மணற்காடர் கவிதைகள்

ஒரு கடுகைத் துளைத்து எப்படி
ஏழு கடலைப் புகட்ட முடிந்தது?
ஒரு கடுகைத் துளைக்க முடிந்ததென்றால்
ஏழு கடலைப் புகட்டுவதா பிரமாதம்?

தேள் கொட்டிய இரவில் – நிஸ்ஸிம் எஸிகியொல்

‘உன் கடந்த பிறவிப் பாவங்கள்
இன்றிரவு தொலைந்து போய்விடும்’ என்றனர்.
‘இன்று நீ படும் துன்பம்
அடுத்த பிறவியின் துயரை குறைக்கும்’ என்றனர்.
‘நீ அனுபவிக்கும் வலி
இந்த மாய உலகில்
உன் தீய செயல்களுக்கும்
நற் செயல்களுக்கும் இடையேயான
சமன்பாட்டை குறைக்கலாம்.’ என்றனர்.

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

எனது நிலையற்ற
நியாயத்தின் உண்மை
நிரூபிக்கப்பட்ட போது
அப்பொழுதுக்கு அப்பொழுதென
சாத்தியத்தில் என் மனம்
வழியை விட
நான் காத்திருக்கும் போது
யாருக்கும் தெரியாமல்
என் மனம் கரைவதை
நான் பார்த்தேன்

அக்டோபர் கவிதைகள்

சிறு அகலின் சுடர் தாங்கும் நேசத்தின் நினைவென
கனவின் தலைகீழ் உலகில்
தலை இல்லா மனிதனாக
இத்தனை பெரிய உலகையும் அணைத்துக் கொண்டு நடந்து போகும்
குருவியின் கால்கள் கொண்ட ஒருவனாக

முகநாடகம், மேலெழுந்தபோது

அந்தச் செடியின் ஜீவன்
வானம் பார்க்கும் இளமிலைகளில்
தீரா நடனமாடிக்கொண்டிருந்தது
குருத்தொன்று தலையில்
பொங்கியெழத் தயாராய்.

திக்குதல் – கே.சட்சிதானந்தன்

திக்குதல் ஓர் ஊனமல்ல.
அது ஒரு பேச்சு முறை.
திக்குதல் என்பது சொல்லுக்கும் அதன் பொருளுக்கும்
இடையே வீழும் மௌனம்

ராம்கரூவின் வாரிசுகள்

துன்புறுவது மடமை என்று
களித்திருக்கும் மக்களே!
துக்கித்திருப்பது
ராம்கரூசியர்களின் உரிமை.
அதை மறுக்காதீர்.

ஓர் அபூர்வ விலங்கு

அதோடு
வாடிக்கையாக வந்து செல்பவர்கள்
போலிஸுடன்
உடன்கட்டை ஏறுதலும்
போலிஸ் சிலரோடு
உடன்போக்கு செல்லுதலுமான
கயமைகளை
ஆழ்ந்தவதானித்துக்கொண்டு
வறியயுண்ணியாகவும்
மிரட்டுண்ணியாகவும்

எழுத்து, மனிதன், நாய்

நான் அந்த எழுத்துக்களின்
மீது அடர்த்தியான இலைகள்
கொண்ட ஒரு மரத்தை வைக்கிறேன்
பிறகு ஒரு தெருவை வைக்கிறேன்
….
இப்பொழுது அந்த தெருவில்
நடந்து சென்ற அந்த மனிதர்கள்
அந்த இரவிலும்
அதற்கு முன் அந்த இருளிலும்
…
திடீரென மழை வரவே
எல்லோரும் நனைந்தார்கள்
எழுதிய காகிதத்தில்
இருந்தவர்களும் நனைந்தார்கள்

வ. அதியமான் கவிதைகள்

ஒளிவிடும்
சின்னஞ்சிறு
கூழாங்கல்லும்
இருள் விழுங்கும்
பெருங்குன்றும்
குளிரக் குளிர
புனலாடி
அமர்ந்திருப்பது
ஒரே கரையில் தான்

