சிதம்பர ரகசியம் – பூர்ணசந்திர தேஜஸ்வி

தேஜஸ்வியின் கத்தி மிகக் கூர்மையானது. சாதி சமயம் பார்க்காமல் அது அனைவரையும் கண்டதுண்டமாக்குகிறது. மூடத்தனம், பேராசை, மடமை போன்ற நற்குணங்கள் உலகளாவியவை. தன் சாதியின் வசதிகளையும் சமயப் பிரிவினைகளையும் பயன்படுத்திக் கொண்டு லம்பாடி பெண்களைச் சுகிக்க விரும்பும் வேசையாக இருக்கும் பிராமணன்; அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு சட்டத்துக்குப் புறம்பாக காட்டு மரங்களை வெட்டும் இசுலாமியனான சுலைமான் பேரி, பணித்திறமையற்ற கல்லூரி முதலாளி; ஒரு நாவலாசிரியனிடம் மர்மக்கதை எழுதச் சொல்லி கொலைக் குற்றவாளியைத் துப்பறியும் அபத்த உளவாளி அங்காடி; திருடும் லம்பாடிகள்; சாதி அமைப்பைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் தலித்துகள் – தேஜஸ்வி யாரையும் விட்டுவைப்பதில்லை.

அவர்கள் இருக்கிறார்கள்

அவர்கள் நம் தலைகளுக்கு மேலேயே அடர்ந்திருக்கிறார்கள். உறங்கும் போது மெல்ல கைதூக்கினால் தொட்டு விடலாம். ஆனால் அவர்கள் உறங்குவதேயில்லை. அவர்கள் இமைப்பதுமில்லை. அவர்களுடைய உடல்கள் ’உடல்கள்’ என்ற நம் வரையறைக்குள்ளேயே வருவதில்லை. மிக மெல்லிய நூல்களைப் பிரித்துச் சேர்த்தவர்கள் போல அல்லது ஒளிக்கம்பிகள் போல பிரகாசமாய் மென்மையாய், இதுவரை பூமிப்பிரதேசத்தின் மீது விழுந்து வாழ்ந்திறந்த அத்தனை கோடானுகோடி லட்சம் கோடி ஜீவன்களும் ஒருவரையொருவர் நெருக்கிக்கொண்டு அங்கே தான் நெளிந்து கொண்டிருக்கிறார்கள்.

வாசிப்பின் சாத்தியங்கள்

அக்னிப் பிரவேசம் கதையில் கதையின் முக்கியப் பகுதியே கங்கா வன்புணர்ச்சிக்கு ஆட்படவில்லை என்பதுதான். அவள் பணத்தின் பளபளப்பு, படாடோபக் காரின் வசீகரம், நுகர் புலனை மயக்கும் வாசனைத் திரவியம், சுவையைக் கலக்கும் சாக்லேட் என்று பல வகைகளில் தன் நிலையான கீழ் மத்திய நிலை மதிப்பீடுகளிலிருந்து அகற்றப்படுகிறாள். அவன் அவளை அடைய முயல்கையில் அவள் மதிமயங்கிய நிலையில் இருக்கிறாள் என்பது கதையில் பூடகமாகவும் சிறு குறிப்புகளிலும் வெளிப்படுகிறது.

விட்டல் ராவ் – ஓர் ஆளுமை மற்றும் இரு நூல்கள்

அதேபோல் ஹோசூரில் kenilworth castle என்ற ஒன்று இருந்தது மிக அழகாக இதில் பதிவாகியுள்ளது. இங்கிலாந்திலுள்ள அதே பெயருள்ள கோட்டைப் போலவே இங்கும் ஒரு வெள்ளைக்கார அதிகாரி தன காதலிக்காக கட்டினான் என்பதும் காதலில் ஏமாற்றம் அடைந்தபின் தன நாயை சுட்டுக் கொன்றுவிட்டு அந்தக் கோட்டையிலேயே தானும் தற்கொலை செய்து கொண்டான் என்பதும் அந்தக் கெனில்வொர்த் கோட்டைக்கு ஒரு காவியத் தன்மை தருகின்றன.

உன் கேள்விக்கென்ன பதில் – 2

பாம்புகளுக்கு எலி, தவளை, மூஞ்சூறு முதலானவை முக்கிய உணவுகள். பூனை வளர்க்கலாம், ஆனால் பூனைகளைப் பார்த்தால் பாம்புகள் ஓடிவிடும். ஏனெனில் பூனை எலிகளை மட்டுமல்ல, பாம்புகளையும் பிடிக்கும். எனவே அந்தக் காலத்தில் வயல்வெளிகளில் ஏராளமான பாம்புகள் இந்த வேலையைச் செய்து வந்தன. மனிதர்கள் பாம்பை அடித்துக் கொல்லாதவரை பாம்புகள் இந்த வேலையைச் செய்கின்றன.

