இணையத்தின் தற்போதைய காய்ச்சல் Google Buzz. நட்சத்திர நடிகர்களின் புதுப்படங்களை போல “நல்ல ஓப்பனிங்”. ஆனால் இது நீண்ட வெற்றியை பெறுமா? காலம் தான் பதில் சொல்லவேண்டும். ஒன்று கவனித்தீர்களா, கூகிள் நிறுவனத்தின் பல தயாரிப்புகளும் செயல்முறையில் ஒருபோல இருக்கும்! கூகிள் நிறுவனத்தின் Talk, Buzz, Wave போன்றவை ஒரே குடும்பத்தில் அடங்கிவிடும். ஒரே சேவையை அளிக்க அது ஏன் இத்தனை தயாரிப்புகளை வெளியிடுகிறது?
Category: இதழ்
ஜெத்ரோ டல்(Jethro Tull) – செவ்வியல் இசைக் கோர்வை
ஜெத்ரோ டல் இசைக்குழுப் உலகப் புகழ் பெற்றது. அவர்களின் செவ்வியல், கலப்பிசை ஆக்கங்கள் பல இசை ரசிகர்களையும் கிறங்கடிக்கிறது. “Divinities: Twleve Dances with God” என்ற இசைத்தொகுப்பில் இருந்து ஒரு ஆக்கத்தை இங்கு அளிக்கிறோம். இந்த இசைத்தொகுப்பு குறித்த ஒரு கட்டுரை ஒன்றையும் இங்கே வாசிக்கலாம்.
மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்
வீரியமிக்க
மின்னலடிக்கும்போதெல்லாம்
திரள்முகில் வானில்
இராநிலாத் தேடி யன்னலின்
இரும்புக் கம்பிகளைப் பற்றியிருக்கும்
பிஞ்சு விரல்களை அழுது கதற
விடுவித்துக் கொண்டோடுகிறாள்
குழந்தையின் தாய்
தேநீர்
தமிழ் பண்பாட்டின் நாட்டுப்புறக் கலையான ‘கூத்து’க்கு இணையான சீன ‘ஓபெரா’ வகையான நாடகங்கள் சீனத்தின் தேநீரகங்களில் நடக்கும். பேய்ஜிங்கின் தென் பகுதியில் தியன்ச்சியோ என்ற வட்டாரத்தில் இருக்கும் ஒரு கட்டடம் முழுக்க மரத்திலானது. இது 1933ல் கட்டப்பட்டுள்ளது. இன்று இந்தக் கட்டடத்தில் இயங்கும் தேநீரகத்திற்குள்ளிருக்கும் மேடையில் அப்பகுதியில் நிலவிய நாட்டுப்புறக் கலாசாரத்தைக் குறித்து அறிந்திட இங்கு நடக்கும் நாடகங்கள் உதவுகின்றன.
தாவரங்களுடன் பேசிய அற்புத விஞ்ஞானி – கார்வர்
ஒரு தோட்டக்கலை நிபுணராக அமர்ந்து கார்வர் யோசித்தபோது மிகவும் வளம் இழந்த மண்ணுக்கு ஏற்ற பயிர் என்ற வகையில் வேர்க்கடலையே அவர் கண்முன் நின்றது. ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் பிறநாட்டில்?’ என்று எம்.ஜி.ஆர் பாடியது போல் இந்தக் கார்வரும் ‘என்ன வளம் இல்லை இந்த வேர்க்கடலையில், ஏன் செய்ய வேண்டும் பருத்தியை சாகுபடி?’ பாட்டுப்படித்தார். ஷூட்டிங் முடிந்தவுடன் எம்.ஜி.ஆர். தூங்கியிருப்பார். கார்வர் கையில் கடலையை வைத்துக்கொண்டு ஏழு இரவுகள் ஏழு பகல்கள் தூங்காமல் ஆய்வு ஆய்வு ஆய்வு என்று ஆராய்ந்தார்.
வண்ணமிகு இந்தியா
இந்தியாவின் பல்வேறு முகங்களைப் பிரதிபலிக்கும் வகையில் Boston.com சில அற்புதமான புகைப்படங்களைத் தொகுத்து அளித்திருந்தது. அவற்றை இங்கே பார்க்கலாம்.
