அதிரியன் நினைவுகள் -21

This entry is part 21 of 21 in the series அதிரியன் நினைவுகள்

எனது முன்னிரவு நேரங்களை உடுக்களின் வடிவமாறத்தின் மீதான மனிதப்பார்வையின் போக்கிற்கு அடிக்கடி செலவிட்டபோதிலும்,  வானியல்கணிதம் மற்றும் எரிநட்சத்திர பேருடல்கள் தரும் தெளிவற்ற ஆருடங்களில் எனது ஆர்வத்தைக் கூடுதலாக உணர்ந்தேன். ஆனாலிந்த கிரகங்களின் தன்மையிலமைந்த மனிதர் வாழ்க்கையின் இவ்விநோதமான மாற்றுப்பாதை  பிரச்சினை,  எனது உறக்கமற்ற நேரத்தை அடிக்கடி ஆக்கிரமித்திருந்ததால்; வானியல் கணிதத்திலும், எந்த எரிநட்சத்திரங்களின் பேருடல்கள் தெளிவற்ற ஆரூடங்களை முன்வைத்தனவோ

அதிரியன் நினைவுகள் -20

This entry is part 20 of 21 in the series அதிரியன் நினைவுகள்

நான் வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான், போரில் வாகைசூடிய நம்முடைய ஆறாவது படையணி பிரிட்டிஷ் பிரதேசத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. ஏற்கனவே இங்கிருந்த நம்முடைய ஒன்பதாவது படைப்பிரிவு வீரர்களில் அனேகர்,  பார்த்தியர்களோடு நாம் யுத்தத்தில் இருந்த முகாந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு வெடித்த கலவரத்தில் கலிடோனியர்களால்  வெட்டுண்டு மடிந்து அவல்நிலையில் இருக்க, இவர்கள் இடத்தில் ஆறாவது படையணி. இத்தகைய அசம்பாவிதங்கள்  மீண்டும் நிகழாமல் தடுக்க இரண்டு நடவடிக்கைகள் தேவைப்பட்டன.

அதிரியன் நினைவுகள் -19

This entry is part 19 of 21 in the series அதிரியன் நினைவுகள்

அளவிற்பெரிய இச்சிற்பங்கள் ஒரு முகத்தை மிக அருகில் சென்று பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும்.  நீள அகலத்தில்  கூடுதலாகவும்; தனித்த தன்மையுடனும்; கொடுங்கனவில் வருகிற காட்சிகளாகவும், தோற்றங்களாகவும்; உறக்கம் கலைந்தபின்னும் நினைவில் நிற்கும். வடிக்கின்ற உருத் தோற்றங்களில் அப்பழுக்கற்ற பரிபூரணத்தை வேண்டினேன்; சுருங்கச் சொல்வதெனில்,  இருபது வயதில் அகால மரணமடைந்த ஒருவனை அவனுக்கு வேண்டியவர்கள் எந்த அளவில் நேசிப்பார்களோ அந்த அளவில் கடவுளுக்கு நிகரான பரிபூரணம்

அதிரியன் நினைவுகள் -18

This entry is part 18 of 21 in the series அதிரியன் நினைவுகள்

பலனாக, புத்தம்புது மனிதனாக, பிரம்மச்சாரியாக, ஒரு மிகத்தீவிர பிரம்மச்சர்ய உல்லிஸ்(Ulysse)1 ஆக, குழந்தைப்பேறின்றி, மூதாதையரென்று எவருமின்றி, எனக்குள் ஒர் இத்தாக்கியனாக(Ithaque) இருப்பதன்றி வேறு எதையுமே விரும்பாமல் இருப்பதன் நன்மையையும் அப்போதுதான் உணர்ந்தேன். அடுத்து, எந்தவொரு ஊரையும் முழுமையாக நான் சொந்தம் கொண்டாடியதுண்டா என்றால், இல்லை. அத்தகைய உணர்வுக்கு நான் என்றுமே ஆளானதில்லை

அதிரியன் நினைவுகள் -17

This entry is part 17 of 21 in the series அதிரியன் நினைவுகள்

நமது வணிகர்கள் சில சமயங்களில் சிறந்த புவியியலாளர்களாகவும்,  சிறந்த வானியலாளர்களாகவும், நன்கு  கற்றறிந்த இயற்கை ஆர்வலர்களாகவும் இருக்கின்றனர். அதுபோல  மனிதர்களைப் புரிந்து நடக்கும் மனிதர் கூட்டத்தில் வங்கியாளர்களையும் நாம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இப்படியான தனித் திறமைகள் எங்கிருந்தாலும் அவற்றை நான் பயபடுத்திக்கொள்வேன். ஆக்ரமிப்புகளுக்கு அல்லது அத்துமீறல்களுக்கு எதிராக ஒட்டுமொத்த  சக்தியையும் திரட்டிப் போராடியுள்ளேன். கப்பல் உரிமையாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு காரணமாக வெளி நாடுகளுடனான கட்டுப்பாடுகள் தளர்ந்து பரிவர்த்தனை பெருகியது

அதிரியன் நினைவுகள் -15

This entry is part 15 of 21 in the series அதிரியன் நினைவுகள்

தங்கள் உயிருக்கு இனி ஆபத்தில்லை என்பதால் மகிழ்ச்சியுற்ற ஒவ்வொருவரும் இறந்தவர்களை விரைவாக மறந்தார்கள். எனது இரக்கக் குணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது, காரணம் ஒவ்வொருநாளும் வன்போக்கு என்கிற எனது இயல்பான குணத்திலிருந்து விலகி, விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் மென்போக்கை நான் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை  புரிந்துகொண்டிருந்தார்கள். எனது எளிமையைப் பாராட்டிய அதேவேளை, அதற்கென்று  ஒரு கணக்கீடு இருப்பதாகவும்  நினைத்தார்கள். இறந்த மன்னர் திராயானுடைய பெரும்பாலான  நற்பண்புகள் அடக்கமானவை; என்னுடையவையோ  பலரையும் மிகுந்த வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தன; கூடுதலாக பலரும் எனது குற்றத்தில்  ஒருவித செய் நேர்த்தியைப் பார்த்தனர். 

மார்க் தெரு கொலைகள் -3

This entry is part 3 of 5 in the series மார்க் தெரு கொலைகள்

அந்த நாளிதழின் மாலைப் பதிப்பு, அங்கே இன்னமும் இனம் புரியாத பரபரப்பு நிலவியதாகச் சொன்னது. அந்த வளாகம் மீண்டும் கவனத்துடன் ஆராயப்பட்டது. சாட்சிகளை மீள் விசாரணை செய்தார்கள். ஒன்றும் பிரயோஜனமில்லை. அதில் ஒரு பின் குறிப்பாக, அடோல்ப் லெ பான், (adolphe le bon) கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார் என்றும், முன்னர் சொன்ன விவரங்களை விட மேலதிகமாக அவரை இக் கொலைகளில் தொடர்பு  படுத்த காரணிகள் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் சொன்னது.

