பிரான்சு: நிஜமும் நிழலும் – 2

வீட்டைவிட்டு வெளியில் வருகிறேன், கதவைப்பூட்டிவிட்டுத் திரும்புகிறேன். எதிரே நான் அறிந்திராத குடும்பமொன்று (கணவன் மனைவி, பிள்ளைகள்) பூங்கொத்து சகிதம் படியேறுகிறார்கள். அவர்களை இதற்கு முன்பாக பார்த்ததில்லை இருந்தும், குடும்பத் தலைவர் வாயிலிருந்து ‘Bonjour’ என்ர வார்த்தை. இதொரு அடிப்படைப் பண்பு . இப் பண்பை எல்லா இடங்களிலும் எல்லா தருணங்களிலும் காணலாம் நீங்கள் சாலையோரத்தில் நடந்து போகிறீர்கள், அனிச்சையாக எதிரே வருகிறநபரை பார்க்க நேரிடுகிறது:

முழுக்கு

”சரியா மதியம் மூணு மணிக்கு வண்டி ஒங்க வீட்டுக்கு வந்திடும். நாலுபேருக்கும் ஒங்க வீட்ல டிகிரி காப்பி. அதைக் குடிச்சிட்டு கெளம்பறோம். ஆறரை மணிக்கெல்லாம் சமயபுரம். அங்கே ஆத்தாளக் கும்பிடணும். அதுக்கப்புறம் சீரங்கம். அங்க பெருமாளச் சேவிக்கறோம். ராத்திரி அங்கியே தங்கிட்டு காலைல திண்டுக்கல் போறோம்”
“இல்ல கோவிந்து, அவங்க ரெண்டு பேரும்தான் வராங்களே?”
கோவிந்தன் சிரித்துக் கொண்டே “இருந்தாலும் ஒரு எழுத்தாளரு, அதுவும் இலக்கியவாதி கூட வந்தா…

சஞ்சாரம் – நாவல் விமர்சனம்

800 வருடங்களுக்கு முன் மாலிக்கஃபூர் படையெடுத்து வந்தபோது அரட்டானம் என்ற கரிசல் கிராமத்தில் கோவிலைக் கொள்ளையடிக்கப் படைகளுடன் நுழைகிறான். ஊரே காலிசெய்து ஓடிவிட நாயனக்காரர் லட்சய்யா மட்டும் கோவிலில் நாதஸ்வரத்தை மெய்மறந்து வாசித்தபடி இருக்கிறார். தன் வாழ்நாளில் கேட்டறியாத அந்த இசை மாலிக்கஃபூரை மூச்சடைக்க வைக்கிறது. அவர் வாசிப்பில் கல்லால் செய்யப்பட்ட யானைச்சிலையும் காதை அசைப்பதைப் பார்த்து பிரமிக்கிறான். அவரைத் தன் எஜமான் அலா-உத்-தின் கில்ஜிக்குப் பரிசாக அளிக்க டெல்லிக்கு அழைத்துச் சென்றுவிடுகிறான். … நாவலில் வாசிக்கையில் எது வரலாறு எது புனைவு என்று பிரித்தறிவது கடினம். அசோகமித்திரன் சொன்னதுபோல் புனைவுகள் அரை நிஜங்களைக் கொண்டது. அரை நிஜங்கள் நிஜங்களாகாது. ஆனால் அவைகளே புனைவுகளுக்கு உயிரூட்டுகின்றன.

பயனர் அனுபவம் – பயனர் ஆய்வுகள்

பயனர் எதிர்பார்ப்பதை சரியான வகையில் அவருக்கு அளிக்கவேண்டுமென்றால் அதற்கான பயனர் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் முடியாது. இந்த மாதிரி பயனர் ஆய்வுகளை மேற்கொள்ள பல வழிமுறைகள் இருக்கின்றன. எந்த வலைதள வடிவமைப்பிற்கு எந்த மாதிரியான பயனர் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை தெளிவாகச் சிந்தித்து பின்னர் அதனைப் பின்பற்றி அது நடத்தப்பட வேண்டும். சில பெரிய வியாபார நிறுவனங்கள் தங்களது வலைத்தள வடிவமைப்பை புதிதாக மாற்றும்போது இந்த மாதிரி பயனர் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும்கூட அந்த வலைத்தளமானது ஒரு சரியான பயனர் அனுபவத்தைத் தராமல் தோல்வியடைந்துவிடுவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