புரிந்து கொள் – 6
என் பெயரை ரெய்னால்ட்ஸ் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே நான் இத்தனை மாறுதல்களையும் செய்து தயார் நிலையில் இருந்தேன். அவனுடைய அடுத்த வாக்கியம் என் அழிப்புக்கான கட்டளையாகத்தான் இருக்க வேண்டும். இப்போது என் புலன்களின் உள்ளெடுப்பு நூற்றி இருபது மில்லி-வினாடித் தயக்கத்துடன் நேர்கிறது. நான் மனித புத்தி பற்றிய என் முந்தைய ஆராய்வை மறுபடி சோதிக்கிறேன், அவன் சாதித்தது சரியாக இருக்குமா என்று தெளிவாகச் சோதிக்கிறேன்.
தொடரும் பயணம்
அத்தொடக்க காலத்தில், இலக்கிய பூர்வமாக எனக்கு மிக அருகில் இருந்தவர்கள் க.நா.சுப்ரமண்யமும், செல்லப்பாவும் தான். இருவரும் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பத்தை, இல்லை பெரும் மாற்றத்தைக் கொணர்ந்தவர்கள். இந்த இருவரும் சேர்ந்து அமைத்த பாதையில் தான் நான் என் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறேன். இந்த இருவரிடமும் நான் கொண்ட கருத்தொற்றுமையும் நிறைய. கருத்து வேறு பாடுகளும் நிறைய.
கார்ட்டூன் – இதழ் 19
நாம் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம்?
தலைமை அறிஞர்களாக விளங்கிய இவர்களின் வார்த்தைகளை உதிரி சமூக விஞ்ஞானிகளும் வழிமொழிய வேண்டிய நிலை ஏற்பட்டது. வழிமொழிந்து நின்றவர்கள் JNU போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்பும், மேற்கு நாடுகளிலிருந்து அழைப்பையும் பெற்றனர். மதச்சார்பின்மைவாதிகளின் ஆதிக்கம் மெல்ல மெல்ல தன்னுடைய உள்ளார்ந்த தணிக்கையை உருப்பெருக்கிக் கொண்டது. எந்த ஆய்வுகள் பதிக்கப்படவேண்டும், அரசின் நிதி உதவி எதற்கு ஒதுக்கப்படவேண்டும், எந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படவேண்டும் போன்றவற்றை இந்த உள்ளார்ந்த தணிக்கை முடிவு செய்தது.
ஆயிரத்தில் ஒருவன்: சர்ச்சைகளும் சரித்திரமும்
சமீபத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் தொடர்பாக எழுந்த வரலாற்றுச் சர்ச்சைகள் குறித்துத் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவன நிறுவனரும், ஆய்வாளருமான எஸ். இராமச்சந்திரன் அவர்களின் கருத்தினை அறிய விரும்பினோம். சொல்வனத்துக்காக அவருடன் உரையாடியவர் ஆய்வாளர் ஜி. சாமிநாதன். “இந்தியாவைப் பொருத்தவரை படைப்பிலக்கியங்கள், திரைப்படங்கள் குறித்த சர்ச்சைகள் எழுவது இயல்பே. வரலாறு என்று வரும்போது இருவிதப் பார்வைகள் இருந்துதான் தீரும். அதனால் சர்ச்சைகள் எழுவது இயல்பே. ஆனால், அது சரியான சித்திரிப்பா, பொருத்தமற்ற வரலாறுக்கு முரணான சித்திரிப்பா என்றுதான் நாம் பார்க்கவேண்டுமே தவிர சோழர்களை இழிவுபடுத்தும் விதத்தில் காட்சிகள் அமைந்துள்ளன என்றெல்லாம் சொல்வது தவறாகும்… …இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சரித்திரக் காட்சிகளின் சித்திரிப்பு என்பது சில இடங்களில் தர்க்கபூர்வமாக அமையவில்லை என்ற விமர்சனம் எனக்கும் இருக்கிறது.”
மாதிரிக் கணிப்பில் பிழையின் எல்லை
“நீ ஒரு பொழுதும் விஞ்ஞான வாழ்க்கையை வாழ விரும்பவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் விரும்பியதை நீ வெறுத்தாய். உனக்கு எப்போதும் குழந்தைகள் வேண்டும். இதெல்லாம்… வேண்டும்.” அவள் குப்பைக்கூளமாக இருந்த முன்புறத்தை சுட்டினாள். டேவிட் சென்று பதினெட்டு மாதங்கள் ஆகிவிட்டன. பணம் அனுப்புகிறான். போதவில்லை.