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

அந்த அறையில் இருந்தவனை
புத்தகத்தின் வழியே
வெளி உலகிற்கு
அழைத்துச் சென்ற அது
அவனை மீண்டும்
அவ்வறைக்கே அழைத்து வந்து
எழுதச் சொல்லியது

சரவணன் அபி கவிதைகள்

சலசலத்து விரையும் ஆற்றின் போக்கில்
ஓரிடம் சிக்குண்டு
மேனியுரு மாறும் கல்லின்
போக்கற்ற தீர்வில்
அமைந்திருக்கிறது
நகர்ந்து செல்வதும்
நிலைகொண்டு எதிர்நிற்பதற்குமான
தெளிவு

கை தவறிய மூக்குக் கண்ணாடியின் ஞானோபதேசம்

கார்த்திகையின் பெருக்கில்
தாவிக் குதிக்கும்
கெண்டையாக,
குளத்து நீரில்
நழுவிச் செல்லும்
அர்த்தங்கள்.

வேணு தயாநிதி கவிதைகள்

பனி பூத்து 
பனி கொழித்து
உப்பளம் போல் 
நிறைந்து விட்ட
நடைபாதையை தாண்டி
சாலையின் ஓரத்தில்
தியானித்து நிற்கும், 
பிடுங்கி 
தலைகீழாய் நட்டது போல் 
இலையின்றி நிற்கும் 
பிர்ச் மரம்.

வ. அதியமான் கவிதைகள்

ஒவ்வொரு
அதிகாலையிலும்
அதிசுத்தமாய்
கழுவி முடிக்கும்
என் கப்பரைக்கு
ஒவ்வொரு
அதிகாலையிலும்
எங்கோ ஓர் உலை
கொதிக்கிறது

ஆனந்த் குமார் கவிதைகள்

ஒழுங்குபடுத்தினேன்
ஒவ்வொரு பொருளையும்
அதனதன் இடத்தில்.
சிறு இடைவெளி போதும்
ஒவ்வொன்றும்
அதனதன் தனிமையில்.
சரியான இடத்தில் அமர்ந்தவுடன்
ஒவ்வொரு பொருளும்
அமைதி கொள்கிறது.

நவநீதா தேவ் சென்: ஐந்து கவிதைகள்

என் வனவாசம் முடிந்துவிட்டது, தாயே
வனம்
இப்போது
எனக்குள் வாழ்கிறது.

கடலும் காடும்

அலைகளிடமிருந்து
அதுகாறும் காத்துநின்ற
தன் மணல் கோபுரத்தை
பச்சை வண்ண வாளியில்
பெயர்த்தெடுத்து வந்து
தங்கமீன்கள் வளரும்
தொட்டியில் பரப்பி
என் கடல் என்றான்

புத்தர் சிறு ஒலியாகவும் இருந்திருப்பார்

சிறு கீறலின் நிம்மதியின்மையில்
ஒரு அர்த்தம் துவங்கும் போது
புத்தராதல் மிக எளிது,
ஆனால்
தான்தான் புத்தரென்பதை உணர்ந்து கொள்ளுதல்
மிகக் கடினம்.

உரைகல்; கடந்த வழி -கவிதைகள்

பற்றிலேதும் வரவின்றி
உதித்து விரைந்து
உதிரும் நாட்களுக்குள்
கணக்கேதுமின்றி
எதையும் பதியாமல்
தடமெதுவும் இல்லாமல்
மகிழ்வேதும் தாராமல்
துயரதுவும் கொள்ளாமல்
மறைந்து போவது
குறைவென்பதா அன்றி அதுவே
நிறைவென்பதா

கசப்பு; யாரு சாமி நீ- கவிதைகள்

கீழே சிந்திய தேனை
பருக வந்திருக்கும்
எறும்புகளை
பாவம் என்‌‌‍‌றெண்ணுவதற்குள்
மெல்ல எட்டிப் பார்க்கிறது
பொறாமை.

