மித்ரோ மர்ஜானி – 1

This entry is part 1 of 9 in the series மித்ரோ மர்ஜானி

எங்கள் குடும்பத்திற்காக உன்னை பெற்றெடுத்துத் தந்த உன் பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள். பெரும் புண்ணியம் தேடிக்கொண்டவர்கள்” என்றாள். பிறகு, மருமகளின் கையை வாஞ்சையுடன் தடவி  ” மருமகளே, மித்ரோவின் விவகாரம் ஒரு பக்கம் இருக்கட்டும்,  ஆனால் உன் கடைசி ஓரகத்தி யின் நடத்தை ஏன் இப்படி இருக்கிறது? மனதுக்குள்ளேயே சுருங்கிப் போகிறேன். வந்த எல்லா நல்ல சம்பந்தங்களையும்களையும் விட்டுவிட்டடு, எப்படி இங்கே போய் மாட்டிக் கொண்டேன்? அந்த இடம் அவ்வளவு சரியில்லை என்று சொந்தக்காரர்கள் அரசல் புரசலாக சொன்னார்கள். நான்தான் அவர்கள் வீட்டு ஆடம்பரத்தையும் பகட்டையும் பார்த்து மதி மயங்கிப் போனேன்.

மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 2

This entry is part 2 of 9 in the series மித்ரோ மர்ஜானி

மித்ரோ பதில் சொல்ல வாய் எடுப்பதற்கு முன்பாகவே அறை வாசலில் மூத்த கொழுந்தனாரின் நீண்ட நிழல் விழுந்ததை பார்த்து கூச்சமடைந்தாள். முந்தைய இரவின் சம்பவங்கள் நினைவுக்கு வர, கொழுந்தனாரை சீண்டும் விதமாக, துப்பட்டாவை தலையை மறைத்தும் மறைக்காமலும் இழுத்துவிட்டுக் கொண்டு, ” கொழுந்தனாரே! என் ஓரகத்திக்கு நான் ஒருபோதும் சமமாக மாட்டேன் என்பது நன்றாகத் தெரியும். இருந்தாலும்… கொஞ்சம் இந்தப் பக்கமும் உங்கள் பார்வை பட்டால்…..”

மித்ரோ மர்ஜானி-அத்தியாயம் 3

This entry is part 3 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தனவந்தியின் நெஞ்சம் நிறைந்து தளும்பியது. எந்நேரமும் யாரைத் திட்டிக் கொண்டும் குறை கூறிக்கொண்டும் இருந்தாளோ, அந்த மருமகள் தான், மாமியாரை விட்டுக் கொடுக்காமல் பக்கபலமாக நிற்கிறாள். தனவந்தி தலையை அசைத்து, ” மருமகள்களே, நான் தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் இந்த வீட்டுப் பிள்ளைகளின் அம்மா என்று என்னைத் தவறாகக் நினைத்துக்கொண்டு விட்டேன். நான் வெறும் வேலைக்காரி தான் என்பதை மறந்து விட்டேன். நான் வெறும் வேலைக்காரி மட்டுமே.”

மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 4

This entry is part 4 of 9 in the series மித்ரோ மர்ஜானி

மித்ரோ, நின்றபடியே தலை முடியை வகிடு பிரித்து, இருபுறமும் கிளி மற்றும் பறவையைப் போல் இருக்கும் கிளிப்புகளை பொருத்திக் கொண்டு, பின்னலை இழுத்துப் பின்னி குஞ்சலம் வைத்து கட்டிக் கொண்டாள். பிறகு, பெட்டியில் இருந்து வாசனை திரவிய குப்பியை எடுத்து, “உடம்பு சூடாக இருந்தால் சொல்லுங்கள் அண்ணி,  உங்களுக்கும் இந்த வாசனை திரவியத்தைப் பூசி விடுகிறேன்” என்றாள்.

மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 5

This entry is part 5 of 9 in the series மித்ரோ மர்ஜானி

மகளின் தலையை அன்போடு தடவி, குர்தாஸ், பேரனை மடிமீது அமர்த்தி, கொஞ்சி மகிழ்ந்தார். ஜன்கோ அம்மாவை அணைத்துக் கொண்டாள். தனவந்தியும், மகளை ஆரத் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டாள். தனவந்தி நீண்ட நேரம் மகளை அணைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து மித்ரோ, “கொஞ்சம் அன்பை மருமகள்களுக்கும் மீதி வையுங்கள் அம்மா” என்று கேலி செய்து சிரித்தாள்.ஜன்கோ சந்தோஷமாக அண்ணிகளையும் தழுவிக் கொண்டாள். சின்ன அண்ணி கண்ணில் படாததைப் பார்த்த ஜன்கோ, “அண்ணி நன்றாகத் தானே இருக்கிறாள் அம்மா? அண்ணியும் கண்ணில் படவில்லை, அண்ணன் குல்ஜாரியும் கண்ணில் படவில்லையே என்று கேட்டாள்.