வினை
வயது வித்யாசம், வேலை வித்யாசம், கல்யாணம் ஆன பெண்மணி போன்ற பகுத்தறிவின் பாற்பட்ட நினைவுகள் அவனுக்கு எழாமலில்லை. ஆனாலும் தான் ரொம்பப் பாதுகாப்பான இடத்திலிருந்து குறி பார்க்கிறோம் என்ற நிச்சயமும், அடிப்படையில் ஒரு இளைஞனான தனக்கு இருக்கும் அட்வான்டேஜ்களும், இது போன்ற சூட்சுமமான வாய்ப்பைக் கண்டு பிடித்த தன் திறனும் அவனை கர்வம் கொள்ள வைத்தன.
உலகின் மோசமான கணிப்பொறி வில்லன்கள்
டைம் பத்திரிக்கை இதுவரை வெளியான ஆங்கில அறிவியல்-புனைவு திரைப்படங்களின் மிக மோசமான கணிப்பொறி வில்லன்கள் குறித்த வரிசையை வெளியிட்டுள்ளது. திரைப்படங்கள் குறித்த குறிப்புகளும் உண்டு. முழு வரிசையையும் இங்கே காணலாம்.
புரிந்து கொள் – 5
என் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் ஒருவனுடன் கலந்து பேசுவதும், எனக்குத் தோன்றாத ஒரு புதுக் கருத்தை அவனிடம் பெறுவதும், எனக்குக் கேட்காத சுஸ்வரங்களைக் கேட்கக் கூடியவனைக் காண்பதும் எத்தனை இன்பம் கொடுக்கக் கூடிய அனுபவங்கள்! அவனுமே இதைத் தான் விரும்புகிறான். இந்த அறையை விட்டு இருவரில் ஒருவன்தான் உயிரோடு வெளியே போகப் போகிறோம் என்பது எங்கள் இருவருக்குமே மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
ஒலி/ஒளி மயமான எதிர்காலம்
வளரும் நாடான இந்தியாவிற்கு பாட்காஸ்ட் ஒரு மிக முக்கியமான தொழில்நுட்பம். படிப்பறிவு என்ற சொல்லுக்கே சவால் விடுகிற தொழில்நுட்பம். படிக்காதவர்களை மாற்றுவதற்கு முன் அவர்கள் கேட்காதவர்களா என்று சற்று யோசிப்போம். பார்வையற்றவர்களும் இதனால் பயனடையலாம். என் பார்வையில் இந்திய வெளியீட்டளர்கள் இதைப் பற்றி அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. கைபேசி தொழில்நுட்பத்தை விலை குறையச் செய்த நிறுவனங்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்.
சூன்ய விளையாட்டு
என் இன்னொரு கால்மீது
எட்டுப்பேர் பிரமிட் செய்கிறார்கள்.
எனக்கு முன்னேயிருப்பவனின்
நாய் செத்த நாற்றத்தை
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்
என் பின்னேயிருப்பவன்
என்னைச் சினையாக்கத் துடிக்கிறான்
பொறுத்துக்கொண்டிருக்கிறேன்.
பூவா தலையா
ஒருவழியாக ராத்திரி பத்து மணிக்கு பேனரில் இருந்த தலைவர் உயிர்பெற்றுப் பேசத் தொடங்கினார். பேனரில் இருந்த அனைவரின் பெயரையும் குறிப்பிட்டபின், “தாய்மார்களே, பெரியோர்களே… அலைகடலென திரண்டு வந்திருக்கும் அன்பு நெஞ்சங்களே… வாழ்த்துச் சொன்ன.. ” என்று ஆரம்பித்துவிட்டு, எதிர்கட்சிக்கு ஏகப்பட்ட சவால் விட்டு, ஏதேதோ பேசிவிட்டு இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்” என்று சொன்னபோது பதினொன்றை. கூட்டம் மெல்ல கலையத் தொடங்கிய போது, கோயிலுக்குப் பின்புறம் பிரியாணி வாசனையை சாராய வாசனை அடிக்கத் தொடங்கியது.