காரியாலயம்

வந்திறங்கிய முதல் நாள் வாட்டமாக ஒரு அறை தேடி அடைந்து கொள்ளவே சரியாகப் போய்விட்டது. மறுநாள் மதியமே முகூர்த்தம். மெட்ரோ வரைபடம் ஒன்றை வைத்துக் கொண்டு சுலபமாகக் காரியாலயத்தை அடைந்து விட்டேன். சரியாக என் உள்ளூர் நண்பரும் அவரின் குழுவோடு வந்து விட்டார். காரியாலய வாசலில் அகழி முதலைகளாகத் துப்பாக்கிகளோடு காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தள்ளிப் பக்கத்திலேயே கோவில் வாசலில் தேங்காய் பொறுக்கும் கூட்டம் போல ஒவ்வொரு செய்திச் சேனலும் ஆண்டெனா வைத்த வண்டி ஒன்றோடு வரிசையாக நின்று கொண்டிருந்தது. பல முக்கிய இலாகாக்கள் இயங்கும் காரியாலயம் என்றாலும் வெளியில் இருந்து பார்க்க ரொம்பவே சாதுவாக இருந்தது. என் நண்பர் ஒரு துப்பாக்கி ஏந்திய முதலையிடம் …

புறமறி அகம்: இன்ஸைட் அவுட் – ஹாலிவுட் படம்

மஹாபாரதத்தில் போர்தான் மையத்தில் இருக்கிறது என்றாலும் அதற்குப் பீடிகை பலமாக இருக்கும். அந்தம் அத்தனை ருசியாக இராது. ஆனால் செம்புராணம் என்பதால், துவக்கம், இடைச் செடுக்கு, முடிச்சவிழ்ந்ததும் சோகம், புதுத் துவக்கத்திற்கான சுட்டல் என்று அமைப்பு. கரு என்றால் யுத்தமா கரு? கதையில் process என்பது பேரியக்கத்தை கொடுக்கிறது, கொணர்கிறது, முடிவுக்கும் வழி சொல்கிறது. ஆனால் விதையும் வேறு, கனியும் வேறு, கனிக்குள் இருக்கும் வித்தும் வேறு. இழுபறியான போராட்டங்கள் வாழ்வே போன்ற சித்திரிப்பு. தீமைக்கும் ஒரு தர்க்கம் உண்டு; அது அ-தர்க்கம் அல்ல; ஆனால் விடாப்பிடிவாதத்தின் ஒரு கோணல், திருகல், திருகலை நேர் என்றே நினைக்க வைக்கும் பிரமை

எமர்ஜென்சியின் கருப்பு தினங்களை நினைவுகூறல்

“இந்திராகாந்தி செய்த ஒப்பந்தத்தினால் ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது வாதத்துக்காக அதை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், அந்த 11 கோடியை இந்திரா தன் வீட்டுக்கா எடுத்துச் சென்று விட்டார்? தற்போதைய அரசாங்கம் எடுத்த ஒரு முடிவினால் (மதுவிலக்கு) அரசாங்கத்துக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதே, அதற்காக தற்போதைய பிரதமரைக் குற்றவாளி என்று கூறலாமா?” இந்திரா காந்தி சார்பில் ஆஜரான பிராங்க் அந்தோணி இவ்வாறு கேட்டார்.

நூல் அறிமுகம் மற்றும் நாஞ்சில் நாடன் அவர்களுக்குப் பாராட்டு விழா.

இடம்: சிருஷ்டி மஹால் கங்கா யமுனா திரையரங்கு எதிரில், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் பில்டிங் டாடாபாத் 8வது வீதி கோவை – 641 012. நாள்: 18.07.2015 சனிக்கிழமை காலை 9:30 மணி

தமிழ் இசை மரபு – பகுதி 2

சரித்திரத்தின் ஒரு சுருக்கமான, வேகப் பார்வையில், தொல்காப்பியர் காலத்திலிருந்து ஒரு தொடர்ந்த பிரவாஹத்தை நாம் பார்க்கிறோம். தொல்காப்பியம், ‘ஆற்றுப்படை” என்ற இலக்கிய வகையின் குணங்களைத் தொகுத்துக் கூறுகிறதென்றால் இந்த பிரவாஹம் கிருஸ்துவுக்கு எத்தனை நூற்றாண்டுகள் முற்பட்டது என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும். தொல்காப்பியத்திலிருந்து 12 – ம் நூற்றாண்டின் பக்தி சகாப்தத்தின் முடிவு வரை, இடையில் அது கடந்த பக்தி சகாப்த சிலப்பதிகாரக்காலத்தில் இசையும் கவிதையும் ஒருங்கிணைந்தன: செவ்வியல் இசை மற்றும் கவிதையின் இணைவு, செவ்வியல் கலை மற்றும் நாட்டார் கலையின் இணைவு, இவற்றுடன் பொதுமக்களிடம் கலை அமிழ்ந்தது. 12 – ம் நூற்றாண்டு வரையேனும், 1500 ஆண்டுகள் அறுபடாமல் நீடித்த பாரம்பரியம் இது. சரித்திரத்தின் துவக்கத்திலிருந்து நூற்றாண்டுகளாய், இசையுடன் இணைந்த சாகித்யம், பொதுமக்களின் தளத்தில் அதன் மரபைத் தியாகம் செய்யாமல், தொடர்ந்திருப்பது நாம் அறிந்தவரையில் எங்குமே இணையில்லாத தமிழ்மண்ணுக்கே உரிய அதிசயமான நிகழ்வு.