கவிதைகள் – வ. அதியமான்

யசோதா

தேகமெங்கும்
குரல் முளைத்து
கூவி நிற்கிறாய்

கொள்ளும் செவிகள்
திரும்ப வருமென
இடுப்பில் கையூன்றி
உறுதியாய்
காத்திருக்கிறாய்…

கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார்

எதுவும் அப்படியே இருப்பதில்லை
காலை மாலை இரவென
விரட்டிய போது
அதில் நான்
சிக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்
இப்படியாயின்
ஒரு வயோதிகனின்
அந்தரங்கத்தின் ஆசை
மேலே மிதந்து வந்தது

சிசு, அப்போது, நெடும் பயணி

அதனால் என்ன?

வளையாத வானத்தில்
ஒரு வளைந்த வானவில்லும்
வளைந்த வில்லில்
ஒரு வளையாத அம்பும்
அத்தனை ஆச்சரியம்
ஒன்றுமில்லை காண்!

கூடு, அதிகாலை & (அ)சாத்தியம்

தானே ’புன்னகையாய்’
’புன்னகை’ அதற்கு அதுவே புன்னகைப்பதில்லையாய்ப்
புதிராய்ப் புன்னகைக்கிறார்

இது
போதும்—
ஆசையில் வறண்ட என்
அகங் குளிர
நிறைவாய்ப்
புன்னகைக்கிறார்

இடம், தபால்காரன் & மனதின் பாதை

ஒரு நினைவில் தப்பிய மனிதனாகிய நான்
வீணாய் எனது உடலின் சுமையைச் சுமப்பவன்
வழுவாத சலிக்கும் பாதையில் நடப்பவன்
பேசி தீர்த்துக் கொள்வதற்கு
மொழி இல்லாதவன்
நான் எல்லோரையும்
சமாதானம் செய்து கொள்கிறேன்

ஒளி மனிதன் & காசநோய்க்கு ஒரு பாடல்

(நித்ய சைதன்ய யதியின் “நோயை எதிர்கொள்ளல்” கட்டுரைக்கு)

என் வேர்கள் பலவீனமானவை
சந்தோஷத்தை சரியாக உறிஞ்சக்கூட தெரியாதவை
அறுபது சதவீதம் மாலைநேர உளைச்சல்களாலும்
நாற்பது சதவீதம் கூரையை முட்டும் இருமல் ஒலிகளாலும் ஆன
ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு
மறுபடியும் வந்து நிற்கிறது இந்த உடல்
கற்பனாவாத யுகத்தின் செல்லக் குழந்தையே இவை உன் கைங்கர்யம்தானா

ராஜா நடேசன் கவிதைகள்

மண்ணில் இருந்து வந்தது
மண்ணுக்கே செல்கிறது
அன்னமிட்ட மண்
எடுத்துக்கொள்கிறது கொடுத்ததனைத்தையும்
உயிர்ப்பிக்க வரும் தேவன்
எடுத்துச்செல்ல ஒன்றும் இல்லை
இறைஞ்சி நிற்கும் கடவுளிடம்
கையளிக்கிறது மண்

வ.அதியமான் கவிதைகள்

எழுந்து நின்றிருந்த
வானவில்லும்
எரிந்து ஒளிர்ந்திருந்த
மின்மினியும்
வண்ணம் நுரைத்திருந்த
புஞ்சிறகும்
வானுக்கெழுந்திருந்த

இன்பா – கவிதைகள்

ஆற்று நீரில் குளித்துவிட்டு
கரையேறிய நீர்நாய்
அருகிலிருந்த மஞ்சள் ஆரஞ்சு செடியில்
மோதிவிட்டுச் செல்கிறது
தூங்கிவிட்ட குழந்தையின்
கைநழுவி விழும் பொம்மையைப் போல்
குட்டி ஆரஞ்சு காம்பிலிருந்து நழுவி விழுகிறது

ரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்

1.    அன்றாடப் பணி காரண காரியம் உருப்பெருவதன் வழி ஒரு சாய்சதுரம் அசைவது போல் நிகழ்கிறது, என் அன்றாடப் பணி   அற்புதமான ஒரு சூரிய அஸ்மதனதிற்கு எதிரே துப்பறிவாளனைப் போன்ற துணிகரமான பார்வை. இனி நிகழப்போகும், என்னால் காணமுடியாத ஓர் இனிய நாளின்மீது உடனடியாக எழுதப்படும் வேகமாக “ரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்”

