ஆட்சி எனப்படுவது –
மதம் இனம் காசு பரத்தமை
பாம்பின் விடமாய்ச் சீறும் தேறல்!
தொழில் எனக் கொள்வதோ –
சினிமா அரசியல் கனிமம் கடத்தல்
கஞ்சா அபின் ரசாயன போதைப் பொருள்கள் விற்பனை
மது உற்பத்தி கலப்படம் தரகு!
Tag: நாஞ்சில் நாடன்
கீடம்
நமது அவதானிப்பு, கீடம் எனும் சொல்லை மாணிக்கவாசகர் ஆண்டுள்ளார் என்பதில் நிலை கொள்கிறது. சேக்கிழார் அருளிய பெரியபுராணம் நூலில் 4286 பாடல்கள். அதாவது 17,144 அடிகள். அங்கு எங்கும் கீடம் இல்லை. கம்பன் கீடம் எனும் சொல்லைப் பயன்படுத்தியிருப்பானே எனும் வினா நமக்கு எழாமல் இராது. 10,368 பாடல்களில் இரு இடங்களில் கீடம் கண்ணில் பட்டது.
மூலமும் உரைகளும்
வள்ளுவர் கூற்றை முந்தைய இலக்கியங்களும் பிந்திய நூல்களும் முன்மொழிந்துள்ளன அல்லது பின்மொழிந்துள்ளன என்பது. இது நாலு சீட்டும் நானூறு கோடியும் கையடையாகப் பெற்றுக்கொண்டு கூட்டணியின் தலைமைக் கட்சி செய்யும் சிறுமைகளை இதர உறுப்புக் கட்சிகள் ஆதரிப்பதைப் போன்ற இழிதகைமை அல்ல.
பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்!
செத்ததற்குப் பின்னர் கடற்கரையில் ஐந்து ஏக்கர் நிலமும் சமாதியும் அழகிய மணிமண்டபமும் கேட்கவில்லை. பலான நடிகையுடன் ஓரிரவு படுத்து எழுந்துவர வேண்டவில்லை. பசிபிக் மகா சமுத்திரத்தில் இருநூறு ஏக்கர் பரப்புள்ள தீவும் ஆங்கோர் மாளிகையும் விசைப்படகும் கணிகையரும் சொந்த விமானமும் கேட்கவில்லை. சில லட்சம் கோடிகள் சொத்துக் கேட்கவில்லை. ஐந்து நட்சத்திர ஓட்டல் தரத்தில் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி விரும்பினார் இல்லை
பெட்டைப் புலம்பல்
ஆனால் உருகி இறைஞ்சி இரந்து நின்ற ஒரு மகாகவிக்கு, அவன் கேட்ட எதுவும் தரவில்லை பராசக்தி. அஃதோர் வரலாற்றுச் சோகம். குறைந்தபட்சம் மேலும் சில பத்தாண்டுகள் ஆயுள் தந்திருக்கலாம் பராசக்தி. துஷ்ட நிக்ரகம், இஷ்ட பரிபாலனம் என்பர் பண்டு. இன்று இஷ்ட நிக்ரகம், துஷ்ட பரிபாலனம் ஆகிப்போயிற்று
தீச்சொல் நிகண்டு
சொன்னாக் கேக்க மாட்டேங்கேரு பாட்டா? என்ன எழவுக்காக்கும் குத்தி இருந்து இந்த பேஸ்புக், கூகுள், வாட்ஸ்ஆப் எல்லாவற்றையும் விடாம நோண்டுகேரு? ஒரு நாளைக்கு ஆறேழு மணிக்கூர் இதே வேலையா? அந்த நேரத்திலே என்னலாம் எழுதலாம், வாசிக்கலாம்… போற காலம் வந்தாச்சு… பின்னே மூலக்கடுப்பு, உள்மூலம், வெளிமூலம், கந்தமூலம், கனகமூலம் வராம என்ன செய்யும்?
ஊடக வெளிச்சம்
அட்சய திருதியை தங்கம் விற்பனை
25,000 கிலோ அறிவீரா?
