திம்புவின் சோர்டன்கள்

சில ஓவியங்களில் அதை வரைந்தவர் தன் கற்பனை வளம் முழுவதையும் கொட்டி வரைந்திருப்பார். சொர்க்கம் போன்று ஒரு இடத்தைக் கற்பனை செய்தால் அங்கே காவல்காரர்கள் உட்பட அனைத்து விவரங்களும் அந்த வேலைபாட்டில் இருக்கும். பூடான் அரசரின் மாளிகையில் கழுகு முகத்துடன் கூடிய ஒரு கடவுள் தோற்றம் இடம் பெற்றிருக்கும். ராவண் என்றொரு உருவமும் உண்டு. ஆனால் இது ராமாயணத்தின் வில்லன் ராவணன் அல்ல.

ராஜம் கிருஷ்ணன் – தமிழ் இலக்கியப்பாதையில் பதிந்த அடிகள்…

அரசியல்வாதிகள் அப்படி என்றால் நாளிதழ் போன்ற அச்சு ஊடகங்கள் , திரைக்கலைஞர்களின் மறைவுக்கு ஒதுக்கும் மிகுதியான இடத்தைக்கூட ராஜம் கிருஷ்ணனின் மறைவுச்செய்திக்கு ஒதுக்க முன் வரவில்லை என்பது வேதனையளிப்பது. அச்சு ஊடகங்களிலும் இணைய அஞ்சலிகளிலும் வெளியான ஒரு சில கட்டுரைகளிலும் கூடராஜம் கிருஷ்ணனின் இறுதிக்காலத் துன்பங்கள் முன்னிறுத்தப்படும் அளவுக்கு அவரது வாழ்நாள் சாதனைகள் அதிகமாக நினைவுகூ̀றப்படுவதில்லை.

யாமினி கிருஷ்ணமூர்த்தி – பகுதி ஐந்து

நடன மேடையின் ஒரு மூலையில் தேவியின் பல அவதாரங்களில் தோன்றும் பல ரூபதரிசனங்களில் ஒன்றின் சிலாரூப படிமமாக யாமினி சமைந்து சலனமற்றுத் தோன்றுவார். இப்படி ஒவ்வொரு அவதாரச் சிறப்பையும் அவரது வேகமும் சிக்கலுமான ஜதிகளுடனான சலனமும் அபிநயமும் சட்டென மேடையின் ஒரு மூலையில் முடிவுபெற்று அம்மனின் சிலையென உறைந்து நிற்கும்போது அது மூன்று வெவ்வேறு வெளிப்பாடுகள் அவற்றின் முடிவில் ஒன்றிணைந்து முழுமை பெற்ற தோற்றமாவது ஒரு அழகு

கிடாச் சண்டை

சுற்றியிருப்பவர்களின் வெறிகூச்சலயும் வசைச்சொல்லையும் புரிந்துகொண்டவைபோல அவைகள் ஒவ்வொரு முறை மோதும் போதும் போதிய இடைவெளி எடுத்துக்கொண்டு மூர்க்கமாக மோதிக்கொண்டன. சில வலிய ஆடுகளின் தாக்குதலை தாங்கமுடியாமல் பத்துக்கும் குறைவான முட்டலில் சில பின்வாங்கி கூட்டத்திற்குள் ஓடிவரத்துவங்கியது. சில சண்டைகள் நீண்டநேரம் நடந்தது. ஆனால் 50 முட்டல்கள் தான் ஒரு போட்டிக்கு அனுமதி

ஷார்லட் ப்ராண்டியும் ராபர்ட் சௌதியும் எழுதிக் கொண்ட கடிதங்கள்

‘இலக்கியம் பெண்களுக்கான துறை அல்ல. அவ்வாறு இருக்கவும் இயலாது.’ ராபர்ட் சௌதி (Robert Southey). சௌதி, ஆங்கிலக்கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் மட்டுமன்றி அரசவைக் கவிஞர் (பொயெட் லாரியேட்- Poet Laureate) என்ற பதவியையும் தாங்கியவர். பிற்காலத்தில் தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக அறியப்பட்ட ஷார்லட் ப்ராணடீ (Charlotte Bronte) என்பவருக்கு அவர் எழுதிய கடிதத்தில் மேற்குறிப்பிட்டபடி எழுதியுள்ளார்.
ராபர்ட் சௌதியின் அந்தக் ‘குற்றச்சாட்டு’ ஷார்லட் ப்ராண்டீயின் மனதை எவ்வாறு புண்படுத்தியிருக்க வேண்டும்? ஆனால், அவ்வாறில்லாமல் அந்த இளங்கவிஞர் தன்னைப் பற்றின விமர்சனத்தில் உள்ள உண்மையான பொருளை உணர்ந்து மேலும் அறிவுசார்ந்த உரையாடல்களைத் தொடர்ந்தது அந்த இளம் வயதிலும் அவருக்கிருந்த அறிவு முதிர்ச்சியைக் காண்பிக்கிறது.

'பெண்களின் விடுதலை' – யதுகிரி அம்மாள்

“நீங்கள் என்ன சொன்னாலும் பெண்களால் தான் இந்த தேசம் நின்றிருக்கிறது. நீங்கள் மில் வேஷ்டி உடுத்துகிறீர்கள். நாங்கள் தறியில் நெய்த புடவையை உடுத்திக் கொள்கிறோம். வழக்கங்கள், பண்டிகைகள், ஆசாரங்கள், பிரபந்தங்கள், இதிகாசங்கள், புராணங்கள், நீதி நூல்கள் எல்லாம் எங்களால் தான் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. இங்கிலீஷ் பண்டிதர்களான உங்களுக்கு அவைகளை படித்துப் பார்க்க வேளை எங்கு இருக்கிறது? யாரவது ஒரு வெள்ளைக் காரன் சொன்னால் அப்போது தான் உங்கள் தாயார்களை, “பாராயண புஸ்தகம் இருக்கிறதா? என்று கேட்பீர்கள்” என்று இந்தியப் பெண்களின் பெருமையை எடுத்துச் சொன்னேன்.
பாரதியார்: பலே! ஐயர் சொன்ன பிரசங்கத்தை அப்படியே விழுங்கி விட்டிருக்கிறாயே! பரவாயில்லை.குழந்தைகளிடம் தோற்றாலும் சந்தோஷமே. குரு சிஷ்யனிடம் தோற்பது ஒரு பெருமை. அதை நம் தேசத்தில் பலர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

