காற்றில் கரைந்த கரஹரப்ரியா

சென்ற டிசம்பர் சீஸனில் ஒரு சபா விழாவுக்கு, டாக்டர்.ஜெகத்ரட்சகனைத் தலைமை தாங்க அழைக்கிறார்கள். அவர் மேடையேறி, ‘மிருதங்க வித்வான் டி.என்.கிருஷ்ணன் அவர்களே!’ என்று முழங்குகிறார். டி.என்.கிருஷ்ணன் என்ற அந்த 81 வயது “வயலின்” மேதை முன்வரிசையில் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. எதற்காக ஒரு இசை விழாவுக்குத் தலைமை தாங்க, வித்வானின் இசைவகையைக் கூட அறிந்திராத ஒரு அரசியல்வாதியைக் கூப்பிட வேண்டும்? அப்படி என்னவிதமான சூழ்நிலைக் கட்டாயம்?

கடவுளுடன் பன்னிரு நடனங்கள்

இது பல நாட்டு இசை வகைகளை நேர்மையாக அணுகுவதாலும், தேர்ந்த மேற்கத்திய இசைக்கோர்ப்பாலும் முக்கியமான இசைப்படைப்பாகிறது. ஒரு வட்டப்பாதையில் மீண்டும், மீண்டும் சுற்றிவரும் ட்யூனும், பின்னணி இசைக்கோர்வையும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை வடிவமைப்பை வெகுவாக நினைவூட்டுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவைப் பின்னணியாகக் கொண்ட ’Bombay Valentine’ என்ற இசைக்கோர்வை அச்சு அசலாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு போலவே இருக்கிறது.

இசையும், கணிதமும் இணையும் புள்ளி – அக்‌ஷரம்

நம் இந்திய மரபிசையின் தாளங்கள் பல நுட்பங்களை உள்ளடக்கியது. இந்திய இசையை முதன் முதலில் கேட்க நேரிடும் எந்த ரசிகரையும் ஒரு கணம் திகைக்க வைக்கும் தன்மையுடயவை இவை. கடினமான கணித நுட்பங்களின் ஆச்சரியங்களை உள்ளடக்கிய தாளக்கணக்குகளை நாம் வெகு எளிதாகக் கடந்து வந்திருக்கிறோம். ஐந்து வெவ்வேறு தாள நடைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கூர்ந்து கவனிக்கும் எவரையும் அது நம் மரபிசை சேகரித்து வைத்திருக்கும் பல நூற்றாண்டு கால இசை அறிவைக் குறித்ததொரு மன எழுச்சிக்கு ஆட்படுத்தி விடும்.