மார்க் தெரு கொலைகள் -2

This entry is part 2 of 5 in the series மார்க் தெரு கொலைகள்

இங்கே மேடம் லிஸ்பனேயைப் பற்றி எந்தச் சுவடுமில்லை. புகைக்கரி அதிகமாக மண்டியிருந்து கணப்படுப்பில். புகை போக்கியை ஆராய்ந்ததில் (சொல்வதற்கே அச்சம் தரும் ஒன்று) தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்த மகளின் உடல் தென்பட்டது. அது கீழே இழுக்கப்பட்டது. அந்தச் சிறிய துவாரத்தில் குறிப்பிடத்தகுந்த நீளத்திற்கு அந்த உடல் பலவந்தமாகத் திணிக்கப்பட்டுள்ளதைப் பார்த்தார்கள். அந்த உடலைப் பார்வையிடுகையில் அதன் தோல் உரிந்து இருந்ததும், வன்முறையாக அந்த உடல் உந்தி மேலே தள்ளப்பட்டிருந்ததும், துண்டிக்கப்பட்டதுமான கோரக் காட்சியைக் கண்டார்கள்

அதிரியன் நினைவுகள் – 13

This entry is part 13 of 21 in the series அதிரியன் நினைவுகள்

பேரரசர் இறுதியாக ஹத்ராவின்(Hatra) முற்றுகையை நிறுத்திக்கொண்டு, யூப்ரடீஸ் நதியைத் திரும்பக் கடக்க முடிவு செய்தார்,  அது நிறைவேறாமலேயே போனது. ஏற்கனவே சுட்டெரிக்கும் வெப்பம், இதனுடன் பார்த்தீனிய வில்லாளர்களின் உபத்திரவமும் சேர்ந்துகொள்ள அவர்கள் திரும்பிய  பயணம் பெரும்சோதனையாக இருந்துள்ளது. ஒரு சுட்டெரிக்கும் மே மாத மாலையில், நான் நகரத்தின் நுழை வாயில்களுக்கு வெளியே, ஓரோண்டஸ்  நதிக்ரையில் நலிவுற்ற நிலையில் பேரரசர், அட்டியானுஸ்,  மற்றும் அரசகுடும்ப பெண்கள் என்கிற  சிறு கூட்டம்  காய்ச்சல், பதற்றம், சோர்வு ஆகியவற்றால் பாதித்திருக்க கண்டேன். மன்னர் திராயான் அரண்மனைக்குத் தான்  குதிரையில் திரும்பவேண்டுமென தெரிவித்தபோதும், அதற்குரிய உடல்நிலையில் அவரில்லை

அதிரியன் நினைவுகள் – 12

This entry is part 12 of 21 in the series அதிரியன் நினைவுகள்

மத்தியகிழக்கு பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு எல்லா இடங்களிலும் திடீரென ஒரேநேரத்தில் பரவியது. யூதவணிகர்கள் செலூசியா(Séluicie)வில் வரி செலுத்த மறுத்தனர். சைரீன்(Cyrène) மக்களும் கிளர்ச்சியில் இறங்கினர்.  விளைவாக கிழைக்கூறுகள் கிரேக்க கூறுகளை துவம்சம் செய்தன. எங்கள் படைதுருப்புகள் முகாமிட்டிருந்த பகுதிவரை எகிப்து கோதுமையைக் கொண்டுவர சாலைகள் இருந்தன, அவற்றை ஜெருசலத்தைச் சேர்ந்த ஜெலட்ஸ்(Zélotes) என்ற கும்பல் துண்டித்தனர்.  சைப்ரஸில் குடியிருந்த  கிரேக்க மற்றும் உரோமானிய குடிகள் பாமர யூதர்களின் பிடிக்குள் சிக்கி, கிளாடியேட்டர் சண்டைகளில் ஒருவரையொருவர் வெட்டிமடியவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்.

அதிரியன்  நினைவுகள் – 10

This entry is part 10 of 21 in the series அதிரியன் நினைவுகள்

ஈரப்பதமான கோடையைத் தொடர்ந்து, பனிமூட்டத்துடன் ஓர் இலையுதிர் காலம், பின்னர் கடுங் குளிர்காலம்.  எனக்கு மருத்துவம் பற்றிய அறிவு தேவைப்பட்டது, முதலில் என்னை நானே குணப்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லையோரங்களில் நான் வாழ்ந்த வாழ்க்கை மெல்லமெல்ல  என்னை சார்மேத்தியினர் நிலைக்கு கொண்டு வந்தது: கிரேக்க தத்துவஞானிக்குரிய  குறுந்தாடி, காட்டுவாசிகள் தலைவன் ஒருவனின்  குறுந்தாடியாக மாறியது. டேசியர்களுடன் சண்டையிட்ட நாட்களில் என்னவெல்லாம் கண்டேனோ அவற்றைத் திரும்பவும் நானே வெறுக்கின்ற அளவிற்கு திரும்பக்  காண நேர்ந்தது. நம்முடைய எதிரிகள் தங்கள் கைதிகளை உயிரோடு எரித்தனர்; 

அதிரியன் நினைவுகள் – 9

This entry is part 9 of 21 in the series அதிரியன் நினைவுகள்

இவ்விவகாரத்தில் வேறு சில விஷயங்களும் இருக்கின்றன:   நானும் தக்க தருணத்திற்கென்று திரைமறைவில் காத்திருக்கும் (நாடக) நடிகன் போல,  முன்பின் தெரியாத ஒரு நபர் உள்ளே பரபரப்புடன் தெரிவிக்கும் சங்கதிகளை,  குறிப்பாக சலசலவென்று பேசுகிற பெண்களின் குரல்களை, வெடிக்கும் கோபத்தை அல்லது சிரிப்பை, சொந்த வாழ்க்கையின் முணுமுணுப்புகளை, மொத்தத்தில் நானிருக்கிறேன் என்பது தெரியவந்த மறுகணம்  அடங்கிப்போகும் ஒலிகளை ஆர்வத்துடன் ஒட்டுக்கேட்பதுண்டு. குழந்தைகள், ஆடைகுறித்த தீராத பிரச்சனைகள்,  பணத்தைப் பற்றிய கவலைகளென, நான் இல்லாத நேரத்தில் பேசப்படும் பொருள் எதுவென்றாலும்  எனக்குத் தெரியக்கூடாத முக்கியமானதொரு விஷயம்

மித்ரோ மர்ஜானி – 9

This entry is part 9 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தாயின் புலம்பலை கேட்ட மித்ரோவுக்கு இனம் புரியாத பயம் ஏற்பட்டது. அந்தக் காரிருளில், மூடி கிடந்த ஜன்னல்களையும் வெறிச்சோடி கிடந்த வீட்டையும் பார்த்த மித்ரோவின் கண்களில் மின்னல் ஓடியது போன்ற பிரமை ஏற்பட்டது. வெறிச்சோடிக் கிடந்த வீடு, பூதங்கள் வாழும் மயானத்தைப் போலவும், அழுது புலம்பும் தாய், பசி தாகத்தால் தவிக்கும் ராட்சசியைப் போலவும் அவளுக்குத் தோன்றியது.

