ஒரு கணம் அப்பாவின் ஞாபகம் அவனைத் தாக்கியது. பத்து அரிசி மூட்டைகளை அவன் நெஞ்சில் தூக்கி வைத்தது போல விஜயனின் நெஞ்சைச் சுமையாக அழுத்தியது. தொலைப்பேசியில் கடைசியாகப் பேசிய சமயம், “தம்பி, யேங் இல்லேன்னா என்ன ஆகியிருப்போம்? ஒழுங்கா வேலை பாரு” என்று அப்பா சொன்னார். அப்பா இப்பொழுதெல்லாம் அழுவதில்லை, புலம்புவதில்லை என்பதைக் கவனித்தான்.
Tag: தமிழ்ச் சிறுகதைகள்
நடிகன்
அந்தக் கிளப்பில் விளையாடும் ஒரே விளையாட்டு சீட்டாட்டம்தான். அலுவலக நாள்களில் மட்டுமே மாலையில் நடக்கும் கிளப்பில் …. பல்வேறு விற்பனை வரிக் கிளை அலுவகங்களில் வேலை பார்த்தவர்கள்தாம் விளையாட அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் இடது கையிலும், மேஜைக்கு அடியிலுமாக வருவதை வீட்டுக்கு கொண்டு செல்லும் விருப்பம் இல்லாதவர்களாக அலுவலக வளாகத்துக்குள்ளேயே அதைத் தொலைத்து விட வேண்டும் என்று கிளப்புக்கு வந்து கொண்டிருந்தார்கள்.