பொங்கப்படி
வெள்ளையடிப்புக்கு அடுத்ததாக பொங்கலை ஊருக்குள் கொணர்பவை பனங்கிழங்குகள். பனங்கிழங்கின் வாசனை பொங்கல் பண்டிகை முடிந்து ஒரு மாதம் வரை ஊரை விட்டு லேசில் போகாது. அவிக்கப் பட்ட, அவித்து காய வைத்து பின் உரலில் போட்டு இடிக்கப்பட்ட, ஆச்சிமார்களின் கைவண்ணத்தால் தேங்காய், இஞ்சி சேர்த்து உருண்டையாகப் பிடிக்கப்பட்ட பனங்கிழங்குகள் இன்னும் இன்னும் என் நினைவில் மின்னுகிறவை.(ஒரு வாரம் வரை பல்லில் சிக்கியிருக்கும் பனங்கிழங்கின் நாரும் இதில் அடக்கம்.) பனங்கிழங்குகளின் பலாபலன்களும் விசேஷமானவை. ‘பனங்கெளங்க யாராவது வேண்டாம்பானாவே? ஒண்ணே ஒண்ணு தின்னு பாரும். காலைல நீரு எந்திரிக்கவே வேண்டாம். அதே எந்திரி எந்திரின்னு சொல்லிரும்லா!’
வார்த்தைப் பாடாகிவிட்ட தமிழ் வாழ்க்கை
வார்த்தைகள் நம் தமிழ் வாழ்க்கையில் அர்த்தமிழந்து போயின. அவை எதையும் சொல்லாத வெற்று ஒலிகள். ஆனால் சொல்லிவிட்டதாக ஆணைகள் பிறக்கின்றன. ஒரு பயங்கர ஆக்கிரமிப்பு சக்தியாகிவிட்டன வார்த்தைகள். ஆணைகள் இன்றியே ஆணையாக உணரும் மந்தைத் தனம் தமிழருக்குப் பழகிவிட்டது. வார்த்தைகளால் நம் அலைக்கழிக்கப்படுவதைச் சொல்லும் அகஸ்டஸின் கவிதை மிக நீண்டது. அவரது கவிதை மொழி அவருக்கே உரியது.
மகரந்தம்
1979 இலிருந்து 2001 வரையான காலகட்டத்தில் ஏராளமான கப்பல்கள் நடுக்கடலில் மூழ்கினவாம். ‘79 இலிருந்து 1995 வரை யூரோப்பியக் கப்பல்களில் மட்டுமே, வருடத்துக்கு இரண்டு. 1995க்குப் பிறகு வருடத்துக்கு ஒன்பது. இதென்னடா புதுப் பிரச்சினை என்று சில யூரோப்பிய நாடுகள் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கின்றன. ஸ்காலியா என்கிற இத்தாலிய இயற்பியல் பேராசிரியர், இந்த மர்மத்தை முடிச்சவிழ்த்து விட்டதாகச் சொல்கிறாராம். எல்லாம் பணம் பண்ணுகிற வேலைதாங்க.
உரிமை இழப்பின் பதிவுகள்
“இரண்டு ஏக்கர் நிலம்” வழக்கமான இந்திய திரைப்படங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டே துவங்குகிறது. காய்ந்து, பாளம் பாளமாக வெடித்துப் போன நிலம். ஒரு இலை கூட இல்லாத உயிரற்ற ஒரு மரம். விவசாயிகள் துன்பத்தில் வாடுகிறார்கள். அடுத்த காட்சி சட்டென திசை மாறுகிறது. மேகத்தை கிழித்தபடி பெய்யும் மழை. விவசாயிகள் மழையில் நனைந்து, தங்கள் துன்பம் தீர்ந்ததென்று மகிழ்ச்சியில் ஆடி பாடுகிறார்கள். திரைப்படம் பயணிக்கப் போகும் திசை குறித்த எந்த ஒரு முன்முடிவையும் பார்வையாளன் மேற்கொண்டுவிட முடியாது. மிக நுட்பமாக ராய் தனது பார்வையாளனை வழிதவற வைக்கிறார்.
ரே லிஞ்ச் – நவ யுக இசைக் கலைஞன்
ரே லிஞ்ச் (Ray Lynch) என்ற அற்புதமான இசை கலைஞனின் ஆகச்சிறந்த படைப்பொன்று. தொல்லியல் இசை, நவ யுக இசை போன்ற பிரிவுகளில் தனது இசை ஆக்கங்களை வெளியிட்டிருக்கிறார். கேட்டு மகிழுங்கள்.
