சக்கரவர்த்தி அதிரியனுக்கு எப்போதுமே அனைத்தையும் தெரிந்துகொள்வதில் பொதுவாகவே ஆர்வமுண்டு. அத்தகைய மன்னரைப்பற்றிய துல்லியமான செய்திகளையும்; போர் மற்றும் அமைதி விவகாரங்களில் அவர் காட்டிய ஆர்வத்தையும்; செதுக்கப்படும் சிலைகள், அவற்றின் மூலத்துடன் ஒத்திருக்கவேண்டுமென்கிற அவருடைய இரசனை குறித்தும்; அக்காலத்திய கவிதைகள் மற்றும் கட்டுக்கதைகளில் மன்னர் காட்டிய ஈடுபாடுபற்றியும் அறிவதற்கு, வேறு ஆவணங்கள் இல்லாத நிலையில், கருங்கடல் பயணம் சார்ந்து பேரரசர் அதிரியனுக்கு, அர்ரியன் எழுதிய கடிதங்கள் நமக்கு உதவுகின்றன
Author: நாகரத்தினம் கிருஷ்ணா
“அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள்
சக்கரவர்த்தி அதிரியனின் எதிர்காலத்தைப் பற்றிய கணிப்புகளாக நான் எழுதியவை அத்தனையும் தெளிவானவை எனச் சொல்லவியலாது; இருந்தபோதிலும் நம்பகத்தன்மைக்குரிய எல்லைக்குள் இருந்தேன். மனிதவிவகாரங்களில் பாரபட்சமற்ற பகுப்பாய்வு இழைக்கும் தவறுகள், பொதுவாகவே சம்பவங்கள் ஒரே சீராகத் தொடரும்பொழுது, மிகவும் குறைவு. இதற்கு நேர்மாறாக ஊகங்களின் அடிப்படையில் சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்னதாக எப்படி, எவ்வாறென விவரங்கள் மற்றும் திருப்பங்களைச் சொல்ல முனைகிறபோது தவறுகள் அதிகரிக்கின்றன.
“அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 2
எனது கதையின் அச்சாக, அதிரியனுக்குப் பதிலாக புளோட்டினாவைக் கையாளுவது எனக்கு இயலாது. தவிர பெண்கள் வாழ்க்கையென்பது வரையறைக்குட்பட்டது; இரகசியம் காக்கவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகக் கூடியது. ஆணைப்பற்றி எழுதுகிறபோதே சில உண்மைகளை அவனுடைய வாயால் சொல்வதற்கு யோசிக்க வேண்டியுள்ளது.
“அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 1
மூலம் : மார்கெரித் யூர்செனார் தமிழாக்கம் : நா.கிருஷ்ணா குறிப்பு வணக்கத்திற்குரிய நண்பர்களுக்கு, கிரேக்க வரலாற்றின் அடிப்படையில் அதிரியின் நினைவுகள் என்கிற இப்புதினத்தைப் படைத்த மார்கெரித் யூர்செனார் இந்நாவல் உருவாக்கத்திற்கான கூறுகளை ஒன்றிணைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் பிறவற்ரையும் தமது வாசகர்களுடன் பகிர்ந்துகொணடுள்ளார். தமிழ்வாசகர்களுக்கு பயனளிக்கக் கூடுமென்கிற நம்பிக்கையில், நாவலின் ““அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 1″
அதிரியன் நினைவுகள் – 45
மருந்துகளால் எனக்கு எவ்விதப் பயனும் இல்லை என்கிற நிலைமை. கைககால்களில் வீக்கம் கூடியிருந்தது. இப்போதெல்லாம் படுத்து உறங்குவதில்லை ; உட்கார்ந்தபடித் தூங்குகிறேன். மரணத்தின் நன்மைகளில் ஒன்று, அது மீண்டும் படுக்கைக்கு நம்மை அழைத்துச் செல்வதாகும். ஆண்ட்டொனைனஸ(Antoninus) ஆறுதல் படுத்துவது இப்போது என் கையில். எனது பிரச்சினைக்கு, மரணம் சரியானத் தீர்வாக இருக்குமென்கிற எண்ணம் வெகுநாட்களாக என்னிடத்தில் இருப்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன்.
