பிளாஸம் என்கிற வேக்கா!

இன்றைக்கு சரியாக 240 வருடங்களுக்கு முன்பாக 1784-ன் செப்டம்பர் 2-ம் தேதி மதியம் 2 மணிக்கு  வெப்பக்காற்று பலூன்களின் சோதனையில் எட்வர் ஜென்னரும் பாரியும் பார்க் லீ கோட்டை மைதானத்தில்   இருந்தனர். ஜென்னரின் பலூன் உயரப் பறந்து  10 மைல் தொலைவில் இருந்த ஆண்டனி கிங்ஸ் காட் என்பவருக்குச் சொந்தமான மாபெரும் எஸ்டேட்டில் தரையிறங்கியது. 

காமாட்சிசுந்தரியும் அப்பாவும்

நடு வீட்டில் அப்பா புன்னகையோடு படுத்திருந்தார். வெண்ணிற மேல்சட்டை. நீல நிற கால்சட்டை. இரண்டும் அவரது முந்தய வருட பிறந்த நாளுக்கு அம்மா வாங்கிப் பரிசளித்தது. ஆனால் அது காமாட்சி தேர்ந்தெடுத்தது. அவரது தொப்பை மேல் இணைந்திருந்தபடி இருந்த அவரது விரல்களைத் தொட்டாள். சில்லென்று இருந்தது. அப்பாவுக்கு சூடாக இருப்பது தான் பிடிக்கும். சின்ன மழைக்காலக் குளிர் கூட அவருக்கு ஆகாது. தன் இரு கைகளைக் கொண்டு தேய்த்து சூடு கொடுக்க முயன்றாள்.

ஒருபக்கம். மறுபக்கம்?

லக்மினி அங்கிருந்தபடியே அமலனுக்குக் கண் எறிகின்றாள். ஏதோ புரியவில்லை என்பதை அமலன் தெரிந்து கொண்டான். கொஞ்ச நாட்களாக லக்மினியுடன் வரும் பெண்ணுடன், தன் சக நண்பன் மணி மினைக்கெடுகின்றான். இப்போதுகூட மணி அந்தப் பெண்ணுக்கு ஏதேதோ சொல்லிக்குடுத்து, தொட்டுத்தொட்டுக் கதைத்து சிரித்தபடி இருக்கின்றான். அவளின் உடல் அசைவுகளில் குப்புற விழுந்துகொண்டான் மணி.

எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 1

This entry is part 7 of 14 in the series குடாகாயம்

படத்திலிருக்கும் பெண்களைக் கவனித்தால் அவர்கள் முற்றிலும் வேறுபட்ட உணர்ச்சி நிலையில் இருக்கிறார்கள்.  ஒருவர்மீது ஒருவர் சாய்ந்திருக்கும் இரண்டு இளம் பெண்களில் ஒருவர் சகோதரி, மற்றவர் அவளுடைய கொழுந்தியாள்.  இவர்கள் கனவனையோ, காதலனையோ (அல்லது இருவரையுமோ) இழக்கப்போகிறார்கள்.  பின்னாலிருக்கும் முதியவள் தன் இரண்டு பேரப்பிள்ளைகளைத் தழுவி ஆறுதல் அளிக்கிறாள்.  அவர்களுக்கான உடை வெளிர் நிறங்களில் இருக்கின்றன, அவர்களது சோகத்தை மேலிட்டுக் காட்டுகின்றன

தோல்பாவைக்கூத்து

சில நூற்றாண்டுகளாகச் செய்யப்படும் நிகழ்த்துக்கலை என்பதால், மூல ராமாயணத்திலிருந்து பிரிந்து பிற ராமாயணக் கதைகள் கூட இதில் சேர்ந்து வந்திருக்கிறது. நாட்டாரிய கதைகளிலின் வழியாக இவை உருவானவை என்றாலும், கூத்துக்கலைஞர்கள் பல ஊர்களில் நிகழ்த்தும்போது கேள்விப்பட்ட பிற சரடுகளையும் பொதுப் பிரதியில் சேர்த்துவிடுகிறார்கள் என எண்ண இடமிருக்கிறது.

