அலுவலகத்துக்குள் இருக்கும் ஐம்பது கணிணிகளை இணையத்திலிருந்து மறைத்து ஒரே கணிணி போல ப்ராக்ஸி கொடுப்பது. இப்படிச்செய்வதால் இணையத்திலிருந்து தபால் பொட்டலங்கள் வந்து சேர ஒரு அலுவலகத்துக்கு ஒரு இணைய முகவரி இருந்தால் போதும். ஒரு வீட்டில் பலர் வசித்தாலும், வீட்டுக்கு என்று ஒரே முகவரியை உபயோகித்துக்கொண்டு வரும் கடிதங்களை பெயரை பார்த்து அவரவர் எடுத்துக்கொள்வது போல, அலுவலகத்துக்குள் இருக்கும் எல்லா கணிணிகளையும் இந்தபெட்டி அறிந்துகொண்டு வெளியுலகத்துடன் தான் மட்டும் பேசி, வந்து சேரும் பொட்டலங்களை சரியான கணிணிக்கு அனுப்பி விடுகிறது. இது ஒரு முக்கியமான வேலை. இப்படிச்செய்வதால்தான் IPv4 முகவரிகள் தீர்ந்து போய் முழிக்காமல் இன்னும் சமாளித்துக்கொண்டு இருக்கிறோம்.
Author: சுந்தர் வேதாந்தம்
தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி – 3
மூன்று சேவைகளுக்கான இந்த குணாதிசயங்களை மேலும் போட்டு குழப்பிவிட பல்வேறு புதிய சேவைகளும் தேவைகளும் தினந்தோறும் வந்து கொண்டு இருக்கின்றன. உதாரணமாக நீங்கள் உங்கள் கணிணியில் யூட்யூப் தளத்தில் இருந்து ராஜராஜசோழன் படம் பார்க்க ஆரம்பித்தால், தொலைக்காட்சி சேவைக்கான தேவைககள் உங்கள் கணிணிக்கு பொருந்தும். கணிணியிலிருந்து ஸ்கைப் வழியாக ஊரில் இருக்கும் பாட்டியுடன் பேச ஆரம்பித்தால் தொலைபேசி சேவைக்கான தேவைகள் கணிணிக்கு பொருந்தும். மாறாக எக்ஸ்பாக்ஸ், நிண்டெண்டோ சாதனங்களை உபயோகித்து டிவி மற்றும் இணையம் வழியாக பூமிக்கு அந்தப்பக்கம் இருக்கும் பங்காளியுடன் ஊடாடும் வீடியோ கேம் விளையாடினீர்களானால், தொலைபேசியின் “என் பொட்டலங்கள் எங்கும் நிற்கக்கூடாது” என்ற அவசரம் தொலைக்காட்சிக்கு வந்து விடுகிறது!
அமெரிக்கப் பஞ்சாயத்தில் நான்
சில நாட்களுக்கு முன்பு ஒரு சிவில் வழக்கில் சான்றாயராக (Juror) பணியாற்ற மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. கொலை போன்ற கடுமையான குற்றம் சுமத்தப்பட்ட கிரிமினல் குற்றவாளிகளுக்கு தங்களைப்போன்ற குடிமக்களால் உருவாக்கப்பட்ட ஒரு சான்றாயர் குழு (Jury) முன்பு தாங்கள் நிரபராதி என்று வாதிடும் உரிமை பல நாடுகளில் இன்றும் வழங்கப்பட்டாலும், அந்த உரிமை எந்த மாதிரி குற்றங்களுக்கு பொருந்தும், ஜூரி வழங்கும் தீர்ப்பின் முடிவு எவ்வளவு இறுதியானது என்பது போன்ற விஷயங்களில் நாட்டுக்கு நாடு எக்கச்சக்க வேறுபாடுகள் உண்டு.
தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி – 2
கணிணிகள் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும் பொழுது தகவல் பரிவர்தனை சின்னச்சின்ன தகவல் பொட்டலங்களை (Packets) பரிமாறிக்கொள்வதன் மூலமே நிகழ்கிறது. இப்படி பரிமாறிக்கொள்ளப்படும் ஒவ்வொரு பொட்டலத்திலும் இருக்கும் தகவல் மிகவும் குறைவானதுதான். ஒரு பொட்டலத்தில் சாதாரணமாக ஒரு ஆயிரம் எழுத்துகள்தான் இருக்கும். 64 எழுத்துகள் மட்டுமே கொள்ளும் மிகச்சிறிய பொட்டலங்களில் இருந்து 64,000 எழுத்துகள் வரை கொள்ளும் ஜம்போ பொட்டலங்கள் வரை இணையத்தில் உலவுவது உண்டு என்றாலும், முக்கால்வாசி பொட்டலங்கள் ஆயிரம், ஆயிரத்து ஐநூறு எழுத்துகள் கொள்ளும் சைஸில்தான் இருக்கின்றன.
தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி
தொடர்பு செயலிகள் (Communication Processors) மற்றும் திசைவி (Router) சாதனங்களின் வளர்ச்சி என்பது ஒரு விரிவுரை வழங்கவோ அல்லது ஒரு வெண்பலகை விவாதம் நடத்தவோ ஏற்ற சுவையான தலைப்பு. அதற்கு பதிலாக ஒரு சொல்வனம் கட்டுரை தொடர் வடிவில் அதனை இங்கே அலசிப்பார்ப்போம். பக்கத்து படத்திலிருக்கும் ஒரு வயது கூட ஆகாத புத்தம் புதிய தொடர்பு செயலியைப்பற்றி எழுதுவதற்கு முன்னேற்பாடாக அதன் கொள்ளு, எள்ளு தாத்தா பாட்டிகளை எல்லாம் தாண்டிப்போய் ஒரு இருபத்தி ஐந்து தலைமுறைகளுக்கு முன்னால் வந்த சிலிக்கன் சில்லுகளைப்பற்றி முதலில் ஒரு மலரும் நினைவுகள் நடத்த வேண்டும்.
ஆயிரம் வருடங்கள் வாழ்வது எப்படி? – 2
தொடர்ந்த சில பல நாட்களில் இந்த உயிரணுக்கள் மற்ற மாதிரிகளில் இருந்து மிகவும் வேறுபட்டவை என்று ஆய்வகத்திலிருந்த அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது. ஏனெனில் ஹென்றியேட்டாவின் வயிற்றில் எந்த மருந்து மாத்திரை கதிர்வீச்சு சிகிச்சைகளுக்கும் பணிந்து விடாமல் ஒரு கால்பந்து அளவுக்கு வளர்ந்த அந்த கொடிய புற்றுநோய் உயிரணுக்கள் அதே அசுரவேகத்துடன் ஆய்வகத்திலும் வளர ஆரம்பித்தன. அது மட்டுமில்லை. சாதாரணமாக நன்கு வளருவதாக கருத்தப்படும் உயிரணுக்கள் கூட இரு பரிமாணங்களில் மட்டும்தான் வளரும். அதாவது ஒரு தட்டிலோ குடுவையிலோ அவை வளரும்போது கிடைமட்டமாக ஒரு அடுக்கு பாத்திரத்தின் சுற்றளவு வரை வளர்ந்துவிட்டு போதும் என்று நிறுத்திக்கொண்டுவிடும். ஹென்றியேட்டாவின் உயிரணுக்களோ அடுக்கடுக்காக மூன்று பரிமாணங்களிலும், ஊட்டச்சத்து கிடைக்கும்வரை, வைத்த பாத்திரங்களை பொங்கல்பானைகளாக கருதி வளர்ந்து பொங்கி வழிந்து கொண்டே இருந்தன. உயிரியல் ஆய்வகங்களின் வழக்கப்படி இந்த உயிரணு வரிசைக்கு கொடையாளரின் பெயரின் முதலெழுத்துக்களை சேர்த்து ஹீலா செல் வரிசை என்று பெயர் வைக்கப்பட்டது.
ஆயிரம் வருடங்கள் வாழ்வது எப்படி?
சொல்வனம் நூறாவது இதழ் வெளிவரும் இந்த வேளையில், அடுத்து ஆயிரமாவது இதழ் வரும் நேரம் வெகுதூரத்தில் இல்லை என்று யோசித்தபோது மனிதர்கள் நிகழ்காலத்து நூறு வருட வாழ்நாள் எல்லையை தாண்டி ஆயிரம் வருடங்கள் வாழமுடியுமா என்பது பற்றி எழுதத்தோன்றியது.
அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை – 2
ரம்ஸ்ப்ரிங்க (Rumspringa) என்பது ஒரு ஜெர்மன் சொல். அதை தோராயமாக ஊர்சுற்றல் என்று மொழிபெயர்க்கலாம். ஒரு பதினைந்து, பதினாறு வயதை எட்டிப்பிடித்த ஆமிஷ் இளைஞர்களும் இளம் பெண்களும் இந்த பருவத்தை அடைகிறார்கள். அடுத்த 2,3 வருடங்களில் அவர்கள் எப்படி நடந்துகொள்ளுகிறார்கள் என்பதை ஆமிஷ் சமூகம் கண்டுகொள்ளுவதில்லை. எனவே இந்த கால கட்டத்தில் விதம் விதமான சிகை அலங்காரமோ, வகை வகையான துணிகள் அணிவதோ , சினிமா பார்ப்பதோ , தினசரி /வாராந்திர குடும்ப பிரார்த்தனைகளில் பங்குகொள்ளாமல் ஊர் சுற்றுவதோ, பயணம் செய்வதோ ஆமிஷ் அல்லாத (English) நண்பர்களுடன் நாட்கணக்கில் சுற்றுவதோ, இங்கிலீஷ் ஆண்/பெண்ணை டேட் செய்வதோ எல்லாம் அனுமதிக்கப்படுகிறது.
அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை
அமெரிக்கா என்றால் பொதுவாக எல்லோருக்கும் நினைவுக்கு வருவது நியூயார்க்கும் லாஸ் ஏஞ்செலேசும்தான். அது போன்ற நகரங்களில் இருக்கும் அடுக்கு மாடி கட்டிடங்களும், மிகவும் விலை உயர்ந்த கார்களும், மால்களும் விமானங்களும் உலக பிரசித்தமானவை. அந்த இரு கரைகளுக்கு நடுவே பிரசித்தமில்லாத ஆனால் ஸ்வாரஸ்யமான பல விஷயங்கள் அமெரிக்காவில் உண்டு. அவற்றில் ஒன்று இந்தகட்டுரையில் நாம் சந்திக்கும் ஆமிஷ் குடியிருப்புகளும் அதில் வாழும் மக்களும்…