பொறியியல் – கல்விக்கு அப்பால்

தமிழ்நாட்டில் மொத்தம் 575 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பொறியியல் முடித்து வெளியேறுகின்றனர். இதில் கடந்த சில வருடங்களாக வேலைத்தகுதி (employable) கொண்ட மாணவர்களின் சதவிகிதம் குறித்த புலம்பல்கள் விவாதமாய் பெருமளவில் நிகழ்த்தப்பட்டு வர்வருகின்றன. உண்மையில் அந்த விவாதம் கல்லூரி முதலாளிகளால் செய்யப்படும் விலைச்செய்திகள்தான் (Paid news). அவற்றை முழுமையாய் ஆராய்ந்தால் அவர்கள் முடிவில் நல்ல கல்லூரியில் சேர்ந்தால் நல்ல மதிப்பெண் எடுத்து (நன்றாகக் கற்று அல்ல), வளாக வேலைத்தேர்வில் வெற்றி பெற்று வேலை (குறிப்பாக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில்) வாங்கிவிடலாம் என்பதாய் இருக்கும்.

அன்றாட வாழ்வில் சிந்தனைச்சோதனைகள்

இனிவரும் காலங்களில் மேன்மேலும் செயற்கை அல்லது இயற்கை மாற்று உறுப்புக்களை நாம் பொறுத்திக்கொள்ளும்போது, எப்போது ஒரு மனிதர் தன் அடையாளத்தை இழக்கிறார்? நாம் அனைவரும் எப்படி சிந்திக்கிறோம், எந்த மாதிரி சட்டதிட்டங்களை ஆதரிக்கிறோம் என்பதெல்லாம் நமது பின்புலம், நாம் வாழும் சமூகத்தின் பின்னணிச்சூழல் என்ன என்பதைப்பொருத்ததே என்பது சரியா?

ஹாங்காங் கைமாறியபோது…

ஒரு கலவையான சூழ்நிலையில்தான் ஹாங்காங் 1997 ஜூலை முதல் தேதியன்று இங்கிலாந்திடமிருந்து சீனாவிற்கு கை மாறிற்று. வரலாற்றுப்படி, 19ம் நூற்றாண்டில் முதலாம் அபின் போருக்குப் பின், சீனா பல பிரதேசங்களை இங்கிலாந்திடம் இழந்தது. 1898 ம் ஆண்டு ஹாங்காங் தீவுகள் இங்கிலாந்திடம் 100 வருட குத்தகையில் அளிக்கப்பட்டு, ஹாங்காங் இங்கிலாந்தின் காலனிகளில் ஒன்றாகத் திகழ்ந்து வந்தது.1984ல் சீனாவும் இங்கிலாந்தும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்தக் குத்தகை முடியும் தருவாயில், 1997 ம் ஆண்டு ஜூலை முதல் தேதி இங்கிலாந்து ஹாங்காங்கை திருப்பித் தந்தது.

கொன் சாதோஷ் – ஜப்பானியச் சித்திரப் பட இயக்குநர்

கொன் சதோஷியின் தேர்வு அனிமேஷன் படங்கள்தாம். முழு நீளப் படங்களில் மற்ற சாதாரணப் படங்கள் போன்றவற்றை ஏன் நீங்கள் தயாரிக்கக் கூடாது, உங்கள் படத் தொகுப்பு முறை அசாதாரண நிபுணத்துவம் கொண்டதாக இருக்கிறதே என்று கேட்கப்பட்ட போது கொன் சொன்னது குறிப்பிடத்தக்கது. அனிமேஷன் படத் தொகுப்பில் தான் மிகச் சிக்கனமாக, ஆனால் வெகு துரிதமாகக் கதை சொல்ல முடிகிறது, இந்தத் துரிதம் உயிருள்ள நடிகர்களை வைத்து எடுக்கும் படங்களில் தனக்குக் கிட்டாது என்றிருக்கிறார்.