'நான் கண்ட பாரதம்' – அம்புஜத்தம்மாள் சுயசரிதையிலிருந்து

என் சகோதரனை ஏழாவது வயதில் பழைய கால சம்பிரதாயப்படி, தாய் வழிப்பாட்டனாருடைய சீர்வரிசைகளோடு மேள தாளங்களுடன், மயிலாப்பூர் பி.எஸ். ஹைஸ்கூலில் சேர்த்தார்கள். ஆனால் எனக்கு அக்ஷராப்பியாசம் (எழுத்தறிவித்தல்) கூட நடைபெறவில்லை. காரணம் முன்பெல்லாம் பெண் குழந்தைகளுக்குக் காது குத்தல், அக்ஷராப்பியாசம் செய்வித்தல் ஆகிய சடங்குகள் கிடையாது. பெண்களுக்கென்று தனிப்பள்ளிக்கூடம் இல்லாமையால், என் தாயார் என்னைப் பள்ளிக்கூடத்துக்கே அனுப்பவில்லை. அதற்குப் பதிலாக இந்திய கிறிஸ்துவ சங்கத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியையைக் கொன்டு எனக்குக் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

யாமினி – பகுதி 3

டாக்டர். சார்ல்ஸ் ஃபாப்ரி, ஹங்கரிய நாட்டவர். தில்லி கலை விமர்சகர்களில் மூத்தவர் எல்லோராலும், ஒரு மூத்தவருக்குரிய, ஆசானுக்குரிய மரியாதையுடன், பெரிதும் மதிக்கப்படுபவர், மேற்கத்திய கலை உணர்வுகளில் பிறந்து வாழ்ந்தவராதலால் அதிலேயே ஊறியவர், பரத நாட்டியத்தின் இலக்கணத்துக்கும் நடன வெளிப்பாட்டு நுட்பங்களுக்கும் தொடர்பற்றவர். அவ்வளவாக ஆழ்ந்த பரிச்சயம் இல்லாதவர். ஒரு வேளை அந்த பரிச்சயமற்று இருந்ததே கூட ஒரு நல்லதுக்குத் தானோ என்னவோ, ஒரு கலைஞரை எதிர்கொள்ளும்போது கலைஞராக இனம் காண்பது அவருக்கு எளிதாகிறது.

என்னுயிர் நீயல்லவோ!

கூரையைப் பிய்த்துக் கொண்டு போகும் அளவுக்கு ரசிகர்களிடமிருந்து உற்சாகக் குரல்கள் எழுகின்றன. பாடகியின் முகத்தில் மகிழ்ச்சி; ரசிகர்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் கம்பீரமான உருவம். மேடைத் தோற்றத்திற்கேற்ற நீண்ட அங்கி போன்ற உடை- கருப்புக் கண்ணாடி அணிந்தவர்; உயரமாக முடிந்த கொண்டை. காதில் தொங்கி ஊஞ்சலாடும் லோலாக்குகள். வலது கையில் ஒரு பெரிய பட்டுக் கைக்குட்டை. புன்சிரிப்பு தவழும் இன்முகம்.

சிங்கப்பூர் அரசியலில் பெண்கள்

பல திறமையுள்ள பெண்கள் தங்கள் திறமையால் எந்த துறையிலும் பிரகாசிக்கலாம் என்று இருக்கும்போது கஷ்டங்கள் நிறைந்த அரசியலில் நுழைவானேன் என்று நினைக்கிறார்கள். தவிர பெரும்பாலோர் தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தையும், தங்கள் தனி வாழ்க்கையையும் மிக மதிக்கிறார்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தங்கள் தனிமனித சுதந்திரத்தை இழக்க விரும்புவதில்லை. சிங்கப்பூரின் அரசியல் கலாசாரப்படி, மக்கள் ஆதரவினால் மட்டுமே அரசியல் தலைவர்கள் உருவாவதில்லை. ஒரு கட்சியினுள்ளே அழைக்கப்பட்டு ஆரம்பத்திலிருந்து பல பொறுப்புகளில் உழைத்து படிப்படியாகவே மேல் நிலைக்கு வந்து அரசியல்வாதியாக முடியும்.

அதே வீடு

குமுதினி  (1905-1986) அவர்கள் தன்  வாழ்வில்  முரண்பாடுகளை எப்படி ஒருங்கிணைத்தார் என்பது எனக்கு இன்னும் ஆச்சரியமே.  அவர் தீவிர காந்தியவாதி.  முரட்டுக்கதர் புடவையை மடிசாராக உடுத்துவார்! தேய்ந்த இரு பொன் வளையல்கள், திருமங்கலியச்சரடு, ஒற்றைக்கால் தோடு, மூக்குத்தி. அவரை என் சிறு வயதிலிருந்து  நாற்பதாண்டுகள்   பார்த்திருக்கிறேன்.  இந்த ஆடையிலும், அணியிலும் மாறுதலே கிடையாது. ஆனால் எங்களை தன்னைப்போல் இருக்கவேண்டும் என்று சொன்னதில்லை.

