தெய்வநல்லூர் கதைகள் – 6

This entry is part 6 of 18 in the series தெய்வநல்லூர் கதைகள்

ராமர் கோவில் கருப்பனுக்கு இரு கிடாக்கள் செய்த உயிர்தியாகத்தில் பிறந்த பிள்ளை காணாமலானது குறித்து அவர் தாய் நியாயம் வேண்டினார். வெள்ளானைக்கோட்டை ஊர்க்காரர்கள் எண்திசையும் கடுகி  முடுகி  தேடுகையில்  திருமண விருந்தின் பின்விளைவாக ஊருணி சென்றிருந்த மணியின் தாத்தா திரும்பி வந்து நிகழ்வைக் கேள்வியுற்று சற்றே சிந்தித்த அவர் வெடித்த பலாவின் சுளையென மீசைக்குள் தெரிந்த வாய் விட்டு சிரித்து இருவர் தன்னைப் பின்தொடர ஆணையிட்டு “பொறவாசலில் சோறாக்குமிடத்திற்கு” வந்து இரண்டடி விட்டமும், மூன்றடி  உயரமும் கொண்ட சேமியா பாயாச வட்டைக்குள் பார்க்கும்படி சொன்னார்.

வீடு

கலர் டிவியே பார்த்திராத எனது தாத்தா ஐ ஃபோனில் PUBG ஆடிக்கொண்டிருப்பார். அவரை பார்த்தே இராத என் குழந்தைகள் அவரோடு ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருப்பர். இக்கால அண்டை வீட்டு பென் எங்கள் புழக்கடை வாவியில் தண்ணி இறைத்துக்கொண்டிருப்பார். இது போல.