மித்ரோ மர்ஜானி – 8

This entry is part 8 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தாயும் மகளும் பேசிக்கொண்டே வராந்தாவைக் கடந்து, விருந்தினர் அறைக்கு செல்வதற்காக மாடியில் முதல் படியில் கால் வைத்தனர். வசந்த காலத் தென்றல் அவளை எங்கோ தூக்கிச் செல்வது போல மித்ரோவுக்கு தோன்றியது. ஆசையிலும் மோகத்திலும் படபடத்த நெஞ்சை ஒரு கையால் பற்றிக் கொண்டு, எதிரில் விரிந்த மாடிப்படிகளையும், கணவன் சர்தாரிலால் படுத்திருந்த அறையின் கதவையும்  மித்ரோ மாறி மாறி பார்த்தாள். அம்மாவை லேசாக தொட்டு, “உன் மாப்பிள்ளை எழுந்துவிட்டார் என்றால்,  இந்த மித்ரோவின் கதி அவ்வளவுதான்” என்று பதட்டத்துடன் கூறினாள்.

அதிரியன் நினைவுகள் – 8

This entry is part 8 of 21 in the series அதிரியன் நினைவுகள்

எனது இராணுவ வெற்றிகள்  மன்னர் திராயானைப் போன்ற மாவீரர்களிடத்தில்  பகை உணர்வை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. துணிவென்ற மொழியை மட்டுமே உடனடியாகப் புரிந்துகொள்ளக்கூடியவராக அவர் இருந்தார். அதன் சொற்கள் நேரிடையாக அவர் நெஞ்சத்தைத் தொட்டன. என்னைத் தம்முடைய வலதுகையாக, ஏன்  கிட்டத்தட்ட ஒரு மகனாகவே கருதினார். அதன் பின்னர் எங்கள் இருவரையும் முழுமையாக பிரிக்கின்ற வகையில் எந்தச் சம்பவமும் குறுக்கிடவில்லை.  என்னைப் பொறுத்தவரை, அவரது கருத்துக்களைப் பற்றிய  எனது ஆரம்பகால ஆட்சேபணைகளை அவர் இராணுவத்தில் வெளிப்படுத்திய போற்றத்தக்க மேதமையை அறிந்தமாத்திரத்தில் குறைந்த பட்சம் தற்காலிகமாக ஒதுக்கிவைக்க ஆரம்பித்து, பின்னர் மறக்கவும் செய்தேன். கைதேர்ந்த நிபுணர்கள்  செயல்படும் விதத்தைக் காண்பதில் எனகெப்போதும் மகிழ்ச்சி.

அதிரியன் நினைவுகள்  – 7

This entry is part 7 of 21 in the series அதிரியன் நினைவுகள்

எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்ததொரு சம்பவம் கிட்டத்தட்ட சீரழிக்கும்நிலமைக்கு என்னைத் தள்ளியது. விஷயம் இதுதான், அழகான முகமொன்று என்னை வென்றிருந்தது, இளைஞன் ஒருவனிடம் அன்பின் வசப்பட்டு மிகநெருக்ககமாக இருந்தேன், பேரரசர் திராயான் அவனை அறிந்திருந்தார். ஆபத்தான விளயாட்டு என்றாலும்கூட எனக்கது சுவையான அனுபவம். காலுஸ்(Galus) என்ற பெயரில் மன்னருக்கு ஒரு செயலாளர் இருந்தார், நீண்ட காலமாக மன்னரிடம் எனது கடன்கள் பற்றிய தகவல்களை விவரமாக எடுத்துரைத்தும் வந்தார். இந்நிலையில் என்னுடைய சமீபத்திய நடத்தைப் பற்றியும் தெரிவித்துள்ளார். மன்னரின் கோபம் உச்சத்தை எட்ட என்வாழ்க்கையில் மிகமோசமான தருணம் அது. என்னுடைய நண்பர்கள் சிலர், குறிப்பாக அச்சீலியுஸ், அட்டியாயூனுஸ் முதலானோர் ஒன்றினைந்து எனக்காக வாதிட்டு மன்னரை என்மீது கொண்டிருந்த அந்த அபத்தமான வெறுப்பிலிருந்து மீட்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கு முடிவில் அவர் இறங்கியும்வந்தார்.

மித்ரோ மர்ஜானி – 7

This entry is part 7 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தனவந்தி சமையல் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். பாலை சுண்டக்காய்ச்சி, ஊதி அதை ஒரு லோட்டாவில் ஊற்றி, புடவை தலைப்பால் மூடிக்கொண்டு மருமகள் சுஹாகின் அறையை நோக்கி நடந்தாள். ஜன்னல் வழியாக அறையிலிருந்து விழுந்த வெளிச்சத்தை பார்த்து தாயின் மனம் பெரிதும் மகிழ்ந்தது. கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள். கட்டிலில் படுத்திருந்த மருமகளைப் பார்த்து பூரித்துப் போனாள். தளர்ந்திருந்த மேல் சட்டையில் வெளிறிய முகத்துடன் படுத்திருந்த மருமகளை பார்த்ததும், மனதிற்குள்ளேயே இறைவனை கையெடுத்து கும்பிட்டுக் கொண்டாள். மருமகள் சுஹாக்வந்தி மகாராணியை போலல்லவா படுத்திருக்கிறாள்!

அதிரியன் நினைவுகள் – 6

This entry is part 6 of 21 in the series அதிரியன் நினைவுகள்

இப்படியொரு எண்ணத்திற்கு நான் தள்ளப்பட புதிய அனுபவங்களில் எனக்கிருந்த ரசனையும் ஈடுபாடும் காரணமாகும், விளைவாக காட்டுமிராண்டிகள், மிலேச்சர்கள் போன்றவர்களிடமும் விரும்பிப் பழகினேன். இப்பெரிய பிரதேசம் தன்யூபு மற்றும் போரிஸ்தீனஸ் நதிகளின் முகத்துவாரங்களுக்கு இடையில் அமைந்த ஒரு முக்கோண நிலப்பரப்பு, இதன் மூன்று பக்கங்களில் இரண்டு எனக்கு நன்கு பரிச்சயமானவை. நிலத்தை ஊடுருவிய கடலின் கரையோரங்களில் பிறந்து, இயற்கையாக அமைந்த இப்பகுதியின் தூய்மை, வறட்சி, குன்றுகள், தீபகற்பத்தையொத்த நிலப்பகுதிகள் அனைத்தையும் நன்கறிந்த நமக்கு, உலகின் அதிசயிக்கத் தக்க பிராந்தியங்களில் இதுவுமொன்று என்கிற எண்ணத்தை இப்பகுதி தரும்.

