உயிர்வளி

கையில் வைத்திருந்த ரெக்ஸின் பையின் ஜிப்பை திறந்தபடி “அப்ப நீங்க என்னை வேத்து மனுஷனாத்தான் பாக்கறீங்களா? என்கிட்டே பணம் வாங்கிக்க மாட்டேன்னு சொல்லறீங்க, எங்கியோ காட்டுல உழவுமாடு மாதிரி வேலை செய்துக்கிட்டிருந்தவனுக்கு நீங்க தான் கூடவே தங்கவைச்சு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுத்தீங்க, அந்தக் கடனை நான் எப்படி தீர்க்கறது?

விசித்திரமான வரலாறு மற்றும் அறிவியல் சார்ந்த நீல நிறத்தின் நீண்ட பயணம்

தெற்கு மெக்சிகோவின் யுகடான் (Yucatan)  தீபகற்பத்தின் மையத்தில், அடர்ந்த காடுகள் பழங்கால நாகரிகங்களின் ரகசியங்களை கிசுகிசுக்கின்றன. அங்கே ஒரு நவீன தேடல் உருவாகிக் கொண்டிருந்தது. Louis May Ku என்ற கலைஞர், மாயா ப்ளூ எனப்படும் புதிரான ஒரு வண்ணத்தின் மர்மத்தால் ஈர்க்கப்படுகிறார். காலத்தையும், வானிலையையும், இன்றைய வேதியியலையும் வென்று இன்றும் நிலைத்திருக்கும் இவ்வண்ணம், மாயா நாகரீகத்தின் சுவரோவியங்கள், பானைகள் மற்றும் புனித பொருட்களில் பளபளப்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதை உருவாக்கிய அறிவு வரலாற்றில் தொலைந்து போயிருந்தது.

முஷ்ட்டி மாலிஷ்

ரத்தி பாய்க்கு வாக்குச்சாவடிக்கு போக வேண்டும். புதிய மந்திரி அவளுடைய ஜாதிக்காரன். இப்போது அவளுடைய கடன் வட்டியோடு அடைக்கப்பட்டுவிடும். கங்கா பாயும் சந்தோஷமாக அவருடைய கிராமத்தில் நெல் அறுவடை செய்து புடைத்துக் கொண்டிருப்பாள். தயவு செய்து மயக்கத்தாலான இந்த போர்வையை என் மேலிருந்து அகற்றி விடுங்கள்.

நதி நீரின் புனிதமும் நுண்ணுயிரியலும்

நுண்ணுயிரிகளின் வாழ்க்கை மற்றும் மருத்துவத்தில் அவற்றின் பயன்பாடுகள் பற்றிய நமது புரிதலை இந்த மூன்று முன்னோடி நுண்ணுயிரியலாளர்களின் பங்களிப்புகள் வெகுவாக மாற்றியமைத்தன.  பாக்டீரியோ பேஜ்களின் ஆரம்பகால கண்டுபிடிப்பு முதல் நுண்ணுயிரெதிர்ப்பி-எதிர்ப்பு நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதில் அவற்றின் நவீன பயன்பாடு வரை, இம்மூவரின் பணி புதிய தலைமுறை அறிவியலாளர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. 

ஆதித்ய ஸ்ரீநிவாஸ் கவிதைகள்

அன்னையே
மீண்டும் உன்னிடம் கையேந்தி நிற்கிறேன்
ஓவியமாய் விரிந்துள்ள இரவும் பகலும்தான்
எத்தனை எத்தனை அழகு
கபாலத்தில் படிந்த தடித்த கசடுகள்
அகமெல்லாம் நிரம்பிவிட்டுள்ளது
சுடரேற்றும் வளைக்கரங்கள்
விரித்தெடுக்கிறது கடலெங்கும் பெருவானமொன்றை
ஏனோ கட்டங்கள் சதுரங்கள் வரைவதில்
என் இசையின் காலங்கள் கழிகிறது.