அதிரியன் நினைவுகள் – 44
இருந்தபோதிலும், என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பொய்யான கனவுலகில் திரும்பப் பிரவேசிப்பதை நான் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். கனவுகள்தோறும் ஒரு சில கணங்கள் சில இரகசியங்கள் எனக்குச் சொந்தமானவை. ஆம், நான் தெரிவிப்பதைப் போலச் சில கணங்கள் மட்டுமே சொந்தம் ; பின்னர் அவை என்னிடமிருந்து தப்பிவிடும்.
அதிரியன் நினைவுகள் – 43
இவை அனைத்திற்கும், ஏற்றுகொள்ளப்பட்ட வழிபாட்டு மரபுகளில் தொடர்ந்து ஏற்பட்ட அபரிதமான வளர்ச்சியும், ஒருசில மக்களின் இச்சகப் போக்கும், அரசு மானியங்களை எதிர்பார்க்கிற சில சமயக்குருமார்களின் கேவலமான நடவடிக்கைகளுமே காரணமாக இருக்கக்கூடும். சோகமும் இனிமையும் கொண்ட ஆண்ட்டினூஸ் முகம் பாமர பக்திகாரணமாக ஏழைகளுக்கும், நலிந்தோர்க்கும் சகாயத்தின் வடிவம் ; தங்கள் பிள்ளைகள் இளம்வயதில் பறிகொடுத்த ஒரு சிலருக்கு அவன் முகம் ஆறுதலையும் தருகிறது
அதிரியன் நினைவுகள் – 42
எனது தற்கொலைக்கு உதவக்கூடிய ஒரு நல்ல கூட்டாளியைத் தேடினேன். கடந்த கோடையில், தான் இல்லாதபோது எனக்கு மருத்துவம் பார்க்க ஹெர்மோஜேனெஸ் அலெக்ஸாந்திரியாவைச் சேர்ந்த ஓர் இளம் மருத்துவரைத் தெரிவு செய்திருந்தார் ; பெயர் ஐயோலாஸ் ; அவனிடம் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தேன். அவனும் நானும் அவ்வப்போது கூடிப் பேசுவோம். பொருட்களின் இயல்பு மற்றும் தோற்றம் பற்றிய கருத்தியங்களை இந்த இளம் மருத்துவனிடம் சேர்ந்து கட்டமைப்பதில் எனக்கு உண்மையில் மகிழ்ச்சி. அவனிடமுள்ள துணிச்சலும், கற்பனையும், ஆழமான கண்களில் கனல்போல எரிகிற உற்சாகமும் எனக்கு விருப்பமானவை.
