ஒரு தடவை எங்கள் அப்பா, அம்மாவுக்கென்று எதையோ தன் கைகளில் மறைத்து எடுத்துக் கொண்டு வந்தார். ஒரு கருப்பு வெல்வெட் நகைப் பெட்டி. சி-ஓவும் நானும் அதை அவர் தட்டித் திறந்த போது பார்ப்பதற்கு அழைக்கப்பட்டோம், அதில் தங்கத்தில் பதிக்கப்பட்ட சிறிய வைரக்கற்கள் இருந்த காதுக் கம்மல்கள் இருந்தன
Category: இதழ்-332
பேருடலாகும் சிற்றுடல்கள் – லெவையாதன்
தாமஸ் ஹாப்ஸின் ‘லெவையாதன்’ இந்த பாற்கடல் கடைவதின் முக்கிய விளைபொருள். அது வெறும் அரசியல் தத்துவ நூல் அல்ல. அதிகாரம், சட்டம், வணிகம், மதம் என அனைத்தையும் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வைத்த புரட்சிகர நூல். பின்னாளில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகளாவிய சக்தியாக உருவெடுக்க இது போன்ற சிந்தனை மாற்றங்கள் அடித்தளமாக அமைந்தன.
இடைவழி
எனக்கு எங்கோ மெல்லிய இசை கேட்க என் காதருகில் ” நீங்கள் மெதுவாக விழிகளை திறக்க முயலுங்கள்” என்று ஆங்கிலத்தில் ஒரு குரல் கேட்டது. விழியை திறக்க எத்தனிக்கும் போதெல்லாம் கண்கள் மேல் ஒரு பாரம் அழுத்தியது. நான் உருண்டு உருண்டு கீழே விழுவது போன்ற உணர்வு. பெரும் பிரயத்தனப்பட்டு கண்களை திறந்தேன். சுற்றிலும் மருத்துவர் குழு ” யூ ஆர் த்ரூ இட் ” என்று புன்னகைக்க நான் கண்கள் செருக விழிப்பும் இல்லை மயக்கமும் இல்லை என்ற அவஸ்தையில் இருந்தேன்.
அணங்கு
ஒன்பதரை மணிக்கு பனிக்குளிர் இறங்கிய ரோட்டில் வண்டி ஓட்டிட்டு வரும்போது ஆதிக்கு பயமா இருக்கு.தனியா என்ன பண்றாளோ என்று கதவைத் திறந்தால் தூங்கிக்கிட்டிருக்கா.பக்கத்துல தட்டில் இட்டிலி மூடி வச்சது அப்பிடியே இருக்கு.ஏறி இறங்கும் அவளது ஒவ்வொரு மூச்சுக்கும் கர் கர்ரென ஆஸ்துமா இளைப்பு சத்தம் கோரமா கேக்குது.வாய் ஒரு பக்கமா கோணி திறந்திருக்கு. யூனிபார்மை கூட கழட்டாம உக்காந்திருக்கான்.
கல்லிலே கலைவண்ணம் கண்டார்
முன்புறத்தில் சூர்யபனா மற்றும் சந்திரபானா என்று பெயரிடப்பட்ட இரண்டு ஒற்றைக்கல் கட்டமைப்புகள் நிற்கின்றன. ஒவ்வொன்றும் லாலிபாப்கள் போன்று தோன்றும் ஒரு பெரிய தூணில் ஒரு வட்டமான தட்டை தாங்கிக் கொண்டிருக்கிறது. தட்டுகளில் சித்தரிக்கும் காளைகள் ஒன்றையொன்று எதிர்கொள்வது மாறியான வேலைப்பாடுகள். தட்டுக்கள் இரண்டும் ஒரே அளவு மற்றும் 6 அடி விட்டம் கொண்டவை
உயிரே உயிரே!
