றி அவை குணமாகின்றன. விலங்குகளும் தாவரங்களும் பூச்சி பூசணங்களிலிருந்து தாமாகவே காப்பாற்றிக் கொள்கின்றனவே. எவ்வாறு? இழந்துவரும் மண்வளம் மீட்கப்படவேண்டும். நவீன விவசாயத்தில் மண்வளம் இழப்பது மட்டுமல்ல. மண்ணில் மக்குப் பொருள் இல்லாததால் மண்ணே அரிப்புகளுக்கு பலியாகிப் பாலையாகிவிடுகிறது.
உலக விலங்குகள் தினம் – அக்டோபர் 4
அக்டோபர் நான்காம் தேதி உலக விலங்குகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி Boston.com வெளியிட்டதொரு சிறப்பான புகைப்படத் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
கார்ட்டூன்
கார்ல் சாகன் – இளநீலநிறப் புள்ளி
கார்ல்சாகன் இளநீலநிறப்புள்ளியைக் குறித்து இந்த வீடியோவில் பேசுகிறார்.
வாசகர் எதிர்வினை
சொல்வனத்தில் டேவிட் ஷெப்பர்ட் பற்றின அஞ்சலி படித்தேன். அருமையான கட்டுரை. போலியான பாவனைகள் இல்லை என்பதே இக்கட்டுரையின் முக்கிய சிறப்பு. அடுத்து ஒரு புன்னகையுடனான மீள்பார்வையாக உள்ளது இதன் உத்தேசம். இழப்பைப் பற்றி பேசுகையில் சமநிலைக்கு இந்த நகைச்சுவை நல்லது. உங்கள் நினைவுகளிலிருந்து ஆரம்பித்து குறிப்பான புறவய தகவல்கள் தந்து அருமையாக ஒருங்கிணைத்துள்ளீர்கள்.
புதியதோர் உலகம்
முதல் வாரத்திலேயே ஒருநாள் அம்மாவிடம், “ஏம்மா நீங்களும் ஸ்கூல்ல படிக்கிறப்ப இப்டி தான் எப்பவும் புத்தகமும் கையுமா படிச்சிட்டே இருப்பீங்களா?”, என்று கேட்டேன். அம்மா இல்லையென்று சொன்னதை நம்பாதவனாக, “நிஜமாவா?”, என்றதும், “அடப் போடா, வீட்ல அஞ்சி பிள்ளைங்க. நாந்தான் மூத்தவ. அம்மா வேற எப்பயும் சீக்கு. கேக்கணுமா? அடுப்படியிலையோ இல்ல தம்பிதங்கச்சியப் பார்த்துக்குறதோன்னு,.. எப்பயும் வேலையிருக்கும். அதுக்கிடையில தான் நான் பள்ளிப்பாடத்தை எழுதவும் படிக்கவும் செஞ்சிக்கணும்.
நடுக்கடலுக்குப் போனாலும்…
– எங்க தலைவர அவன் இவண்ணு சொல்றான் மாமா.
– விடு வேணு. இதென்ன புதுசா, எல்லோருமே அப்படித்தான் சொல்றோம். நீ மத்த நடிகருங்களை அப்படி சொல்றதில்லையா?
– இப்ப அவரு ஒரு கட்சிக்கு தலைவரு.
– எந்தத் தலைவராக இருந்தாலும், அப்படித்தான் நாம ஏக வசனத்தில் அழைக்கிறோம். மரியாதை கொடுக்கிறமாதிரி அவங்க நடந்துக்கணும், இல்லைண்ணா சொல்லத்தான் செய்வாங்க.
விழப் போகிறது!
2004-ல் 2004FH என்ற பெயருள்ள 100 அடி அகலப் பாறை பூமியை மயிரிழையில் தப்பிச் சென்றது. 1992-ல் கைப்பர் வளையம் என்று புளூட்டோ வீட்டுக்கு அருகே மாபெரும் கற்களின் மாநாடு ஒன்று நடப்பதைக் கண்டுபிடித்தார்கள். இவற்றில் ஆயிரத்துக்கு மேற்பட்டவை, இங்கிருந்தே பார்க்கக்கூடிய அளவுக்குப் பெரியவை. இவற்றில் எது ஒன்று வந்து விழுந்தாலும் பூமிக்கு அத்துடன் ஜன கண மனதான்.
வாசகர் எதிர்வினை
சுகா அவர்களின் கட்டுரை சூப்பர். அவருடைய அக்மார்க் நகைச்சுவை கொண்ட சிறப்பான ஆக்கம். மேலும், சென்ற இதழில் வெளியான ராமன் ராஜா அவர்களின் கட்டுரை மிக அருமை. சுவாரஸ்யமாக எழுதுகிறார். பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பருந்துப் பார்வையை அளிப்பதாக இருந்தது.
