ஒரு துரோகம், ஒரு தண்டனை

இந்த கடிதத்தில் உங்களை என்ன சொல்லி அழைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என் உள்ளத்தில் இருப்பதை எப்படி சொல்வது என்றும்  புரியவில்லை. இது முறை தவறிய செயல் என்று எடுத்துக் கொள்வீர்களோ என்று தயக்கமாகவே இருக்கிறது. உங்களை முதல் முறையாக பார்த்ததும், நீங்கள் எல்லாரிடமும் பேசிய விதமும், பழகிய விதமும் என்னைக் கவர்ந்தது. உங்களைப் போல எனக்கும் இசை என்றால் உயிர். எனக்கு பொருத்தமான துணை நீங்கள் தான் என்று நினைக்கிறேன். நான் மட்டும் நினைத்தால் போதுமா?

என்றாவது ஒரு நாள்….

எனக்கு அப்போது தெரியாது அவனுடன் பேசுவது அதுவே கடைசி முறை என்று. அவனுடன் பேசிய அடுத்த பத்தாவது நாள் ஆர்மி ஹெட் க்வார்ட்டர்சிலிருந்து எனக்கு போன் வந்தது. ‘தீவிரவாதிகளுடன் நடந்த போராட்டத்தில் வீரமரணம் அடைந்து விட்டான் உங்களுடைய சகோதரன். அவனுடன் உயிர் நீத்த எல்லாருடைய உடல்களையும்  நாளை டெல்லிக்கு கொண்டு வருகிறோம்.   ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு உடலை ஒப்படைக்கிறோம்