ரிச்சர்ட் தேலரின் Misbehaving: The Making of Behavioral Economics – புத்தக விமர்சனம்

மனித மனம் அங்கே ஒரு கணக்கு போடுகிறது. 1200 ரூபாய் சாமான் ஒன்று அறுநூறு ரூபாய்க்கு கிடைக்கும்போது பெரிய தொகை ஒன்று தள்ளுபடியாவதுபோல் தோன்றுகிறது. (பாதிக்குப் பாதி மிச்சம் செய்கிறோம்). ஆனால் 35000 ரூபாய் செலவு செய்யத் தயாராக இருக்கும்போது ஒப்பீட்டளவில் அதே அறுநூறு ரூபாய் நமக்கு அவ்வளவு பெரிய தள்ளுபடியாய் தெரிவதில்லை. என்றைக்கு இருந்தாலும் என்ன வாங்கினாலும் அறுநூறு ரூபாயின் மதிப்பு அறுநூறு ரூபாய்தானே? ஆனால் நடைமுறையில் மனித மனம் அப்படி யோசிப்பதில்லை.