தெப்பம்

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தினுசில் கொலு வைக்கப்படும். சில பொம்மைகள் எல்லா வீடுகளிலும் இடம்பெறும் என்றாலும், ஏதோவொரு விதத்தில் அவைகள் வேறுபடும். மாக்கல், மரச்சொப்பு, பீங்கான், ரோஸ்வுட் என்று விதம்விதமான சொப்புகள் கணேசன் வீட்டில் இடம்பெறும். ராகவையங்கார் வீட்டின் பெரியகூடம் அவர்களது பொம்மைகளுக்குக் காணாது என்றால் லலிதாம்பா மாமி வீட்டின் கொலு சிறியதாக இருந்தாலும், காரமான சுண்டல் பெருங்கூட்டத்தை ஈர்க்கும்

உஸ்தாத் பிஸ்மில்லா கான்

This entry is part 9 of 22 in the series இசைவாணர்

பிஸ்மில்லா கான் தனது வாரணாசி வேர்களுடன் ஆழமான பிணைப்பை வைத்திருந்தார். அமெரிக்காவில் குடியேறுவதற்கான வாய்ப்புகள் உட்பட, வெளிநாடுகளில் தங்குவதற்கான பல அழைப்புகள் அவருக்குக் கிடைத்தன. ஆனால், அவர் எல்லாவற்றையும் மறுத்து, “கங்கை அமெரிக்காவில் பாய முடியுமா?” என்று கேட்டுப் பதிலளித்தார். இந்த வார்த்தைகள் அவரது பிறந்த இடம் மற்றும் புனித நகரமான வாரணாசியின் கலாச்சார பாரம்பரியத்திற்கான அவரின் நிலையான பக்தியை வெளிப்படுத்தின. எவ்வளவு உயர்ந்த புகழைப் பெற்றாலும், அவரது இசையின் ஆழமும், மனதின் நிலைத்தன்மையும் வாரணாசியோடு இணைந்தே இருந்தன.

துகள் வாழ்வுக்குள் மாய உச்சி

மிகப் பெரிய எழுத்தாளர்கள் கூட, பல சமயம் இசையைக் களமாகக் கொண்டு எழுதும் போது அடிப்படை புரிதல் கூட இல்லாமல், தங்கள் கற்பனைகளை மட்டுமே முதலாகக் கொண்டு கதைகள் புனைவதை நிறையவே பார்க்கலாம். அந்தக் கற்பனைகளை இசை தெரிந்தவர்கள் படித்தால் நகைப்பே மிஞ்சும். இன்னும் சில கதைகளில் எதற்கு வம்பென்று இசை நுணுக்கங்கள் பக்கமே செல்லாமல் கதை நகரும். சுரேஷின் ஆழ்ந்த இசை ஈடுபாட்டால், இத்தகு குறைகள் இல்லாமல் நாவலொன்றைப் படிப்பதே பெரும் ஆசுவாசத்தைக் கொடுத்தது.

வாங்-ஃபோவின் மீட்சி

விடியலைத் தன் சக்தியாகக் கொண்டிருந்த, மாலை வெளிச்சத்தைக் கைப்பற்றத் தெரிந்திருந்த அந்த முதியவரின் பக்கத்தில் நடப்பதற்கு லிங் பிறந்திருக்கவில்லை. அவன் தந்தை தங்க வியாபாரி; தாய், மரகத வியாபாரியின் ஒரே மகள். அவள் ஆண் குழந்தையாகப் பிறக்காததற்காக அவளது தந்தை சபித்துவிட்டு தன்னுடைய சொத்துக்களையும் உரிமைகளையும் அவளுக்கே விட்டுச் சென்றிருந்தார்.

புத்திசாலியான அடிமைகள் (ஏ.ஐ.)

சுய மேற்பார்வை கற்றல்’ இன்றைய நிலையில் நன்றாகத்தான் வேலை செய்கிறது – ஆனால் ஒன்றே ஒன்று மட்டும்தான் அவற்றிற்குப் புரிகிறது: வார்த்தைகள் கொண்ட கோப்பை முழுமையாக விளக்கிச் சொல்லி, விலாவாரியாக வக்கணையாகக் கேள்வி கேட்டால் ஏதோ சொன்னதை ஓரளவப் புரிந்து பதிலளிக்கும். அல்லது ஒரேயொரு அசையா புகைப்படத்தைக் காட்டினால் அந்தப் படத்தை ஏதோ புரிந்து கொள்ளும்.

விளக்கேற்றுபவன்

அந்த நேரத்தில் முற்றத்தில் சிவராசனின் சைக்கிளைக் காணமுடியாது. அவர் வேளைக்கே, அப்பா எழும்புவதற்கு முன்னராக எழுந்து, பின் வளவிற்குள் இருக்கும் இரண்டு மாமரங்களிலும் கொப்புகளை உலுப்பி மாங்காய்களைப் பிடுங்கிக் கொண்டு போய் விடுவார். முத்தலும் பிஞ்சும் என்று அங்கே ஒன்றும் இருக்காது. பின் வளவைப் போய்ப் பார்த்தால் மாமரக் கொப்புகள் முறிந்து காணப்படும்.