இன்னும் இன்னும் இதுபோல் செய்திகள்
தன்மானத் தமிழன் அறிவு பெருக்கும்
ஆற்றல் வளர்க்கும் ஆன்ம ஒளிதரும்
நாஞ்சில் நாடன் கவிதைகள்
பத்தொன்பதாவது பிரபஞ்ச மூத்தமொழிச் சம்மேளனம்
செவ்வாய்க் கோளில் நடத்தத் திட்டம்
அரசியல்வாதிகள் அவரடியார்கள்
தம்மின அறிஞர் துதிப் பேராசிரியர்
கூத்தாட்டு மன்றம் பிரசங்கியர்
பாதுகை சுமக்கும் பாவலர் பங்கேற்பர்
கலந்து கொண்டு கட்டுரை படிப்போர்
ஆய்வுச் சுருக்கம் அறுபத்தேழு சொற்களில்
அனுப்பி வைக்கவும்
ஓடும் தேர் நிலையும் நிற்கும்!
நினைத்தால் அந்தத் தட்டச்சு செய்து தரும் ஆப் வரட்டும் என்று அவன் நளி பேசுவான். வந்தாலும் வந்துவிடும். வாட்ஸ் ஆப்பில் எட்டுச் சொற்களில் செய்தி அனுப்ப தமிழில் தட்டச்சு செய்தான். ‘நீங்கள் செய்த இந்த உதவிக்கு உங்களுக்கு பெரும் புண்ணியம் கிடைக்கும்’ என்று செய்தி அனுப்புவது அவன் உத்தேசம். புண்ணியம் என்று தட்டச்சு செய்ய உத்தேசித்து, ‘புண்’ என அடித்தவுடன்
கள்ளம் கரவு திருட்டு மோசணம்
சாபம் போலச் சொல்வது நான்காம் சொலவடை. ‘பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்குக் களவிலே சாவு’ என்பது. ‘அரவம் ஆடேல்’ என்பது ஆத்திசூடி. ‘அரவம் ஆட்டேல்’ என்றும் பாட பேதம் உண்டு. நாகப்பாம்பைச் சீண்டிப் படம் எடுக்கத் தூண்டி விளையாட்டுக் காட்டிப் பிழைப்பவனுக்கு பாம்பினால்தான் சாவு என்பது ஒன்று. களவாடப் போகிறவனுக்கு நடுநிசி இருட்டில் தடுமாறிக் கை தவறி வீழ்ந்தோ, பிடிபட்டு மக்களிடம் தர்ம அடி வாங்கியோ, காவல் நிலையங்களில் சரியாகப் பங்கிடப்படாத காரணத்தால் மிதிபட்டோதான் சாவு என்பது இரண்டு.
பாழ் நிலப் படுவம்
தீவு கப்பல் விமானம் விசைப்படகு
சொகுசு வாகனம் வணிக வளாகம்
மருத்துவப் பொறியியல் கலைக் கல்லூரி
மருத்துவமனை வணிக வளாகம் சாராய ஆலை
மாளிகை நட்சத்திர விடுதி மலைத்தோட்டம்
கடலலைகள் கால் தழுவும் பங்களா
சினிமா கொட்டகை காடுகள் தோட்டம் துரவு
நன்றே செய்வாய், பிழை செய்வாய்!
“எல்லாமே ரெண்டு வரி, மூணுவரி கவிதைதான். இப்பம் எனக்கு ஒரு யோசனை பாத்துக்கிடுங்கோ. நம்ம ஓட்டல்லே டபுள் ரூம், சூட் எல்லாம் சேத்து எழுவத்திரண்டு ரூம் இருக்கு… எல்லாமே ஏசிதான். எல்லா ரூம்லேயும் நாலு செவுருலேயும் நம்ம கவிதைகளைப் பெரிய எழுத்திலே, ஓவியரைக் கொண்டு எழுதி பிரேம் போட்டு மாட்டுனா என்னாண்ணு
நாஞ்சில் நாடன் கவிதைகள்
பெண் மக்கள் பேறற்ற
அமைச்சரை நாடாளுமன்ற
சட்டமன்ற உறுப்பினரை
எண்ணி இரங்குவீர் எம்மனாரே
நாஞ்சில் நாடனின் சிறுகதை உலகம்
நாஞ்சில் நாடனின் புனைவுகளில் பெண்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருக்கிறேன். சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன் 2012ல் மும்பை தமிழ்ச் சங்கத்தில் நாஞ்சில் நாடனுக்கு நடந்த பாராட்டுவிழாவில் நாஞ்சில் நாடனின் படைப்புலகில் கண்ட பசித்தவனின் பயணத்தைப் பேசி இருக்கிறேன். கொரொனா காலத்தில் மும்பை தமிழ்க் கூடலில் மும்பை படைப்புலகம் என்ற தொடர் சொற்பொழிவில் நாஞ்சில் நாடன் புனைவுலகத்தையும் ஏற்கனவே நான் பேசி எழுதி பதிவு செய்திருக்கிறேன்.