அதிரியன் நினைவுகள் -41
கடலோரக் காவல்படைகளை ஆய்வு செய்தேன். கடமையில் நேர்மை, துருப்புகளுக்கு அளித்த பயிற்சியில் புதிய முறை,பொறியியல் வேலைகளின் தரம் ஆகியவற்றிற்காக அவர்களின் தளபதிகள் மிகச்சிறந்த பாராட்டுதலுக்கு உரியவர்கள்…… நன்கு அறியப்படாமலும், பராமரிப்பின்றியும் கிடந்த கடலோரப் பகுதிகளெங்கும், கள ஆய்வைமேற்கொண்டு தேவையெனில் எனக்கு முன்பாகப் பயணம்செய்த கடலோடிகளின் குறியீடுகளைத் திருத்தவும் செய்தேன்
அதிரியன் நினைவுகள் – 40
லூசியஸ் ஒருபோதும் கேள்விகளை எழுப்புவதில்லை; பதிலாக என் சிந்தனைக்குள் பிரவேசித்திருந்தான். எனது அசைவுகள் ஒவ்வொன்றையும் அவனுடைய கண்கள் பின்தொடர்ந்தன. இரண்டாவது முறையாக அவனைக் கான்சல் ஆக நியமித்தேன். ஆனால் இம்முறை அப்பணிகளைத் தம்மால் நிறைவேற்ற முடியுமாவென்கிற அச்சம்,. என்னை விரக்தியடையச் செய்கிறோம் என்கிற வேதனை அவனுடைய உடல் நிலையை மோசமாக்கியது
அதிரியன் நினைவுகள் – 39
எனது மனைவி பாலட்டைனில் உள்ள அவளுடைய இல்லத்தில் இறந்திருந்தாள்; தீபுரைக்காட்டிலும் அவள் விருப்பம் தொடர்ந்து பாலட்டைனாக இருந்தது; அவளுக்கு முக்கியமென நினைத்த ஸ்பெய்ன் நண்பர்கள், உறவினர்கள் என்கிற சிறு சுற்றத்தோடு அந்நகரில் வசித்து வந்தாள். வார்த்தைகளில் கவனம், மரியாதை, புரிந்துகொள்ள எடுக்கும் பலவீனமான முயற்சிகள் அத்தனையும் படிப்படியாக விலகிக்கொள்ள எங்கள் உறவில் பகையும், கோபமும், மனக்கசப்பும் தலைகாட்டின; அவளும் தன் பங்கிற்கு கடும் வெறுப்பைப் பிரயோகித்தாள்.
அதிரியன் நினைவுகள் – 38
ஒரு சராசரி மனிதனாக இருந்த காலத்தில், சேபைன்ஸ்(Sabines) மலைகளின் அடிவாரத்தில், நீர்க்கரையோரம் பரந்துகிடக்கும் இந்நிலங்களை ஒன்றன் பின்னொன்றாக வாங்கிச் சேர்த்தேன், விவசாயி ஒருவன் தளராத பொறுமையுடன் தனது திராட்சைத் தோட்டத்திற்கு வேண்டிய நிலத்தை வாங்கி முடித்ததுபோல; பின்னர், இராச்சிய விவகாரங்கள் தொடர்பான இரு பயணங்களுக்கிடையில் கொத்தனார்கள், கட்டிடக்கலைஞர்கள் ஆகியோர் பிடியில் சிக்கி இச்சிறியகாட்டில் நான் தங்க நேர்ந்தது; ஆசியக் கண்டத்தின் அனைத்துவகையான மூடநம்பிக்கைகளிலும் திளைத்திருந்த ஓர் இளைஞன் பயபக்தியுடன், மரங்களைக் காப்பாற்றக் கேட்டுக்கொண்டான்.
அதிரியன் நினைவுகள் – 37