மித்ரோ மர்ஜானி 6

This entry is part 6 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தனவந்திக்கு சர்தாரியின் நினைவு வரவே, ஒரு நொடியில் அவளுக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது. அவன் தான் கண்டிப்பாக எதையோ சொல்லி இவளை காயப்படுத்தி இருப்பான்! அன்று கணவனின் அறையில் கேள்வி பதிலாகவும் விசாரணையாகவும் நடந்த நிகழ்ச்சி, ஒரு வேளை தினமும் தொடர்கிறதோ? தன்வந்தி கனிவான குரலில், “மகளே எனக்கு எல்லாம் புரிகிறது. எல்லாவற்றுக்கும் என் புத்தி கெட்ட மகன்தான் காரணம். சின்னச்சின்ன விஷயங்களையெல்லாம் பெரிதுபடுத்தி, சண்டை போட்டு, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பான்!” என்றாள்.இதைக் கேட்ட மித்ரோ, கண்களில் கோபம் கொப்பளிக்க, அடிபட்ட சிங்கம் போல கர்ஜித்தாள்.”வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதால் ஒரு பயனும் இல்லை. அம்மாவும் மகனும் சேர்ந்து, என் தோலைச் சீவி, என்னைக் கண்டதுண்டமாக வெட்டி ஊறுகாய் போட்டு விடுவது தானே” என்றாள்.

மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 5

This entry is part 5 of 9 in the series மித்ரோ மர்ஜானி

மகளின் தலையை அன்போடு தடவி, குர்தாஸ், பேரனை மடிமீது அமர்த்தி, கொஞ்சி மகிழ்ந்தார். ஜன்கோ அம்மாவை அணைத்துக் கொண்டாள். தனவந்தியும், மகளை ஆரத் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டாள். தனவந்தி நீண்ட நேரம் மகளை அணைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து மித்ரோ, “கொஞ்சம் அன்பை மருமகள்களுக்கும் மீதி வையுங்கள் அம்மா” என்று கேலி செய்து சிரித்தாள்.ஜன்கோ சந்தோஷமாக அண்ணிகளையும் தழுவிக் கொண்டாள். சின்ன அண்ணி கண்ணில் படாததைப் பார்த்த ஜன்கோ, “அண்ணி நன்றாகத் தானே இருக்கிறாள் அம்மா? அண்ணியும் கண்ணில் படவில்லை, அண்ணன் குல்ஜாரியும் கண்ணில் படவில்லையே என்று கேட்டாள்.

அதிரியன் நினைவுகள் – 5

This entry is part 5 of 21 in the series அதிரியன் நினைவுகள்

ஏதன்ஸ் நகரை அடைந்த மறுகணம் என்னுடைய மனதைப் பறிகொடுத்திருந்தேன்; நானோ, பிறர் சந்தேகிக்கிற விரும்பத்தகாத தோற்றம்கொண்ட மாணவன், அங்கு நிலவிய கலகலப்பான சூழல், வேகமாக பரிமாறிக்கொள்ளப்பட்ட உரையாடல்கள், நீண்ட ரம்மியமான மாலைப்பொழுதுகளில் காலாற நடக்கும் தருணம், வேறெங்கும் அறிந்திராத விவாதங்கள், தர்க்கங்கள், ..அனைத்தையும் முதன்முறையாக அங்குதான் சுவைத்தேன். கணிதம், கலை இரண்டுமே சுழற்சிமுறையில் எனது தேடலுகேற்ப தங்கள்பால் அக்கறை கொள்ளவைத்தன. …மருத்துவர் தொழில் எனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும்; அப்பணியின் அடிப்படை அணுகுமுறை, எனது சக்கரவர்த்தி தொழிலுக்கென முயற்சித்துப் பெற்ற அணுகுமுறையை ஒத்திருந்தது.

மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 4

This entry is part 4 of 9 in the series மித்ரோ மர்ஜானி

மித்ரோ, நின்றபடியே தலை முடியை வகிடு பிரித்து, இருபுறமும் கிளி மற்றும் பறவையைப் போல் இருக்கும் கிளிப்புகளை பொருத்திக் கொண்டு, பின்னலை இழுத்துப் பின்னி குஞ்சலம் வைத்து கட்டிக் கொண்டாள். பிறகு, பெட்டியில் இருந்து வாசனை திரவிய குப்பியை எடுத்து, “உடம்பு சூடாக இருந்தால் சொல்லுங்கள் அண்ணி,  உங்களுக்கும் இந்த வாசனை திரவியத்தைப் பூசி விடுகிறேன்” என்றாள்.

மித்ரோ மர்ஜானி-அத்தியாயம் 3

This entry is part 3 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தனவந்தியின் நெஞ்சம் நிறைந்து தளும்பியது. எந்நேரமும் யாரைத் திட்டிக் கொண்டும் குறை கூறிக்கொண்டும் இருந்தாளோ, அந்த மருமகள் தான், மாமியாரை விட்டுக் கொடுக்காமல் பக்கபலமாக நிற்கிறாள். தனவந்தி தலையை அசைத்து, ” மருமகள்களே, நான் தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் இந்த வீட்டுப் பிள்ளைகளின் அம்மா என்று என்னைத் தவறாகக் நினைத்துக்கொண்டு விட்டேன். நான் வெறும் வேலைக்காரி தான் என்பதை மறந்து விட்டேன். நான் வெறும் வேலைக்காரி மட்டுமே.”