மகரந்தம்

ஒசாமா பின் லாடனைத் துரத்திக் கொண்டு டோரா போரா மலைக்கு சென்றவர் டால்டன் ஃப்யூரி. இப்பொழுது அரசாங்கத்தின் பாதுகாப்பு சறுக்கல்களை ஆய்ந்து கொண்டிருக்கிறார். மின் உற்பத்தி நிலையங்களுக்கு எவ்வாறு எல்லாம் தீங்கு விளையலாம் என்பதை வைத்து நாவல் எழுதி இருக்கிறார். அடிதடி வீடியோ விளையாட்டுகளை வடிவமைப்பதற்கு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். கூடவே, அமெரிக்காவில் இருக்கும் 61 அணு நிலையங்களில் நாற்பதில் அத்துமீறி, தடைசெய்யப்பட்ட பிரதேசங்களுக்குள் நுழைந்திருக்கிறார். கதிரியக்க நாசகாரச் செயலை முடிக்குமளவு பதினாறு தடவை முன்னேறியிருக்கிறார். கூடங்குளத்திற்கு இன்னும் வரவில்லையாம்.

வீடியோ விளையாட்டுகளும் கணினி இணையாளலும் – 2

இதில் முதன்மையான அணுகுமுறை, data parallel computing எனப்படுகிறது. அதாவது, பல செயலிகளும், ஒரே நேரத்தில், பல தரவுகளை (data) கையாளும். (ஒரே ஆணை கொண்டு) முறையாகும் இது. கணித கணக்கிடல்களுக்கு, இது மிகவும் தோதானது. குறிப்பாக, வரிசைகளைக் (arrays) கையாள, இது மிகவும் உபயோகமான விஷயம். Cray என்ற சூப்பர் கணினி இவற்றுக்கு பெயர் பெற்று விளங்கியது. பல கோடி டாலர்களுக்கு, இவற்றை பெரிய அரசாங்க ஆய்வுக்கூடங்கள், மற்றும் பெரிய பல்கலைக் கழகங்களால் மட்டுமே வாங்க முடிந்தது. இந்த அணுகுமுறையை, கணினி விஞ்ஞானிகள், SIMD – Single Instruction Multiple Data என்று அழைக்கிறார்கள்.

வண்ணம் பெற்ற வரலாறு

சார்லி சாப்ளின், 27 வயதில்! வருடம் : 1916 கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் மனிதர்களையும் நிகழ்வுகளையும் சரித்திரத்தின் மாற்றமற்ற சந்துகளில் உறைய வைத்துவிடுகின்றன. அவற்றிற்கு கொஞ்சம் வண்ணம் சேர்க்கும்போது, அவற்றிலிருக்கும் மர்மங்கள் மறைகின்றன. ஆனால், உயிரும் சதையுமாக அவை நம்மிடம் இன்னும் நெருக்கமாக பேசுகின்றன. கருப்பு-வெள்ளையிலிருந்து வண்ணப்படங்களாக மாற்றப்பட்ட அபாரமான “வண்ணம் பெற்ற வரலாறு”

மைன்கிராஃப்ட்: கற்பனைக்கலையா, கணினி விளையாட்டா?

மார்கஸ் பன்னிரெண்டாம் வகுப்பு முடியும் போது அவருடைய பள்ளி ஆலோசகரிடம் செல்கிறார். அவருடைய ஆலோசகரும், “கல்லூரியில் என்ன படிக்கப் போகிறாய்? என்னவாகப் போகிறாய்?” என வினவுகிறார். இவரோ, “எனக்கு கணினி விளையாட்டு ரொம்பப் பிடிக்கும்! எனவே அவற்றை எழுதப் போகிறேன்!” என சொல்கிறார். பள்ளி ஆச்சாரியரும் அவருக்குத் தெரிந்த நல்ல வார்த்தையெல்லாம் சொல்லி அந்த வழியில் சென்றால் உருப்பட மாட்டாய் என உபதேசித்து அனுப்பியிருக்கிறார்.

தாஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்

தி இடியட் நாவலில் தாஸ்தயெவ்ஸ்கி தன் கிறித்தவ லட்சியவாதக் கற்பிதங்கள் அனைத்தையும் அவற்றின் நேர்மறைப் பொருளில் மிஷ்கின் என்ற துயர உருவத்தைக் கொண்டு உருவகிக்க முயற்சிக்கிறார். தன் வாழ்வின் நிகழ்வுகள் பலவற்றை உள்ளடக்கி, அவர் எழுதியவற்றில் மிக அதிக அளவில் சுயசரிதத் தன்மை கொண்ட நாவல் இது,,,,,இவ்வுலகில் ஆதார நியதியின்படி ஆளுமையை எப்போதும் … அகங்காரம் இடைமறித்து” நின்று கொண்டிருப்பதால் “இயேசு சொன்னவாறு தன்னைப் போல் பிறரை நேசிப்பது” என்பது அசாத்தியமாகவே இருக்கிறது.