ஜப்பானில் இந்திய வணிகம்

கடந்த சில வருடங்களாக நிறைய இந்திய மென்பொருள் வல்லுனர்களை அமெரிக்காவும் ஐரோப்பாவும் தங்கள் நாடுகளில் வரவழைத்துள்ளன. இந்திய மென்பொருள் மற்றும் சேவைகள் வாங்குபவர்கள் வரிசையில் இப்போது ஜப்பான் போன்ற கிழக்கு நாடுகளும் சேர்ந்துள்ளன. ஏற்கனவே அரசு ரீதியில் இந்திய ஜப்பானிய அரசுகளுக்கிடையே நிறைய பரிமாற்றங்கள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவிற்கு போட்டியாக, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவிலிருந்தும்…

யூடியூப்புடன் நான்கு வாரக் கடைசிகள்

புல்வெட்டும் எந்திரங்கள் சைனாவில் செய்து, வட அமெரிக்காவில் 400 டாலருக்கு சிரிக்கின்றன. ஒன்றை மறந்து விடக் கூடாது. சாதாரண காரில் சத்தியமாக இவற்றை ஏற்ற முடியாது. எடையும், வடிவமும் முற்றிலும் காருக்குச் சரிவராத மோசமான எந்திரம்! நானோ காரில் சுமோ குத்துசண்டைகாரர்களை ஏற்றுவதைப் போன்ற விஷயம் இது. இவ்வகை எந்திரங்களை பழுது பார்ப்பது புதிய எந்திரம் வாங்குவதை விட அதிக செலவாகும்.

பழந்தமிழர் வேளாண்மைத் தொழில் நுட்பம்

யாழ்ப்பாணத்தின் தோட்டங்களின் தண்ணீர்த் தேவைகளை நிவர்த்தி செய்ய துலாக்கள் இன்றியமையாததாக இருந்தன. மின்சாரப் பாவனையும், பெட்ரோல் டீசல் பாவனையும் மிக அரிதான அந்தக் காலக்கட்டத்தில் நீர் இறைக்கும் இயந்திரங்களோ, நவீன சாதனங்களோ இருக்கவில்லை. பணம் படைத்தவர்கள் கூட்டாகச் சேர்ந்து அமைத்து தமக்கு தேவையான காலத்தில் தமது தோட்டங்களுக்கு பயன்படுத்திய, மாடுகளைக் கட்டி இழுக்கும் சொரிவாளி சூத்திரங்களும் சங்கிலி பூட்டி மாடு இழுக்கின்ற இரட்டை வாளி சூத்திரங்களும்கூட மிக அரிதாகத்தான் காணப்பட்டன…

யாமினி க்ருஷ்ணமூர்த்தி – 2

பரதத்தில் பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பரதம் சமரசம் ஏதும் இல்லாத பழமையின் இறுக்கமும் விதிகளின் பிடி வழுவாது கற்பிக்கப்படும் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. இதற்கு மாறாக, வழுவூர் பரம்பரையில் வரும் பரதம் சற்று நெகிழ்வுகளுக்கு இடம் கொடுத்து அலையோடும் இழையாக, இசையின் பாவங்களும் உணர்ச்சி வெளிப் பாடுகளும் கொண்டதாக, சொல்லப் படுகிறது. இந்த நெகிழ்வுகளின் காரணமாகவே அது, பந்தநல்லூர் மரபைப் பார்க்க அதிக வரவேற்பும் கவர்ச்சியும் கொண்டதாக கருதப்படுகிறது. ஆனால்…

ஆயிரம் பிறை கண்ட அரிமா! – ஜெயகாந்தன்

“ஞானம் என்றால் என்ன தெரியுமா என்று கேட்டுவிட்டு, சுகமாய் இருப்பதுதான் ஞானம் என்று சொன்னார். சுற்றி இருந்த 20 பேரில் ஒருவர், இது பற்றி யோசித்துவிட்டு, கொஞ்ச நேரம் கழித்து, “ஆமாம் ஜே.கே. நல்லவனா இருப்பதுதான் ஞானம்” என்று சொன்னார். ஜே. கே உடனே “ நல்லவனா இருப்பது அல்ல, சுகமா இருப்பதுதான் ஞானம்” என்று அவரைத் திருத்தினார்.

இணையமும், இணையத்தில் தமிழும் – ஆரம்ப நாட்கள்

இப்படி இணையத் தமிழுக்கு முக்கியப் பங்காற்றியவர்களில், மறைந்த சிங்கப்பூர் தமிழர் நா. கோவிந்தசாமி, பல வருடங்களாக ஸ்விட்சர்லாந்தின், லொஸான் (Lausanne) நகரில் பணியாற்றும் கல்யாணசுந்தரம், மலேஷியத் தமிழர் முத்து நெடுமாறன், மற்றும் தமிழக மென்பொருள் வல்லுனர்கள் பலரும் தமிழ் இணையச் சரித்திரத்தில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் நான் அந்த சமயம் சிங்கப்பூரில் இருந்ததால் நா. கோவிந்தசாமியுடன் நல்ல பழக்கம் இருந்தது. அவர் செய்யும் முயற்சிகளை எல்லாம் ஆர்வத்துடன் என்னுடன் பகிர்ந்து கொள்வார்

உலக வர்த்தக அமைப்பு மாநாடு

கடந்த ஜூலை 31ந் தேதி ஜெனிவாவில், உலக வர்த்தக அமைப்பின் சந்திப்பில் பேச்சு வார்த்தை முறிந்ததற்கு இந்தியா காரணமாயிற்று. இந்தியாவின் நிலையை இதர உறுப்பினர் நாடுகள் கண்டித்தாலும் உள்ளூரில் பொதுவாக வரவேற்பு இருந்தது. உறுப்பினர் நாடுகளுக்கிடையே வர்த்தகம் மேம்படும் வகையில் சுங்க வரிகளைத் தளர்த்தி நாடுகளுக்கிடையே பொருட்கள் தடையில்லாமல் இறக்குமதி ஏற்றுமதி செய்ய இந்த உடன்பாடு வகை செய்திருக்கும். ஆனால், இந்த உடன்பாட்டின் ஷரத்துகள் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாகவே இருப்பதாக இந்தியாவும் இதர வளரும் நாடுகளும் கருதின. கடைசியில் இந்தியா ஒரு நிபந்தனை விதித்தது. இந்த உடன் பாட்டில் இந்தியா கையெழுத்திட வேண்டுமென்றால், இந்தியாவின் மற்றொரு நிலைபாட்டிற்கு இதர நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் அது.

