இலவசம் இணையச் சமநிலைக்கு ஆபத்தா?

இணையம் என்பதை அத்தியாவசியத் தேவையாகக் கருதும் இந்த மேல்தட்டு மக்கள் கட்டணமின்றி வழங்கப்படும் திட்டங்களையும் எதிர்ப்பதால் அன்றாடம் வேலைசெய்து பிழைக்கும் மனிதர்களுக்கு இணையம் என்பது எட்டாத கனியாகிவிடும். இணையச் சமத்துவம் என்பது மறைமுகமாக இணையத்தளங்களைத் தடுப்பதுதானே தவிர வெளிப்படையாகப் பயன்பாட்டு அடிப்படையில் விலையேற்றுவதல்ல. வெளிப்படைத் தன்மையின்மைதான் இணையச் சமத்துவத்தைப் பாதிக்கிறது என்ற மையப்புள்ளியைவிட்டு வேறுபட்ட கட்டணங்கள்தான் சமத்துவத்தைப் பாதிப்பதாகக் காட்டுவது யாருக்கு லாபம் …

தங்கத்தின் மறுபக்கம்

உற்பத்தி இல்லாமல் லாபம் மட்டும் வருகிறதென்றால் எங்கோ யாரோ நட்டப்படுகிறார் என்பது எளியமொழி. உண்மைதான் 1971ல் 200ரூபாய்க்கு விற்ற தங்கம் 2011ல் 25000ரூபாய்க்கு உயர்ந்துள்ளது என்றால் நாற்பது ஆண்டுகள் 125 மடங்கு லாபம் என்று பொதுபுத்தியில் எட்டலாம். ஆனால் 1981ல் 10000 ரூபாய் முதலீட்டில் ஒரு நிறுவனம் 2011ல் 7 பில்லியன் டாலர் மதிப்புடையதாகிறது(இன்ஃபோசிஸ்) என்றால் காரணம் முதலீடு உழைப்பு சார்ந்த, உற்பத்தி சார்ந்த துறையில் அமைந்துள்ளதே காரணம். மாறாக 10000 ரூபாயை 1981ல் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் அதிகபட்சம் 3ஆயிரம் டாலர் 2011ல் கிடைத்திருக்கும். அந்த உற்பத்தி மூலம் எத்தனை பேர் வருமானம் ஈட்டிருப்பார்கள்? அரசுக்கு எத்தகைய லாபம்? என்று யோசித்தால் இது எவ்வளவு பெரிய நட்டம் என்பது புலப்படும்.

தூக்கி எறியப்படும் தூக்குக்கயிறுகள்

பலவித மின்னணு உபகரணங்கள் புழக்கத்தில் வந்துவிட்டன. கைபேசியின் வசீகரம் மக்களை அடைந்த அளவிற்கு அதன் பயன்பாட்டு முறைகள் மக்களை அடையவில்லை. இன்னும் சொல்லப் போனால் எப்படி அதன் கழிவுகளைக் கையாளுவது என்று தெரியாமலேயே இந்தியச் சந்தைக்குள் இவை வந்துவிட்டன. ஒரு கைபேசியோ, மின்கலமோ அல்லது மின்னணு உதிரிபாகங்களோ உபயோகமற்றுப் போகும்போது அதனை சாதாரணக் குப்பையுடன் போடக்கூடாது. இவைகள் குறிப்பிட்ட ஈரப்பதத்திலோ, வெப்பத்திலோ எளிதில் விடத்தைக் கக்கும் அபாயம் கொண்டவை.