அரளகுப்பே அஷ்டதிக்பாலகர்

கர்நாடகத்தில் வரலாற்றைச் சொல்லும் கோயில்கள் என்றவுடன் நம் மனத்தில் முதலில் தோன்றுவது, ஹொய்சாளர்கள் எடுப்பித்த பேலூர், ஹளபேடு கற்றளிகளும், விஜயநகர சாம்ராஜ்யத்தினர் எழுப்பிய ஹம்பி கோயில்களும், சாளுக்கியர்களில் கைவண்ணத்தில் எழுப்பிய பாதாமி தளிகளும்தான்.  சில வருடங்களுக்கு முன்னால் ஃபேஸ்புக்கின் மூலம் வரலாற்று/விழிப்புணர்வு செயல்பாட்டாளரும் அற்புதமான புகைப்படக் கலைஞருமான ஸ்வாமிநாதன் “அரளகுப்பே அஷ்டதிக்பாலகர்”

சுழியத்தின் காரணியம்

சுழியமே காரணம், அதன் காரணியமே ஒன்று. சுழியம் எனும் சாரமற்ற ரூபம், ஒன்று அதன் நாமம். சட்டென அலுவலகத்தில் கண்முன் இருந்த கணினிகளெல்லாம் சுழியங்களும் ஒன்றுகளும் சேர்ந்த நாமரூபங்களின் தொகுப்பாகத் தெரிந்தது. அலுவலகத் தோழர்களும் அவ்வாறே தோன்றினர். ’அது’ சாரமற்றதெனில் அதனைக் காணும், உணரும், உற்றறியும், ’இது’? 

நம்பிக்கை

அந்த அறையில் தான் பஜனை நடக்கும். கூட்டுப் பிரார்த்தனை நடக்கும். நிறைய அற்புதங்கள் நடந்திருப்பதாக அக்கம் பக்கத்தில் பேசுவார்கள். படங்களில் அவ்வப்போது மஞ்சள்நிறப் பொடி கசிவதும்  உண்டு. கணேசன் பார்த்தது இல்லை. ஆனால் நம்புவான். அவனுக்கு சிறுவயதில் இருந்தே மகான்களிடத்தில் நம்பிக்கையும் ப்ரேமையும் உண்டு.

பொது நலம், மேரி டைபாய்ட் கதை மற்றும் சமூக நலன் ஓர் அறிமுகம்

This entry is part 1 of 9 in the series பொது நலம்

மேரியின் காலத்தில், நோய்கள் பற்றிய பல தவறான நம்பிக்கைகள் இருந்தன. பழைய நம்பிக்கைகளின்படி, நோய்கள் “மோசமான காற்று” அல்லது “மியாஸ்மா”வால் ஏற்படுகின்றன என்று மக்கள் கருதினர். நோய்கள் தெய்வீக தண்டனை அல்லது பாவத்தின் விளைவு என்றும் நம்பினர். சில மக்கள் “சபிக்கப்பட்டவர்கள்” அல்லது “அசுத்தமானவர்கள்” என்று முத்திரை குத்தப்பட்டனர்.

சாண்ட்விச் தலைமுறையும் சொல்ல இயலா சங்கடங்களும்!

நம் பெற்றோருக்கு வயது கூடக் கூட அவர்களின் தேவை ஒரே மாதிரியாகவும், இதுதான் என்று எதிர்பார்க்கக்கூடியவையாகவும் இருப்பதில்லை. அவர்கள் தேவைகளுக்கெல்லாம் ஈடு கொடுக்க நம் வாழ்வுமுறைகளில் நாம் பெரும் சமரசத்தைச் செய்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது, நம்மைப் பல விதங்களில் பாதிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. 

காட்டுத்தடம்

எங்களுக்கு முன்னால் தூக்குக் கயிற்றைப்போல் ஆலமர விழுதுகள் தொங்கிக்கொண்டிருந்தது. பாதி உயிர் அதைப் பார்த்தவுடனயே போய்விட்டது. மீதி உயிர் போகும்படி விழுதுகள் தொங்கும் கிளைக்கு மேலுள்ள கிளையில் வடக்குப்பார்த்து அமர்ந்திருந்த ஆந்தையொன்று தன்னுடலை துளிகூட அசைக்காமல் தலையை மட்டும் திருப்பி தென்புறமாக விழுந்த எங்களை முண்டக்கண்ணை விரித்து இமைத் தட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தது. அந்தப் பார்வை எங்களின் தலையை முதுகுப் பக்கமாகத் திருகி கொண்டை முடிச்சினை முறித்துக் கொல்வது போலிருந்தது. 