மித்ரோ மர்ஜானி 6

This entry is part 6 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தனவந்திக்கு சர்தாரியின் நினைவு வரவே, ஒரு நொடியில் அவளுக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது. அவன் தான் கண்டிப்பாக எதையோ சொல்லி இவளை காயப்படுத்தி இருப்பான்! அன்று கணவனின் அறையில் கேள்வி பதிலாகவும் விசாரணையாகவும் நடந்த நிகழ்ச்சி, ஒரு வேளை தினமும் தொடர்கிறதோ? தன்வந்தி கனிவான குரலில், “மகளே எனக்கு எல்லாம் புரிகிறது. எல்லாவற்றுக்கும் என் புத்தி கெட்ட மகன்தான் காரணம். சின்னச்சின்ன விஷயங்களையெல்லாம் பெரிதுபடுத்தி, சண்டை போட்டு, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பான்!” என்றாள்.இதைக் கேட்ட மித்ரோ, கண்களில் கோபம் கொப்பளிக்க, அடிபட்ட சிங்கம் போல கர்ஜித்தாள்.”வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதால் ஒரு பயனும் இல்லை. அம்மாவும் மகனும் சேர்ந்து, என் தோலைச் சீவி, என்னைக் கண்டதுண்டமாக வெட்டி ஊறுகாய் போட்டு விடுவது தானே” என்றாள்.

மித்ரோ மர்ஜானி – 7

This entry is part 7 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தனவந்தி சமையல் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். பாலை சுண்டக்காய்ச்சி, ஊதி அதை ஒரு லோட்டாவில் ஊற்றி, புடவை தலைப்பால் மூடிக்கொண்டு மருமகள் சுஹாகின் அறையை நோக்கி நடந்தாள். ஜன்னல் வழியாக அறையிலிருந்து விழுந்த வெளிச்சத்தை பார்த்து தாயின் மனம் பெரிதும் மகிழ்ந்தது. கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள். கட்டிலில் படுத்திருந்த மருமகளைப் பார்த்து பூரித்துப் போனாள். தளர்ந்திருந்த மேல் சட்டையில் வெளிறிய முகத்துடன் படுத்திருந்த மருமகளை பார்த்ததும், மனதிற்குள்ளேயே இறைவனை கையெடுத்து கும்பிட்டுக் கொண்டாள். மருமகள் சுஹாக்வந்தி மகாராணியை போலல்லவா படுத்திருக்கிறாள்!

மித்ரோ மர்ஜானி – 8

This entry is part 8 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தாயும் மகளும் பேசிக்கொண்டே வராந்தாவைக் கடந்து, விருந்தினர் அறைக்கு செல்வதற்காக மாடியில் முதல் படியில் கால் வைத்தனர். வசந்த காலத் தென்றல் அவளை எங்கோ தூக்கிச் செல்வது போல மித்ரோவுக்கு தோன்றியது. ஆசையிலும் மோகத்திலும் படபடத்த நெஞ்சை ஒரு கையால் பற்றிக் கொண்டு, எதிரில் விரிந்த மாடிப்படிகளையும், கணவன் சர்தாரிலால் படுத்திருந்த அறையின் கதவையும்  மித்ரோ மாறி மாறி பார்த்தாள். அம்மாவை லேசாக தொட்டு, “உன் மாப்பிள்ளை எழுந்துவிட்டார் என்றால்,  இந்த மித்ரோவின் கதி அவ்வளவுதான்” என்று பதட்டத்துடன் கூறினாள்.

மித்ரோ மர்ஜானி – 9

This entry is part 9 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தாயின் புலம்பலை கேட்ட மித்ரோவுக்கு இனம் புரியாத பயம் ஏற்பட்டது. அந்தக் காரிருளில், மூடி கிடந்த ஜன்னல்களையும் வெறிச்சோடி கிடந்த வீட்டையும் பார்த்த மித்ரோவின் கண்களில் மின்னல் ஓடியது போன்ற பிரமை ஏற்பட்டது. வெறிச்சோடிக் கிடந்த வீடு, பூதங்கள் வாழும் மயானத்தைப் போலவும், அழுது புலம்பும் தாய், பசி தாகத்தால் தவிக்கும் ராட்சசியைப் போலவும் அவளுக்குத் தோன்றியது.