இராணுவத் தலைமை அதிகாரிகளோடு, ஏற்பாடு செய்திருந்த கலந்தாய்வுக் கூட்டமொன்றில் என் மூக்கில் இரத்தம் கசிந்தது ; ஆரம்பத்தில் அவ்வளவாக நான் அதைப் பெரிதுபடுத்தவில்லை, ஆனால் இரவு உணவின்போதும் தொடர்ந்து ஒழுகியது ; அன்றிரவு கண்விழித்தபோது இரத்தத்தில் நனைந்திருந்தேன். அருகிலிருந்த கூடாரத்தில் செலெர் படுத்திருந்தான், அவனை அழைத்தேன்; அவன் என்னுடைய மருத்துவர் ஹெர்மோஜேனெஸிடம் உடனடியாக இப்பிரச்சினையைக் கொண்டுபோனான்,
அதிரியன் நினைவுகள் – 36
நம்முடைய தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஒரு நீண்டகாலப்போரின் பாதிப்பை எதிர்கொள்ள சக்தி இன்றில்லை; நம்முடைய இன்பவிரும்பிகளுக்கு, தற்போது மகிழ்ச்சி கசக்கிறது. ஒழுக்கநெறிகளை எளிமைபடுத்துதலும், சிந்தனைகளில் முன்னேற்றமும், கடந்தநூற்றாண்டில் நல்லெண்ணங்கொண்ட சிறுபான்மையினரின் பணியாக இருந்துள்ளது; இன்றைக்கும் வெகுசனமென்பது அறியாமையில் உழலும் மக்கள்;முடிந்தபோது தங்கள் கடுஞ்சினத்தை வெளிப்படுத்துகிறார்கள்
காட்டுப்பன்றி இலச்சினையை நாட்டுப் பன்றியெனத் தவறாகப் புரிந்துகொண்டு…
காட்டுமிராண்டியான மித்திரா(Mithra)வுக்குத் தான் அப்பல்லோ கடவுளின் சகோதரர் என்கிற நினைப்பு உண்டு. ஒரே தெய்வமென்கிற கருத்தியத்தின் குறுகிய எல்லைக்குள் உண்மையை முழுமையாகப் பூட்டிவைத்து, அனைத்துப் பண்பையும் உள்ளடக்கிய கடவுளின் பன்முகத்தமையை அவமதிக்கும் ஆணவம் இஸ்ரேலியரிடம் மட்டுமே இருந்தது, இதனை உலகில் வேறுமக்களிடம் காணமுடியாது;
இரத்தம் வரும்வரைத் தனதுடலைச் சொறிந்துகொள்ளும்…
சமீபத்தில் கப்படோசியாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அர்ரியன் சமர்ப்பித்த அறிக்கை, காஸ்பியன் கடலோரமுள்ள சிறு இராச்சியத்தை ஆண்டுகொண்டிருந்த பராஸ்மன்ஸ்(Pharasmanès) மீது குற்றம் சாட்டியிருந்தது. இவர், மன்னர் திராயான் காலத்தில் உரோமானிய அரசுக்கு விசுவாசமாக இருக்கத் தவறி, பெரும் இழப்பை ஏற்படுத்தியிருந்தார் ; அதைத் தற்போதும் தொடர்வதாக அறிக்கை தெரிவித்தது.
அதிரியன் நினைவுகள் – 33
ஏதென்ஸின் அரசியல் சாசன வித்தகரான கிளிஸ்தனீஸின்(Clisththenes) பழைய குடியரசு அரசியல் சட்டங்களைத் திரும்பக் கொண்டுவந்ததாக அதைக் கருதமுடியும். அரசு ஊழியர்களின் எண்ணிக்கைக் குறைப்பு, அரசாங்கத்தின் பொதுச் செலவு சுமைகளைக் குறைக்க உதவியது; நிலக்குத்தகை வரியைத் தடைசெய்தேன் ; பெரும் கேட்டினைத் தரக்கூடிய இவ்வரிமுறை துரதிஷ்ட வசமாக இன்னமும் ஒரு சில உள்ளாட்சி நிர்வாகங்களில் பயன்பாட்டில் இருந்தது. அக்காலக்கட்டத்திலேயே பல்கலைக் கழங்களுக்கு அடிக்கல் நாட்டியதும், நிறுவியதும் ஏதென்ஸ் நகரை ஒரு முக்கியக் கல்வி மையமாக மாற்ற உதவியது.