”குற்றத்தின் நறுமணம்” கவிதைகள் – விமர்சனம்

தனது கடந்தகால வாழ்வியலின் காட்சியை நிகழ்கால அசலாகக் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நிரை மரக்காலில் நிறைந்திருக்கும் நெல்மணிகளாய் சொற்கள் நிறைந்தவையாகக் கவிதைகள் காணப்படுகின்றன. தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாகத் தானிருக்கின்றன “குற்றத்தின் நறுமணம்”என்று. குற்றத்தினை பல்வேறு வகையான கோணங்களில் வகைப்படுத்தலாம்.

நாற்பதாவது மரணம்

அஞ்சு வருஷம் ஒரு சைக்கிள், ஒரு வட்டம்  சார். ஒரு சைக்கிள்ல  சென்னையில் ட்ரெயினேஜ்ல விழுந்து பதினஞ்சு சாவு. இது வரை பதினாலு ஆயிருக்கு. அதே மாதிரி பேனர் விழுந்து பத்து சாவு. அது இந்த சைக்கிள்ல முழுசா முடிஞ்சிருச்சு. தமிழ்நாட்டுல  போலீஸ் கஸ்டடி டெத் நாற்பது. இந்த முறை  முப்பத்தி ஒன்பது ஆச்சு. போலீஸ் துப்பாக்கிச் சூடு சாவு ஒரு இருபது. இந்த முறை அதுவும்  முடிஞ்சு போச்சு. இதைத் தவிர ட்ரெயின் விபத்து அது இதுன்னு சென்ட்ரல் கவர்மெண்ட் கணக்கு வேற.

அசோகமித்திரனின் கதையுலகம்

மகத்தான ஆக்கங்களில் பொங்கியெழும் அறச்சீற்றமாகவும், மானுடர் மேல் கொண்ட கருணையாகவும் வெளிப்படும் அதே கனிவு மறுபுறம் அவர்கள் கொண்ட துயராகவும் அதன் விளைவான கசப்பாகவும் கூட வெளிபடக்கூடும் என்கிறார். இருத்தலியல் காலத்தில் எழுதப்பெற்ற பல படைப்புகள் இன்று காலாவதியாகிப் போய்விட்டாலும் கூட, இன்றளவும் அசோகமித்திரனின் கதைகள் நமக்கு நெருக்கமாக இருப்பதன் காரணம் அவர் கதைகளில் அத்தனை கதாப்பாத்திரங்களின் ஊடாகவும் வெளிப்படும் அவரது கனிவுதான்!  

மாபெரும் சூதாட்டம்

‘’அரசே ! பகடையாட்டம் என்பது ஓர் அவதானம். நம்மால் எப்போதும் முற்றிலும் அறிய முடியாத எப்போதும் முற்றிலும் புரிந்து கொள்ள முடியாத பெருஞ்சிக்கல் ஒன்றினை அறிய முயல்கிற புரிந்து கொள்ள முயல்கிற ஓர் முயற்சி. இதில் ஆடும் நபர்கள், ஆடும் குழுக்கள், பகடைக்காய்கள், பணயப் பொருட்கள் அனைத்துமே அறிய முடியாத பெரும் சக்திகளின் பாவைகளே. பகடையாடுபவன் அறிய வேண்டிய முதன்மையான விஷயம் இது’’

நீலப் பிரகாசம்

ஒரு காலத்தில் சாத்தியமற்றதாகத் தோன்றிய மற்றொரு ஆராய்ச்சி, வாயுக்கள் போன்ற சிறிய மூலக்கூறுகளைப் பிடிக்க அல்லது வைத்திருக்கக்கூடிய, சிறிய துளைகள் அல்லது இடைவெளிகளைக் கொண்ட நுண்துளைப் பொருட்கள் அல்லது திடப்பொருட்களை உருவாக்குவதாகும். இது தேவையில்லாத மூலக்கூறுகளை வடிகட்ட அல்லது வாயுக்களை சேமிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சின்னப் பையன்