அதிரியன் நினைவுகள் -3

This entry is part 3 of 21 in the series அதிரியன் நினைவுகள்

அனைவரையும் போலவே எனது பணியிலும் மனிதர் இருப்பை மதிப்பிட மூன்று வழிமுறைகள். முதலாவது சுயபரிசோதனை, இது மிகவும் கடினமானது மட்டுமல்ல ஆபத்தும் இதில் அதிகம், இருந்தும் பயனுள்ள வழிமுறை. இரண்டாவது மனிதர்களை அவதானிப்பது. பொதுவில் மனிதர்கள் மொத்தபேரும் அவ்வப்போது இரகசியங்களை பொத்திவைப்பதில் கெட்டிக்க்காரர்கள் என்பதோடு தங்களிடம் அவை கணிசமாக உள்ளதென்பதை பிறர் நம்பவேண்டும் என்பதுபோல அவர்கள் நடத்தையும் இருக்கும். மனிதர் இருப்பை அளவிட நான் கையாளும் மூன்றாவது வழிமுறை புத்தகங்கள், வாசிக்கிறபோது, தீர்க்கதரிசனமாக சொல்லப்படும் வரிகளுக்கிடையில் உணரப்படும் பிழைகளும் எனக்கு முக்கியம். சரித்திர ஆசிரியர்களின் எழுத்துகள் கவிஞர்கள் எழுத்துக்ளைபோல பெரிதாகக் கொண்டாடக்கூடியவை அல்ல.

மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 2

This entry is part 2 of 9 in the series மித்ரோ மர்ஜானி

மித்ரோ பதில் சொல்ல வாய் எடுப்பதற்கு முன்பாகவே அறை வாசலில் மூத்த கொழுந்தனாரின் நீண்ட நிழல் விழுந்ததை பார்த்து கூச்சமடைந்தாள். முந்தைய இரவின் சம்பவங்கள் நினைவுக்கு வர, கொழுந்தனாரை சீண்டும் விதமாக, துப்பட்டாவை தலையை மறைத்தும் மறைக்காமலும் இழுத்துவிட்டுக் கொண்டு, ” கொழுந்தனாரே! என் ஓரகத்திக்கு நான் ஒருபோதும் சமமாக மாட்டேன் என்பது நன்றாகத் தெரியும். இருந்தாலும்… கொஞ்சம் இந்தப் பக்கமும் உங்கள் பார்வை பட்டால்…..”

அதிரியன் நினைவுகள்-2

This entry is part 2 of 21 in the series அதிரியன் நினைவுகள்

காதலென்கிற வியத்தகு மனித உறவிற்கு முன்பாக, அதிலும் குறிப்பாக மற்றொரு உடல் மீதான அதன் அவாவிற்குச் சொல்லப்படும் நியாயங்கள் குழப்பமானவை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இப்புதிய மற்றொரு உடலும் குளிப்பாட்டுவது, உணவு தருவது, முடிந்தவரை அதன் இன்னல்களை தவிர்ப்பது இவற்றைத் தவிர பெரிதாக அக்கறைகாட்டாத நமது சொந்த உடலைப் போன்றதுதான், இருந்தும் புதிய உடலின் ஸ்பரிஸத்திற்குத் தவிக்கிறோம். ஏனெனில் இப்புதிய உடல் வேறொர நபரால் இயக்கப்படுகிறதென்கிற எளிமையான காரணம் ஒருபுறம், இன்னொருபுறம் அவ்வுடலில் நாம் காண்கிற வசீகர அம்சங்கள்.

மித்ரோ மர்ஜானி – 1

This entry is part 1 of 9 in the series மித்ரோ மர்ஜானி

எங்கள் குடும்பத்திற்காக உன்னை பெற்றெடுத்துத் தந்த உன் பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள். பெரும் புண்ணியம் தேடிக்கொண்டவர்கள்” என்றாள். பிறகு, மருமகளின் கையை வாஞ்சையுடன் தடவி  ” மருமகளே, மித்ரோவின் விவகாரம் ஒரு பக்கம் இருக்கட்டும்,  ஆனால் உன் கடைசி ஓரகத்தி யின் நடத்தை ஏன் இப்படி இருக்கிறது? மனதுக்குள்ளேயே சுருங்கிப் போகிறேன். வந்த எல்லா நல்ல சம்பந்தங்களையும்களையும் விட்டுவிட்டடு, எப்படி இங்கே போய் மாட்டிக் கொண்டேன்? அந்த இடம் அவ்வளவு சரியில்லை என்று சொந்தக்காரர்கள் அரசல் புரசலாக சொன்னார்கள். நான்தான் அவர்கள் வீட்டு ஆடம்பரத்தையும் பகட்டையும் பார்த்து மதி மயங்கிப் போனேன்.

அதிரியன் நினைவுகள்-1

This entry is part 1 of 21 in the series அதிரியன் நினைவுகள்

அதிரியன் நினைவுகள் அல்லது Mémoires D’Hadrien, புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியை மார்கெரித் யூர்செனார் (MargueriteYourcenar) என்பவரால் 1951 எழுதப்பட்ட ஒரு வரலாற்று நாவல். ரோமானிய அரசன் தமது முதிர்ந்த வயதில் தமக்குப் பிறகு முடிசூட்டிக்கொள்ளவிருந்த மார்க் ஒரேல்(Marc Aurèle) என்கிற வாலிபனுக்கு எழுதும் மடலாக சொல்லப்பட்டுள்ள இப்படைப்பு ஆசிரியரின் கற்பனை. ரோமானிய பேரரசன் அதிரியன் தனது வாழ்க்கையில் குறுக்கிட்ட அத்தனை அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதாக, விமர்சிப்பதாக நாவல் விரிகிறது. 2002ஆம் ஆண்டு நார்வே இலக்கிய வட்டம் எக்காலத்திலும் வாசிக்கப்படவேண்டியவையென உலகின் 54 நாடுகளைச் சேர்ந்த மிக முக்கிய 100 படைப்புகளை பட்டியல் இட்டுள்ளது, அவற்றில் இந்நாவலும் ஒன்று

பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – பாகம் 2

“நீண்ட இழை மேபிள் (மரம்),” என்றார் ஸோர்கின், சுட்டியபடி. “பழைய ஸிட்கா ஸ்ப்ரூஸ் (மரம்). வார்ப்பு இரும்பு. நிக்கல். பதினெட்டு அடுக்குகள் எப்படி ஒட்டிக் கொண்டிருக்கின்றன, பார். அது யூரியா ரெஸின் ஒட்டுப் பசை. இதற்கு முன்னால் ஒரு காலத்தில் இதுவே மிருகத் தோல்களிலிருந்து காய்ச்சிய ஊன்பசையாக இருந்தது.”
அவர் கம்பிகளின் மேல் தன் கையைத் தடவினார். “எஃகிரும்பு. கூடவே செப்புக் கம்பியில் சுற்றிய எஃகிரும்பு.”
“இப்ப இங்கே பார்,” என்றார் அவர். “இது அத்தனை சிறப்பு. காஷ்மீர் (கம்பளம்).” அவனுடைய வியப்பைப் பார்த்து அவர் சிரித்தார். “ஆமாம், காஷ்மீர். திருப்பு முனைகளுக்கு அதைப் பயன்படுத்துகிறார்கள்.”

