ஆப்கானிஸ்தானின் தொடரும் துயரங்கள்

இரண்டாம் உலகப் போரைத் தவிர்த்து அமெரிக்கா நடத்திய அத்தனை போர்களும் தோல்வியிலேயே முடிவடைந்திருக்கின்றன. அது வடகொரியாவாக இருந்தாலும் சரி அல்லது வியட்நாம், இராக், ஆப்கானிஸ்தான் என அத்தனை போர்களிலும் அமெரிக்கா தோல்வியுடனேயே திரும்பியிருக்கிறது. வடகொரியாவில் போரை நடத்திக் கொண்டிருந்த அமெரிக்க ஜெனரல் வடகொரியர்களால் பிடிக்கப்பட்டு சிறைக்கைதியாக இரண்டு வருடம் இருந்த அவமானமும் அதில் அடக்கம்….மற்றபடி அமெரிக்கா சென்றவிடமெல்லாம் துரதிருஷ்டவசமாகத் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

பாலை நிலத்து நினைவலைகள்

அண்மையில் “உரிய ஆவணங்களின்றி வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் இனி அந்தந்த நாடுகளில் இருக்கும் தூதரகங்களை அனுகினால் அவர்களுக்குத் தேவையான ஆவணங்கள் விரைந்து வழங்கப்படும்” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் தெரிவித்த செய்தியொன்றினைப் படித்தேன். அந்தச் செய்தி உண்மையானதாக இருப்பின் சந்தேகமில்லாமல் சுஷ்மாஜி ஒரு தேவதையேதான். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இதனைவிடவும் ஒரு இனிய சேதி இருக்க முடியாது என்பேன்.

சிரியாவும் இன்ன பிறவும்…

ஏராளமான முஸ்லிம்கள் மிச்சிகன், மின்னியாபொலிஸ் போன்ற பகுதிகளில் பெருமளவிற்குக் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது வலதுசாரி அமெரிக்கர்களை எரிச்சலில் தள்ளியிருக்கிறது… உலகில் வஹாபிய சுன்னி இஸ்லாமியத் தீவிரவாதம் பரவக் காரணமாயிருக்கிற சவூதி அரேபியா பிற இஸ்லாமிய பிரிவுகளைச் சேர்ந்த ஷியா, அல்லாவைட் போன்றவர்கள் வாழும் இராக்கிய, இரானிய, குர்து, சிரிய நாடுகள் மீது பயங்கரவாதத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்கா அதனைத் தடுக்க முயலாமல் அவர்களுக்கு மறைமுகமாக உதவுகிறது என்னும் குற்றச் சாட்டிற்கு அமெரிக்கா இன்றுவரை பதிலளிக்கவில்லை. மானுடகுலம் இதுவரை கண்டிராத குரூரத்துடன் நடந்து கொள்ளும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ரஷ்ய தாக்குதல்களால் சிதறடிக்கப்படுகையில் அதனை ஆதரிக்காமல் எரிந்து விழும்…

பாப்லோ எஸ்கோபார்: போதை மருந்து வியாபாரியின் கதை

சிறிது நாட்களுக்கு முன்னால் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான Netflix தயாரித்த Narcos என்றொரு பிரபலமான தொடரை பார்த்துக் கொண்டிருந்தேன். சமீப காலத்தில் அமெரிக்கர்களிடையே மிகப் பிரபலமடைந்திருக்கும் தொடரான இது கொலம்பிய போதை மருந்து கடத்தல் மன்னனான பாப்லோ எஸ்கோபாரின் (Pablo Escobar) சுயசரிதை. பத்து எபிசோட் வரைக்கும் இதுவரை வந்திருக்கிறது. இனிமேலும் எபிசோட்கள் தொடர்ந்து வருமென்று நினைக்கிறேன். சாதாரணமாக தொலைக்காட்சித் தொடராக அல்லது சினிமாவாக எடுக்கப்பட்ட/எடுக்கப்படும் சுயசரிதைகள் சம்பந்தா சம்பந்தமில்லாம நாடகத்தனமாக இருக்கும் அல்லது சகிக்கவே முடியாதபடிக்கு சம்பந்தப்பட்டவரை கேவலப்படுத்தியிருப்பார்கள் அல்லது உச்சாணிக் கொம்பில் செயற்கையாக தூக்கி வைத்துக் கொண்டடியிருப்பார்கள். சில விதிவிலக்குகள் இருக்கவே செய்யும். அந்தவகையில் பாப்லோ எஸ்கோபாரைப் பற்றிய இந்த தொடரும் ஒரு விதிவிலக்குதான்.

பாடலை நிறுத்திய பாணன் – எஸ். பொ.

எஸ்.பொ. என்று தமிழிலக்கிய உலகில் அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை அவர்களைப் பற்றி நான் அறிந்தது அதிகமில்லை. நான் மட்டுமன்ன? ஈழத்து எழுத்தாளர்களில் எத்தனை பேர்களை தமிழ்நாட்டு தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள்? அல்லது அறிந்திருப்பார்கள்? எஸ். பொ. ஏதாவது தமிழ் சினிமாவில் தலை காட்டியிருந்தால் ஒருவேளை தமிழர்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம்.

செஞ்சிவப்புச் சிந்தனைகள்

“சனிக்கிழமையன்று ரொட்டி என்னுடைய ஊருக்கு ரயிலில் வருகிறதென்றால் நாங்கள் வியாழக்கிழமையே ரயில்வே ஸ்டேசன் வாசலில் கியூவில் நிற்க ஆரம்பிப்போம்…பொதுவுடமை கொடுக்கும் பரிசு அது. நீங்கள் என்ன படிக்க வேண்டும், படித்த பிறகு எங்கு வேலை செய்ய வேண்டும், எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் அரசாங்கமே தீர்மானிக்கும். நீங்கள் மருத்துவத்திற்குப் படிக்கலாம். ஆனால் அரசாங்கம் உங்களை கிராமத்திற்கு அனுப்பி விவசாய வேலை பார்க்கச் சொன்னால் அதைத்தான் நீங்கள் செய்தாக வேண்டும். வேறு வழியே இல்லை…”