மைடோகாண்ட்ரியா, வளர்வதும், பிறப்பிப்பதும் அது சார்ந்த உயிரணுவிலிருந்து மாறுபட்ட ஒன்று. அதாவது அது சுயமாகச் செயல்படுகிறது. மைடோகாண்ட்ரியா டி என் எ (Mitochondria DNA) என்று சொல்லப்படும் வட்ட மரபணுக்களை (Circular genomes) தனியாகவே பிரதி எடுத்து அதை இரட்டைப் பிளவின் மூலம் பெருக்குகிறது. இது செல்களின் பிரதியெடுப்பை ஒத்து இல்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன
3. சரணடைதல்
எது மனிதனை அசக்தனாக்கி, எதுவோ ஒன்றில் சரணடைய வைக்கிறது? இயலாமையா? நம்பிக்கையா? இல்லை வேறு ஏதோவா? ஒன்று மட்டும் நன்கு விளங்குகிறது. நன்மையிலும் தீமையிலும் நாம் நக்குத் துணையாக வேறு ஒன்றில் இணைந்திருக்க விரும்புகிறோம்; அது நம்மை மீறிய ஒரு சக்தியாக இருக்க வேண்டும்; நம்மை அரவணைக்க வேண்டும்; நமக்குத் துணையாக, பலமாக இருக்க வேண்டும்.
நூல் அறிமுகங்கள்
வாசிக்கும் நமக்கே கூட கோபம் வந்துவிடும் , ஆனால் அசாத்திய பொறுமை ஹஜாரிக்கு. தன் இலட்சியத்துக்காக எந்த வகையிலும் தன் இயல்பிலிருந்து மாறிவிடாத நல்லவன். இது போன்றவர்களைத் தன் வாழ்வில் பல முறை எதிர்கொண்டதாக விபூதிபூஷன் குறிப்பிட்டிருப்பதாக , இதன் முன்னுரையில் க்ஷிதிஷ் ராய் சுட்டிக்காட்டுகிறார். சிறப்பான முன்னுரையும் கூட
பசிப்புலவர்கள் (Hungryalist Generation) – வங்காள இலக்கிய இயக்கம்
பசிப் புலவர்கள் இயக்கம் அமெரிக்க பீட் இயக்கத்தின் ப்ரபாவத்தில் உருவானது என்பது ஒரு பரவலான கருத்து. பீட் இயக்கத்தின் குரு என கருதப்படும் அலன் கின்ஸ்பேர்க் (Allen Ginsberg) கல்கத்தாவுக்கு 1962 ல் வந்து பசிப் புலவர்கள் இயக்கத்தினருடன் உரையாடல்களில் ஈடுபட்டார். சுமார் பதினான்கு மாதங்கள் இந்தியாவில் வசித்த அலன் பசிப் புலவர்களின் படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அமேரிக்காவில் வெளியிட உதவினார்.
Fire on the Ganges
மணிகர்னிகா கட், டோம் இனத்தவரின் பணியிடம். தொடர்ந்து சடலங்கள் எரிக்கப்பட்டு பல விதமான சாம்பல் அடுக்குகளையும் ஆங்காங்கே குப்பை மேடுகளையும் கொண்டது. ஒருபுறம் சூரியன் முதுகில் சுட்டெரிக்க தரையானது தொடர்ச்சியான வெப்ப அலைகளை உமிழ்ந்கொண்டே இருக்கும். காற்று வலுவாக வீசும் பொழுது வழிமாறிய தீ கொழுந்தாக தோல் மீதும், முடியையும் சுட்டெரிக்கும். இந்நிலையில் உடலில் வரட்சி ஏற்பட்டு பணிபுரிவோரை பலவீனப்படுத்திகிறது. இத்தகைய சூழலில் தங்களது பணிகளைத் தொடர குட்கா மற்றும் ஆல்கஹாலை சார்ந்துள்ளதால் இவர்கள் இளவயதிலே போதைக்கு அடிமையாகின்ற நிலை ஏற்படுகிறது
பெரும் வீழ்ச்சியின் கதைகள்: ரித்னாபூரின் மழை – அசோக் ராம்ராஜ்
அசோக் ராம்ராஜின் கதைகூறல் முறை காஃப்கா, கமூய் கதைகூறல் முறையை ஒத்திருக்கிறது. எப்போதும் சோகம் ததும்பும், புனைவின் மையத்தை தொடாமல் சுற்றியே வரும் மொழி நடை. படைப்பின் உள்ளடக்கத்தைவிட வடிவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பாணி. வடிவம் குறித்து கவலை கொள்வதனாலேயே உள்ளடகத்தின் வீச்சை பிரம்மாண்டமாக ஆக்குவதற்கு வடிவத்தை மாற்றி பயன்படுத்துகிறார்.