மௌனத் திரைப்படயியலின் வீழ்ச்சியின்பின் மாற்றுப் படங்களின் பிரக்ஞையின்மை

பெர்க்மென், ஃபெலினி, ப்ரெஸ்ஸன், தார்க்கோவ்ஸ்கி முதல் இன்று வரையிலான அந்த பட்டியலிலுள்ள பெயர்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். கலைப் படங்கள் உருவான பிறகு சினிமா யதார்த்த வெளியை நம்பி இறங்கிய நேரத்தில் ஆங்காங்கு ஆவணப்பட திட்டங்களும் தோன்றி செயல்பட ஆரம்பித்தன. இதுதான் ஆவணப் படம் என்று தனித்து நிற்கும் அளவுக்கு அதன் பங்குகள் குறை சொல்ல முடியாதவை. அவை யதார்த்த சூழலை மட்டுமே சார்ந்தவை. அதன் பயன்பாடுகள் கருத்துச் செறிவை வெளிப்படுத்துபவையாகவும், அதிகம் சமூக தளத்துக்குள் அறியப்படாதவையாகவுமாக இருந்து வரும்.

எண்ணெய்யும் தண்ணீரும்: பன்னாட்டு பிரச்சினைகள்

மிர் என்ற சொல்லுக்கு ரஷ்ய மொழியில் அமைதி என்று அர்த்தம். மிர்-1 மற்றும் மிர்-2 என்று பெயரிடப்பட்ட அந்த இரு பெரிய ரஷ்ய நீர்மூழ்கி வாகனங்கள் சில வருடங்களுக்கு முன் சேர்ந்து செய்த குறும்பு நிச்சயம் உலக அமைதிக்காக இல்லை! அவை இயங்குவதற்கு முன்னேற்படாக, முதலில் அணுசக்தி ஆற்றலில் இயங்கி ஆர்டிக் கடலில் உறைபனியை ஒரு பெரிய சதுர வடிவில், கடல் நீர் தெரியும் அளவுக்கு வெட்டித்தள்ளியது. 2007 ஆகஸ்ட் 2ஆம் தேதி, ஒரு வியாழக்கிழமை. அது ஒரு நல்ல நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மிர் நீர்மூழ்கிகள் ஒன்றன் பின் ஒன்றாக கடலுக்குள் இறக்கி விடப்பட்டன. சுமார் நாலேகால் கிலோமீட்டர் ஆழத்தை சென்றடைந்து, ஒரு வழியாக தரை தட்டியபின், வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ரோபாட் கரங்களின் உதவியுடன் ஒரு மீட்டர் உயரமுள்ள டைட்டேனியத்தால் செய்யப்பட்ட துருப்பிடிக்காத ரஷ்ய கொடியை அந்த நீர் மூழ்கிகள் கடலின் தரையில் நட்டன!

மகரந்தம்

சென்ஸஸ் ஆஃப் சினிமா ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியானாலும் ஃபிரெஞ்சுப் படங்களைப் பற்றிக் கூட பேசும் பத்திரிகை. அவர்களின் எழுபத்தைந்தாவது இதழை தடபுடலாக வெளியிட்டிருக்கிறார்கள். பாகுபலி எடுத்த ராஜமௌலி போல் ஹாலிவுட் மைக்கேல் பே குறித்த அலசல்களையும் போடுகிறார்கள். கேன்ஸ் திரைப்பட விழா குறித்தும் எழுதுகிறார்கள். புத்தக விமர்சனங்கள், நேர்காணல்கள், கருப்பு-வெள்ளை படங்கள், மாற்று சினிமா என எதையும் விட்டுவைக்காமல் வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஏழைகள் – வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்

மர உலோக வேலிகள்:
கம்பளிச் சட்டையும் மிருதுவான தொப்பியும்
அணிந்திருக்கும் கிழவனொருவன்