பார்த்து போ

எப்பொழுதும் போல
இப்பொழுது
போயிட்டு வரேனென்று
சொல்லுவதற்கு வாயெடுத்து
வார்த்தைகள்
வாய்க்குள் சிக்கிக்கொண்டது

இருபது ரூபாய்

முறையான கணக்குகள் இல்லாதவை என்பதால் தொலைந்த பணத்தை மீட்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கமுடியாது. மேலும் காவல் நிலையங்கள் குருதிச் சுவை அறிந்த மிருகங்கள் இயங்கும் கானகங்கள் போன்றவை. ஆனால் பணத்தை மீட்க அங்கிருக்கும் சில மிருகங்களின் துணையையே நாடுவார்கள். இதற்கென்றே பழக்கப்பட்டு கானகத்திற்கு வெளியே இயங்கும் மிருகங்கள் அவை. சில துண்டுகள் மாமிசம் கேட்பவை.

இடமும் வலமும்

எருக்கும் நெருஞ்சியும்
பூத்த நிலத்தை
பூந்தோட்டமென்று
ஒருவன் சொன்னால்
அவனிடம் வாதிடுவதைப்போல்
அறிவீனம் வேறொன்றுமில்லை.

ஒரு துரோகம், ஒரு தண்டனை

இந்த கடிதத்தில் உங்களை என்ன சொல்லி அழைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என் உள்ளத்தில் இருப்பதை எப்படி சொல்வது என்றும்  புரியவில்லை. இது முறை தவறிய செயல் என்று எடுத்துக் கொள்வீர்களோ என்று தயக்கமாகவே இருக்கிறது. உங்களை முதல் முறையாக பார்த்ததும், நீங்கள் எல்லாரிடமும் பேசிய விதமும், பழகிய விதமும் என்னைக் கவர்ந்தது. உங்களைப் போல எனக்கும் இசை என்றால் உயிர். எனக்கு பொருத்தமான துணை நீங்கள் தான் என்று நினைக்கிறேன். நான் மட்டும் நினைத்தால் போதுமா?

ஹர்ஷ சரித்திரம் – 4

என் பால பருவம் வெறுமையாக இருந்திருக்கவில்லை. “சதாயுஷ: புருஷ:” மனிதனின் ஆயுள் நூறு ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு.  அதற்குள்  தங்களைத் தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையுடனேயே வளர்ந்தவன் நான்.  மறு உலகம், மறு பிறவி உண்டு என்பதை நம்புவதால்,  இதையும் நம்பி அதற்கான சாதனைகளையும் செய்ய வேண்டும் என்றும் போதிக்கப் பட்டவன்.  என் பால பருவம் வீணாக ஆனதாக நான் நினைக்கவில்லை. எந்த குறையும் இல்லை. 

பொருட்களின் இயற்கை

ஐரோப்பிய சமூகத்தின் ஒழுங்கடுக்கில் எதிரொலித்த பிரபஞ்சத்தின் ஒழுங்கடுக்கு தாந்தேவினால் மிக அற்புதமாக பாடப்பட்டது. பூமியை மையமாகக் கொண்ட உருண்டையான பிரபஞ்சம்; சுவனத்திற்கும் பூமிக்கும் இடையே மாற்றில்லாத பிரிவு; இயற்கை நிகழ்வுகள் குறித்து உருவத்துடன் கூடிய அறுதியான விளக்கங்கள்

ஸ்வப்ன வாசவ தத்தா – 5

This entry is part 5 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

யௌகந்தராயன் என்ற அந்த மந்திரி அந்தணர் வேஷத்தில் இருந்தவர் அருகில் வந்தார். வாஸவதத்தாவும் திகைப்புடனே அவரை பார்த்தாள். ராஜ குமாரியின் அருகில் சென்றவர், தேவி! தாங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.    கஞ்சுகி அருகில் வந்தவள், ஓ நீங்கள்  புதியவரா, சற்று முன் வந்தீர்களே என்றாள். பத்மாவதியும் மரியாதையுடன் ஐயா, சொல்லுங்கள். நானே எதுவானாலும் தருவதாக வாக்களித்து விட்டு மறுப்பேனா, தயங்காமல் சொல்லுங்கள், என்றாள். 

