
புராதன வெளியில் வந்திறங்குகின்றன
வலசைப் பறவைகள்.
வரப்புகளில் தேங்கும் நீரில்
சுற்றிலும் புல்வெளியில்
அவை தனித்துப்
பொருத்தமற்று தோன்றுகின்றன.
பறவைகள் ஒன்றை ஒன்று
பார்த்து நிற்கையில்
புல்வெளியின் பரப்பில்
மார்கழி இரவின் பனி
காலைக் கதிரவனின் வெம்மையில்
மெல்லக் கரைந்து கொண்டிருக்கிறது.