யாமினி க்ருஷ்ணமூர்த்தி

யாமினிக்கு நான் பரிச்சயமானது 1990-ல் என்று நினைவு. அதற்கு முன் சில நாட்டிய நிகழ்ச்சிகள் பற்றி பேட்ரியட், லிங்க், சுபமங்களா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைகளில் நான் எழுதியிருந்தேன். அந்த கட்டுரைகள் ஒன்றில் நான் யாமினி கிருஷ்ணமூர்த்தி பற்றி ஒரு சில விமர்சனபூர்வமான கருத்துக்களைச் சொல்லியிருந்தேன். அதைப் பிரசுரித்த பத்திரிகையின் கலைப்பகுதி ஆசிரியர், யாமினியின் தீவிர ரசிகர். அவரும் என்னைப்பகைக்க வில்லை பின்னர் அதைப் பற்றிக் கேட்ட போது யாமினியும் என்னைப் பகைக்கவில்லை. நம்மூர் கலை ரசனை மரபுகள் முற்றிலும் வேறுதான். நம்மூரில் அவ்விருவருக்கும் என்னுடன் முகாலோபனம் கூட இருந்திராது.

செஞ்சிவப்புச் சிந்தனைகள்

“சனிக்கிழமையன்று ரொட்டி என்னுடைய ஊருக்கு ரயிலில் வருகிறதென்றால் நாங்கள் வியாழக்கிழமையே ரயில்வே ஸ்டேசன் வாசலில் கியூவில் நிற்க ஆரம்பிப்போம்…பொதுவுடமை கொடுக்கும் பரிசு அது. நீங்கள் என்ன படிக்க வேண்டும், படித்த பிறகு எங்கு வேலை செய்ய வேண்டும், எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் அரசாங்கமே தீர்மானிக்கும். நீங்கள் மருத்துவத்திற்குப் படிக்கலாம். ஆனால் அரசாங்கம் உங்களை கிராமத்திற்கு அனுப்பி விவசாய வேலை பார்க்கச் சொன்னால் அதைத்தான் நீங்கள் செய்தாக வேண்டும். வேறு வழியே இல்லை…”

எனக்கு சாந்தியைத் தெரியாது!

வறட்சியின் பிடியிலும், வறுமையின் கொடுமையிலும் சிக்கித்தவிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கத்தக்குறிச்சியை சேர்ந்த சாந்தியின் வறுமையை விளக்க வேண்டுமானால் ஒரு நிகழ்ச்சியை கூறினால் போதும்.சாந்தியின் வெற்றியை பற்றி அவர் நண்பர் கேட்டபோது, “எங்கப்பா செங்கச்சூலையில் வேலை பார்க்கிறார். தினமும் ஏழு கிலோமீட்டர் வேலைக்கு ஓடி சென்று உழைத்துத்தான் எங்களை காப்பாற்றினார். எனக்கு பிறகு இருக்கின்ற மூன்று தங்கைகளையும் என்னையும் காப்பாற்ற என் அப்பா ஓடுவதை நிறுத்த வேண்டுமானால், நான் வேகமாக ஓடவேண்டும்.

ராக நிழல்

அவர் பெயர் குணசீலன். தொழில் தாண்டி அவரின் இசை ஆர்வத்தின் வேர் பல பாடல்களின் அடியில் பரந்து படர்ந்திருக்கிறது என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தார் அவர். தலையணை அளவில் இருக்கும் மூன்று தடித்த புத்தகங்களில் அவரிடம் இருக்கும் பாடல்கள் பற்றிய தகவல்கள் அழகான கையெழுத்தில், பதிவு செய்ய வருவோர் பார்த்து செலக்ட் செய்ய வைக்கப்பட்டிருந்தன. அதன் மூலப்பிரதி அவராகவே இருந்தார்.

குட்டி ரேவதி சந்திப்பு – பிரிவினை கோஷங்களும் முற்போக்கு அரசியலும்

லண்டன், பெர்லின் போன்ற இடங்களில் வாழும் தமிழர்கள் இந்திய மூலப்பண்பாடு பற்றிய அவதூறு கோஷங்களை மட்டுமே எழுப்பும் இப்படிப்பட்ட கூட்டங்களினால் குழம்பிப்போகிறார்கள். ஐரோப்பிய நாகரிகத்தையும் தழுவிக்கொள்ள முடியாது எனும் நிதர்சனம் ஒரு புறம், சொந்தப் பண்பாடு பற்றி அறிவிலிக் கருத்துரைகள் மறுபுறம் என கொஞ்சம் கலை இலக்கிய ஆர்வம் இருப்பவர்களையும் இப்படிப்பட்ட கூட்டங்கள் துரத்திவிடுகின்றன.

விட்டல் ராவ் – ஓர் ஆளுமை மற்றும் இரு நூல்கள்

அதேபோல் ஹோசூரில் kenilworth castle என்ற ஒன்று இருந்தது மிக அழகாக இதில் பதிவாகியுள்ளது. இங்கிலாந்திலுள்ள அதே பெயருள்ள கோட்டைப் போலவே இங்கும் ஒரு வெள்ளைக்கார அதிகாரி தன காதலிக்காக கட்டினான் என்பதும் காதலில் ஏமாற்றம் அடைந்தபின் தன நாயை சுட்டுக் கொன்றுவிட்டு அந்தக் கோட்டையிலேயே தானும் தற்கொலை செய்து கொண்டான் என்பதும் அந்தக் கெனில்வொர்த் கோட்டைக்கு ஒரு காவியத் தன்மை தருகின்றன.