ஈரானில் குடிமக்கள் இதழியல்
ஈரானில் நிலைகளைப் பற்றி முப்பதாண்டுகளாக மேம்போக்காவே செய்திகளைக் கொடுத்து வந்த மேலை நாட்டுப் பத்திரிகைகள், டெஹ்ரானில் இன்று ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு என்ன வழிகளில் எழுந்தது என்று கவனிக்கத் தவறி விட்டன. கடந்த ஜுன் மாதம் நடந்த தேர்தலில் மோசடி நடந்து விட்டது என்பதற்காக ஈரானியர்கள் தம் உயிரையும் உடலையும் பேராபத்துக்கு ஆளாக்கி எழுச்சியை நடத்தவில்லை, முப்பதாண்டுகளாகச் சந்தித்த மிருகத்தனம், அவமதிப்பு, மேலும் பெரும் அவலங்கள் ஆகியவற்றுக்கு எதிராகவே போராடுகிறார்கள் என்று எழுதுகிறார் ஈரானியப் பெண்ணியக்க வாதியும், பேராசிரியருமான ஹைதெ தரகாஹி.
கார்ட்டூன் – இதழ் 18
அதனால்தான்…
‘பப்ளிக் ஸ்கூல் போனப்புறம் கூட்டு, ரசம்னு நம்ம சாப்பாடு எதையும் தொடமாட்டான், பாத்திண்டே இரு!’ என்று அனுபவப்பட்ட சரோஜா எச்சரித்தது சரிதான் போலிருக்கிறது. சூரன் கின்டர்கார்டன் போகத்தொடங்கி ஒருமாதம்கூட ஆகவில்லை, அதற்குள் இட்லி தின்ன முரண்டுபிடிக்கிறானே.
சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அடையாள அரசியல்
அடையாள, இலக்கிய மற்றும் குழு அரசியலில் இருக்கும் ஈடுபாட்டில் வெறும் கால்பங்கு நல்ல பல படைப்புகளை உருவாவதிலும் அவற்றை மேலும் மேம்படுத்தி வளர்த்தெடுப்பதிலும் இருந்தாலே போதுமானது. சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் வளர்ச்சிக்கு உத்திரவாதம் கிடைத்துவிடும். இதற்கெல்லாம் இப்போதைக்கு ஆசை மட்டும் தான் படலாம். மாற்றங்கள் ஏற்படுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
கார்ட்டூன் – இதழ் 17
காலில் விழுந்த கண்டக்டர் !
கடந்த பத்து ஆண்டுகளில் கல்விக்கூட ஆராய்ச்சிகள் பலப் பல செய்யப்பட்டு அத்தனையின் முடிவும் ஒன்றுதான் : நல்ல பள்ளிக்கூடம், நல்ல சூழ்நிலை, முன்னேறிய சிலபஸ், பெற்றோர் வருமானம், மதிய உணவில் முட்டை எல்லாவற்றையும் விட மாணவர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பது ஆசிரியர்கள்தான்.
காலமே உனைஓத நீவந்து காட்டினாய்!
காலம் போல உலகமும் தொன்மையானது. தொல்லுலகம் என அழைக்கப்படுகிறது. முதுமை, தொன்மை, பழமை எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கம் இருக்க வேண்டுமே. பிரபஞ்சத் தோற்றத்தில் காலதத்துவமே முதலில் தோன்றியது என்பர். இந்த உலகமும் காலமும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியுடையனவாக இருந்துள்ளன; அவருக்கும் பல்லாயிரமாண்டுகளுக்கு முற்பட்டவர்களுடையதாவும் இருந்துள்ளன.
மகரந்தம்
ஆண் க்ரோமோசோமான “Y” பாலூட்டிகளில் ஒருவித ‘சீரழியும்’ – அதாவது பரிணாமத்தில் பொருளிழக்கும் செயலிழக்கும் ஒரு க்ரோமோசோம் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் சில நவீன ஆராய்ச்சிகள் -சிம்பன்ஸி மானுட Y க்ரோமோஸோம்களை ஆராய்ந்ததில் கடந்த ஆறு மில்லியன் ஆண்டுகளில் இந்த க்ரோமோஸோம் அதிவேக பரிணாம மாற்றமடைந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
தூரிகைக்கலை
ஓவியத்தையும் தூரிகைக்கலையையும் ஒரே தாய்வயிற்றுப் பிள்ளைகள் என்று வருணிப்பர் சீனர். அவ்வந்த காலத்துக் கலைஞர் உருவாக்கிய முக்கிய பாணியிலிருந்தே படைப்பின் காலத்தைச் சொல்லிவிடக் கூடிய தூரிகைக் கலைஞர்கள் சீனாவிலும் சீனாவுக்கு வெளியிலும் இன்றும் உளர். சீனத்திலோ அரசர் முதல் ஆண்டி வரை பலரும் தூரிகை ஓவியங்களைக் காலங்காலமாக சேகரித்துப் பாதுகாத்திருக்கிறார்கள். சீனச் சமூகத்தில் வீடு, அறைகள், பெரிய கட்டங்கள், நீதிமன்றம், கைவிசிறிகள், சுவர்கள், நுழைவாயில்கள், அருங்காட்சியகம், அலுவலகம், நினைவுச் சின்னங்கள், கல்லறைகள், ஆலயங்கள் என்று எங்கெங்கு காணினும் தூரிகைக்கலையின் சுவடுகள் வாழ்த்து, முதுமொழிகள், அறிஞர் பொன்மொழிகள், கவிதை, பாடல், ஈரடிக்கவிதை, கடிதம் போன்ற பல்வேறு வடிவில் மிளிரும்.
