இம்மூவரின் கலை உலகங்களை வெறும் பாணிகளாக (Style) மட்டுமல்லாமல், கோட்பாட்டு நிலைப்பாடுகளாகவும் ஆராய்கிறது. நாம் ராயை யதார்த்தவாத விவாதங்களின் (பஜான், கிராகாவர் மற்றும் தெலூஸ் ஆகியோரை எதிரொலித்து) வழியாகவும்; சென்னை மாண்டாஜின் உடைந்த லென்ஸ் (ஐசன்ஸ்டைன், பிரெக்ட் மற்றும் சோலானாஸ் & கெட்டினோ ஆகியோரின் தீவிரக் குரல்களை நினைவுகூர்ந்து) வழியாகவும்; கடக்கை மெலோடிராமாவின் துயரக் குரல் (புரூக்ஸ், எல்சேசர் மற்றும் துயரத்தின் நிழல்களோடு) வழியாகவும் வாசிக்கிறோம்.
எழுகை
பூஜ்யத்துக்கும் குறைவான பாகை குளிர்காற்று, சாலையில் குவிந்திருந்த பனிப் பரப்பின் தளர்ந்த மேற்பகுதியை அளைந்துகொண்டிருந்தது. பனியின் ஒளிரும் வெண்மையும், அலங்கார விளக்குகளின் வெளிச்சமுமாக நகரமே ஏதோ கனவுக்குள் மூழ்கிக்கிடப்பதைப் போலவும், புரதான காலத்தில் நிகழும் கிறிஸ்துமஸ் சித்திரப் படக் கதைக்குள் வரையப்பட்ட வண்ண ஓவியங்களின் தோற்றத்தையும் ஒத்திருந்தது.
அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்
வேதாந்தம் என்றால் வேதத்தின் அந்தம் (இறுதி) என்று பொருள். நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் இறுதிப் பகுதியாக வருவன உபநிஷத்துக்கள். இவை மெய்ப்பொருள் குறித்தும், தனிப்பட்ட ஜீவனுக்கும், எல்லாமுமாக இருக்கும் பிரம்மத்துக்கும் உள்ள உறவு குறித்தும் ஆராய்ச்சி செய்கின்றன. இவ்வுபநிஷத்துக்களே வேதாந்தம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. எனவே வேதாந்தம் என்று சொன்னால் அச்சொல் நேரடியாக உபநிஷத்துக்களையே குறிக்கும்.
பிரிந்து சென்ற நளன்
நளனின் உடலில் இருந்து அவனை ஆட்டுவித்த கலி அரசனை விடுவானா? அவளை ஏறிட்டு பார்த்த அரசன் நளன், ஒரு வார்த்தையும் பதில் சொல்லாமல், திரும்ப ஆட்டத்தில் முனைந்தான். நாட்டு மக்கள் மிக்க வருத்தத்துடன் திரும்பினர். யுதிஷ்டிரா! அந்த புஷ்கரனும், நளனும் தொடர்ந்து பல மாதங்கள் ஆடிக் கொண்டிருந்தனர். பழைய நளனுடைய நற்குணங்கள் வெறும் பேச்சு பொருளாக ஆயிற்று.
இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச்
சாதாரண மாவுப்பொருட்களை விட, அதிக செயலாக்கம் செய்யப்பட்ட மற்றும் என்சைம் மூலம் சிதைக்கப்பட்டஇந்த வகை மாவுப்பொருட்களின் வழித்தோன்றல்கள் (Maltodextrins, Dextrose) விரைவான இரத்த சர்க்கரை உயர்வுக்கு வழிவகுக்கும், ஏனெனில் அவை வேகமாக குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகள் அல்லது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் இந்த வடிவங்களை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
மரணப் புன்னகை
வேகமாக நடந்து அவரிடம் சென்றதும் விஜுவை எடுக்க வேண்டும் உள்ளே வாருங்கள் என்றார். கையில் பிடித்திருந்த பையை பிணவறையின் வெளிப்புற வாசல்படிமேல் வைத்துவிட்டு நேராக ஜஸ் பெட்டிகள் இருந்த அறைக்குள் நடந்தேன். விடியற்காலையில் கொண்டு வைத்த பெட்டி கூட்டத்தில் சில பேருக்கு பிடிக் கிடைக்காமலிருந்தாலும் சுரேஷ் அண்ணன் இது தான் பெட்டி என்று சரியாகப் பார்த்துச் சொன்னான்.