ஏ பெண்ணே – 8

This entry is part 8 of 10 in the series ஏ பெண்ணே

மகள்,  தன்னை வெகுவாக கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்த போதிலும்,  அம்மாவின் நெற்றியில் மென்மையாக முத்தமிடுகிறாள். எவ்வளவோ வருடங்களாக இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால்,  சமீப காலமாகத்தான்,  இவ்வளவு நாட்கள் வாழ்ந்ததற்கு,  ஏதாவது உருப்படியாக செய்திருக்கலாமே என்கிற எண்ணம் அடிக்கடி வருகிறது. இவ்வளவு பெரிய உலகத்தையேனும் சுற்றிப் பார்த்திருக்கலாம். ஆனால் குடும்பக் கவலைகளிலும் பொறுப்புகளிலும் உழன்றே,  வாழ்க்கை முடிந்து விட்டது.

ஏ பெண்ணே – 7

This entry is part 7 of 10 in the series ஏ பெண்ணே

எனினும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு அழுத்தமான கோடு கிழிக்கப்பட்டிருந்தது. கடைசி நாட்களில்,  உன் தாத்தா நோய்வாய்ப்பட்டிருந்த போது, நானும் என் சகோதரிகளும், மாறி மாறிச் சென்று, அவரோடு தங்கி யிருந்தோம். ஆனால் அவர் எப்போதும் குரல் கொடுத்து அழைத்ததென்னவோ தன் மகனைத் தான். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மகன் மீது மட்டும் ஏன் இத்தனை கண்மூடித்தனமான  பாசம்!

ஏ பெண்ணே – 6

This entry is part 6 of 10 in the series ஏ பெண்ணே

நீ நிதானமாகவே திரும்பி வா. வீட்டைப் பற்றிய கவலையை விடு. நான் இங்கேயே தான் இருப்பேன். எங்கும் போக மாட்டேன். முடி வெட்டிக் கொள்ள போவதாக இருந்தால்,  எனக்கும் முடி வெட்டிவிடச்சொல். என் முடி கனமாக இருப்பதால்,  மிகவும் கஷ்டமாக இருக்கிறது. முடிவெட்டிக் கொண்டால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். இனி இந்த முடியை பராமரிப்பது கடினம்.

ஏ பெண்ணே – 5

This entry is part 5 of 10 in the series ஏ பெண்ணே

உன்னைப் போன்ற தற்சார்புடைய பெண்ணின் குரல் எதிரொலிக்க, பரந்த ஆகாசமும் விரிந்த பூமியும் தேவை. சிறிய, மதிப்பேதுமற்ற விஷயங்களைப் பொருட்படுத்தாதே. மனதைச் சங்கிலியிட்டு ஒடுக்கிக் கொள்பவர்களின் ஆகாயம்,  அவர்கள் வரைக்குமே விரிகிறது. அவர்களுடைய ஓட்டமும் அவர்களது வீடு வரைக்குந்தான். வீட்டுக் கணப்பருகிலேயே, சுடச்சுட,  ரொட்டிகளைச் சுட்டு மலைபோல அடுக்குவதிலும், வீட்டை ஒட்டியே சிலந்தி வலை பின்னுவதிலுமேயே, அவர்களது வாழ்க்கை கழிந்து விடுகிறது. கேட்டுக் கொண்டு இருக்கிறாயா, அந்த மாதிரியான வாழ்க்கையிலும் பெரிதாக ஒன்றுமில்லை.

ஏ பெண்ணே – அத்தியாயம் நான்கு

This entry is part 4 of 10 in the series ஏ பெண்ணே

என்னை ஏன் முட்டாளாக்கப் பார்க்கிறாய் பெண்ணே. காலையில் என் தலையணையின் கீழே பெப்பர்மிண்ட்களும் சாக்லேட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. அவன் தான் இப்படியெல்லாம் யோசிப்பான். நோய்வாய்ப்படாத காலத்திலும் கூட, எனக்காக குளிர்சாதனப்பெட்டியில் சாக்லேட்டுகளை வைத்து விட்டுப் போவான். அவனை ஊரை விட்டு வெளியே அனுப்புவதால் உனக்கென்ன லாபம்? பெண்ணே, உன் சகோதரன் வெகுளி. தூய்மையான மனம் படைத்தவன். அவனை வீட்டை விட்டுப் போக விடாமல் செய்திருப்பார்கள். அவன் வெறுத்துப் போயிருப்பான். சல்லடையில் சலித்து கற்களைப் பொறுக்கி எறிவது போல, அவன் மனைவி வீட்டிலிருந்து கொண்டே, அவனைப் பற்றி குற்றங்குறை கூறிக் கொண்டிருந்திருப்பாள்

ஏ பெண்ணே – அத்தியாயம் 3

This entry is part 3 of 10 in the series ஏ பெண்ணே

நீ சொல்வது சரிதான். ஆனால், நான் என்ன செய்யட்டும், நீயே சொல்லேன். கீழே விழுந்தாகிவிட்டது வியாதி வெக்கைகள் எல்லாம் எதிரிகள் தானே! ஐயா அம்மா என்று முனகுவதை யோ அல்லது அரற்றுவதையோ தவிர, இப்போது வேறு என்ன செய்துவிட முடியும்? காயப்பட்டுக் கிடக்கிறது இந்த உடல். இப்போது கட்டிலைச் சுற்றி கலகலவென வளையோசையோ அல்லது பிறந்த குழந்தையின் அழுகைச்சத்தமோவா கேட்கும்.. இங்கு டாக்டர்கள் செலவழித்த நேரத்தில், ஒரு குழந்தை பிறந்து, அது எழுந்தே நின்று விட்டிருக்கக்கூடும். வெறும் எண்ணங்களில் குழந்தையை உருவாக்க முடியாது பெண்ணே. குழந்தையை உருவாக்க உழைப்பு தேவை. தாயின் ரத்தமும் சதையும் சேர்ந்துதான் ஒரு குழந்தை உருவாகிறது.