அதிட்டம்
அதிர்ஷ்டம் எனும் சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள்கள் 1. காண இயலாதது 2. நல் வாய்ப்பு 3. நல்லூழ் 4 ஆகூழ் என்பன. அதிருஷ்ட போக்கியம் என்றால் மறுமை, வினை, துய்த்தல் என்பன பொருளாம். அதிருஷ்ட யத்தினம் என்றால் பயன் – முயற்சி, பயன் தரு முயற்சி. யத்தினம் எனும் சொல்லையே நாமின்று யத்தனம் என்கிறோம். பிரயத்தனம் எனும் சொல்லும் அறிவோம். அதிருஷ்டானுகூலம் என்றால் ஆகூழ், நற்காலப் பயன், அதிருஷ்டத்தால் கிடைக்கும் அனுகூலம் என்பன பொருள்.
அல்லல் என் செயும் அருவினை என் செயும்?
ஊடகத்தார் படும் இன்னல்
உரைக்க ஒண்ணாது
அல்லில்லை பகலில்லை அலுப்பொன்றில்லை
பெற்றோர் மனையாள் தம்மக்கள்
தறுகண் நினைப்பில்லை
அவனன்றி ஓரணுவும் அசையாது
என்பது போல் எவ்விடத்தும்
நீக்கமற நிறைந்திருக்கும் பணி
நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி
“கோவப்படாத அம்பலண்ணே! மயினி இருக்காளான்னுதான் பாத்தேன். இந்த நேரம் பாக்க வந்ததுக்கும் காரியம் உண்டு. இப்பம் நான் பேசப்பட்ட விசயம் ஒரு குருவி அறியப்பிடாது, கேட்டயா? நீ மட்டும் மனசோட வச்சுக்கிடணும்…” “அப்பிடி என்னடே அந்தரங்கம்? எங்கயாம் கூட்டத்திலே தற்கொலைப் படை தாக்குதல் நடத்த அச்சாரம் வாங்கீருக்கியா? நீ குண்டு கூட வைக்காண்டாம்… கூட்டத்திலே நிண்ணு குசு விட்டாப் போதும்… பத்துப் பேரு தலை சுத்தி விழுவான்… தேரை இழுத்துத் தெருவுலே விட்டிராதடே கொள்ளையிலே போவான்…”
காசில் கொற்றம்
நமது தேட்டம் காசு என்ற சொல்லில். ‘காசில்லாதவனுக்கு வராகன் பேச்சென்ன?’ என்றோர் பழஞ்சொல் இருப்பது தெரியும். எல்லாத் தமிழ்ச் சொல்லும் வராகன் மதிப்புடையது என்பதும் அறிவோம். ஆனால் இன்றைய தமிழர்களின் சொற் பயன்பாட்டு நிலை ‘காசுக் கூண்டு கரிக் கூண்டாய்ப் போச்சு’ என்றே கூறிவிடலாம். ஆனால் காசு எனும் சொல்லுக்கு சமூகத்தில் இன்றிருக்கும் மதிப்பு என்ன?
வானத்து அமரரே!
உலகின் முதன் மொழி எமது
பல்லாயிரம் ஆண்டு தொன்மையானது!
ஆலகாலம் உண்ட சிவன் அருளினான்
நாமகள் உவந்து நாவில் எழுதினாள்
எமக்கென்ன
பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி
மகிமைத் தேர்தல்!
ஆளும் ஆசை அற்றுப் போகுமோ?
நாட்டுப் பற்று
சினிமா சேவைக்கு எவரெலாம் வாங்கினர்
மாண்பமை பல்கலை மதிப்புறு முனைவர்?