வாசிப்பின் லட்டைட்டிய இன்பங்கள்

வாசிப்பு அனுபவம் என்று நான் அழைக்கும் விஷயம், நாம் ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கு வெகு காலம் முன்னரே துவங்கிவிடுகிறது. நூலகங்களிலும் புத்தகக்கடைகளிலும் புரட்டிப் பார்த்தல், முன்னட்டை அமைப்பைப் பார்த்து வசீகரிக்கப்படுதல், அதன் பைண்டிங், எழுத்துருக்கள், ஓவியங்கள், எவ்ரிமேன்ஸ் லைப்ரரி எடிஷன் வாங்குவதா அல்லது பெங்குவின் மாடர்ன் கிலாசிக்ஸ் எடிஷன் வாங்குவதா என்ற இருப்பியல் சார்ந்த அகச்சிக்கல், விலையுயர்ந்த ஒரு புத்தகம், ஒரு பேச்சுக்கு பரூஸ்ட்டின் In Search of Lost Time நாவலின் மிகச் சமீபத்திய மொழிபெயர்ப்பின் ஆலன் லேன் பாக்ஸ் எடிஷன் என்று வைத்துக் கொள்வோம், அதை வாங்குவதற்கு முன் நிகழும் மனத்தடுமாற்றங்கள்…இவை ஒவ்வொன்றும் அவற்றின் துணை நினைவுகளோடு ஒரு சுருதிக் கோவையாக உருவாகி நாம் இறுதியில் புத்தகத்துடன் சுருண்டு படுக்கையில் வாசிப்பின் அடக்கமான சேம்பர் ம்யூசிக்காக வளர்கிறது.

ஒலியன்றி வேறல்ல: இளையராஜாவின் ஆதார சுருதி

இசை, நடனம், இலக்கியம், ஓவியம் முதலிய நுண்கலைகளின் பின்னிருக்கும் ஆற்றல் எது? வேறு எந்த வகையிலும் புலப்படுத்த முடியாத உணர்ச்சிகளை ஆன்மாவின் அந்தரங்க உணர்வுகளாக வெளிப்படுத்தும் ஆற்றல்தான். இந்த இரு தனியிசைத் தொகுப்புகளும் இளையராஜாவின் சிந்தனையோட்டத்தை நாம் அறியக்கூடிய சாளரங்கள். இவற்றில் அவர் இசையைக் கொண்டு தன் அக உணர்வுகளுக்கு புற உருவம் தந்திருக்கிறார்.

எம். வி. வெங்கட் ராம்

அதீதக் கற்பனையாக இருந்தாலும், தற்கால சமூகப் பின்னணியைக் கருத்தாகக் கொண்டு எழுதியிருந்தார். பெண்கள் சம உரிமையை அந்தக் கதை மூலம் தான் வலியுறுத்துவதாகக் கூறினார். “நம் சமுதாயத்தில் பெண்கள் சம உரிமையும், பெண்கள் முன்னேற்றமும் மிக அவசியம் என்று நினைத்துதான் அந்தக் கதையையே உருவாக்கினேன். பெண்களுக்கு எதிராக எத்தனையோ அநீதிகள் நம் சமுதாயத்தில் நடக்கின்றன. ஒரு எழுத்தாளராக என்னால் செய்ய முடிந்தது அதைப் பற்றி எழுதி விழிப்புணர்வை உண்டாக்குவதுதான்.”

ஸ்பிதிக்கு ஒரு பயணம் – பகுதி 2

எங்கு நோக்கினும், திசைகள் அனைத்திலும், மலைத்தொடர்கள் உயர்ந்து தாழ்ந்தும் விண்கரையில் அலையாடுகின்றன. மரம் ஏதும் இல்லாத வெற்றுப் பரப்பாய் விரியும் மலைகள், எங்களைச் சுற்றி பல கிலோமீட்டர்கள் நீள்கின்றன, சூரியனின் கதிர்கள் அனலாய்த் தாக்க அவை ஒளிர்கின்றன, தகிக்கின்றன. இமயவரம்பென்றால் இதுதான் – மலைகளுக்கு அப்பால் மலைகள், அவற்றுக்கப்பால் வேறு மலைகள் – தொலைவில் ஒளிரும் தொடுவானில் மலைச் சிகரங்கள் ஒன்றி மறைகின்றன.

ஒரிஜினல் உச்சரிப்பில்…

1994ல் ஆரம்பிக்கப்பட்ட க்ளோப் தியேட்டர், ஷேக்ஸ்பியர் காலத்தில் நடத்தப்பட்டது போலவே நாடகங்கள் நடத்துவதற்காக என்று அமைக்கப்பட்டது. மேடை அமைப்பு, உடைகள், போன்றவை அந்தக்காலத்தைய முறைப்படி செய்யப்பட்டாலும், உச்சரிப்பையும் அந்தக்காலத்திற்கு கொண்டுபோனால் யாருக்கும் பாதி நாடகம் கூட புரியாது என்று பயந்து இருந்தவர்கள், பத்து வருடங்களுக்கு முன் முதல் முறையாக ரோமியோ & ஜூலியட் நாடகத்தை ஒரிஜினல் உச்சரிப்பில் அரங்கேற்ற, அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு!

தி.க.சி.யின் நினைவில்

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது சென்னை செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. குடும்பத்தோடு. நான் நண்பரும் ஓவியரும், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியருமான (நான் என்னவாக இருந்தாலும் பெரியவர்களின் சிநேகம் எப்படியோ எனக்கு வாய்த்து விடும் பாக்கியம் எனக்கு) சீனிவாசனுடன் தங்கினேன். திடீரென நான் போய்ச் சேர்ந்த இரண்டாம் நாளே சீனுவாசன், ”வாங்க திருநெல்வேலி வரை என்னுடைய காரிலேயே போய் வருவோம்” என்று சொல்ல, கிளம்பி விட்டோம். கூட கோபியின் புது நட்பு. வழியில் ராஜபாளையத்தில் இறங்கி மணி, கடையத்தில் இறங்கி கலாப்ரியா சந்திப்புகள். காலை எழுந்ததும் காலை உணவுக்குப் பிறகு சுடலை மாடன் தெருவுக்கு திகசியைப் பார்க்க கிளம்பினோம்.

தி.க.சி இல்லாத திருநவேலி . . .

மீனாட்சியின் உரத்த குரலில் குறுக்குத்துறை முருகனே ஒருகணம் திடுக்கிட்டு விழித்தார்.

‘சந்தனத்த பூசிக்கிடுங்க, சித்தப்பா. வெயிலுக்குக் குளிச்சையா இருக்கும்’.

