The Wolf of Wall Street – திரைப்படம்

ஜோர்டான் பெல்ஃபோர்ட் என்னும் பங்குச் சந்தைத் தரகரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது இப்படம். கடுமையாக உழைத்து, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டி, தனக்கும் பணம் சேர்க்கும் கனவோடு, அனுபவமில்லா இளைஞனாக ஒரு பங்குச் சந்தை நிறுவனத்தில் சேரும் ஜோர்டானுக்கு ஞானஸ்னானம் செய்விக்கிறார் முதலாளி. முதலீட்டாளனை ஏமாற்றி, மேலும் மேலும் பங்குகளை வாங்க, விற்க வைத்து, இரண்டு முறையும் தரகு பெற்றுக் கொள்வதே அடிப்படைப் பாடம். முதலீட்டாளனை, தன் முதலை வெளியே கொண்டு செல்ல விடாமல், மேலும் மேலும் அச்சுழலில் அமிழ்த்துவதே ஒரு பங்குச் சந்தைத் தரகன் செல்வந்தராகும் வழி என்னும் “உண்மையை” எடுத்துச் சொல்லி, தொட்டுக் கொள்ள கோக்கேயினையும் இதர போதைப் பொருட்களையும் பழக்கிவைக்கிறார். தாய் முலையறியும் சேய் போலப் பிடித்துக் கொள்கிறான் ஜோர்டான்.

இருளற்ற இரவுகள்

சமீப காலமாகத்தான் அறிவியல் வல்லுநர்கள், இரவுநேரங்களில் மனிதன் செயற்கையாகத் தோற்றுவிக்கும் ஒளிவெள்ளமும் சுற்றுச்சூழல் மாசுகளில் ஒன்றாகக் கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நாம்தான் இந்த ஒளிவெள்ளத்தைத் தோற்றுவித்தோம். நமது செயல்பாடுகள் இரவிலும் தொடர்வதால் இந்த செயற்கை ஒளி நமது வாழ்க்கைக்கு இன்றியமையாததாக ஆகிவிட்டது. ஆனால் ஐந்தறிவு மட்டுமே கொண்ட விலங்கினங்களின் நிலை?

புத்தகக் கண்காட்சி உலா…

சென்ற வருட புத்தகக் கண்காட்சிக்குப் போகவே இல்லை. அதற்கு முந்தைய வருடக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் படிக்காத (நியாயமாக சொல்லப் போனால் அட்டையைக் கூடப் பிரிக்காத) புத்தகங்கள் என்னை தினமும் முறைத்த காரணத்தால்தான் போகவில்லை. வீட்டம்மாவின் தலைமையிலேயே மேற்படி புத்தகங்கள் முறைத்தன என்பது கூடுதல் செய்தி. இந்த முறையும் போகாமல் தவிர்த்து விடலாம் என்றால், அப்படி இருக்க முடியாதபடி செய்துவிட்டனர் ‘வம்சி’ பதிப்பகத்தார்…

மான்பெண்

பெண்கள் தொடரந்து வர ரேயும், ஜாக்கியும் காரை விட்டு இறங்கினார்கள். அடர்த்தியான கருவாலி செடி புதர்களின் வழியே சென்று, சிறு கரையில் சறுக்கிக் கொண்டே இறங்கி ஓடையை அடைந்தார்கள். ஆண்கள் இருவரும் நீரின் விளிம்பில் நின்றார்கள் ஆனால் பெண்கள் நடன ஆடைகளுடன் தயக்கமின்றி நீரினுள் இறங்கிச் சென்றனர். குனிந்து நீரை அள்ளி முகத்தில் தெளித்துக் கொண்டு எப்போதும் போல அவர்களுடைய மொழியில் பேசிக் கொண்டனர். இளைஞர்களும் தங்களின் டென்னிஸ் காலணிகளை கழற்றிவிட்டு, ஜீன்ஸ் பாக்கெட்டில் தொப்பியை திணித்து கொண்டு அப்பெண்களை தொடர்ந்து நீரினுள் சென்றார்கள்.

தாது வருஷப் பஞ்சம்

பஞ்சங்களை நினைவு கூரும் ஒரு சில அடையாளங்களை இன்றும் சென்னையில் காணலாம். ஒரு உதாரணம், இன்றைய சென்னை நகரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் – இதன் பெரும்பகுதி தாது வருஷப் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே வெட்டப்பட்டது. பல ஆண்டுகள் தமிழகம், ஆந்திரம் ஆகிய பகுதிகளிடையே போக்குவரவுக்குப் பயன்பட்ட இந்தக் கால்வாய் இன்று சர்வ ரோகச் சாக்கடையாகச் சுருங்கி விட்டது. கொள்ளை நோய்களும், லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்பும் பஞ்சங்களின் உடனடி விளைவுகள். குறிப்பாக, பஞ்சத்தின் முக்கிய விளைவு மனித மதிப்பீடுகளின் வீழ்ச்சி. பஞ்சத்தைத் தொடர்ந்து சென்னையில் அடிமை வாணிபம் பல ஆண்டுகளுக்கு நிலை கொண்டது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா?

ஒவ்வொரு நாளும் நீ விளையாடுகிறாய்

வெய்யில்தோய்ந்த உன் முத்துச்சிற்பி உடலை வெகு காலம் நேசித்திருக்கிறேன்.
பிரபஞ்சமே உனக்கு சொந்தமென்று கூறும் அளவிற்கும் நான் செல்வேன்,
நான் உனக்கு மலையிலிருந்து கொண்டு வருவேன் மகிழ்சியான பூக்களை, நீலமணிகளை,