சார்லியோடு சென்ற பயணங்கள் – அமெரிக்காவைத் தேடி

இருக்கிற இடத்தில் நிலை கொள்ளாது போவது என்ற தொற்று நோய் ஒரு தறுதலை மனிதனைப் பீடிக்கத் துவங்கினால், இங்கே இருந்து தொலைந்து போகும் சாலை அகலமாகவும், நேரானதாகவும், இனிமையானதாகவும் தெரியத் துவங்கினால், அந்தப் பலிதானி முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், போவதற்கு ஒரு நல்ல, போதுமான காரணத்தைக் கண்டு பிடிப்பதைத்தான். செயல்திறன் உள்ள ஒரு ஓடுகாலிக்கு இது ஒன்றும் கஷ்டமானதே இல்லை. பயணம் திட்டமிடப்பட்டு, தேவையான உபகரணங்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டு, எல்லாம் செயல்படத்துவங்கிய பிறகு ஒரு புது விஷயம் நுழைகிறது, அது ஆளத் துவங்கி விடுகிறது. ஒரு யாத்திரை, சுற்றுலா…

எம்எஸ்வி – ஓர் அஞ்சலி

எழுபதுகளில் நான் மேலே சொன்ன கே பாலச்சந்தர் படங்களின் பாடல்களிலும் சரி, எம்ஜிஆர், சிவாஜி படப்பாடல்களிலும் சரி, எம்எஸ்வியின் இசையமைப்பில் செவ்வியல் தன்மை அதிகரித்து செமி-கிளாசிகல் என்று சொல்லக்கூடியப் பாடல்கள்தான் அதிகம் வந்தன. அபூர்வ ராகங்கள், மன்மத லீலை போன்ற படங்களின் பாடல்களும், எம்ஜிஆர் படங்களின், நீ என்னென்ன சொன்னாலும் கவிதை, இதுதான் முதல் ராத்திரி, என்ன சுகம் என்ன சுகம், கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் போன்ற பல பாடல்களும் செமி கிளாசிகல் என்ற வகையைச் சேர்ந்தவை. சிவாஜி படங்களிலும், அன்பு நடமாடும் கலைக் கூடமே, அம்மானை அழகு மிகு கண்மானை, செந்தமிழ்ப் பாடும் சந்தனக் காற்று, காதல் ராஜ்ஜியம்,ஆகாயப் பந்தலிலே போன்ற பல பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம்.
இந்தப் பாடல்கள் எல்லாம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு பெற்றாலும் நுட்பமாக விவாதிக்கப்பட்டு ரசிக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். இதற்கு நான் காணும் காரணம், அறுபதுகளில் தொடங்கி எழுபதுகளின் இறுதிவரை தமிழகத்தில் நிலவி வந்த கர்நாடக இசை மீதான ஒருவகை ஒவ்வாமையும் அலட்சியமும்தான். சற்றுத் துணிந்து சொல்வதானால், அறுபதுகளில் உச்சத்தை அடைந்த பார்ப்பன வெறுப்பின் ஒரு பகுதியாகவே கர்நாடக இசையும் ஒதுக்கி வைக்கப்பட்டது.

குளக்கரை

இந்த இதழில் பல குறிப்புகளை யூரோஸீன் என்கிற வலைத்தளத்திலிருந்து எடுத்திருக்கிறோம். பல யூரோப்பிய நாடுகளின் கருத்து வளம் நிறைந்த பத்திரிகைகளின் கூட்டுச் சேமிப்பாக இந்தத் தளம் இயங்குகிறது. வாடிக்கையாக இந்தியரும், தமிழரும் அனேகமாக இங்கிலிஷ் பேசும் நாடுகளின் பத்திரிகைகளையோ, அல்லது அதிக பட்சமாக ஜெர்மன், ஃப்ரெஞ்சு, சில நேரம் ரஷ்யப் பத்திரிகைகளை மட்டும் பார்த்துப் பழகி இருப்போம்.

எமர்ஜென்சி நாட்குறிப்புகள் – பி.என்.டாண்டன்

பிஷன் நாராயண் டாண்டன் எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி அலுவலகத்தில் துணை செயலாளராகப் பணியாற்றியவர். அக்காலகட்டத்தில் பிரதமரின் செயலாளர் குழு (Prime Minister’s Secretariat (PMS)) எனும் அமைப்பாக இது இயங்கி வந்தது. அக்குழுவின் துணை செயலாளராகக் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அரசியல் துறையில் ஈடுபட்டு வந்தார் டாண்டன். ஆகஸ்ட் 16, 1975 முதல் ஜூலை 24, 1976 வரை கிட்டத்தட்ட அன்றாடம் நாட்குறிப்பு எழுதி வந்திருக்கிறார்.

பசுமைக் கட்டிடங்கள்

பசுமைக் கட்டிடங்கள் நிறைய எழும்ப ஊக்கமளிக்கும் வகையில் LEED எனப்படும் ( Leadership in Energy and Environmental Design ) விருது இந்திய Indian Green Building Council அளிக்கிறது. இந்தியாவில் பல மாநில அரசுகளும் இப்படிப்பட்ட பசுமைக் கட்டிடங்களுக்கு நிறைய ஊக்கமளிக்கின்றன. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் மழை நீர் சேமிப்பு கட்டிடங்களில் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.