அதிரியன் நினைவுகள் – 32
எலியூசிஸில் எனக்குத் தீட்சையளித்த பூசாரிப் பெண்மணியுடன் பலமுறை « ஆண்ட்டினூஸ் வழிபாட்டுமுறைகள் » ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக விவாதித்து விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டன; அப்பெண்மணியின் பெயர் பற்றிய ரகசியம் காக்கப்படவேண்டும் என்பதால், இங்கே அதைக் குறிப்பிட விருப்பமில்லை. எலியூசிஸ் நகரில் மிகச் சிறந்த குறியீடுகளெனக் கருதப்பட்ட ஒவ்வொன்றும் தொடர்ந்து எனக்கு அமைதியைப் பருக வாய்ப்பளித்தன. இவ்வுலகு பொருளற்றது
அதிரியன் நினைவுகள் -31
கல்லறைக்கான இடத்தை தேர்வுசெய்வதில் எனக்கு இன்னமும் தயக்கமிருந்தது. நாடெங்கும் இறந்தவனுக்காக, அவனைத் தெய்வ நிலைக்கு உயர்த்தும் சடங்குகள் ; இறுதிச்சடங்கினை முன்னிட்டு விளையாட்டுகள், நினைவு நாணயங்களை அச்சிடுதல், பெதுவெளிகளில் சிலைகளை வைத்தல் முதலான ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டபோது, ரோம் நகருக்கு மட்டும் விதிவிலக்களித்தேன் ; காரணம், ரோமுக்குச் சொந்தமில்லாத மனிதர்களைப் பிரியத்துக்கு உகந்தவர்களாகக் கொண்டாடுகிற எந்தவொன்றும் நகரில் பகையை அதிகரிக்கும் என்கிற பயம் எனக்கிருந்தது. அன்றியும், இக்கல்லறைக்கு நிரந்தரமாக காவலிருக்க என்னாலும் ஆகாது.
அதிரியன் நினைவுகள் -30
அக்கறையுள்ள ஒரு தொழிலாளி உன்னத படைப்பொன்றை மிகுந்த கவனத்துடன் நகலெடுப்பது போல, மூர்க்கத்துடன் என் நினைவிலிருந்து, எவ்வ்த ஒழுங்கிற்கும் இணக்கமற்ற அவனுடைய துல்லிய வடிவை உயர்ந்த அவனுடைய மார்பை கவசம் போல உருவாக்க முனைந்தேன், ஆனால் கண்ட பலன் பூஜ்யம். சிற்சில சமயங்களில் படிமங்கள், காட்சிகள் தானாக வெளிப்படும்; அப்படியொரு சூழல், இனிமை வெள்ளத்தில் மிதந்தேன்;
அதிரியன் நினைவுகள் -29
சூரியன் மேற்கில் மறையும் நேரம், கடைசி நீர்த்தேக்கத்தின் விளிம்பில், ஷப்ரியாஸ் மடித்த ஆடையொன்றையும், மிதியடிகளையும் பார்த்தார். வழுக்கும் படிகளில் நானும் இறங்கினேன். சேறு மூடிய உடல் நீரின் அடியில் படுத்திருப்பதுபோல நதியில் கிடந்தது. உடலை எடுத்தபோது பாறாங்கல்போல திடீரென்று கனத்த பேதிலும் ஷப்ரியாஸ் உதவியுடன் உடலைத் தூக்க என்னால் முடிந்தது. அவர் படகோட்டிகளை கூவி அழைத்தார், அவர்களும் கிடைத்த துணியைக்கொண்டு ஒரு தூக்குப் படுக்கையை உருவாக்கியிருந்தார்கள்
அதிரியன் நினைவுகள் -28