இன்றைய ஆஸ்த்ரியா – ஒரு விரைவுப் பார்வை
வியன்னா மக்கள், அதிகம் தங்களது செல்வத்தை வெளிக்காட்டாதவர்கள் என்றே பட்டது. சுறுசுறுப்பாக, நகரம் எங்கும் பொதுப் போக்குவரத்தில் பயணித்த வண்ணம் இருக்கிறார்கள். ஹோட்டல் இளைஞர், எங்களுக்கு வியன்னாவின் மிக முக்கிய சப்வே ரயில் பாதைகள், ட்ராம் மற்றும் பஸ் பற்றி பயணத்தில் விளக்கிக் கொண்டே வந்தார். ஒரு முக்கிய ரயில் ஸ்டேஷனில் என்னிடம், “இங்கு இறங்கினால், டான்யூப் நதியில் படகுகள் மூலம் பயணிக்கலாம். இங்கிருந்து பக்கத்து நாடான ஸ்லோவாக்கியாவிற்குக் (Slovakia) கூடப் பயணம் செய்யலாம்” என்றார்.
றெக்கை அத்தியாயம் பத்து
வேறே ஒண்ணுமில்லே. எனக்கும் ஆல்பீக்கும் டிஸ்பென்சரியிலே ஒரு அசிஸ்டண்ட் இருந்தா நல்லா இருக்கும்னு தோணறது. இன்னொரு டாக்டர் இல்லை. வென்னீர் போட்டு தினம் உபகரணங்களை சுத்தப்படுத்த, தினம் ரெண்டு வேளை தரை மெழுக, சமையல் பண்ண எனக்கு உதவி செய்ய, காய்கறி, பலசரக்கு வாங்கிவர. மாதக் கடைசியிலே நமக்கு வரவேண்டிய பாக்கி ஃபீஸ் வசூல் பண்ண .. ஒரு ஆண், ஒரு பெண் இருந்தா இதெல்லாம் செய்யச் சொல்லலாம், இந்த கிழவன் கிழவி ஜோடி மாதிரி … முடிந்தவரை சம்பளம் தர ரெடி
விட்டல் ராவ் ஓர் கலைச்சுரங்கம்
பொண்ணா இருந்தாலும் சரி, ஆணா இருந்தாலும் சரி, ஒவ்வொரு ஆர்டிஸ்ட் மனசுக்குள்ளயும் ஒரு பொண்ணுக்கான முகம்,ஒரு ஆணுக்கான முகம்னு தனித்தனியா இருக்கும். அந்த உருவம்தான் ஓவியத்துக்குள்ள வரும். அப்புறம் எதுக்கு மாடல்னு உங்களுக்குத் தோணலாம். அது அந்த குறிப்பிட்ட ஒரு கோணத்துக்காக ஒரு சாயலுக்காக. உடல் வளைவுக்காக. அந்த துல்லியத்தைப் புரிஞ்சிக்கறதுக்காகத்தான் மாடலை நிக்க வைக்கிறது
தெய்வநல்லூர் கதைகள்- 29
வாரத்தேர்வு தண்டனை முறைகளில் மாற்றம் வரக் காரணம் நாங்கள் தொடர்ந்து 100% மதிப்பெண்களை அடைந்ததே. எங்களை மாட்டிவிட வேண்டி கடினமான கணக்குகளைக் கேட்டால் அவரிடம் தனிப்பயிற்சிக்கு வருவோர்தாம் அதிக அடிகளைப் பெறும் வாய்ப்புள்ளவர்களாக இருந்தனர். ஆகவே “கெரில்லா” தாக்குதல் முறைகளைக் கையாள ஆரம்பித்தார்.
