மேகக்கணிமையின் பயனர்களை நுகர்வோர்கள், வணிகப்பயனர்கள் என்று பிரிக்கலாம் என முன்பே சொல்லியிருந்தேன். இப்பகுதியில் இவ்விருவகைப் பயனர்கள் மேகக்கணிமையை நோக்கி எவ்வாறு நகர்வது என்று கொஞ்சம் பார்க்கலாம். ’நகர்வது’ என்றால்? …மேகக்கணிமையைப் பாவிப்பதென்பது, தெரிந்த ஒரு விஷயத்திலிருந்து தெரியாத ஒன்றுக்குப் போவதுபோலத்தான். அதனாலேயே, இந்த மாற்றம் குறிப்பிடத்தகுந்த ஒரு செயல்பாடாகிறது. இம்மாற்றத்தையே நகர்வு என்று குறிப்பிடுகிறேன்.
Author: ஷங்கர் அருணாச்சலம்
மேகக் கணிமை (Cloud Computing) – 4
உள்கட்டமைப்புச் சேவையில் உங்களது கணிமை வளங்கள்மேல் உங்களுக்கு முழுச் சுதந்தரம் உண்டு. உங்களுக்குத் தேவையான மென்பொருட்கள், செயலிகளை உங்கள் விருப்பத்திற்கேற்ப நிறுவிக்கொள்ளலாம். இச்சுதந்தரத்தின் விலை, பொறுப்பு. இச்செயலிகள் ஏதேனும் மக்கர் செய்தால் நீங்கள்தான் களத்தில் இறங்கவேண்டும். அதேபோல், மென்பொருட்களின் புதிய பதிப்பு வரும்போதோ அல்லது ஏதேனும் பாதுகாப்புப் பிரச்னைகள் வரும்போதோ அதை நீங்கள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். நல்ல ஐடி ஆட்கள் உங்களிடம் இருப்பது மிகவும் அவசியம்.
மீட்டர் போட்ட ஆட்டோக் கணிமை
அமேசானின் தரவுமையத்தில் ஏதேனும் பெரிய பிரச்னை வந்து அவர்களின் அனைத்துத் துணுக்குகளும் படுத்துவிட்டால்? இது நடப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்றாலும் ஒருசில முறை இது நடந்திருக்கிறதுதான். அப்போது உங்கள் நிறுவனத்தில் எத்தனை அசகாய சூரர்கள் இருந்தாலும் அவர்களால் ஆணிகள் ஏதும் பிடுங்க இயலாது. அமேசான் இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வரையில் நீங்கள் தலைசொறிந்து கிடக்கவேண்டியதுதான். அவ்வாறு நடக்கும்போது அவர்கள் எவ்வளவு நேரம் உங்கள் துணுக்கு செயல்படவில்லையோ…
கொடுப்பதெல்லாம் சேமிக்கும் கொண்டல்மேகம் – 2
நிக்கோலஸ் கார் என்ற அமெரிக்க எழுத்தாளர் கணிமையின் பயன்பாட்டை மின்சக்தியின் பயன்பாட்டுடன் ஒப்பிட்டு எழுதிய புத்தகம் மிகவும் பிரபலம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மின் உற்பத்தியாளர்கள் தாம் உருவாக்கிய மின்சக்தியைத் தனித்தனியே பயனர்களுக்கு விற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் விரைவில் ஒரு பொதுவான மின்தொகுப்பு உருவாகி, மின்சக்தி ஒரு அடிப்படைப் பயன்பாடு ஆனது. மின் அளவிகளின் மூலம் நீங்கள் பயன்படுத்திய சக்தியை அளவிட்டு அதற்கு மட்டுமே நீங்கள் பணம் செலுத்தும் நிலை உருவானது. அதேபோல், கணிமையும் ஒரு தரநிலைப்படுத்தப்பட்ட அடிப்படைப் பயன்பாடாகி, உங்கள் பயன்பாட்டளவின்படி நீங்கள் கட்டணம் செலுத்தும் நிலை வரும் என்பதே காரின் நிலைப்பாடு. இன்று, மேகக்கணிமை அந்நிலையை நோக்கி வெகுவேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.
கொடுப்பதெல்லாம் சேமிக்கும் கொண்டல்மேகம்
க்ளவுட். எல்லாரும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். புரிந்தோ புரியாமலோ இதைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் தெரிந்து வைத்திருத்தல் அவசியம் என்று எல்லாருக்கும் படுகிறது. “பேத்தி ஃபோட்டோவை வாட்சாப்புல அனுப்பிடுவான் பையன். அது ஜங்குன்னு க்ளவுட்ல ஏறி என்னோட ஸ்மார்ட்ஃபோனுக்கு வந்துடும்” என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் தாத்தா, பாட்டிகளிலிருந்து தொடங்கி எல்லாருக்கும் இந்தக் க்ளவுட் தேவைப்படுகிறது. அதனாலேயே சில குழப்பமான புரிதல்களும், பல புரிபடாத குழப்பங்களும் மலிந்து கிடக்கின்றன. ஃபேஸ்புக்கும் க்ளவுடாம். ஜிமெயிலும் க்ளவுடாம். வாட்ஸாப் க்ளவுடா இல்லையா?