கல்யாணி

மஞ்சுவின் அண்ணன் ஆனந்த் அறையின் வாசலில் ஒரு நாள் கயிற்றைக் கட்டி பெண்களுக்கு அனுமதி இல்லை என்றான். பழுத்த மாம்பழங்களை விநியோகிக்கும் உரிமை தனக்கே உண்டு என புதிதாக சட்டம் கொண்டுவந்தான். அதிகார மையமாக தன்னை மாற்றிக் கொண்டான். வியாபாரம் நடக்குமிடத்தில் பெண்களுக்கு என்ன வேலை என்று வஞ்சகமாக யோசித்தான். வஞ்சகம் செய்பவர்களை வீழ்த்த காற்றில் நஞ்சைக் கலத்தோம்.

நானே நானா, யாரோ தானா? – 1

நிலத்தடிக்கு நான் செல்ல மருத்துவர்கள் அனுமதித்தார்கள். நானும் தயார்தான். ஹூஸ்டனில் என் மூளையை விட்டுவிட்டு ஹெலிகாப்டரில் துல்சாவிற்குப் பயணித்தேன். அப்படித்தான் எனக்குத் தோன்றியது. என் தலையை விட்டு மூளை பிரிந்திருக்கிறது என்று தான் என்னால் சொல்ல முடியும். பயணத்தின் போது நான் முன்னர் கவலை கொண்டவை யாவும், அறுவை சிகிச்சைக்குப் பின்னான எனது பதட்டங்கள் நிறந்த ஊகங்கள் என்ற சிந்தனை எழுந்தது. நான் நினைத்தது போல இது ஒன்றும் மீமெய்யியலோ, விநோதமோ இல்லை. எங்கிருக்கிறேன் நான்? தெளிவாக இரண்டு இடத்தில்- தொட்டியின் உள்ளும், வெளியும்.

ஈஸ்வர அனுக்ரஹம்

சிறிது காலம் முன்பு ஒரு சினிமா நடிகரை அழைத்து வந்தோம். வர போக செலவு, ஹோட்டலில் தங்குமிடம், அதைத் தவிர பணக் கவர் கொடுத்தோம் அவர் வந்து பெண்கள், பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் சீரழிந்த ஜோக்குகளைப் பேசினார். ஒவ்வொரு ஆண்டும் யார் யாரையோ அழைக்கிறோம். சன்மானம் செய்கிறோம்

சராசரிக்கும் கீழே

குடும்பத்தில் அமைதியின்மை சதா சர்வ காலமும் இருப்பதாகவும். குலாவின் மனைவி வீட்டில் இருக்கும் சிக்கல்களைத் தவிர்க்க வேலைக்குச் செல்ல துவங்கியிருப்பதாகவும் கேள்விப்பட்டேன். ரொம்ப நாட்களுக்குப் பின் குலா ஒரு நாள் ஃபோன் செய்தார். ‘’ஆராவமுதன் ! குழந்தை பொறந்திருக்கு. பெண் குழந்தை’’ என்றார். பெண் குழந்தை எனக் கூறிய போது தழுதழுத்து விட்டார்.

குறியீடு

“இரண்டு எலும்பு வகைகள் இருக்கின்றன” லிடியா. “ஒன்று மனிதன். பதின்ம வயது பையனாக இருக்கலாம் என்று கணிக்கிறேன். மற்றது குதிரை.” மித்ரன் குழியில் பார்த்தார். மனித உருவம் பக்கவாட்டில் முட்டி மடக்கி ஆங்கில “என்” போல் இருந்தது. பக்கத்தில் பெரிய உருவமாக இன்னொரு எலும்பு தொகுப்பு.