இருபத்தாறு வயதில், உரோம் நகர வீதிகளில், வியப்புக்குரிய அவர் அழகை இளைஞர்கள் கொண்டாடியதுண்டு, அந்த அழகில் கிட்டத்தட்ட எதையுமே அவர் இழந்தவரில்லை. தொடர்ந்து அபத்தம், முரண்பாடுகள், மகிழ்ச்சி என்று வாழ்நாளை கழித்த மனிதர். அந்நாட்களில் அவரிடம் கண்ட சுயநலம் இன்று முற்றியிருந்தது. பயணம் மேற்கொள்கிறபோதெல்லாம் தனது தலைமை சமையற்காரரை உடன் அழைத்துசெல்வார்; அவரது தோட்டக்காரர்கள் கப்பலில் கூட அவருக்காக, அரிய மலர்களைக் கொண்டு வியக்க வைக்கும் படுக்கைகளை உருவாக்கினார்கள்
அதிரியன் நினைவுகள் – 27
காதல், உடலைப் பிரிந்த ஒரு ஆன்மாவை மீண்டும் பூமிக்குக் அழைத்து வந்து, தற்காலிகமாக அதற்கு ஒரு உடலைக் கொடுப்பதாகும். அளவில் வேறுபாடுகள் இருப்பினும் இக்கதையின் ஆழம் எங்கள் மனதை நெகிழச் செய்தது. எங்களில் அனேகர் இக்கதையை ஒத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பினர் : சத்தீரஸ் தனது குரு நாவன்மை படைத்த அஸ்பாசியஸை (Aspasius) நினைவு கூர்ந்தார் (இவர் சிஷ்யருக்கு சில வாக்குறுதிகளை அளித்திருந்தார்
அதிரியன் நினைவுகள் -26
மார்க்-ஆண்ட்டனிக்கு அவருடைய இறுதி யுத்தத்திற்கு முன்பாக சில சகுனங்கள் தோன்றின அதுபோல அன்றைய இரவும், காவல் தெய்வங்கள் பணிநேரம் முடிந்து விடைபெறும்போது ஒலிப்பவை என சொல்லப்படுகிற இசை மெல்லமெல்ல விலகிச்செல்வதைக் காதில் வாங்கினேன்… ஆனால் அதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளத் தவறினேன்.
அதிரியன் நினைவுகள் -25
இத்தகைய தருணத்தில் ஒழுக்கவாதிகளுக்கு என்னை வெற்றிகொள்ள ஓர் எளிதான வாய்ப்பு கிடைத்தது. நான் படும் இன்னல்களுக்கு, என்னுடைய மிதமிஞ்சியபோக்கும், நெறிமுறைகளில் நான் இழைத்த தவறுகளும் காரணம் என்பது என்னை விமர்சிக்கும் மனிதர்களின் குற்றசாட்டு. ஆனால் எனக்கோ நெறிமுறைகளில்தவறுதல், மிதமிஞ்சியபோக்கு என்பதெல்லாம் கடினமான விஷயங்கள், அத்தகைய சிரம்ங்கள், அவர்கள் கருத்திற்கு முரண்படும் விஷயத்திலும் இருந்தன. எனது குற்றத்தை, அப்படியொன்று உண்டெனில், கூடுதல் குறைவின்றி திரும்ப பரிசீலிக்க விருப்பம். இக்காலத்தில், தற்கொலை என்பது அடிக்கடி நடக்கும் சம்பவம், அதிலும் இருபது வயதில் இறப்பது பரவலாக நிகழ்கிறது.
அதிரியன் நினைவுகள் – 24
இக்காட்சியை குறைத்து மதிப்பிடாமலிருக்கக் கடுமையாகப் போராடினேன். இன்றைக்கும் எண்ணிப் பார்க்கிறபோது அந்நினைவு எத்தனை வலிமையானது என்பதை உணர்கிறேன். பெரும்பாலான மனிதர்களைக் காட்டிலும் மிகவும் நேர்மையான மனிதன் நான், எனவே இம் மகிழ்ச்சிக்கான ரகசிய காரணங்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன்: மனதின் செயல்பாடுகள் மற்றும் ஒழுக்கங்களுக்கு மிகவும் ஏற்ற இந்த அமைதி, அன்பின் மிக அழகான விளைவுகளில் ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது
