ஜெயராமன் எனும் கானுயிர் ஆர்வலர்

கானுயிர் புகைப்படக் கலைஞர்(Wildlife Photographer) திரு.ஜெயராமன் இத்துறையில் பிரபலமானவர். 1970-களில் துவங்கி இன்று வரை சுமார் 50 வருடங்களாக தொடர்ந்து பயணிக்கும் ஒரு கானுயிர் புகைப்படக் கலைஞர். உலகளவில் பல விருதுகளை பெற்றவர். பல புது வகை உயிர்களுக்கு இவரது பெயரின் அடிப்படையில் என்று பெயர்(Myrmarachne jayaramani & Roorchestes jayarami) சூட்டப்பட்டுள்ளது. இத்துறையில் தனது ஈடுபாடு குறித்து பேசும் போது ரசனை என்பதை தாண்டி, அது தன்னுடைய இருத்தல் சார்ந்தது என்று சொல்கிறார். தனது அனுபவத்தை பற்றி பேசும் ஜெயராமன் இப்படி சொல்கிறார் : “அதிக நாட்கள் கானகங்களிலே இருப்பதாலும், ஒரு நாளின் அதிக நேரத்தை இயற்கைச் சூழல்களுக்கு மத்தியிலேயே செலவழிப்பதாலும் ஒரு மனிதனுக்கு அதிக முன்னெச்சரிக்கை உணர்வு, சூழலோடு ஒத்துப் போகிற தன்மை, உடன் எதிர்வினை புரியும் குணம் அனைத்தும் வந்து விடுகின்றன. உங்களுக்குத் தெரியுமா? சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகளின்படி, ஒரு தேர்ந்த இயற்கையியலாளன் மற்றும் கானுயிர் புகைப்படக் கலைஞன் மேன்மையான நடத்தைகளையும், உயர்ந்த மனிதத் தன்மைகளையும் கொண்டு நீண்ட நாட்கள் சீரான உடல்நலத்துடன் வாழ்கிறான்”. கானுயிர்கள், பறவைகள் குறித்து ஆழமான புரிதல்களை கொண்டிருக்கிறார். சூழலியல், அதன் சமநிலை குலைவு மற்றும் இதனால் மனித குலம் அடையப் போகும் வீழ்ச்சி குறித்தும் தனது கருத்துக்களை விரிவாக இந்த நேர்காணலில் பதிவு செய்கிறார்.

கண்கள்

கிட்டத்தட்ட 25 வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டதால் ஊடகங்கள் இந்த விஷவாயுக்கசிவை மீண்டும் நினைவு கூர்ந்து பல செய்திப்படங்களையும், ‘இப்போது என்ன செய்ய வேண்டும்?’ என்ற மானுட அக்கறையின் மகத்துவங்களையும் கொட்டிக் கொண்டிருந்தன. அவற்றிலெல்லாம் தவறாமல் இடம்பெற்றிருந்ததொரு புகைப்படம், கழுத்துவரை மூடப்பட்டு, முகம் மட்டும் தெரியும் ஒரு சிறு பெண் குழந்தையின் சடலம்.

நூலை மீறும் பொம்மைகள்

தெருவில் கோஷமிட்டபடிச் சென்ற போராளிகள் மீது, காவலர்கள் நாய்களை ஏவிவிட்டு கடிக்க வைப்பது, இரண்டு வெள்ளை இன ஆட்கள் கருப்பினப் பெண்களை உருட்டுக்கட்டையால் தலையில் அடிப்பது போன்ற புகைப்படங்கள் பலத்த அபாயங்களுக்கு நடுவே எடுக்கப்பட்டவை. சில வெள்ளை இன அதிகாரிகள், தங்கள் கல்லூரியில் சேரவிருக்கும் முதல் கருப்பு மாணவரை எப்படித் தாக்குவது என்று சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது மறைந்திருந்து எடுத்த புகைப்படமும் பிரபலமான ஒன்று.

நிழல் நந்தி

எத்தனையோ அழகான காட்சிப்படிமங்களை நாம் வெகு சாதாரணமாகக் கடந்து சென்று விடுகிறோம். சிறப்பான பல கட்டடக்கலை சாதனைகள் நம்மில் சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்துவதில்லை. தென்னிந்தியாவின் சில கோயில்களில், வருடத்தின் ஒரு சில குறிப்பிட்ட தினங்களில் மட்டும் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழுமாறு வடிவமைத்திருப்பார்கள். சூரியன் இறைவனை பூஜை செய்வதான ஐதீகம் மட்டுமே கவனத்தைக் கவருகிறதே தவிர, வானியல், கணிதம், கட்டடக்கலை சார்ந்த அந்த வடிவமைப்பின் அற்புதம் நம் மனதின் மேற்பரப்பைக் கூடத் தீண்டுவதில்லை. வற்றையெல்லாம் நம் கண்களால் கண்டறிந்து ரசிக்க முடிந்தால் அதுவே சிறந்த மன எழுச்சியைத் தரும். அதைப் புகைப்படமாக்குவதெல்லாம் ஒரு சாதாரண தொழில்நுட்பம் சார்ந்த பின்நிகழ்வுதான். ஒளியையும், கோணங்களையும் ரசிக்க முடியும் மனோபாவமே பிரதானம். அப்படி ஒரு கோணத்தை நாம் கண்டுகொள்ள முடியும்போது, சிற்பத்தின் புன்னகையை ரசிக்க முடியும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த கலைஞர்களின் கலையுணர்வை நம்மால் தரிசிக்க முடிகிறது.

போரும், புகைப்படமும்

வியட்நாம் போரின்போது தீப்புண் காயம்பட்டு அழுதுகொண்டே நிர்வாணமாக ஓடிவந்த சிறுமிக்கு அப்புகைப்படக்காரர் ஓடிச் சென்று வேறெதாவது முதலுதவி தந்திருக்கலாம். ஆனால் உலகையே அதிரவைத்துப் போர்மீது கசப்புணர்வை ஏற்படுத்திய அந்தப் புகைப்படம் நமக்குக் கிடைத்திருக்காது. அதைப்போலவே கேபாவின் புகைப்படமும் சரியானதொரு பிரச்சாரத்தையே முன்வைத்தது. போரில் ஏற்படும் மனித இழப்பைக் குறித்ததொரு அதிர்ச்சியையும், தேசியவாதிகளின் வன்முறையைக் குறித்தொரு விழிப்புணர்வையும் தந்தது.

முகம் சொல்லும் கதை

உலகின் சிறந்த புகைப்படங்களை அறிமுகப்படுத்தும் புதிய தொடர் இது: ஷரபத் குலா ஸ்டீவ் மக்கரியைச் சந்தித்தபோது அவர் தன்னுடைய விருப்பமாகச் சொன்ன ஒரே ஒரு விஷயம், தனக்குக் கிடைக்காமல் போன கல்வி தன் மூன்று பெண் குழந்தைகளுக்காவது கிடைக்க வேண்டும் என்பதுதான். சோவியத் யூனியனின் தாக்குதல்களில் தன் குடும்பத்தை இழந்த குலா, இப்போது பெண்களின் சுதந்திரத்தையும், தேவைகளையும் காலடியில் நசுக்கி வரும் தாலிபான் ஆட்சியில் பழமைவாதிகளின் மத்தியில் வாழ்ந்து வருகிறார். உலகெங்கும் அறியப்படும் இந்தப் பிரபலமான முகம் இப்போது ஆப்கானிஸ்தானின் ஏதோ ஒரு மூலையில் பர்தாவுக்குப் பின் மறைந்திருக்கிறது.