என் சொல்லால் உனக்கொரு முத்தம்
எனை சிலுவையிலிருந்து
இறக்கி விடு
என் குருதியை
ஆணி உறிஞ்ச
எந்த நியாயமும் இல்லை
ஆட்டோவில் போன அசோகமித்திரன்
சுஜாதா காலமான போது, அஞ்சலி செலுத்த அசோகமித்திரன் வந்திருந்தார். இரண்டாம் முறையாகப் பார்த்தேன். மத்தியான வேளையில் சென்னை வெயிலுக்குக் களைத்துப் போயிருந்தார். வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டார். உடனே சிலர் அவருக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தார்கள். கொடுத்தவர்களுக்கு நிச்சயம் அவர் அசோகமித்திரன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தண்ணீர் அருந்திவிட்டு சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “வேளச்சேரிக்கு போகணும், பஸ்டாண்ட் வரை யாராவது கொண்டு விட முடியுமா ?” என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. அங்கிருந்த ஒரு பிரபல டைரக்டர், “இவர் தமிழ்நாட்டின் Hemingway. இவருக்கா இந்த நிலமை ?” என்றார்.
கார்கோகல்ட் ஹிந்துத்துவா
நாஸா சான்றாதாரம் தேடும் ஹிந்துத்துவர்களை நாம் இந்த வரைபடத்தில் எந்த புள்ளியில் நிறுத்தலாம்? முதலில் ஏன் நாஸா? இவர்கள் எப்போதும் சுதேசியை முன்வைப்பவர்கள் அப்படியிருக்க ஏன் இஸ்ரோவை தேர்ந்தெடுக்க கூடாது? ஏன் நாஸாவை தேர்ந்தெடுக்க வேண்டும்? தங்களை ஒரு உலகளாவிய வட்டத்தில் வைத்து பார்க்க முயல்கிறார்கள். அவர்களை அறியாமலே அதற்கான சிறந்த வெளிப்பாடாக அமெரிக்க அறிவியல் நிறுவனம் ஒன்றை தேர்ந்தெடுக்கிறார்கள். அதன் மூலம் தங்கள் பழமைக்கு ஒரு சான்றாதாரம் தேடுகிறார்கள்.
மகரந்தம்
நம்பிக்கைகளின் அடிப்படையில் மனிதகுலம் மிகப்பெரும் பிளவை சந்திக்கிறது. இந்தப் பிளவின் இடைவெளியில் புதைக்கப்பட்ட பிணங்கள் கணக்கிலடங்காதவை. மதம் சார்ந்த நம்பிக்கையாளர்களின் பூசல் ஒரு பக்கம். இந்நாணயத்தின் மற்றுமொரு பக்கம், கடவுள் மறுப்பாளர்களுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையே நடைபெறும் பூசல்.
111
சமீபத்தில் மறைந்த நடுவர் டேவிட் ஷெபர்ட் குறித்த கட்டுரை இது: டேவிட் ஷெபர்ட் தன் சிறுவயதில் கிராமத்தில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே அவருக்கும் இந்த ‘நம்பிக்கை’ ஏற்பட்டிருக்கிறது. நெல்சன் நம்பரால் ஏற்பட்ட துரதிர்ஷ்டம் நீங்க வேண்டுமென்றால் செய்ய வேண்டிய பரிகாரம், பேட்டிங் அணியின் வீரர்கள் அனைவரும் ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டு நிற்பது.
முற்றுப்புள்ளி
நளீம் நானா கொடுத்தனுப்பிய கொய்யாப்பழத்தினை அவர் பார்க்க, அறை ஜன்னலருகிலிருந்து புன்னகையுடன் சுவைப்பார் நுஸ்ரத் ராத்தா. இங்கு புளித் திராட்சைகளைக் கடிக்கும் நளீம் நானாவின் முகத்தில் நவரசங்களும் மிளிரும். புன்னகை, அஷ்டகோணலாகி உடல் சிலிர்க்கும். இருந்தும், தலைவியின் அன்புக் கட்டளையென்பதால் கருமமே கண்ணாக முழுக் குலையையும் உள்ளே தள்ளுவார் அவர்.
புரிந்து கொள்
மோசமான கனாக்கள் வருவது நின்ற பின் நான் கொஞ்சம் ஓய்வெடுக்க முடிந்தது. முதல் மாறுதல் நான் கவனித்தது, நான் படிக்கிற வேகமும், படித்ததைப் புரிந்து கொள்கிற வேகமும் மிகவும் கூடியிருந்தன. சீக்கிரம் ஏதோ ஒரு நாளைக்குப் படிக்க வேண்டும் என்று அலமாரியில் நாட்களாய் தொடாமல் வைத்திருந்த புத்தகங்களை எல்லாம், படிக்கக் கடினமாய் மிக டெக்னிகலாக இருந்த புத்தகத்தை எல்லாம் படித்து முடித்திருந்தேன்.