சட்டென்று அம்மா புடவையை எடுத்து  பள்ளத்தில் வீசினான். பையா, இதை கெட்டியாக பிடிச்சுக்கோ, நான் மேலே இருக்கேன்— யாராவது வந்தால் உதவிக்கு கூப்பிடலாம். சுற்றும் முற்றும் பார்த்தான். வகுப்பு மாணவர்கள் சிலர் வந்தனர்.  நானும் விழாமல் இந்த புடவையுடன் சிறுவனை இழுத்து மேலே கொண்டு வரும் வரை என் காலை அழுத்தி யாராவது  கெட்டியாக  பிடிச்சுக்கோங்கோ.  அந்த சிறுவர்களும் உடனே புரிந்து கொண்டு அவன் கால்களை இறுக்கி பிடித்துக் கொண்டனர்.  

 ஃப்ரென்ச் ஃப்ரைஸ்

இந்த சர்வதேச நிறுவனங்களுடனான ஒப்பந்தம், உள்ளூர் சந்தையில் உருளைக்கிழங்கை விற்றுக்கொண்டிருந்த விவசாயிகளின் வருமானத்தை 75% அதிகரித்தது. இது இந்திய விவசாயிகளின் வாழ்வை மாற்றியது மட்டுமல்லாமல், இந்திய உருளைக்கிழங்கு பதப்படுத்தும் நிறுவனங்களின் விதியையும், தரத்தையும் மாற்றி அமைத்து, 2017-ம் ஆண்டு முதல் உலகெங்கும் உருளைக்கிழங்குகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு  இந்தியாவை மாற்றியது.

நலுங்கும் சுடர் – பால் கிங்ஸ்நார்த்தின் கலகம் – 1

ஆனால், நிஜ உலகில் இயந்திர அழிவு என்பது மாறுதலாகத்தான் இருக்கும். போல்ஷெவிக் சதிக்குப் பிறகு, ரஷ்யாவில் நடந்த உள்நாட்டுப் போரை நினைவில் கொள்ளுங்கள். கடைசி முடியரசான ரோமனாவ் 30 பகுதிகளாகச் சிதறுண்டது; மன்னரும், சுற்றமும், உற்றமும் கொல்லப்பட்டனர்; பன்னிரண்டிற்கும் மேற்பட்ட அயல் இராணுவம் இந்தப் போரில் உட்புகுந்தது; இந்தப் போர் தொடர்ந்த 3-5 வருடங்களில், 10 மில்லியன் மக்கள், இந்தச் சண்டை சிக்கலினால் இறந்தார்கள்.

றெக்கை– அத்தியாயம் 8

This entry is part 8 of 17 in the series றெக்கை

எல்லா ஒப்பனைகளும் உரிந்த பிறகு  பளிச்சென்று முழுவதாக, எல்லா வண்ணங்களும் ஓவியன் வரைந்த   அசலாக  உயிர்த்தன. ஓவியத்தில் நடுவில் கொஞ்சமும் இயற்கை மாறாத புல்தரை. இரண்டு ஆண்கள் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.  ஒருவர் வெள்ளயர். மற்றவர் நல்ல கருப்பர்.ஒரு பேரழகி ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள். அந்தப் பெண்ணின் ஒரு பாதம்   முதல் ஆண் மடியிலும் அவளது இன்னொரு பாதம்  மற்ற ஆண் மடியிலும்  மெல்லத் தொட்டு     இருக்கின்றன. ஓவியத்தின் கீழே என்னமோ எழுதியிருக்கிறது, 

‘கண்ணுக்குத் தெரியாத’ நெருக்கடிகளுக்குள் சூடான்

செங்கடல் வர்த்தகம், தங்கச் சுரங்கத்தில் செல்வாக்கு செலுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) RSF க்கு ஆயுதங்கள், ட்ரோன்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எகிப்து, சூடானிய ஆயுதப் படைகளை (SAF) ஆதரிக்கிறது. ஏனெனில் அது நைல் நதிநீர் பேச்சுவார்த்தைகளில் தனது நிலைப்பாட்டை ஆதரிக்கும் ஒரு நட்பு அரசாங்கத்தை விரும்புகிறது. ரஷ்யா இரு தரப்பினரையும் அரவணைத்துள்ளது. போருக்கு முன்பு, மாஸ்கோ சூடானின் செங்கடல் கடற்கரையில் ஒரு கடற்படை தளத்தை உருவாக்க முயன்றது. ஆகவே, சூடானின் மோதல் வெறும் உள்நாட்டுப் போர் அல்ல – இது செல்வாக்கு மற்றும் வளங்களுக்கான ஒரு பினாமி போட்டி என்பதைக் காட்டுகிறது.