ஹைதி பூகம்ப பேரழிவு
சமீபத்தில் ஹைதி தீவு எதிர்கொண்ட பூகம்பத்தை தொடர்ந்த பேரழிவை பதிவு செய்துள்ள புகைப்படங்களை இங்கே காணலாம்
சுஜாதா தேசிகன் – பேருக்கு ஒரு முன்னுரை
சமீபத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களைச் சந்தித்தபோது, “உங்களுக்குக் கிட்டத்தட்ட ஐம்பது வயசு இருக்கும் என்று எதிர்பார்த்தேன்” என்றார். “நான் வேண்டும் என்றால், இன்னும் பதினொரு வருஷம் கழித்து உங்களை வந்து பார்க்கிறேன்” என்றேன். முன்பு ஒரு முறை எழுத்தாளர் ஜெயமோகன் புத்தகக் கண்காட்சியில் பார்த்தபோது “ஓ, அந்த தேசிகன் நீங்க தானா?” என்றார். எப்படியோ தேசிகன் என்ற சிறிய பெயருக்கு வயசான பிம்பம் பலரின் மனதில் வந்துவிட்டது. நல்ல வேளை என் அப்பா “வேதாந்த தேசிகன்” என்று பெயர் வைக்கவில்லை.
சத்தியத்தின் தாமரை பூத்துவருவதை திஸ்ஸ கண்டாரா?
உண்மையைக் கொண்டுபோய் அடகுவைத்து
உரிமையை இரும்புச் சங்கிலி கொண்டு
சிறையிலிட்ட அந் நாளில்
திஸ்ஸ கண்டாரா
அதிகாரத்தால் உன்மத்தம் பிடித்தவோர் அரசனை
அரசியல் சொல்லாடல்கள்
பிரபல மொழியியலாளரான ஸ்டீவன் பிங்கர் அரசியல்வாதிகளின் சொல்லாடல்களில் காணப்படும் பொதுவான வகைமாதிரிகளையும், அதன் காரணங்களையும் குறித்து பேசுகிறார். அரசியல்வாதிகளின் மொழி ஜால்ம் குறித்தும், அதை ஒன்றை மட்டும் கொண்டு அவர்கள் மேற்கொள்ளும் பிழைப்பு குறித்தும் தமிழர்களான நம்மை விட சிறப்பாக அறிந்துவிட யாரால் முடியும்? ஆனாலும் இந்த ஒளிப்பதிவில் “அரசியல் சொல்லாடல்கள்”
மார்க்ஸை தலை கீழாக நிற்க வைத்த போலந்தில் ஒரு விலாங்கு மீன்
இந்திரா பார்த்தசாரதிக்குள்ளிருக்கும் மார்க்ஸ் என்ன ஆனார்? அவரும் மிக பத்திரமாக எவ்வித கஷ்டமும் இன்றி இருந்து கொண்டிருக்கிறார் தான். விலாங்கு மீன் எங்காவது யார் கையிலாவது சுலபத்தில் சிக்கி விடுமா? நழுவிக்கொண்டேயிருப்பது தானே அதன் குணம்? God That Failed எழுதிய எழுத்தாளர்களும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் ஒரு காலத்தில் மார்க்ஸிஸத்தை நம்பி பின் அனுபவித்த மனவேதனைகளும் மனசாட்சி உறுத்தல்களும் நம்பிக்கைகள் கைவிட்ட ஏமாற்றமும் நாம் சர்ச்சித்துக் கொண்டிருக்கும் மார்க்ஸிஸ்டின் கிட்டக் கூட நெருங்கவில்லை.
