அதே வீடு

குமுதினி  (1905-1986) அவர்கள் தன்  வாழ்வில்  முரண்பாடுகளை எப்படி ஒருங்கிணைத்தார் என்பது எனக்கு இன்னும் ஆச்சரியமே.  அவர் தீவிர காந்தியவாதி.  முரட்டுக்கதர் புடவையை மடிசாராக உடுத்துவார்! தேய்ந்த இரு பொன் வளையல்கள், திருமங்கலியச்சரடு, ஒற்றைக்கால் தோடு, மூக்குத்தி. அவரை என் சிறு வயதிலிருந்து  நாற்பதாண்டுகள்   பார்த்திருக்கிறேன்.  இந்த ஆடையிலும், அணியிலும் மாறுதலே கிடையாது. ஆனால் எங்களை தன்னைப்போல் இருக்கவேண்டும் என்று சொன்னதில்லை.