ஈர்ப்பு அலைகள் – பகுதி 3

This entry is part 3 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

பூமியிலிருந்து அளக்கும் பட்சத்தில், ஒரு அணுவிற்குள்ளிருக்கும் ப்ரோட்டானை விடச் சிறியது (10^-18 meters). இதை, மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம். உதாரணத்திற்கு, ரேடியோ அலைகளின் நீளம் (mm to km) அலைவீச்சு, தூரத்துடன் குறைந்தாலும், வெகு தொலைவுவரை (பல்லாயிரம் கிலோ மீட்டர் வரை) இவற்றை நம்மால் அளக்க முடியும். அடுத்தபடியாக, மைக்ரோவேவ் (microwave) அலைகளின் நீளம் (1 mm to 10 cm), சில கிலோமீட்டர் தூரம் வரை நம்மால் அளக்க முடியும். அடுத்து வருவது அகச்சிகப்பு (Infrared) அலைகளின் நீளம் (700 nm to 1 mm) சில மீட்டர்கள் வரை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்

மிளகு – அத்தியாயம் 89 – பின்கதை

இடிந்த புராதனக் கோவிலாகவும், கூரை இல்லாத கோவில் சந்நிதியாகவும், தரையில் கிடக்கும் கல்வெட்டுப் பதித்த கல்தூண்களாகவும் மட்டும் உயிர்த்து, நானூறு வருடத்தில் ஒரு நகரமே சிதைந்து   பொடிபொடித்துப் போய்விட்டது. நாகர்பஸ்திகேரி என்று பக்கத்து கிராமத்தின் பெயரை வைத்து கெருஸொப்பாவை அடையாளம் காண்பது இன்றைய வழக்கம்.

8. கிருஷ்ணா

அவள் அவரிடம் “நீர் இலக்கியம், இலக்கணம் அனைத்திலும் மிகத் தேர்ச்சி பெற்றவர். ஆனால் என்னிடம் வைத்துள்ள பிரேமையில் ஆயிரத்திலொரு பங்கு அந்தக் கிருஷ்ணனிடம் வைத்தால் கூடப் போதுமே! உம் வாழ்க்கையின் பொருளை உணர்ந்து பலனை அடைய,’ என்கிறாள்

நகைப்பாடம் – பார்கின்சனின் விதி

பணம் படைத்தவர்கள் எல்லோராலும்  ‘பணக்காரன்’ என்ற பட்டத்தை அடைந்துவிட முடியாது. ‘பணக்காரன்’ என்பது ஒரு தனித்துவ வட்டத்தின் உறுப்பினர்களுடைய பெயர், அதில் இடம் பிடிப்பது கடினம் என்கிறார் பார்கின்சன். ஒரு சீன கோடீஸ்வரரை சந்தித்த போது அந்த சீனர், “கூலிக்காரன் பணம் சம்பாதிக்க முடியும் ஆனால் ஒரு பணக்காரனால்தான் பணக்காரனைப்போல வாழ முடியும்” என விளக்கங்கள் கொடுக்காமல் சொல்கிறார்

ஜோ ஸ்டீவன்ஸ் – இசைவழி மூன்றாம் பாலுக்கான மாற்றுவெளி

தன் இருபதாவது வயதில் நண்பருடன் பயணம் செய்த வண்டி, தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றபோது ஜோ அதை சரிசெய்ய முற்பட்டார். பெண்களால் முடியாத காரியம் என நண்பர் கேலி செய்ய, ஒரு மணிநேரத்தில் பழுதைச் சரி செய்தார். பல பெண்கள் ஆண்களைப் போலக் காரியங்கள் செய்தாலும், தன் செயல்பாட்டில் சில வித்தியாசங்கள் இருப்பதை உணர்ந்திருந்தார்.  ஆண்கள் செய்யும் காரியங்களைச் செய்வதோடு மட்டுமல்லாது அவர்களைப் போலவே உணரத் தொடங்கினார் என்பதே அந்த மாற்றம்

அகவிதழ்

பக்கத்து
தண்டவாளத்தின் மீது
தலை சாய்த்தும்
தலை வைத்தும்
சிவப்பு மலர் சூடிய
சிறிய செடி
தனது சிவப்பால்
ரயிலை நிறுத்தும்
முயற்சியை தொடர

மணலில் கட்டப்பட்ட பாலம்

அந்த இடமானது பரத்வாஜ முனிவரின் நண்பரான ரைபயா என்ற முனிவரின் ஆசிரமம் . அங்கே ரைபயாவும் அவரது மகன்களான பரவஸு மற்றும் அர்வவஸு வேதங்களைக் கற்றுணர்ந்து மிகவும் புகழுடன் வாழ்ந்த வந்தனர் . பரத்வாஜ முனிவரோ இந்த உலக சுகதுக்கங்களை விடுத்து இறைவனுடன் கலப்பது பற்றியே சிந்தனையாக இருந்தார் . ரைபயா மற்றும் அவரது மகன்களுக்கு கிடைத்த புகழை கண்டு பொறாமைக் கொண்டான் யவக்ரீதா.