எண்ணெய்யும் தண்ணீரும்: இயற்கைவள சாபம்

அமெரிக்காவில் எண்ணெய் /எரிவாயு எடுப்பது எல்லாம் முற்றிலும் தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தொழில். அரசாங்க நிறுவனங்கள் ஏதும் கிடையாது. எனவே, வேண்டும் என்கிறபோது வேலைக்கு ஆட்கள் எடுப்பதும், வேண்டாம் என்கிறபோது உடனே பணியாட்களின் சீட்டைக்கிழித்து வீட்டுக்கு அனுப்புவதும் ரொம்பவும் சகஜம். தனி மனிதர்களுக்கும், அவர்களை சார்ந்த குடும்பங்களுக்கும் இந்த  நிரந்தரமில்லா தன்மை பெரிய தலைவேதனைதான் என்றாலும், அவர்களுக்கு இது தெரிந்த/பழகிய விஷயம்தான். வேலை போய்விட்டது என்பதில் தனிமனித அவமானம் எதுவும் கிடையாது.