புஷ்பால ஜெயக்குமார் – கவிதைகள்

நுரைத்து வரும் குமிழிகள் நொடியில் மறையும்
எனது சுதந்திரம் அர்த்தமற்றது என்னைப் போலவே
மிகைகொள்ளாது நிலைபெற்ற வழியில் வெடித்தபோது
வெளியே நடமாடுகிறேன் நான்

இரா. கவியரசு – இரு கவிதைகள்

ரேகைகள் கலக்கும் போது
தொலைகின்றன நதிகள்
விட்டுவிடக் கூடாது என்பதற்காக
இன்னும் இறுக்கமாக
பற்றிக் கொள்கிறோம்

கவிதைகள் – கா. சிவா

பல தடைகளைத் தாண்டி
இறையுருவைத் தரிசிக்கையில்,
மெய்யன்பை எப்போதாவது
எதிர்கொள்கையில்,
இயையிசையின் ஒரு சுரம்
உயிராழம் தீண்டுகையில்…

கவிதைகள்- வ. அதியமான்

என் பெருவிரலுக்கும்
ஆள்காட்டி விரலுக்குமான
இதே விரலிடுக்கில்
எத்தனை முறை
எத்தனை உலகங்கள்
நழுவிப்போயிருக்கிறது
என்பதை
மறந்து போனபடி…

வைரம் பாய்ந்த மரம்

விறகாக எரியும் போது முனகும் ஒலி
காட்டில் உள்ள
எல்லா மரங்களையும் குழப்புகிறது
விதை

கவிதைகள்

கணினியில் ஏதோ தட்டிக்கொண்டிருப்பான்
வாய்க்கு வராத பெயரிலிருப்பவற்றை
வாய்க்குள் திணித்து
நவநாகரிகத் தொட்டிலுக்குள்
சவப்பெட்டியாகக் கிடப்பான்

இரா.கவியரசு-கவிதைகள்

நள்ளிரவில்
மலர்களாக விழித்திருக்கும் மரம்
சிணுங்கினால் கூட போதும்
முழுமையாகத் தொலைந்து விடலாம்
சிறிது தலைகாட்டி வரலாம் வா !

காலத்தின் கடைசிச் சொட்டு & அப்பாவின் முகம்

ஆயிரம் நிறங்களில் மிதந்தன
ஓசைகள் சருகுகளின் மீது
பெய்யும் மழை போல
மிக நுண்ணியதாய்

கவிதைகள்- கு.அழகர்சாமி

ஒன்று பலவாய், பல ஒன்றாய், உருவருவாய்
ஒன்றில்லா ஒன்றாய், ஓயா இயக்கமாய்
ஆணிப்பொன் அம்பலத்தாடு ஆனந்தக்கூத்தா!

மொழிபெயர்ப்பு கவிதை – குண்டர் க்ராஸ்

சிறு பிராயத்தில்
திரும்பிய பக்கங்களிலெல்லாம்
‘கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்’
என்ற அறிவிப்பில் உறைந்துபோனேன்

மினியாப்பொலிஸில் திருப்பள்ளியெழுச்சி

முற்றத்து மணியசைத்து
விளையாட
அழைத்து நிற்கும் காற்று
பொறுமையிழந்து
அனுமதியில்லாமல்
அறைக்குள் நுழைகிறது.

கவிதைகள் – பானுமதி ந. , அனுக்ரஹா ச.

யாரும் உடன் இருக்கையில்
அது பேசுகிறது தன் மொழியில்
யாருமற்ற போது அதன்
இரைச்சல் பேரலைகள் போல்
அதன் கூக்குரல் விழுங்கும்
உலகனைத்தையும்;பின்னரும்
பசிக்கும் அதற்கு. நீ வந்து
அருகில் அமர அது அடங்கிவிடும்.