ஹோசோவில் வாழ்தல்
அமெரிக்காவின் பூர்வகுடி இனங்களில் ஒன்றான ‘நவாஹோ’ மக்கள் தற்போது பெரும்பான்மையினர் வசிப்பது அதன் தென்மேற்கு மாநிலங்களான அரிசோனாவின் வடகிழக்கிலும், நியு மெக்ஸிகோவிலும்தான் (கொஞ்சமாக உடா-வில்). அவர்கள் பேசும் மொழி தென் அதபாஸ்கன் மொழியான நவாஹோ. சமீபத்திய இரண்டு தலைமுறைகள் காலனிய மொழியான ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டாலும், மூத்த தலைமுறயினர் அனைவரும் பேசும் மொழி நவாஹோதான்.
தடுப்பூசிகளின் அலை
வெற்றியின் மகிழ்ச்சி நீடிப்பதற்குள், கட்டர் ஆய்வகம் தயாரித்த தடுப்பூசியால் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. கட்டர் தடுப்பூசியில் உயிருள்ள, வலிமையான போலியோ வைரஸ் இருந்தது. அந்த ஆய்வகத்தின் தடுப்பூசியால் 120,000 குழந்தைகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர்; 200 குழந்தைகள் நிரந்தரமாக முடங்கினர்; 15 பேர் இறந்தனர் (குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள்).
முதல் மல்லிகைப்பூக்கள் (தாகூர் – பிறைநிலா)
மேகங்கள் மிதந்து செல்லும் ஆகாயத்தில் அவற்றிற்கு வடிவங்கள் (யானை, சர்க்கஸ் கோமாளி, கரடி) அமைத்துக் கொடுத்து அவற்றைப் பெயர்சொல்லி ஊகிக்கக் கூறி விளையாடும் குழந்தைகள் விளையாட்டு! பிற்காலத்தில் திறந்தவெளிக் கச்சேரிகளில் ஆகாயத்தை நோக்கியவாறே கேட்ட ‘சௌந்தரராஜம் ஆச்ரயே’வில் பாடகர் ‘நந்த நந்தன ராஜம்’ எனப்பாடும்போது குட்டிக் கிருஷ்ணனின் லீலைகளை அந்த மேகங்களில் கண்டு களிக்கத் தோன்றியது.
இயற்கை ஒரு ஆடம்பரம் அல்ல, மூளைக்கான மருந்து
இந்த புத்தகத்தின் சிறப்பு என்னவெனில், ஒரு பாமரனுக்குப் புரியும் வகையில், அதாவது கவனத்தைத் திரும்பத் திருத்தவும் அல்லது சீராக்கவும் (attention restoration) அமைத்த விதம். நாம் ஒரு நாள் முழுக்க வெவ்வேறு பணிகள் மற்றும் கணினி, கைபேசி போன்றவற்றில் ஈடுபட்டு சோர்வடையும் உணர்வு பல நேரங்களில் இருப்பது உண்டு. அந்த நேரத்தில் வெளியில் பசுமை சூழ்ந்த இடத்திற்குச் சென்று ஒரு 15-20 நிமிடங்கள் நடந்துவிட்டு வரும்போது, ஒருவிதமான நிம்மதியை அனுபவித்திருப்போம். அந்தக் காலத்தையும் உணர்வையும், பெர்மன் ஆராய்ச்சிக் கணக்குகளோடு இணைத்து காட்டுகிறார்.
மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்
பூமி, வளிமண்டலம், சொர்க்கம் (நரகம்) என்று அண்டத்தை மூன்று பெரும் பிரிவுகளாகச் சொன்னது. மண்ணிற்கு கீழே அதிலேயே நாட்டம் கொண்டுள்ள உலகமொன்று, மண்ணில் ஒரு காலும், விண்ணில் ஓரு காலும் பதிக்க ஆசைப்படும் நம் உலகம், தேவர்கள் வாழும் விண்ணுலகம்; நாம் 14 உலகங்களை அறிந்திருக்கிறோம். சத்வம், ரஜஸ், தமஸ் என்று மூன்று குணங்கள்; வாதம், பித்தம், கபம் இவை மூன்றின் ஆதிக்கத்தைப் பொறுத்து உடலில் வரும் நோய்கள், ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள்.
2025 பென் ஹீனி விருதை வென்ற டாம் பாலின் கவிதை
மேலும் அங்கிருந்தவற்றை
இசைக்கும் நுகர்ப் பெட்டிகள் எனலாம்;
அலங்காரமான பண்டையப் பொருட்கள் எனலாம்.
ஆனால் அவை அனைத்தும் வீண் பெரும் சிக்கல்களே,
இறந்த ஆன்மாவின் பெட்டகங்கள்.
போதும் என்ற மனமே…
நம்மிடையே மிகச் சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எப்பொழுதுமே சரி செய்ய வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார்களே தவிர, சமயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை. எதைக் கட்டாயம் சரி செய்ய வேண்டுமோ அவற்றை சரி செய்து, மற்றவற்றைக் கொஞ்சம் பாராமுகமாகக் கடந்து, வயதில் மூத்தோருக்கு எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட அவர்கள் சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை – 2
அவள் தன்னை அலங்கரித்துக்கொண்டு வெளியே புறப்படுகிறாள். வழியில் காற்று வீசுகிறது, அதன் வேகம் அவளைத் தள்ளுகிறது. அவளுடைய உடை காற்றில் படபடத்தும் மேனியில் ஒட்டியும் அவள் வீட்டிலிருந்து அணிந்த கோலத்திலிருந்து மாறுகிறது, கூந்தல் கலைகிறது. காற்று வீசுவது வசந்தகாலத்தில் நடப்பதுதான் என்றாலும் அவளுக்கு அந்த நேரத்தில் வீசிய காற்று தன் அலங்காரத்தைக் குலைத்தது பிடிக்கவில்லை, கோபப்பட்டு முகம் சுளிக்கிறாள்.
அறிந்து கொள்ளும் விழைவே, இங்கே நம் இருத்தலை அர்த்தமுள்ளதாக்கிறது
அறிவுக்கான இந்தப் பயனற்ற ஏக்கத்தின் மீது ஸ்டாப்பர்டின் நாடகங்கள் அனுதாபம் கொண்டாலும், அந்தத் தேடல் நாடகக் கதாபாத்திரங்களை மற்றவர்களைப் புறக்கணிக்க வழிவகுக்கும்போது, அந்த அனுதாபம் விலகிவிடுகிறது. ஒரு திருமணத்தைக் காப்பது, மரணத்தின் பிடியில் உள்ள மனைவியைப் பராமரிப்பது, அல்லது தத்தெடுத்த குழந்தையைக் கண்டுபிடிப்பது போன்ற மனிதச் செயல்கள் இருக்கும்போது, உலகில் உள்ள செயல்பாடு என்பது அறிவுத் தேடலை விட மிகவும் முக்கியமானதாகிறது.
ஜானகி க்ருஷ்ணன் – அஞ்சலி
Curiosity and Creativity defined her. Whim also played a big part in her decisions. She learnt Kannada because my sister moved to Bengaluru and Spanish, just for fun. Perusing online English, Tamil and Kannada news outlets was part of her daily routines. She was also fond of good movies and TV shows, often getting involved with the story. She had choice epithets, especially for the villains in the show.
