மழையில் நடுங்கியபடி நாம் நின்றுகொண்டிருந்த காலத்தில்
தொட்டுக்கொள்ள முடியாத ஜிமிக்கிகள்
அழகாகப் பேசிக் கொண்டிருந்தன
Author: இரா.கவியரசு
நாளெனும் மோதிரம்
மெலிந்த விரலிடமிருந்துப் பிடுங்கி
நீர் அணிந்த மோதிரம்
அருவி பாயும் ஆழத்தில்
இரா. கவியரசு கவிதைகள்
அகலாத நறுமணத்தைக் கழுவினேன்
தண்ணீருக்குத் தாவியது மணம்
தொடுகின்ற விரல்கள் தோறும்
மலர்கின்ற மலரதனை
இதழ்களாகப் பிய்க்க முடியவில்லை
இரா. கவியரசு- கவிதைகள்
நினைவுகளற்ற காற்றிடம்
வீட்டைப் பற்றியும்
குழந்தைகளைப் பற்றியும்
சொல்லிக் கொண்டேதான் இருக்கிறான்
நிறுத்துவதே இல்லை
அது ஒரு வியாதி
சொல்லுதல்தானே வாழ்வு
இரா. கவியரசு – இரு கவிதைகள்
ரேகைகள் கலக்கும் போது
தொலைகின்றன நதிகள்
விட்டுவிடக் கூடாது என்பதற்காக
இன்னும் இறுக்கமாக
பற்றிக் கொள்கிறோம்
வைரம் பாய்ந்த மரம்
விறகாக எரியும் போது முனகும் ஒலி
காட்டில் உள்ள
எல்லா மரங்களையும் குழப்புகிறது
விதை
இரா.கவியரசு-கவிதைகள்
நள்ளிரவில்
மலர்களாக விழித்திருக்கும் மரம்
சிணுங்கினால் கூட போதும்
முழுமையாகத் தொலைந்து விடலாம்
சிறிது தலைகாட்டி வரலாம் வா !
வெயில் நிழல் மணல் இலை & ஒளியுடன் பேசுதல்
பஞ்சுமிட்டாயின்
நுண்ணிய இளஞ்சிவப்பில்
ததும்பி அலையும் ஒளி
இருளை அணைத்துக் கொண்டு
தன் கதையைச்
சொல்லத் தொடங்குகையில்
நதியெனும் மாலை
வானக்கருப்பையில் முட்டி மோதும்
உயிர்ப்பட்டத்தின் வால்
அசைந்து கொண்டே இருக்கிறது
நதியின் ஆழத்துக்குள்.
பாசிகளும் மீன் குஞ்சுகளும்
கருத்தரிக்கும் காலம்
வானத்தின் குரலிலிருந்து கசிகிறது
கவிதைகள்
பாதங்களைத் தவிர வீட்டுடன் அதிகமாகப் பேச
வேறு யார் இருக்கிறார்கள்.
வெகுநாளைக்குப் பிறகு
தூசியைத் துடைக்க வருகிறவன்
கதவுகளைத் திறக்கும் போது
பாதங்களை மட்டுமே பார்க்கிறது வீடு.
எழுத்தாளன் கவிதை
என்ன வேண்டுமானாலும் எழுதலாம்
உன் எழுத்துக்களை மட்டுமே வாசிக்கிறது இவ்வுலகு
ஒயினை அருந்தியபடியே
புகைமூட்டம் மணக்கும்