எண்ணெய்யும் தண்ணீரும்: வீணாகிறதா எரிவாயு?

கடலிலோ, கரையிலோ எண்ணெய் கிணறுகளில் இருந்து எண்ணெய்யோடு மேலே வரும் எரிவாயு பிரித்தெடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படுவது தெரிந்த விஷயம். வெறும் எரிவாயுவை மட்டுமே தரும் கிணறுகளும் நிறைய வெட்டப்படுவது உண்டு. எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் எரிவாயுவும் சேதம் ஏதுமில்லாமல் சேமிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டாலும், துரப்பண பணி சம்பந்தப்பட்ட பல்வேறு செயலாக்கங்களில் ஆங்காங்கே சில இடங்களில் குறைந்த அழுத்ததுடன் வந்து சேரும் எரிவாயுவை உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாமல் போய் விடும். இந்த வகையில் சேரும் வாயுக்கள்தான் பெரிய ஜ்வாலையுடன் அணையா விளக்கு போல் விடாமல் எரிந்து கொண்டிருக்கும் சுடர்பிழம்பு (Flare) வழியாக எரிக்கப்படுகின்றன. அழுத்தம் மிகவும் குறைந்த சில வாயு ரகங்கள் நேராக வளிமண்டலத்தில் (atmosphere) கலந்து விடும்படி விடுவிக்கப்படுவதும் (Venting) உண்டு. 24 மணிநேரமும் விடாமல் இப்படி ஏராளமாய் எரிவாயு வீணடிக்கப்படுவது போல் தோன்றுவதால், பல நண்பர்கள் இந்த வீணடிப்பைத் தடுத்து அந்த வாயுவையும் உருப்படியாகப் பயன் படுத்த முடியாதா என்று கேட்டிருக்கிறார்கள்.

எண்ணெய்யும் தண்ணீரும்: அவதாரங்கள்

கட்டுப்பாட்டு அறையில், மின்னணு பேனலின் பின்புறம் அந்த விளக்கை பார்த்தபோது, அதிகம் சிவந்து ஒளிர்ந்தது அந்த ரிலேயில் இருந்த விளக்கா அல்லது என் குழுவில் இருந்த ஒரிசா மாநிலத்துக்காரரான அமுல்யகுமார் மொஹந்தியின் முகமா என்பது ஒரு பட்டிமன்றம் நடத்தி முடிவெடுக்க வேண்டிய விஷயம். சந்தேகம் இல்லாமல் ப்ரொடக்க்ஷன் குழுதான் எங்களை மாட்டி வைக்கப்பார்க்கிறது என்பதற்கு எங்களிடம் ஆதாரம் இருப்பதாக தோன்றியதால், அடுத்த அரைமணியில் என் குழு இன்னும் கோபத்துடன் பேசாமல் மும்பையில் இருக்கும் தலைமை அலுவலகத்தையே கூப்பிட்டு…

எண்ணெய்யும் தண்ணீரும்: மனிதரில் இத்தனை நிறங்களா?

அந்த வாரம் படகு பயிற்சிக்கு பதில், என் தவறுக்கு தண்டனையாக சாப்பர் பாதுகாப்பு பற்றி நான் எல்லோருக்கும் ஒரு வகுப்பு எடுக்க வேண்டும் என்று FPS முடிவு செய்தார்! ஒரு தண்டனையாக கொடுக்கப்பட்டாலும், தலையை தொங்கப்போட்டுக்கொண்டு இருந்த எனக்கு என்னவோ அது ஒரு நல்ல சந்தர்ப்பமாக பட்டது. நான் ONGCயில் சேர்வதற்கு முன்னால் ஹெலிகாப்டர் வடிவமைப்பு ஆய்வகத்தில் ஒரு வருடம் பணி புரிந்தவன் என்பது FPS உட்பட பெரும்பாலும் யாருக்கும் தெரியாது!