குற்றம்
இறந்த காட்டுப்பன்றிகளின் கொழுப்பில் நானும் நிலாவும் உயிர்வாழ்ந்தோம். பிறகு பாம்புகளை வேட்டையாடி உண்டோம். அந்த கோடைக்காலத்தின் முடிவில் நிலா ஒரு நல்ல வேட்டைக்காரியாக ஆகியிருந்தாள். நிரந்தரமாக இடுப்பில் தொங்கும் கத்தியும் கையில் இருக்கும் ஈட்டியுமாக காணாமல் போன வன தேவதை போல உருமாறியிருந்தாள். அவளது நிறம் வெயிலில் அலைந்து கருத்திருந்தது.
கதைசொல்ல வரும் குழந்தை
நீ இப்போது கதை கேட்பவன்
உன் சேமிப்பிலிருக்கும்
ஆச்சரியங்களையும்
வைப்புக்கணக்கில்
இருக்கும்
புன்னகைகளை
கொஞ்சம் கொஞ்சமாக
செலவழிக்கத் துவங்கு
”ஆர்மீனியன் கோல்கத்தா”*
ஒரு துருக்கியக் கேப்டன் பலாகியனிடம் சொன்னான். ”யுத்தநேரம் என்பதால் குண்டுகள் கிராக்கியாயிருந்தன. எனவே மக்கள் கிராமத்தில் என்ன கிடைக்கிறதோ அதையெல்லாம் கையிலெடுத்தார்கள் – கோடரிகள். வெட்டுக்கத்திகள், புல் அரிவாள், பிடியறுவாள், தடிகள், மண்வெட்டிகள். சுத்தியல்,கொறடுகள்- இவற்றை வைத்தே கொன்று குவித்தார்கள்.”
உத்தண்டி
உத்தண்டிக்கு ஆருயிர் நண்பர்கள்
நால்வர் பேருந்தில் சென்றிருந்தோம்,
ஒரு முன்காலைப் பொழுதில்.
பேருந்து நடத்துனரிடம்
கடைசி வண்டியை எடுக்குமுன்னர்
குரல் கொடுக்கச் சொல்லிவிட்டு,
கடற்கரை மேட்டில் ஒரு பனைமரம் கீழே
அமர்ந்தோம் அளவளாவ.
வாசகர் மறுவினை
ஆரிய – திராவிட மாயை குறித்த அவரது விளக்கம் தெளிவாக இருந்தது. மானுடவியல் அறிஞர்கள், மொழியியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் செய்ய வேண்டிய பணியை, சரித்திர நிபுணர் என்ற பெயரில் ஆர்.எஸ்.ஷர்மா போன்ற அரைகுறைகள் செய்ததால் ஏற்பட்ட பின்விளைவுகள் ஏராளம். சரித்திரத் திரிபுவாதிகளும், ஆங்கிலேய தாசர்களும் அவ்வாறு பதித்துச் சென்ற பிதற்றல்களே இன்றும் பள்ளி, பல்கலைக்கழகங்களில் பாடமாக இருப்பது வெட்கக்கேடு.
டேவிட் அட்டன்பரோ – இயற்கையின் குரல்
பறவைகள் தொடர்ந்து மலைகளைக் கடப்பதற்குத் தடையாக உயரமான மலைகளின் குறைந்த காற்றழுத்தம் இருக்கும். மேலும், பறவைகள் புலம்பெயரும் பருவத்தில், அவற்றை வேட்டையாட வல்லூறுகள் காத்திருக்கும். குறிப்பாக நடுவானத்தில் சிறு நாரைகளை மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வல்லூறு துரத்தி பிடிக்கும் காட்சி மிக அற்புதமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. நாரைகளின் கனத்தை தாங்க முடியாமல், வல்லூறுகள் அவற்றை வாயில் கவ்வியபடி நிலத்தை நோக்கி விழுகின்றன.
ஓரு அந்தக் காலத்துக் காதல் கதை
அவன் அப்பா எடுத்த எடுப்பிலேயே நம்ப ஜாதி என்ன அவங்க ஜாதி என்ன, நம்ப தெய்வம் என்ன அவங்க தெய்வம் என்ன என்று ஆரம்பித்து நம்ப அந்தஸ்து என்ன அவங்க அந்தஸ்து என்ன என்று வந்து நின்றார். தமிழின் அம்மா இராமலிங்க சுவாமிகளின் குடும்பத்துக்கு தூரத்து உறவு. மீன் என்று சொன்னால் வாந்தி எடுத்து விடுவாள். ஆனாலும் தன் ஒரே மகனுக்காக அவன் சந்தோஷத்துக்காக
எதையும் செய்ய சித்தமாயிருந்தாள். கணவரையும் அவள் ஆதியோடந்தம் அறிவாள். அவர் மனசின் பாசம் எப்பேற்பட்ட ஊற்றினது என்பது அவளுக்குத் தெரியும்.