அதிரியன் நினைவுகள் -23
நட்பின் அடிப்படையில் அமைத்துக்கொண்ட எனது சந்திப்புகளில் விலைமதிக்கமுடியாததென்று ஒன்றிருக்குமானால் அது நிகோமீடியாவைச் சேர்ந்த அர்ரியன்(Arrian) என்பவருடன் ஏற்பட்ட சந்திப்பு. சுமார் பன்னிரண்டு வருடங்கள் என்னைக்காட்டிலும் வயதில் சிறியவர், இருந்தும் அந்த இளம் வயதிலேயே அரசியல், இராணுவம் இரண்டுதுறையிலும் சாதித்து தொடர்ந்து தமது கௌவுரவத்தை உயர்த்திக்கொள்ளும்வகையில் பணியாற்றி வந்தார்
அதிரியன் நினைவுகள் -22
அந்த முகம் அழகானது, அதில் எவ்வித ஒளிவுமறைவுமில்லை, இருந்தும் அதைப் பற்றி நான் இதுவரை எதுவும் சொல்லாததற்கு, முற்றிலுமாக தன்னை அவனிடம் இழந்திருந்த மனிதனொருவனின் தயக்கமாக இதனை பார்க்கக்கூடாது. எவ்வளவு தீவிரமாக தேடினாலும், நாம் தேடுகின்ற முகங்கள் நமக்குக் கிடைப்பதில்லை, தப்பிவிடுகின்றன, அப்படித் தேடி அலுத்து கிடைத்த கணமொன்றில் கண்டதே அவனுடைய முகம்: கருத்தடர்ந்த தலைமுடியின் கீழ் சாய்வாக ஒருதலை, அதில் கண்ணிமைகளுக்கு இசைவாக நீண்டும், வளைந்துமிருக்கும் விழிகள், இளம் முகமோ அகன்று, அவ்விழிகளுக்கென்று அமைந்ததுபோலவும் இருக்கும்
அதிரியன் நினைவுகள் -21
எனது முன்னிரவு நேரங்களை உடுக்களின் வடிவமாறத்தின் மீதான மனிதப்பார்வையின் போக்கிற்கு அடிக்கடி செலவிட்டபோதிலும், வானியல்கணிதம் மற்றும் எரிநட்சத்திர பேருடல்கள் தரும் தெளிவற்ற ஆருடங்களில் எனது ஆர்வத்தைக் கூடுதலாக உணர்ந்தேன். ஆனாலிந்த கிரகங்களின் தன்மையிலமைந்த மனிதர் வாழ்க்கையின் இவ்விநோதமான மாற்றுப்பாதை பிரச்சினை, எனது உறக்கமற்ற நேரத்தை அடிக்கடி ஆக்கிரமித்திருந்ததால்; வானியல் கணிதத்திலும், எந்த எரிநட்சத்திரங்களின் பேருடல்கள் தெளிவற்ற ஆரூடங்களை முன்வைத்தனவோ
அதிரியன் நினைவுகள் -20
நான் வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான், போரில் வாகைசூடிய நம்முடைய ஆறாவது படையணி பிரிட்டிஷ் பிரதேசத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. ஏற்கனவே இங்கிருந்த நம்முடைய ஒன்பதாவது படைப்பிரிவு வீரர்களில் அனேகர், பார்த்தியர்களோடு நாம் யுத்தத்தில் இருந்த முகாந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு வெடித்த கலவரத்தில் கலிடோனியர்களால் வெட்டுண்டு மடிந்து அவல்நிலையில் இருக்க, இவர்கள் இடத்தில் ஆறாவது படையணி. இத்தகைய அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க இரண்டு நடவடிக்கைகள் தேவைப்பட்டன.