ஏ பெண்ணே – அத்தியாயம் இரண்டு

This entry is part 2 of 10 in the series ஏ பெண்ணே

உன்னுடைய தாத்தா, மகனை மௌனமாக இருக்கும்படி ஜாடை காட்டிவிட்டு, என்னைப் பார்த்து சிரித்தவாறு, ‘என் மகளை எண்ணி நான் மிகவும் பெருமிதப்படுகிறேன். தொடர்ந்து குதிரை சவாரி செய்திருக்கிறாள். குதிரையை அடக்கத் தெரியும். அதனால்தான் தன் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறாள்’ என்றார். உன் தாத்தா பாட்டி இருவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் உன் அப்பாவோ பயணம் முழுவதும் இறுக்கமாகவே இருந்தார். சாதாரணமாகச்சொன்ன ஒரு விஷயம், எங்கள் இருவருக்கும் இடைவே, கற்பாறையை போல, வெகுநேரம் நின்றிருந்தது. நடுநடுவே, உன் அப்பா, மிகவும் தீவிரமான குரலில் ‘தன்னை பலப்படுத்தி மெருகேற்றிக்கொள்ள இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். வெறும் குதிரை சவாரி மட்டும் தெரிந்திருந்தால் போதாது’ என்றார். பெண்ணே, ஆணுக்கு எப்போதும் ஆதிக்கம் செய்ய வேண்டும். அவனுடைய இடம் எப்போதும் மேலே, கீழே அல்ல. மறுபிறவி என்ற ஒன்று இருக்குமானால், அடுத்த பிறவியில் நான் ஆணாகப் பிறந்து பார்க்க ஆசைப்படுகிறேன். ஆண், போர் வீரனைப் போல தன் மனைவியையும் குடும்பத்தையும் எப்படி அடக்கி ஆள்கிறான் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இது சிரிப்பதற்கல்ல, மிகவும் ஆழமான விஷயம் பெண்ணே. ஒவ்வொரு பெண்ணும் இதை அறிவாள்.

ஏ பெண்ணே

This entry is part 1 of 10 in the series ஏ பெண்ணே

என் வீட்டு வாயிற் கதவின் சங்கிலிகள் திறந்து விட்டன. கதவைத் தட்டும் சத்தம் கேட்ப தற்கு முன்பாகவே நான் வெளியே சென்றிருக்க வேண்டும்! ஆனால், நான்தான் பிடிவாதமாக நின்று கொண்டிருக்கிறேன் பெண்ணே! வியாதி வெக்கை தான் மனிதனின் மிகப்பெரிய எதிரிகள்! உடலையும் மனதையும், குயவன் சக்கரத்தை சுழற்றி மண்பானையை வனைந்து எடுப்பதைப்போல சுழற்றி விடும். உடலுக்கும் மனதுக்கும் இடையேயான உறவை சுக்குநூறாக உடைத்து போடும். ஏன், உடலுக்கே உரித்தான இயற்கையான மணத்தைக் கூட அவை விட்டு வைப்பதில்லை. மருந்துகள் ரத்தத்தில் கலக்கும்போது, உடல் காய்ந்த சருகைப் போல இளைத்து விடுகிறது. என் தலைக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறதென்று எனக்கே தெரியவில்லை.

இவர்கள் இல்லையேல் – என்னுரை

டோக்ரி மொழியை எட்டாம் பட்டியலில் இணைக்க, மற்ற டோக்ரி கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் ஒருங்கிணைத்து போராடியதில், பத்மா பெரும் பங்காற்றினர். டோக்ரி மொழியை உலக அளவில் கொண்டு செல்வதற்கும், டோக்ரி மொழியை தன் படைப்புகளால் செழுமைப்படுத்துவதிலும், பத்மா ஆற்றிய பங்கு ஒப்பில்லாதது. அதனால்தான், ‘டோக்ரி மொழியின் தாய்’ என டோக்ரி மொழி பேசுபவர்களால் பத்மா பெரிதும் கொண்டாடப்படுகிறார்.

பிருஹன்னளை

பெரிய அக்கா (லதா மங்கேஷ்கர்)பெடர் ரோட்டில் குடியேறிய புதிதில், அவரிடமும் யாரோ ஒரு பிருஹன்னளையை வேலைக்கு அனுப்பி வைத்ததாகச் சொன்னது எனக்கு நினைவு வந்தது. ” பத்மா, அவன் மிகவும் விசுவாசமானவன். நான் ரெக்கார்டிங் முடிந்து வரும்வரை எனக்காக உறங்காமல் காத்திருப்பான். உடை மாற்றிக்கொள்ள துணிகளை தந்துவிட்டு, சாப்பாட்டை சூடு செய்து பரிமாறுவான். வேலையிலிருந்து திரும்பும் கணவனிடம், மனைவி, அந்த நாள் முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் பகிர்ந்து கொள்வதைப் போல, வீட்டில் நடந்த எல்லாவற்றையும் என்னோடு பகிர்ந்து கொள்வான்.

இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-11

ஒரு முறை, அவளுடைய தம்பி, ” நீ என் உண்மையான சகோதரியாக இருந்தால், எனக்கு ஒரு சைக்கிள் வாங்கி அனுப்பு. என் அக்கா எனக்கு சைக்கிள் வாங்கி தந்தி ருக்கிறாள் பாருங்கள் என்று நான் இங்கு எல்லோரிடமும் பெருமையடித்து க்கொள்ள முடியும்” என்று எழுதினான். மரியத்துக்கு இதைக்கேட்டு, சந்தோஷத்தில் சிரித்து மாளவில்லை. அவளுடைய பெற்றோரும் “உன் பெயரில் பசு வாங்குகிறோம். ஐநூறு ரூபாய் அனுப்பு”என்று கட்டளை இடுவார்கள். ..எத்தனையோ அக்காக்கள், தங்கைகள் மற்றும் அத்தைகள் தங்கள் சகோதர சகோதரிகளுக்காகவும், மருமகள்/ மருமகன் களுக்காகவும், உயிரைக்கூட கொடுக்கத் தயாராக இருக்கிறார்க.ள்ஆனால், பதிலுக்கு அவர்களுக்கு என்ன கிடைக்கிறது?

இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-10

மாலையில், என் கணவர், ” ரவேல் சிங், அந்த பழைய மேஜையும் நாற்காலிகளும் என்னவாயின?” என்று கேட்டார். நொடியும் தாமதிக்காமல், ரவேல் சிங், அதுவா ஸாஹிப், அதை நான் வந்த வண்டியிலேயே என் வீட்டுக்கு அனுப்பி விட்டேன் இந்நேரம் போய் சேர்ந்திருக்கும். எதிர்வீட்டில் போன் செய்து என் மனைவியிடம் விசாரித்து சொல்கிறேன் என்றானே பார்க்கலாம்!

இவர்கள் இல்லையேல்

1984க்கு பிறகு தான் எனக்கு ஃபூலோவுடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் அப்போதுதான் மும்பையிலிருந்து திரும்பி இருந்தோம். சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளை வரலாறு அறியும். அந்த துயர நினைவுகளை நான் நினைத்துப் பார்த்து, காயங்களை புதிதாக்கிக் கொள்ள விரும்பவில்லை. அந்நாட்களில் ஃபூலோ எங்கள் வீட்டில் வேலை செய்து வந்தாள். “வேலைக்காரர்களிடம் சொல்லி, வீட்டு வாசலில் மாட்டியிருக்கும்ஸாஹிபின் பெயர் பலகையை கழற்றி விடுங்கள் பீஜி. சர்தார்களுக்கு இப்போது நேரம் சரியில்லை” என்பாள்.