மனிதர் உபயோகம்
மறுநாள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கானமைட்டுகள் முன்வைத்த புதிய எரிசக்தி குறித்த ஆய்வு அறிக்கைகள் மளமளவென்று குவிந்தன. அத்தனை முடிவுகளும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. மிகமிக மலிவானதொரு விலைக்கு வழங்கப்படும் உலோகத்தாலான சிறு பெட்டிகள் ஓர் அணுமின்கலத்தைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தியை ஓய்வில்லாமல் வழங்கும் என்பதை நம்புவதா கூடாதா என்பதில் எனக்குங்கூட சிக்கலிருந்தது. விலை மிகவும் குறைவென்பதால் ஆளுக்கொன்று வைத்துக்கொள்ளலாம் என்பதுபோல உலகம் முழுக்கப் பேச்சு. பதினேழு நாடுகள் பெட்டிகளை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளைக் கட்டத் தொடங்கிவிட்டதாகப் பிற்பகல் செய்தி.
கார்ட்டூன் – இதழ் 16
2009-ன் சிறந்த வானியல் புகைப்படங்கள்
2009-ன் சிறந்த 10 வானியல் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்
முட்டாள்களின் அறைகள்
புலம்புவதும், பிதற்றுவதும், அழுவதும், உளறுவதும், சத்தமாகச் சிரிப்பதும், குழந்தைத்தனமாக இருப்பதும் என இவற்றையெல்லாம் சில சமயங்களில் அறிவாளிகள் செய்ய தயங்குவார்கள். அது அவர்களின் பிம்பத்தின் மீது எச்சில் உமிழ்ந்துவிடும் எனப் பயந்து சாகிறார்கள். என் தலைமுறையில் மறுக்கப்பட்ட எத்துணையோ புலம்பல்களும், அழுக்குரல்களும், பிதற்றல்களும், சுயத்தை இழந்த சிரிப்பொலிகளும் பாதாளத்தின் ஆழத்தில் யாரும் கண்டறிய முடியாத இருளில் ஒளித்து வைக்கப்பட்டிருகின்றன.
சொக்கப்பனை
வருடாவருடம் சொக்கப்பனையின் போது ஒரு பட்டரை கொளுத்திவிடுவார்கள் என்றே நான் வெகுகாலம் நம்பி வந்தேன். எனது சந்தேகத்தை குஞ்சுவும் ஊர்ஜிதம் செய்தான். ‘ஒனக்கு தெரியாதா? அதுக்குன்னே கோயில்ல இருந்து பட்டர்களை வளக்காங்க’ என்று கூசாமல் சொல்லியிருந்தான். விவரம் தெரிந்த வயதில் கார்த்திகை தீபம் முடிந்த ஓரிரு நாளில் நானும், குஞ்சுவும் போத்தி ஹோட்டலில் ரவா தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கணேச பட்டர் வந்து எங்களருகில் உட்கார்ந்து பன்னீர் பக்கோடா ஆர்டர் பண்ணி சாப்பிட்டார். அந்த வருடம் அவர்தான் சொக்கப்பனை கொளுத்தியவர். நான் மேஜைக்கடியில் அவர் கால்களையே பார்த்தேன்.
மகரந்தம்
அவதார் படத்தின் பிரம்மாண்டத்தில், பிக்ஸல் பிக்ஸலாக வடிவமைக்கப்பட்ட அதன் கிராபிக் அசாத்தியத்தில் மயங்கி கிறங்கி இருப்பவர்களுக்கு ஒரு செய்தி. அத்திரைப்படத்தின் வேற்றுலக சிருஷ்டியில் முக்கிய பங்கு வகித்தவர் ஜோடி கோல்ட் (Jodie) எனும் தாவரவியலாளர். வேற்றுக்கிரகமொன்றை முதன்முதலாக ஆராயும் ஒரு தாவரவியலாளர் எவ்வாறு நடந்து கொள்வார் எனும் உணர்ச்சிகளை இவரே அத்திரைப்பாத்திரங்களுக்கு சொல்லி கொடுத்தார்.