சந்தனத்தை அள்ளி என் கைகளில் பூசினான். மோதிர விரலால் தடவி, சிறு தீற்றலாக நெற்றியில் இட்டுக் கொண்டேன். யாரோ ஒருவர் தாமிரவருணியில் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன், மண்டபத்தின் வழியாக நெற்றி நிறைய திருநீறுடன் கோயிலுக்குள் நுழைந்தார். வேகவேகமான நடை. பிள்ளையாருக்கு முன் மூச்சிரைக்க ரொம்ப நேரமாகத் தோப்புக்கரணம் போட்டார். ‘ஆயிரத்தெட்டு போடுவாரோ! எண்ணுவோமா’ என்று மனதில் தோன்றி மறைந்தது.

‘பாத்தேளா! அண்ணாச்சில்லாம் ஒருநாளும் சுகர்மாத்திர சாப்பிட மாட்டா. ஆரோக்கிய வாள்கைல்லா வாளுதா’ என்றான் மீனாட்சி.

தில்லியிலிருந்து லாகூருக்கு பஸ்

தொலைக்காட்சி ஸ்தாபனங்கள் இப்படி செய்தியைத் தோண்டி வெளிக்கொண்டு வந்தால், அதன் முன்னோடியான பத்திரிகையுலகம் அந்த செய்திகளுக்குப் பின்னால் புதைந்துள்ள செய்திகளை ஆராய்ந்து போட்டி போட்டுகொண்டுவெளியிடுவதைப் பார்க்கும்போது இன்று தகவல் சாதனங்கள் சரித்திரம் எழுதுகின்றன என்றுதான்சொல்லத்தோன்றுகிறது.

ஸ்பிதிக்கு ஒரு பயணம் – 1

எங்களைக் கீழே இறங்கி வரச் சொல்கிறான். சுற்றிலும் யாருமில்லாத தனிமையில் நான் அவனருகே போய் நிற்கிறேன். “பொய் சொல்லக்கூடாது. உண்மையை மட்டும்தான் சொல்ல வேண்டும். பார்க்க முடியவில்லை என்றால் இல்லை என்று சொல்லுங்கள். பார்த்தால் மட்டும்தான் பார்த்தேன் என்று சொல்ல வேண்டும்,” என்கிறான். எனக்குக் குழப்பமாக இருக்கிறது. வெகுதொலைவில் தெரியும் பனி போர்த்த சிகரங்களைக் காட்டி. “நடுவில் உள்ள மலையைப் பார்த்தீர்களா? அதன் உச்சியைப் பாருங்கள். பார்த்துக் கொண்டே இருங்கள். என்ன தெரிகிறது?” நான் உற்றுப் பார்க்கிறேன், எதுவும் பிடிபடுவதாயில்லை. “வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை,” என்கிறேன். “நடுவில் உள்ள மலையின் உச்சியை கவனமாகப் பாருங்கள்,” என்று மீண்டும் வலியுறுத்துகிறான் அமித். இப்போது மறுபடியும் அந்த மலையைப் பார்க்கிறேன், இப்போதுதான் ஒரு வித்தியாசமான காட்சி தென்படுகிறது…

தினம் ஒரு புதையல்

மெள்ள காட்சியில் வைக்கப்படிருந்த ஒவ்வொரு டைனொசொரையும் உள்ளுக்குள் கொஞ்சம் உதறலுடன் பார்த்துக்கொண்டு வந்தேன். நிஜம் இல்லை என்று அறிவுக்குத் தெரிந்தாலும் மனதென்னவோ அடித்துக்கொள்ளதான் செய்தது. அத்தனை தத்ரூபம். தொழில் நுட்பம் மூலம் உயிரோட்டமாக அசைவுகளும் கொண்ட அந்த டைனொசொர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காடுகளில் நாம் உலவுவது போன்ற பிரமையை ஏற்படுத்தி விட்டன.

இருக்கும் இடத்தை விட்டு

“மெட்ராஸ்ல நீர் இருக்கும் இடம் கொஞ்சம் மேலே.. இங்கே பரம்பரையாக, கிணறுகளும், ஏரிகளும் தான் நீராதாரம். இப்போ, ஃப்ளாட்டுகள் வந்து, காங்ரீட் போட்டு எல்லாத்தையும் மூடியாச்சு. அதனால, அந்தக் குறைந்த ஆழத்துல கிடைக்கிற நீர நாம எடுக்கறதில்லை. அதை விட ஆழமா ஓட்டை போட்டு, பாறையத் தொளச்சு, அங்கிருக்கற உப்பு நீர எடுக்கறோம்.. இந்த ரிப்போர்ட்ல பார் – 8 அடியில் மணல் இருக்கிறது. அது கிட்டத் தட்ட 30 அடி வரை இருக்கு. அதுக்கப்புறம் – களிமண். அதனால, நான் சொல்றேன் – வெட்டு என்றார்..

தடம்  சொல்லும் கதைகள்

“அது சிறு புள்ளியாகும் வரையில் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு பாக்கி இருந்த நாங்கள் – 26 பேர் கொண்ட குழு – அவரவர் முகாமிற்கு அமைதியாக திரும்பி வேலை பார்க்க ஆரம்பித்தோம். மனசு கொஞ்சம் கனத்துதான் இருந்தது. வெளி உலகுடன் எங்களுக்கு அந்த ஹெலிகாப்டர்தாம் கடைசி இணைப்பு. அதுவும் போய்விட்டது. இனி அடுத்த 6 மாதத்திற்கு – அடுத்த வேனிற்காலம் வரும்வரையில் வெளியுலகுத் தொடர்பே எங்களுக்கு கிடையாது.” என்று அவர் விவரிக்கையில் என் மனம் அந்த சூழ்நிலையை கற்பனை செய்து பார்த்தது – 6 மாதம், அந்தக் கடும் குளிர் பிரதேசத்தில் பெங்குவின்கள் மட்டுமே துணையோடு – எப்படி இருக்கும்?