மூர்க்கரோடு இணங்கேல்

அவ இப்ப இல்ல.. எங்கள விட்டு போய்ட்டா.அதிர்ந்து பார்த்தாள்.இன்னையோட நாற்பத்தியெட்டு நாட்கள். டாக்டராகணும் டாக்டராகணும்னு சொல்லிட்டே இருப்பா. ஆனா அவளால ரெண்டு தடவையும் பாஸ் பண்ணமுடில.  அந்தப் பயத்துலேயே இந்த எக்ஸாமுக்கு முன்னாலேயே போய்ட்டா.

அதிரியன் நினைவுகள் – 39

This entry is part 38 of 48 in the series அதிரியன் நினைவுகள்

எனது மனைவி பாலட்டைனில் உள்ள அவளுடைய  இல்லத்தில் இறந்திருந்தாள்; தீபுரைக்காட்டிலும் அவள் விருப்பம் தொடர்ந்து பாலட்டைனாக இருந்தது;  அவளுக்கு முக்கியமென நினைத்த ஸ்பெய்ன் நண்பர்கள், உறவினர்கள் என்கிற சிறு சுற்றத்தோடு அந்நகரில் வசித்து வந்தாள். வார்த்தைகளில் கவனம், மரியாதை,  புரிந்துகொள்ள எடுக்கும் பலவீனமான முயற்சிகள் அத்தனையும் படிப்படியாக விலகிக்கொள்ள  எங்கள் உறவில் பகையும், கோபமும், மனக்கசப்பும் தலைகாட்டின; அவளும் தன் பங்கிற்கு கடும் வெறுப்பைப் பிரயோகித்தாள்.

நான் ஆணையிட்டால்…

This entry is part 1 of 3 in the series நான் ஆணையிட்டால்

‘கோகோ’ படம் பத்து வயது குழந்தைகளின் ரசனைக்கு அப்பாற்பட்டது. அதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியும் ஆழ்துயரமும் அடையலாம் என்பதால் வகுப்பில் அதைக் காட்டுவது எனக்குச் சரியாகப் படவில்லை. என் அறிவுரைக்கு எதிராக நீ தீர்மானித்தால் ஸ்டெல்லா ‘கோகோ’ படம் பார்க்க அனுமதி மறுக்கிறேன். 

 மிளகு அத்தியாயம் எழுபத்து நான்கு

ஜெருஸுப்பா மாநில அரசு வைத்தியர் பைத்தியநாத் ஜெருஸுப்பா அருகே அமைந்த உள்ளால் பிரதேசத்தின் மகாராணி அப்பக்கா, பட்கல் அரசர், பில்கி மாநில அரசர் திம்மராஜு, பர்கூர் ராஜா, அங்கோலா ராஜமாதா, பைந்தூர் முக்ய பிரதானி இப்படி ராஜ வம்ச   அரசியல் பிரபலங்களுக்கு எல்லாம் ஆஸ்தான வைத்தியர்.  உத்தர கன்னட பிரதேசத்தின் மருத்துவர்களில் அதிமுக்கியமானவராகக் குறிப்பிடப்படுகிறவர் அவர்.

குமார சம்பவம் மஹா காவ்யம் – 6

மனதால் எண்ணிக் கூட பார்க்க முடியாத எதிர் பாராத அனுபவம். மேகமே இன்றி திடுமென மழை பெய்தால் வரும் சந்தோஷம் இவைகளை இந்த இடத்திற்கு வந்த ரிஷிகள் அனுபவித்தனர்.  அதே போல இமவானும்  உங்கள் வரவும், தரிசனமும் எங்களுக்கு பூத்த உடனேயே மரங்களில் பழங்கள் வந்தது போன்ற அதிசயமான சற்றும் எதிர்பாராத அனுபவம் என்றார். 

