புத்தெழுச்சி இயக்கத்தின் ஆவணக்காப்பகங்கள்: வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும் -2

இந்த விசாலமான வங்காளத்தின் விவசாயிகளின் குடிசைகளில், அந்த அன்னையின் ஆற்றுப் படிக்கட்டிகளில், நெல் வயல்களில், ஆலமரத்தடி நிழல்களில், அவளுடைய நகரங்களின் மையத்தில், பத்மா ஆற்றின் மணல் கரைகலில், மேக்னா ஆற்றின் அலை உச்சிகளில்- நான் இந்த தேசத்துடைய, மேலும் அதன் மக்களுடைய ஒரு குறிப்பிட்ட வடிவைக் கண்டேன், அதை நான் ஆழமாக நேசித்தேன்… இந்தப் பேரன்பு தந்த ஊக்கம்தான் என்னை இந்தப் புத்தகத்தை எழுதச் செய்தது. .. எனக்கு இன்றைய வரலாறைப் போலவே, பண்டை வரலாறும் உண்மையாகவும், உயிருள்ளதாகவும் இருக்கிறது. அந்த உயிருள்ளதும், உண்மையானதுமான கடந்த காலத்தைத்தான், உயிரற்ற எலும்புக் கூட்டை அல்ல, நான் இந்தப் புத்தகத்தில் கைப்பற்ற முயன்றிருக்கிறேன்.”

வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்

This entry is part 4 of 13 in the series வங்கம்

வங்காளி என்ற சொல்லுக்கு, ஒரு மொழிக்குழுவின் அடையாளம் என்ற நிலையைத் தாண்டி, ஒரு வசீகரத் தொனியைக் கொண்டு வந்ததற்குக் காரணமாக, 1890-1910 கால இடைவெளியில் வங்காளத்தில் கிளைத்தெழுந்த காலனிய எதிர்ப்பு நோக்கம் கொண்ட, புத்தெழுச்சிக் கற்பனையுடன் உருவான தேசியம் என்ற பெரு நிகழ்வுதான். அதன் உச்சகட்டம், ஸ்வதேஷி இயக்கம் (1905-08) என்று அழைக்கப்பட்ட திரட்சி.