நியூசிலாந்தும் நிலக்கோட்டையும்

புதியதொரு நகருக்கு அவள் வந்து சேர்ந்தாள். ஊரைச் சுற்றிப் பார்த்தாள். மக்களை நெருக்கமாகக் அவதானித்தாள். அவர்கள்மேல் இன்னதென்று சொல்லமுடியாத ஆனால் அழுத்தமான ஈர்ப்பு உண்டாவதை அவள் உணர்ந்தாள். காதல் வயப்பட்டவர்கள் தங்கள் காதலரைப் பற்றிய விவரங்களை அக்கறையுடன் சேகரிப்பதைப் போல , அவள், அந்த மக்களின் தோற்றம், நடை உடை, பழக்க வழக்கங்களைக் கண்டு மனதில் பதிந்து கொண்டாள்.

காலமே உனைஓத நீவந்து காட்டினாய்!

காலம் போல உலகமும் தொன்மையானது. தொல்லுலகம் என அழைக்கப்படுகிறது. முதுமை, தொன்மை, பழமை எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கம் இருக்க வேண்டுமே. பிரபஞ்சத் தோற்றத்தில் காலதத்துவமே முதலில் தோன்றியது என்பர். இந்த உலகமும் காலமும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியுடையனவாக இருந்துள்ளன; அவருக்கும் பல்லாயிரமாண்டுகளுக்கு முற்பட்டவர்களுடையதாவும் இருந்துள்ளன.

நியூஸிலாந்து – மவுரிகள் என்னும் முன்னோடிகள் – 2

துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் அறிமுகம் ஆகுமுன் மவுரி நீண்ட தடிகளையும் குறுந்தடிகளையும்(Clubs) போராயுதங்களாகப் பயன்படுத்தினான். மரத்தாலும் பச்சைக் கற்களாலும் (Jade) ஆன இந்த ஆயுதங்கள் ஆபத்தில்லாதவை போலத் தோன்றினாலும், மவுரியின் கைகளில் பயங்கரமாகச் செயல்பட்டன. வில், அம்பு மவுரி அறியாதவை. வில்லம்புகளுக்கு உரிய மூலப்பொருள்க்ள் இங்குக் கிடைப்பனவாக இருந்தும் இந்தப் போர்க்கருவியைப் பற்றி மவுரி அறியாது இருந்தது கவனிக்கத் தக்கது.

நியூஸிலாந்து – மவுரிகள் என்னும் முன்னோடிகள்

சிலசமயங்களில், கப்பல்கரையில் நின்றுகொண்டிருக்கும்போது, காட்டிலும் கரையிலும் வேட்டையாடிக் கொண்டிருந்த மாலும்கள் மவுரிப் பெண்களோடு தற்காலிகக் குடும்பம் நடத்துவதும் உண்டு. இத்தகைய உறவுகளால் கலப்பினக் குழந்தைகள் பிறந்தன. கப்பல் கரைகளை விட்டுத் தத்தம் நாட்டுக்குத் திரும்பியபோது, குழந்தைகளின் தந்தையரும் போய்விட்டனர். குழந்தைகள் மவுரித் தாய்மார்களிடம் மவுரிகளாகவே வளர்ந்தனர். மவுரிகளின் சமூக அமைப்பும் (Tribal Organaisation) மவுரிப் பெண்ணுக்கு இருந்த சில உரிமைகளும் கலப்பினக் குழந்தைகள் தந்தையின்றியும் வாழ வசதி அளித்தன.