பத்ம கலைமணி போர்த்தப் பெறாத
தாரகை உண்டா நம் தேயத்து?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
இப்படித்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய வரலாற்றுக் குறிப்புகள் இலக்கியங்கள் மூலமாகவும் இன்று சான்றுரைக்கின்றன. காழ்ப்பற்ற, வஞ்சமும் சூதுமற்ற, வெளிப்படையான, தமிழ்ப்புலவன் வழி நெடு வரலாற்றை, மரபை, புராணங்களை விதைத்துச் செல்கிறான். அவனது அனுபவமும், ஞானமும், தெளிவும், படைப்பு ஆற்றலும் புரிதலும் வியப்பேற்படுத்துகின்றன.
சித்திரையில் பிறக்கும் புத்தாண்டின் வரிசையில் அறுபதனுள், நந்தன என்பது இருபத்தி ஆறாவது. நந்தனன் என்றால் குமரன் என்று பொருள் தருகிறது சூடாமணி நிகண்டு.
நேர்பு
என்ன அற்புதமான அறம் சார்ந்த பொருள்கள் தருகிற சொல்லாக இருக்கிறது நேர்மை! செம்மை, உண்மை, நீதி, அறம், நுண்மை, திருத்தம், சமம், இசைவு, நன்னிலை… ஒன்பான் பொருள்களும் மேன்மையானவை. பாவநாசம் சிவன் எழுதிய கல்யாணி ராகப் பாடலில் ஒரு வரி ‘நீயே மீனாட்சி, காமாட்சி, நீலாயதாட்சி’ என்று வளரும். நேர்மை எனும் சொல்லை நினைக்கையில் சங்கரன் நம்பூதிரியின் குரலில் அந்த வரி காதில் நிறைக்கிறது. அச்சொல்மீது நமக்குக் கொதி ஏற்படுகிறது… அதேபோன்றே நேர்மையைத் தேடினாலும் நேர்மையில்லாதவர் என்போர் எவராயினும் அவர் அரக்கரே! அரக்கர் என்போர் கம்பராமாயணம் கூறும் இலங்கைக் குடிமக்கள் மட்டுமல்ல. உலகெங்கும் நிறைந்துள்ளனர். அடையாளம் கண்டாலும் நாம் காணாதவர் போல் நடிக்கிறோம். நேர்மை என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் என்று மாற்றி எழுதி விடலாம்.
எதிர்ப்பை
பேரகராதியிலும் வேறு சிலவற்றினுள்ளும் தேடியபோது என் பார்வையில் ‘எதிரும் புதிரும்’ எனும் சொற்றொடர் தட்டுப்படவில்லை. எதிர் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. புதிர் எனும் சொல்லுக்கும் அதுவேயாம். புதிர் என்றால் புதிது, புதிய கதிர், விடுகதை என்று பொருள் சொல்கிறார்கள். பிதிர் எனும் சொல்லின் திரிபாகவும் புதிர் கொள்ளப்பட்டுள்ளது.
ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக…
நல்ல காலம், கெட்ட காலம் என்று வீடுகளிலும் தெருக்களிலும் செவிமடுக்கின்ற காலமாக இருந்தது. ‘ஆம் காலத்தே அவையவை ஆகும், போம் காலத்தே பொருள் புகழ் போகும்’ என்ற கண்ணதாசனின் கவிதை வரி அறிமுகமாயிற்று வாலிப வயதில். ஆம்காலம் என்றால் ஆகும் காலம், போம் காலம் எனில் போகும் காலம்.
நாஞ்சில் நாடன் கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்
நாஞ்சில் நாடனின் இந்தக் கட்டுரைக்குள் ஒவ்வொரு பாட்டையும் சொல்வனம் இணையதளத்தார் இடைச் சொருகியே தந்திருக்கிறார்கள். இசை கேட்கக் கேட்க மயிர் சிலிர்க்கிறது. பத்தாததுக்கு கட்டுரையில் நாஞ்சில் நாடன் திரட்டித் தருகிற புலனனுபவம். அது ஒரு களவுச் சொப்பனம் போல ஆளை ஆழ்த்தும். கூடவே யாழ்பாணத்துச் சித்தர் யோகரின் பத்து கண்ணியில் வரும் பவனம், பருதி, பரவை ஆழி எல்லாமும் தாண்டி அதிலுள்ள ‘எடி’ என்கிற தொனியையும் விட்டுவிடாமல் ஒரு பிடி பிடித்து வைக்கிறார்…
ஓசை பெற்று உயர் பாற்கடல்
வயதேற ஏற, தெலுங்குக் கீர்த்தனைகள், சமஸ்கிருத, கன்னட, மலையாள இசைப் பாடல்கள், மராத்தி மொழியின் அபங், வங்காளத்தின் இரவீந்திர சங்கீதம், உருது மொழிக் கவாலி, கஸல் போன்றவற்றைக் கேட்டு இன்புற்றாலும் தமிழ்ப் பாடல்களைக் கேட்க நேர்கையில் மனமும் மெய்யும் பரவசம் கொள்கிறது. பெற்ற அம்மையை அம்மை எனச் சொல்லக் கூசுகிறவர்களின்பால் இரக்கமே ஏற்படுகிறது.
திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்!
காரைக்கால் அம்மையாரின் காலம் கி.பி. 4-ம் நூற்றாண்டு அல்லது 5-ம் நூற்றாண்டு என்கிறார்கள். திருஞான சம்பந்தருக்கும் மூத்தவர். அம்மையாரின் பதிக அமைப்பும், சொல்லாட்சிச் சிறப்பும் அவரது காலம் தொன்மையானது என்று உரைக்கும். திருவாலங்காட்டுப் பதிகத்தின் பதினோராவது பாடலில் – “காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவாரே!” என்பார். மூத்த திருப்பதிகத்தின் பதினோராவது பாடலில் – “காரைக்கால் பேய் தன் பாடல் பத்தும் பாடி ஆடப் பாவம் நாசமே!” என்பார்.
வயாகரா
வயான் எனில் வயவன் எனும் பறவை, அது காரிப்புள் என்றும் அழைக்கப்படும் என்று இயம்புகிறது பிங்கல நிகண்டு. காரிப்புள் என்றால் king crow என்கிறது பேரகராதி. வயானம் எனும் சொல்லுக்கு, வெறுமனே பறவை என்று மாத்திரம் பொருள் சொல்கிறது சூடாமணி நிகண்டு.
பிஞ்ஞகன்
இச்சொற்களை எழுதிவரும்போது எமக்கொன்று தெளிவாகிறது. மக்கள் நாவில் சில சந்தர்ப்பங்களில் ந, ஞ மயக்கம் உண்டு என்று. எவ்வாறாயினும் மக்கள் புழங்கும் ஒலிக்குறிப்புகள்தாமே சொல்லாக உருவெடுக்கிறது! எமக்கு அறிமுகமில்லாத சொற்கள் யாவும் வட்டார வழக்கென்றோ, மக்கள் கொச்சை என்றோ வரையறுக்கவோ, ஒதுக்கி நிறுத்தவோ இயலுமா?
வெங்காயக் கண்ணீர்
இன்று பாரத மணித் திருநாட்டின் பெருந்துன்பம் என்பது மரணம் ஏற்படுத்தும் டெங்கு முதலாய நோய்கள் அல்ல, ஓராண்டில் இரயில்வே லெவல் கிராசிங்குகளில் எண்ணூறு பேர் செத்துப் போனதல்ல. பல லட்சம் கோடிப் பணம் அரசு வங்கிகளில் வாராக்கடனாக இழந்து நிற்பதல்ல. கொலை, கொள்ளை, கள்ளநோட்டு, ஆள் கடத்தல், வன்புணர்வுத் தீனங்கள் அல்ல. காசு வாங்கி வாக்களிப்பதல்ல. சாதி அரசியல் அல்ல. …..அவற்றைவிட எல்லாம் பெரிய இனமானச் சிக்கல் – வெங்காய விலை உயர்வு.
பொன்னின் பெருந்தக்க யாவுள !
பிட்டுக்கு மண் சுமந்த மதுரைச் சொக்கேசன் மீது, அரிமர்த்தன பாண்டியன் வீசிய பொற்பிரம்பும் அறிந்திருக்கலாம். பொற்பிரம்பின் வீச்சையும் வலியையும் அனுபவிக்க எமதாசான் புதுமைப்பித்தனின் ‘ அன்று இரவு’ வாசிக்க வேண்டும். வாசிக்க நேர்ந்தவர் நற்பேற்றாளர். புதுமைப்பித்தனிலும் சாதி தேடிய மார்க்சீய, அம்பேத்காரிய, பெரியாரிய ‘அறிஞர்’ கூட்டம் உண்டு. ‘அரிசிப் புழு தின்னாதவனும் இல்லை, அவுசாரி கையில் உண்ணாதவனும் இல்லை’ என்பது சொல்வடை.