இங்கிலீஷ்

ஒரு வெயில் ததும்பிய மதியவேளை. மாணவர்கள் மூன்று, மூன்று பேராக கைகளைக் கோர்த்துக்கொண்டு பள்ளியிலிருந்து நடக்க ஆரம்பித்தோம். எனது இடது கையைப் பிடித்துக்கொண்டு வந்த பையன் யார் என்று நினைவில் இல்லை. ஆனால் வியர்வை ஈரத்துடன் என் வலது கையைப் பிடித்துக்கொண்டு வந்த மாலதி மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறாள். இது ஏன் என்று என் கள்ளங்கபடமற்ற(?) மனதிற்கு இன்றும் புரியவில்லை. நடந்து சென்ற நாங்கள் மருதையாற்றுப் பாலத்தை அடைந்தோம். பாலத்துக்குக் கீழிருந்த மணலில் எங்களை குழு குழுவாக உட்கார வைத்து புளிப்புமிட்டாய் கொடுத்தார்கள்.

அமெரிக்கப் பஞ்சாயத்தில் நான்

சில நாட்களுக்கு முன்பு ஒரு சிவில் வழக்கில் சான்றாயராக (Juror) பணியாற்ற மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. கொலை போன்ற கடுமையான குற்றம் சுமத்தப்பட்ட கிரிமினல் குற்றவாளிகளுக்கு தங்களைப்போன்ற குடிமக்களால் உருவாக்கப்பட்ட ஒரு சான்றாயர் குழு (Jury) முன்பு தாங்கள் நிரபராதி என்று வாதிடும் உரிமை பல நாடுகளில் இன்றும் வழங்கப்பட்டாலும், அந்த உரிமை எந்த மாதிரி குற்றங்களுக்கு பொருந்தும், ஜூரி வழங்கும் தீர்ப்பின் முடிவு எவ்வளவு இறுதியானது என்பது போன்ற விஷயங்களில் நாட்டுக்கு நாடு எக்கச்சக்க வேறுபாடுகள் உண்டு.

நொண்டி யானை

அதனை கட்டிக்கொள்ள ஆசையாய் இருந்த எனது குட்டிக் கைகளை அகல விரித்து முன்னோக்கி படுத்தேன்…யானையுடைய தலையின் மேற்பகுதி இரு பாறைகள் இணைந்த குன்று போலவும் அதன் மீது ஆங்காங்கே செங்குத்தாக நின்றிருந்த ரோமங்கள் இலைகள் அற்ற மொட்டை மரங்கள் போலவும் தெரிந்தது. இன்றும், கோடை காலத்தில் மலைப்பிரதேசங்களை கடக்கையில், காய்ந்து கிடக்கும் மலைச்சரிவுகளில் இலைகள் முற்றிலும் உதிர்த்த மரங்களைப் பார்க்கும் பொழுது நொண்டி யானை நினைவில் நின்று தலையை ஆட்டி விட்டுப் போகும்.

இடமற்ற இடத்திலிருந்து, இடத்தைப் பற்றி…

நானும் வேர்கள் இல்லாததால்தான் நான் பிறந்த இடத்தை விட்டு, சென்னை என்ற இடமற்ற இடத்துக்கு வந்திருக்கிறேனோ? ஒரு மனிதனின் முன்னோர்கள், அவர்களின் மூதாதையர்கள் வழி வழியாக வாழ்ந்து, அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களின் நிலம், உடமைகள் யாவும் அவனுக்குக் கையளிக்கப்படும் இடம் எதுவோ அதுதான் அவனுக்குரிய இடம். அவனது வம்சாவளியின் வரலாறு, அவனது முன்னோர்களின் கல்லறைகள் போன்றவை இருக்கும் இடமும் கூட. அந்த இடத்திலிருந்து அவன் பிதுக்கப்பட்டு வெளியே வேறு இடம் நோக்கித் துப்பபடும் போது அவனுக்கு வாய்க்கும் இடம்தான் இடமற்ற இடம் (non-place). பின் நவீன யுகம் மனிதனுக்குப் பல இடமற்ற இடங்களை உருவாக்கி வைத்திருக்கிறது.

சில நினைவுகள் – குஷ்வந்த் சிங் மறைவைத் தொடர்ந்து

ஆனால் வெகு சீக்கிரம் நாலைந்து வருடங்களுக்குள் அவரது வெளிப்படையான தைரியமும், கபடமற்ற எண்ணங்களும், மனதில் பட்டது எதையும் அதன் சாதக பாதகங்களைப் பற்றிச் சிறிதும் யோசிக்காது வெளிப்படுத்துவதும் என்னை மிகக் கவர்ந்தன. அவரிடம் எனக்கு மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டன. பெரிய செல்வந்தரான குடும்பத்தில் பிறந்தவர் தில்லி தலைநகரமாக நிர்மாணிக்கப்படும் கால கட்டத்தில் கட்டிட குத்தகைகாரராக சம்பாதித்தவர் அவருடைய தந்தை. குஷ்வந்த் சிங் அந்தச் செல்வத்தின் படாடோபம் சற்றும் இல்லாதவர்…

என் நண்பன் ஐராவதம்

அங்கு பெரியவர் ரா.வீழிநாதன் அவர்கள், “சாதனா சமாஜ்” என்று ஒரு சபையை நடத்தி வந்தார். அங்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் பஜனை 2 மணி நேரம் நடக்கும். அங்குதான் நான் ஸ்வாமிநாதனை முதலில் சந்தித்தேன். பதினைந்து நிமிடம் அவன் லா.ச.ரா, தி.ஜானகிராமன் முதலிய பிரபல தமிழ் எழுத்தாளர்களையும் அவர்களது நாவல்களையும் பற்றிப் பேசினான். நானோ முழு சூன்யம். “நாளைக்கு ஸ்கூல் இல்லை. எங்கேயாவது வெளியே போவோம்,” என்றான். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் எனக்கு வெளியுலகை அறிமுகம் செய்தான். நாந்தான் அவற்றைச் சரியாய் உபயோகித்துக் கொள்ளமுடியாத சூழ்நிலையில் இருந்தேன். எனக்குக் குடும்பச் சுமைகள் அதிகம். ஆனாலும் ஸ்வாமிநாதன் என்ற அந்த நண்பன் என்மீது விடாமுயற்சிகள் செய்து வந்தான்.

