நாம் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம்?

தலைமை அறிஞர்களாக விளங்கிய இவர்களின் வார்த்தைகளை உதிரி சமூக விஞ்ஞானிகளும் வழிமொழிய வேண்டிய நிலை ஏற்பட்டது. வழிமொழிந்து நின்றவர்கள் JNU போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்பும், மேற்கு நாடுகளிலிருந்து அழைப்பையும் பெற்றனர். மதச்சார்பின்மைவாதிகளின் ஆதிக்கம் மெல்ல மெல்ல தன்னுடைய உள்ளார்ந்த தணிக்கையை உருப்பெருக்கிக் கொண்டது. எந்த ஆய்வுகள் பதிக்கப்படவேண்டும், அரசின் நிதி உதவி எதற்கு ஒதுக்கப்படவேண்டும், எந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படவேண்டும் போன்றவற்றை இந்த உள்ளார்ந்த தணிக்கை முடிவு செய்தது.