சக்கடா
அக்கடா, துக்கடா, பக்கடா, கச்சடா, சக்கடா என்று டாவில் முடியும் சொற்கள் பற்றிய சிந்தனை. மொழிக்குள் இது போன்ற பல சொற்கள் வந்து புகுந்து, நெடுங்காலம் புழங்கப் பெற்று, இன்று தமிழே போல ஆகி விட்டன.
‘மலயம்.. என்பது பொதிய மாமலை!’
இமயம் எவ்விதம் இமய மலையைக் குறித்த சொல்லோ, அவ்விதமே மலயம் என்பது பொதிய மலையைக் குறித்த சொல்லாகும். பொதிய மலையை, அதாவது மலயத்தை, அதுவும் ஒரு மலை என்பதால் மலையம் என்று குறித்தால் தவறில்லை என்றாலும், மலயம் எனும் சொல் பொதிய மலையை மட்டுமே குறிக்கிறது, அல்லது செழுஞ் சீதச் சந்தனத்தை. மலயம் எனும் சொல்லின் இரண்டாவது பொருள் சாந்து, சாந்தம் அல்லது சந்தனம். மலையில் பிறந்த சந்தனம் என்பதால் மலைச் சந்தனம். ஆனால் மலயம் என்றாலே சந்தனம்.
வார்த்தை என்பது வசவு அல்ல!
என்ன விந்தை என்றால் பிருஷ்டம், புட்டம், buttocks எனும் சொற்களைப் புழங்க நமக்கு எந்த நாணமும் இல்லை. குண்டி என்று சொல்ல அவமானப்படுகிறோம். தமிழ் எழுத்தாளர்களே கூட, குண்டி எனும் சொல்லை சோப்புப் போட்டு, அலசி, காய வைத்து, மடித்து, ஆசனவாய், அடிப்பக்கம், பின் பக்கம் என்று மழுப்புகிறார்கள்.
‘வட திசை எல்லை இமயம் ஆக!’
கண்கொட்டுதல், இமையாடுதல் என்றோம். இமையாடாமல், கண் சிமிட்டாமல், கண் கொட்டாமல், கண்ணிமைக்காமல் பார்த்தான், அல்லது பார்த்தாள் என்கிறோம். இமைப்பொழுது என்றால் கணம் அல்லது குறுகிய கால அளவு. உறங்கிப் போதலை, இமை பொருந்துதல் என்றோம். கண் இதழ்கள் சேர்தலே இமை கொட்டுதல். இமைப்பளவு என்றாலும் கண்ணிமைப் பொழுதே! சீவக சிந்தாமணி, இமைப்பளவைக் குறிக்க, ‘இமைப்பு’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறது. இமைப்பு எனும் சொல்லுக்கு dazziling, brilliance, விளக்கம் ஆகிய அர்த்தங்களும் உண்டு.
உத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்!
சில பேராசிரியர்களிடம் கேட்ட போது, அவர்கள் திருவள்ளுவர் தூக்கம் எனும் சொல்லையும் கையாண்டிருக்கிறாரே என்றனர். அவர்கள் சொன்னது உண்மைதான். ‘வினைத் திட்பம்’ அதிகாரத்துக் குறள் பேசுகிறது,
‘கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்’
என்று. சரிதானே! பிறகென்ன வழக்கு, வியாச்சியம், உச்ச நீதிமன்றத் தலையீடு என்று நீங்கள் கேட்கலாம்! ஆனால் இங்கு தூங்காது என்ற சொல்லுக்கு தாமதிக்காது, கால நீட்டிப்பு செய்யாது, தொங்கிக் கொண்டு கிடக்காமல் எனும் பொருளே தரப்படுகிறது. மனக் கலக்கம் இல்லாமல், தளர்வடையாமல், கால தாமதம் செய்யாமல், வினையாற்றுவதே செம்மையானது என்று பொருள் தருகிறார்கள். …நாஞ்சில் நாட்டுக்காரனும், மலையாளியும் உறக்கம் என்று இன்றும் பயன்படுத்தும் சொல், பிற தமிழ்த் திருநாட்டுப் பகுதிகளில் தூக்கம் என்று பயன்படுத்தப்படுகிறது.