மலை தெய்வம்

This entry is part 13 of 19 in the series கவிதாயினி

காதல் கொண்டப் பின் தலைவனை பிரிந்திருக்கும் தலைவி பசலை உற்று உடல் அழகு குறைய மெலிகிறாள். காத்திருப்பு என்பது  காலத்தை நீளவும் குறுகவும் செய்யும் மாயம் கொண்டது தானே.  மகளின் உடல் நலிவை கண்ட கண்ட அன்னை வயதில் மூத்த பெண்களிடம் தன் கவலையை சொல்கிறாள். அவர்கள் வெறியாட்டு நடத்துமாறு கூறுகிறார்கள்.

மைக்குழற் செறிவன்ன காதல்

மே மாதங்களில் ஹொதொதொகிசு என்றொரு குயிலினம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு வலசை வரும். மே மாதம் என்பது ஜப்பானில் வசந்தகாலம் முடிந்து கோடை தொடங்குவதற்குச் சற்று முன்னர் என்பதால் இக்குயிலின் முதல் கூவல் கோடையின் வரவை அறிவிப்பதற்கானது என்று ஜப்பானியர்கள் காத்திருப்பார்கள். இப்படித்தான் இப்பாடலாசிரியரும் அவ்வாண்டின் முதல் கூவலைக் கேட்டுக் குயிலைக் காண ஆவலோடு ஓடிவந்து பார்த்திருக்கிறார்.

ஊடக வெளிச்சம்

அட்சய திருதியை தங்கம் விற்பனை
25,000 கிலோ அறிவீரா?
இன்னும் இன்னும் இதுபோல் செய்திகள்
தன்மானத் தமிழன் அறிவு பெருக்கும்
ஆற்றல் வளர்க்கும் ஆன்ம ஒளிதரும்

நெரிசல்

ஒரு நொடிக்குள்
யுகத்தை அடைத்து வைத்து-
ஒன்றுமில்லையில்
முடிவிலியை
அடைத்து வைத்து-
புறப்படும் புள்ளியில்
இலக்கினை
அடைத்து வைத்து-
ஒரே
நெரிசல்!

குமரேசன் கிருஷ்ணன் கவிதைகள்

வாடாதே கொடியே
வாடாதேயெனத்
தினமுரைத்தேன்
சில நாட்களில்
வீட்டிற்கு
எங்கள் பாப்பா வந்தாள்
அவள் அருகில் சென்று
என் விரல் கொடுத்தேன்

அருண் பாண்டியன் கவிதைகள்

முந்தி பிறந்தவள்
முதுநூல் தரித்தவள்
முள் மரத்தில் கூர் பிடுங்கி
மூக்கு குத்திக் கொண்டவள்
காய்ந்த களிமண் வெடிப்புகளை அள்ளி
முகத்தில் பூசிய கரிசல் நிலத்தின் சொந்தக்காரி
கற்களால் பாதம் தைத்து
பூண்டுச் செடிகளால்
பாவாடை புனைந்தவள்

கலியபெருமாள் கலித்தேவன் கவிதைகள்

அலைக்கழிக்கப்பட்டவனின் துயரம்
மருந்தடைக்கப்பட்ட வெடிகுண்டென
கையில்.
வீசி எறியுமுன்னே அதியற்புத புன்னகையோடு மனக் காட்சி
இன்னாரு வாய்ப்பு

அரா கவிதைகள் 

வலப்பக்க தோள்பட்டை மச்சம்
இடப்பக்க தோள்பட்டை மச்சத்தோடு மடங்கி
உறவாடும் முன்பே
சதையின் புள்ளிகள் பிய்த்தெறியப்பட்டன
தரைத்தளத்திற்கும் கீழிறங்கி
அடக்கமாகச் செல்லும் பெட்டி
தன் விளக்குகளையெல்லாம்
வண்ணம் பிடுங்கி ஆட்டத்துடன் ஒளிர்கிறது

வேணு வேட்ராயன் கவிதை

உயிர்களில் உன்னதம்
மலர் என்றேன்.
உனைநான்
சொல்லாமல் நீங்கினேன்.