விறு விறுவென நடந்தும் ஒன்பது பத்தாகி விட்டது.இன்று சின்னவன் படுத்திவிட்டான்.எச் .எம் வேற என்ன சொல்லுமோ? வேகமாய் வந்து பிரேயரில் நிற்கிறாள் மீனா. “உன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்ததுமே” எச்.எம். நிற்கவில்லை என்பதை கவனிக்கிறாள் அப்பாடா!! உதவித் தலைமை ஆசிரியர் காந்தி சார் தான் அசெம்பிளியில் “கணேசன் தாத்தா”
ஆசிரியர்: மோனிகா மாறன்
ஸ்பென்சர்
வேளாங்கண்ணிக்கு நடந்து வரேண்ணு வேண்டிக்க. சித்தூர்ல நாட்டு வைத்தியம் பாக்குறாங்க சாரப்பாம்பு எண்ணெய உருவி விட்டா நடந்திடுவான், பெங்களூர்ல காந்த சிகிச்சை தராங்க, மேக்னட் வச்சி ரெண்டு காலும் நடக்காத ஒரு அம்மாவுக்கு சரியாயிடுச்சி. மருதூர்ல இருக்குற சாமியாரு… நாகூர் தர்காவுல சரியாயிடும்.,கேரளாவுல மண்ணுல நாள் பூரா ஒக்கார வச்சி எண்ணத்தடவி சரி பண்ணிடறாங்க. எழுப்புதல் கூட்டங்கள். சுகமளிக்கும் பிரார்த்தனைகள். அக்குபஞ்சர்ல ஊசி குத்துனா சரியாயிடும். சித்த மருத்துவம், ஆயுர்வேதம், சோசியங்கள், ஆருடங்கள், கணிகாரர்கள்,.,தேவ ஊழியர்கள். ,இயற்கை மருத்துவர்கள், பழம் மட்டுமே சாப்பிடக் குடுங்க. எத்தனை எத்தனை ஆலோசனைகள்… பரிகாரங்கள்.. வழிகாட்டுதல்கள்… எல்லா இடங்களுக்கும் அவனைச் சுமந்து அலைந்தார்கள்.எதற்கும் இளகாத கரும்பாறையல்லவா வாழ்வு
தச்சன்
அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்கும் பெருந்திரளான கூட்டம். சீடர்கள். பேதுரு சீமோன் போன்ற உரிமையான நண்பர்கள். அவன் நிமித்தம் எல்லாப் பழியையும் ஏற்று கருணையினால் நிறைந்த அன்னை. .. .. .. ஆனாலும், அவனுக்கென எவருமில்லை. அவன் மனம் தனித்தே நிற்கிறது. எங்கோ ஓர் வெறுமை. எனக்கென என் மனதுடன் உரையாட ஓர் அன்பு நெஞ்சமில்லை. எல்லோருக்கும் நான் ரபி, குரு, ஞானத் தந்தை…என்னுடன் முகமுகமாய் அளவளாவ நண்பனே என்று அழைக்க எவருண்டு ? .. .. .. அவன் குனிந்து அவளைப் பார்க்கிறான். .. .. .. யாரிடமும் ஒன்றாத அவன் தனிமை அவளின் கருணை நிறை அன்பில் கரைகிறது. உடைக்கப்படும் புனிதங்கள். கட்டளைகள் மீறப்படுகின்றன. அவள் உன்மத்தமாகிறாள்…
காலத்தினால்….
இணையப் போராளிகள்!,வெட்டி அரட்டை கும்பல், முதிர்ச்சியற்ற இளைஞர்கள் என்றெல்லாம் பிறரால் அலட்சியமாக எண்ணப்பட்ட இளையஞர்களின் ஆற்றலை இப்பேரழிவு நாம் உணர்ந்து கொள்ள வைத்தது. ட்விட்டர் பேஸ்புக் போன்ற இணையதளங்களில் உலவுகையில் நான் எண்ணுவதுண்டு சினிமா கதாநாயகர்களுக்காக இவர்கள் இப்படி அடித்துக் கொள்கிறார்களே, திரையிசையைத் தவிர இளைய சமுதாயத்திற்கு வேறு இசைஞானமே இல்லையே என்றெல்லாம்… ஆனால் சென்னை மழையில் இவர்களின் பெரும் பங்கு என்னைப் போன்றவர்களின் எண்ணங்களை அடித்து நொறுக்கியது. ட்விட்டர் பேஸ்புக் மூலம் இவர்கள் மிகத் திறமையாக உதவிகளை ஒருங்கிணைத்தார்கள். இரவும் பகலும் விழித்திருந்து…
ரஞ்சனி
நீலக்குழல் விளக்கொளி அறையெங்கும் பரவி இரவின் முழுமையை ரஞ்சனியின் மனதில் நிலைத்தது.கதவில் தொங்கிய மாவிலைகள் அசையும் நிழலையேப் பார்த்திருந்தாள். எழுந்து வெளியே போகமல் ஏன் இப்படியே இருக்கிறேனென்று எண்ணிக் கொள்கிறாள். சீனுவின் சீரான மூச்சொலி, குழந்தைகள் புரண்டு படுக்கும் அசைவு எல்லாவற்றையும் உணரமுடிகிறது. ஆனால் அவள் அப்பெரும் வெளியில் நிற்கிறாள். வெள்ளிநிறத்தில் மின்னும் மணலும், நிலவொளியில் அசைந்தோடும் தண்ணீரின் அசைவும், குளிர் வாடையும்…
ஜெயகாந்தன்-ஓங்கி ஒலிக்கும் யதார்த்தத்தின் குரல்
கம்யூனிசத்தையும் ஆன்மீகத்தையும் ஒரே தளத்தில் இணைக்க எண்ணினார்.
இந்திய மரபின் மேன்மைகளை உணர்த்தினார். தனிமனித சுதந்திரம் பற்றி ஐம்பதாண்டுகளுக்கு முன்பே உரத்துப்பேசினார்.ஏனென்றால் அக்காலகட்டத்தில் மனிதர்கள் சமூகத்தில், சாதியில், குழுக்களில் கட்டுப்பட்டே இருந்தனர். சமூகத்தின் பார்வையில் தனிமனித ஒழுக்கங்களும்,கட்டுப் பாடுகளும் எத்தனை அபத்தமான கோணத்தில் நோக்கப்படுகின்றன என ஓங்கித் தலையிலடித்துக் கூறினார். கம்யூனிச சித்தாந்தங்களையும்,காந்தியின் எளிமையையும் ஒன்றாகக் கொண்டவராகவே வாழ்ந்தார்.
பார் மகளே பார்
அனுராதா முன்னும் பின்னும் கால் மாற்றி மாற்றித் தவித்தது. மாடா இருந்தா என்ன மனுஷியா இருந்தா என்ன வலி ஒண்ணுதான அம்மா பெருமூச்சு விடுகிறாள். நான்கு பிரசவங்களைக் கடந்த பெண்மையின் வலியன்றோ அது. நிலவு அரைவட்டமாய் தலைக்கு மேலே, குளிரில் மணலில் அமர்ந்திருக்கிறோம். அன்று பெத்லகேமில் உதித்த தச்சனின் மகன் வரவிற்காய் காத்திருந்த சீமோனைப் போன்று நம்வீட்டுக் கொட்டிலில் பிறக்கப்போகும் கன்றிற்காய் பார்த்திருக்கிறோம். அன்பு மகளே அனுராதா வலியில் கால் இடறி…