தெய்வநல்லூர் கதைகள் -27

This entry is part 27 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

கணிதத் தேர்வில் தன்னுடைய கணக்கு சரியாக இருந்தும் 2 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டிருப்பதாக பிரேம் எம் எஸ் சி சாரிடம் முறையிட்டார் (சார், நீங்க சொல்லிக் கொடுத்தபடிதான் சார் இந்தக்கணக்கை போட்ருக்கேன். ஏழு ஸ்டெப்தான சார் மொத்தம், ஏழும் சரியாத்தான போட்ருக்கேன். ஆனா 5 க்கு மூணு மார்க்தான் சார் போட்ருக்கீங்க- விடைத்தாளை நீட்டியபடி).  எம் எஸ் சி சார் சிறிதும் அலுங்காமல் பிரம்பை கையில் எடுத்தபடியே துரையை அழைத்து அவர் விடைத்தாளை வாங்கி பிரேம் முகத்தின் முன் நீட்டினார்

கொடுத்துப் பெறுவதல்ல பெண்ணியம்

பெண்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் துணையாக, ஆண் இலக்கியவாதிகள் புயல்போல வேட்டியை இறுக்கிக் கட்டி களமிறங்கிய செயல் மகிழ்ச்சியை அளிக்கிறது. பரிதாபம் காட்டிச் சும்மா இருக்காமல் அவர்களின் துயரங்களைப் புரிந்து கொண்ட ஆண் எழுத்தாளர்களின் இலக்கிய செயல்பாடுகள் விரிவாக வெளிவந்தன. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவை அளவிலும் இயல்பிலும் சிறிதாக இருந்தாலும் சமுதாயத்தில் பெரிய மாற்றங்களை எடுத்து வருகின்றன. சிந்தனையைத் தூண்டுகின்றன.  

தமயந்தியின் ஸ்வயம்வரம்

This entry is part 2 of 8 in the series நள சரித்திரம்

தயக்கம், பயம், செய்வதறியாத திகைப்பு, குழப்பம் இவைகளுடன் பாவம் அந்த பெண் என்று இரக்கமும் வந்தது.  போலியையும், உண்மையையும் எப்படி பிரித்தறிவாள்?  நேரடியாக அந்த போலி நளன் களையே அடையாளம் காட்டி இருக்கலாமோ, அல்லது அவர்களையே வேண்டி விட்டுக் கொடுக்க செய்திருக்கலாமோ என்று தானே பல வித குழப்பங்களுடன் இருந்தாள். உண்மை நளன் என்ன நினைப்பான், இந்த பெண் இதன் பின்  என்னை நம்ப வேண்டுமே,  நளனே ஏதேனும் சைகையாக சொல்லக் கூடாதா?

ஜேம்ஸ் வாட்சன் (1928 –2025)

கேம்பிரிட்ஜில் வாட்சன், க்ரிக் என்ற ஆராய்ச்சியாளருடன் இணைந்து, DNA வின் அமைப்பை கண்டறிவதில் ஈடுபட்டார். DNA-வின் சரியான அமைப்பை ரோசலின்ட் ப்ராங்ளின் மற்றும் வில்கின்ஸ் வழங்கிய எக்ஸ்-கதிர் விளிம்பு வளைவுப் படங்கள் (X-ray diffraction photographs) மூலம் கண்டறிந்தனர். பாஸ்பேட் முதுகெலும்புகள் மூலக்கூறின் வெளிப்புறத்தில் உள்ளது மற்றும் அது ஒரு இரட்டைச் சுருள் என்றும் ரோசலிண்ட் சுட்டிக் காட்டினார். இந்த முக்கிய நுண்ணறிவு, இரண்டு இழைகளும் எதிரெதிர் இணையானவை என்பதை உணர்ந்துகொள்ளவும், சரியான இரட்டைச் சுருள் அமைப்பைக் கண்டுபிடிப்பதற்கும் ஏதுவானது.