ஹண்டர் பைடன்
ஜோ பைடன் துணை அதிபராக இருந்த பொழுது ஹண்டர் பைடனின் போதைப் பழக்கம், சீனாவில் அவரது நடவடிக்கைகள், உக்ரேனிய எண்ணெய் மற்றும் எரிவாயு வாரியத்தில் அவரது பதவியில் நடந்த சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் அனைத்தும் 2020 தேர்தலின் பேசுபொருளாக இருந்தாலும் உண்மையை வெளிவராமல் ஜனநாயகக் கட்சியினர் பார்த்துக் கொண்டனர்
பிளாஸம் என்கிற வேக்கா!
இன்றைக்கு சரியாக 240 வருடங்களுக்கு முன்பாக 1784-ன் செப்டம்பர் 2-ம் தேதி மதியம் 2 மணிக்கு வெப்பக்காற்று பலூன்களின் சோதனையில் எட்வர் ஜென்னரும் பாரியும் பார்க் லீ கோட்டை மைதானத்தில் இருந்தனர். ஜென்னரின் பலூன் உயரப் பறந்து 10 மைல் தொலைவில் இருந்த ஆண்டனி கிங்ஸ் காட் என்பவருக்குச் சொந்தமான மாபெரும் எஸ்டேட்டில் தரையிறங்கியது.
குமார சம்பவம் மஹா காவ்யம்- 16
நேருக்கு நேர் நின்று போரிட்டவர்கள் எதிரில் நிற்பவரின் கம்பீரமான ஆக்ருதியையும் ஆற்றலையும் உணர்ந்து சிலர் மூர்ச்சையானர்கள். சிலர் எதிர்த்து நின்றனர், சிலர் தங்கள் வீரமோ, புத்தியோ ஸ்தம்பித்து போக செய்வதறியாது நின்றனர். ஆஹவம்- யுத்தம் – சிலர் மல் யுத்தம் போல யுத்தமும் இவர்களுக்கு விளையாட்டு போலவே மனதுக்கு பிடித்தமானதாக இருக்கவும்,
பெருமழை காலத்துக் குன்றம்
பரத்தை கூற்றாக வரும் ஒரு பாடலில் பரத்தை தலைவியை கேலி செய்கிறாள். தலைவனை தன்னிடம் இருத்திக்கொள்ள முடியாத தலைவியின் உறக்கத்தை, கவனமின்மையை நீர்நாயின் உறக்கத்திற்கு ஒப்பாக கூறுகிறாள். புதுவருவாயை உடைய வளமான மருத நிலத்தின் பொய்கை நிறைந்திருக்கிறது. அங்கு வாளை மீன்கள் தீட்டிய வாள் போல மின்னி விளையாடி நீருக்குள் மறைகிறது. அவற்றை கவனிக்காமல் அதன் கரையில் பசியோடு நீர்நாய் உறங்குகிறது
மிளகு – அத்தியாயம் 84 எண்பத்தி நான்கு
கோகர்ணத்துக்கு வந்து வழிபட்டு மிர்ஜானுக்கு வந்த மராத்தியப் பேரூர் பண்டரிபுரத்து விட்டல பக்தரான மராட்டி பேஷ்வாவும் அவருடைய அழகான மனைவியும் குழந்தைகளும் சென்னபைராதேவி பற்றி மிர்ஜான் கோட்டை கட்டிய தொழில் வினைஞர் கூறியது கேட்டு அவளைச் சந்தித்துப் போக வந்தது நேற்றுப்போல் நினைவு வருகிறது. முப்பது ஆண்டுக்கு முந்திய அந்தச் சந்திரனும் பூரணத்துக்கு இரண்டு நாள் முந்தைய சந்திரன் தான்.
கோசின்ரா கவிதைகள்
ஒரு சந்திப்பில்
நான் தற்கொலை பற்றி பேசினேன்
நீ காதலைப்பற்றி பேசினாய்
காதல் தூரத்தில் தெரியும்
மலைக்குன்று என்றாய்
இருவரும் ஏறி உச்சியில் நிற்கின்றோம்
ரவி அல்லது கவிதைகள்
தோராயமாக சொல்லிவிடும்
கற்பிதங்கள்
யாவிலும்
உண்மை இருக்க வேண்டிய
அவசியமில்லை.
வசீகரித்துவிட்டாலே போதும்
இந்த
அடிமை மனம்
புரிதலை
மழுங்க வைத்து
தோரணங்களையே
எப்பொழுதும்
தொங்கிக் கிடக்கும்.