மீண்டும் சீனா

என் மனம் முழுவதுமாக உடைந்து விட்டிருந்தது. பெண்ணின் பல பரிமாணங்களை நான் கண்டிருக்கிறேன். அவளுக்கு தன் வீடு தான் எல்லாவற்றையும் விட உயர்ந்ததாகத் தெரிகிறது. எந்த விலை கொடுத்தேனும், பெண், எப்போதும் தன் வீட்டை காப்பாற்றிக் கொள்ளவே நினைக்கிறாள். வீட்டைச் சிதற விடாமல் பிடித்து வைத்துக் கொள்ள படுகிற பாட்டில், அவள் எத்தனை எத்தனை முறை உடைந்து போகிறாள்! வெட்கமோ, மானமோ, குற்ற உணர்வோ,எதுவுமே அவளது இம்முயற்சியின் ஊடே, நுழைய முடிவதில்லை! அவளது தேவை ஒரு வீடு: தலையை மறைத்துக் கொள்ள ஒரு கூரை!

ராம் பிரசாதின் உலகம்

அதற்கு அவன்,  ’நீங்கள் மணி அடித்தது,  என்னைத்  தேடியது எல்லாமே எனக்கு நன்றாகத் தெரியும். நான் தான் இருக்கட்டும் என்று உறங்கி விட்டேன். நீங்களும் எப்போதாவது கையை காலை அசைத்து வேலை செய்ய வேண்டாமா? அது உங்கள் ஆரோக்கியத்துக்கு  நல்லது  என்றுதான் மௌனமாக இருந்தேன்’ என்றான். நான் டீக்கடையில் வேலை செய்யும் போதும் இப்படி பகலில் தூங்குவது வழக்கம்.  வேண்டுமானால்,  அந்த டீக்கடைக்காரனைப் போல, நீங்களும் என்னை அடித்து விடுங்கள். நான் கட்டாயம் மூன்றிலிருந்து ஐந்து மணிவரை ஓய்வெடுப்பேன். அது என் உரிமை’ என்றான்.

சமேலி, சுந்தரி, சீனா

சமேலிக்கு திருமணமாகி, அவள் தன் சிறு சாம்ராஜ்யத்தை நிர்வாகிக்கச் சென்றபிறகு வந்தவள் சுந்தரி. பெயருக்கேற்ற அழகி. அம்மன் சிலை போல கருப்பாக இருந்தாலும், வாட்ட சாட்டமான உடல் வாகு கொண்ட அழகி. …தேர்தல் சமயத்தில், ராஜேஷ் கன்னா வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்த போது, இவளது கணவன், நீ வெளியே போகக்கூடாது என்று இவளிடம் சத்தியம் வாங்கிக்கொண்டானாம். எங்காவது ராஜேஷ் கன்னா என்னை பம்பாய் அழைத்துக்கொண்டு போய்விட்டால், தானும் குழந்தைகளும் என்ன செய்வது என்கிற பயம்தான் பீஜி என்றாள் சிரித்தவாறு.

மைலோ – இவர்கள் இல்லையேல்

அந்நாட்களில், மைலோ என்கிற பெண்மணி, வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்ய வருவாள். மாநிறம். மிகவும் சுறுசுறுப்பானவள். புகையிலை போடுவது அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஃபினாயில் மணத்தோடு  கலந்த புகையிலையின் மனம்,  அவள் போகுமிடமெல்லாம் அவளைத் தொடர்ந்து போகும்.  விட்டுத் தொலையேன் இந்த பழக்கத்தை என்றால்,  புகையிலை போடாமல் என்னால் வேலை செய்ய முடிவதில்லை என்பாள்

இவர்கள் இல்லையேல் – 3-4

. இத்தகைய பாத்திரங்களை, கடவுள்  கூட, மிகுந்த யோசனைக்குப் பிறகே, தயாரித்துக் கீழே அனுப்பி இருக்கக்கூடும்.  அவனைப் பார்த்தால் நீங்கள் அவனை ‘சித்தம் கலங்கியவன்’ என்று நினைத்துக் கொள்வீர்கள். உண்மையில் நிக்கூ தான் எங்கள் அனைவரின் சித்தத்தையும் கலக்கிக் கொண்டிருந்தான். அவன் அடிக்கடி வீட்டுக்கு வருவான். வீட்டிலுள்ளவர்கள் அவன் பின்னாடியே ‘நிக்கூ, நிக்கூ,’ என்றழைழைத்தவாறே சூழ்ந்து கொள்வார்கள் .வேலை செய்யாமல், அவன் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க மாட்டான்.  நான்கு பாத்திரங்களையேனும் கழுவி வைத்துவிட்டுத்தான், என் மாமியார் தருகிற  ரொட்டித் துண்டுகளை காய்கறியுடன் சாப்பிடுவான். வேலை செய்யாமல் சாப்பிடுவதையும், கூலி பெற்றுக் கொள்வதையும் பாவம் என்று சொல்லுவான்.

இவர்கள் இல்லையேல் – ராம்லால்

அதே சமயம், உள்ளே நுழைந்த தந்தை, எரிகிற கொள்ளியில், தன் பங்குக்கு, இன்னும் கொஞ்சம் எண்ணையை ஊற்றினார். “ராம் வாலின் அம்மா, இந்த மாதிரி ஒரு கேடுகெட்ட மகனைப் பெற்றெடுத்திருக்கிறாயே, நான் என்ன சொல்ல? என் முன்னோர்கள் எவரும் பகலில் மனைவியின் முகத்தை கூட பார்த்ததில்லை. மனைவியிடம் பேசுவது என்பதெல்லாம் கற்பனையில் கூட யோசித்துப் பார்க்க முடியாத விஷயம். இந்த மகாராஜாவைப் பார். மனைவிக்கு கடிதம் எழுதுகிறாராம் – என் பிரியமான மனைவியே – வெட்கங்கெட்டவன். கிராமம் முழுவதும் வெளியில் தலை காட்ட முடியாமல் பெயர் கெட்டு போனது தான் மிச்சம்,” என்றார்.

இவர்கள் இல்லையேல்

உடல் ஒத்துழைத்தவரை, அம்மா தன் கடைசி மகனை கூட்டிக்கொண்டு ராம்வன் சென்று, அங்கு சில நாட்கள் தங்கியிருந்துவிட்டுவருவார். திரும்பி வந்ததும் மிகவும் சந்தோஷமாக சொல்வார் – பாவம், இந்த பைத்தியக்காரனின் தலையெழுத்தில் நல்ல சாப்பாடு என்பது எழுதப்படவேயில்லை.