இருளற்ற இரவுகள்

சமீப காலமாகத்தான் அறிவியல் வல்லுநர்கள், இரவுநேரங்களில் மனிதன் செயற்கையாகத் தோற்றுவிக்கும் ஒளிவெள்ளமும் சுற்றுச்சூழல் மாசுகளில் ஒன்றாகக் கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நாம்தான் இந்த ஒளிவெள்ளத்தைத் தோற்றுவித்தோம். நமது செயல்பாடுகள் இரவிலும் தொடர்வதால் இந்த செயற்கை ஒளி நமது வாழ்க்கைக்கு இன்றியமையாததாக ஆகிவிட்டது. ஆனால் ஐந்தறிவு மட்டுமே கொண்ட விலங்கினங்களின் நிலை?

புத்தகக் கண்காட்சி உலா…

சென்ற வருட புத்தகக் கண்காட்சிக்குப் போகவே இல்லை. அதற்கு முந்தைய வருடக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் படிக்காத (நியாயமாக சொல்லப் போனால் அட்டையைக் கூடப் பிரிக்காத) புத்தகங்கள் என்னை தினமும் முறைத்த காரணத்தால்தான் போகவில்லை. வீட்டம்மாவின் தலைமையிலேயே மேற்படி புத்தகங்கள் முறைத்தன என்பது கூடுதல் செய்தி. இந்த முறையும் போகாமல் தவிர்த்து விடலாம் என்றால், அப்படி இருக்க முடியாதபடி செய்துவிட்டனர் ‘வம்சி’ பதிப்பகத்தார்…

பயணத்தின் அடுத்தகட்டம்

இதெல்லாம் தான் என் வாழ்க்கை. அதற்கு அர்த்தம் தரும் கணங்கள். இந்த பழைய நினைவுகள் அவ்வப்போது மனதை வருடிச் செல்லும் போது மனத்திரையில் காட்சி தரும்போது ஒரு மெல்லிய இசை, மந்திர ஸ்தாயியில்,விளம்ப காலத்தில் இழையோடும். இந்த நினைவுகளை காற்றோடு கரைந்து விடாது நான் பதிவு செய்வது இந்த இதமான வருடல்களை இந்த எழுத்து இருக்கும் வரையாவது வாழ வைக்கும் என் ஆசையில் தான்.

லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் நேர்காணல்

ஒரு புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு மொழியாக்கம் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. மூல ஆசிரியரின் சொற்சித்திரங்கள் எனக்குப் பழக வேண்டியது மிக அவசியம். எல்லாவிதமான படைப்புகளையும் ஆங்கிலத்து மொழிமாற்றம் செய்கிறேன் என்றாலும், மெளனியின் படைப்பு அமைதிக்கும், அம்பையின் படைப்பு ஆழத்துக்கும் வித்தியாசம் இருக்குதானே? ஆங்கிலத்தில் படிக்கும்போது இந்த வித்தியாசத்தை வாசகரிடம் கடத்த வேண்டியது அவசியம்.

செகந்திராபாதிலிருந்து

கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் தேவைப்பட்ட கதைக்களத்தை உருவாக்கினார். அவர் மனிதர்களை விவரித்ததில் ஒரு மெய்ம்மை இருந்தது. எப்படியோ அவரால் மனிதர்களை மறைக்கும் அரசியல், சமூக, சமயப் பூச்சுகளை நீக்கி அவர்களை சாமானியர்களாகக் காட்ட முடிந்தது. அது ஒரு தமிழ் பிராமணர் மனைவியாக இருந்தாலும் சரி, திரைப்படங்களில் நடிக்கும் எக்ஸ்ட்ரா, தொழிலில் திண்டாடும் முஸ்லிம் பிசினஸ்மேன், ரப்பர் ட்யூபைச் செருப்பாகப் போட்டுக் கொண்டு சாலைப்பணி செய்யும் தொழிலாளி என்று யாராகவும் இருக்கட்டும், அவர்களை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. புற அடையாளங்களை நீக்கி மனிதர்களின் அடிப்படை மானுடத்தை வெளிப்படுத்தினார் அசோகமித்திரன்.

சன்னமான குரல்

“எனக்கு….இந்த ஆன்மீகம், தேடல் போன்ற வார்த்தைகளில் எல்லாம் நம்பிக்கையில்லை. சொல்லப் போனா அந்த மாதிரி வார்த்தைகளே எனக்குக் கொஞ்சம் பயம். பாருங்கோ, நான் ஒரு நல்ல டூத் பேஸ்டையே ரொம்பக் காலமா தேடிண்டிருக்கேன் அதுவே இன்னும் கிடைச்ச பாடில்ல, இதுல ஆன்மிகமெல்லாம்எப்படித் தேடறது”.

அசோகமித்திரன் தந்த கதைப் புத்தங்களின் கதை

நான் அசோகமித்திரனை முதலில் சந்தித்தது வரலாற்று ஆசிரியர்களால் அடிக்கடி நினைவு கூறப்படக்கூடிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக இல்லாவிட்டாலும் என்னுடைய எழுத்து இலக்கிய ஜாதகத்தில் மாற்றம் எற்பட்ட காரணமாயிற்று. தமிழில் நான் எழுதியதை முதலில் அவர்தான் பிரசுரித்தார். என்னை எழுதும்படி ஊக்குவித்தார். ஊக்குவித்துக் கொண்டே இருக்கிறார்.

நானும், அசோகமித்திரன் அவர்களும்

அசோகமித்திரனின் வீச்சும், பரப்பும், ஆழமும், இன்னமும் பூரணமாக ஆராயவோ எழுதவோபடவில்லை. அவரை நகர மத்யதர வாழ்க்கையைப் பற்றி எழுதுபவர் என்றவர்களுக்கும், அவரை வறுமையில்வாடுபவராக எழுதியவர்களுக்கும் அவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை. தாம் தோராயமாய் அனுமானித்ததை உண்மை போல் சொல்கிறார்கள். வறுமையில்இருப்பது வேறு, வாடுவது வேறு.