அதிரியன் நினைவுகள் -19
அளவிற்பெரிய இச்சிற்பங்கள் ஒரு முகத்தை மிக அருகில் சென்று பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும். நீள அகலத்தில் கூடுதலாகவும்; தனித்த தன்மையுடனும்; கொடுங்கனவில் வருகிற காட்சிகளாகவும், தோற்றங்களாகவும்; உறக்கம் கலைந்தபின்னும் நினைவில் நிற்கும். வடிக்கின்ற உருத் தோற்றங்களில் அப்பழுக்கற்ற பரிபூரணத்தை வேண்டினேன்; சுருங்கச் சொல்வதெனில், இருபது வயதில் அகால மரணமடைந்த ஒருவனை அவனுக்கு வேண்டியவர்கள் எந்த அளவில் நேசிப்பார்களோ அந்த அளவில் கடவுளுக்கு நிகரான பரிபூரணம்
அதிரியன் நினைவுகள் -18
பலனாக, புத்தம்புது மனிதனாக, பிரம்மச்சாரியாக, ஒரு மிகத்தீவிர பிரம்மச்சர்ய உல்லிஸ்(Ulysse)1 ஆக, குழந்தைப்பேறின்றி, மூதாதையரென்று எவருமின்றி, எனக்குள் ஒர் இத்தாக்கியனாக(Ithaque) இருப்பதன்றி வேறு எதையுமே விரும்பாமல் இருப்பதன் நன்மையையும் அப்போதுதான் உணர்ந்தேன். அடுத்து, எந்தவொரு ஊரையும் முழுமையாக நான் சொந்தம் கொண்டாடியதுண்டா என்றால், இல்லை. அத்தகைய உணர்வுக்கு நான் என்றுமே ஆளானதில்லை
அதிரியன் நினைவுகள் -17
நமது வணிகர்கள் சில சமயங்களில் சிறந்த புவியியலாளர்களாகவும், சிறந்த வானியலாளர்களாகவும், நன்கு கற்றறிந்த இயற்கை ஆர்வலர்களாகவும் இருக்கின்றனர். அதுபோல மனிதர்களைப் புரிந்து நடக்கும் மனிதர் கூட்டத்தில் வங்கியாளர்களையும் நாம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இப்படியான தனித் திறமைகள் எங்கிருந்தாலும் அவற்றை நான் பயபடுத்திக்கொள்வேன். ஆக்ரமிப்புகளுக்கு அல்லது அத்துமீறல்களுக்கு எதிராக ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டிப் போராடியுள்ளேன். கப்பல் உரிமையாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு காரணமாக வெளி நாடுகளுடனான கட்டுப்பாடுகள் தளர்ந்து பரிவர்த்தனை பெருகியது
அதிரியன் நினைவுகள் – 16
வெயில் காயும் நேரத்தில், வீதியொன்றின் திருப்பத்தில் நின்று கிரேக்கர்களின் மலைக்கோட்டையைக் காணும்போதெல்லாம், மிகக் கச்சித்தமாகவும் நேர்த்தியாகவும் அதனுள் கட்டி எழுப்பப்பட்ட நகரம் ஒரு பூத்த மலர்போலவும், அந்நகரத்துடன் இணைந்திருக்கும் மலை தண்டுடன் கூடிய புல்லிவட்டம் போலவும் தோற்றம் தரும். இழப்பீடற்ற அச் செடியை வரையறுக்க ‘ பூரணம்’ என்ற வார்த்தைமட்டுமே பொருத்தமானது. அப்பழுக்கற்ற அவ்வடிவம் பெருவெளியின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில், கால அளவின் ஒரு குறிப்பிட்டத் தருணத்தில்…
அதிரியன் நினைவுகள் -15
தங்கள் உயிருக்கு இனி ஆபத்தில்லை என்பதால் மகிழ்ச்சியுற்ற ஒவ்வொருவரும் இறந்தவர்களை விரைவாக மறந்தார்கள். எனது இரக்கக் குணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது, காரணம் ஒவ்வொருநாளும் வன்போக்கு என்கிற எனது இயல்பான குணத்திலிருந்து விலகி, விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் மென்போக்கை நான் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை புரிந்துகொண்டிருந்தார்கள். எனது எளிமையைப் பாராட்டிய அதேவேளை, அதற்கென்று ஒரு கணக்கீடு இருப்பதாகவும் நினைத்தார்கள். இறந்த மன்னர் திராயானுடைய பெரும்பாலான நற்பண்புகள் அடக்கமானவை; என்னுடையவையோ பலரையும் மிகுந்த வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தன; கூடுதலாக பலரும் எனது குற்றத்தில் ஒருவித செய் நேர்த்தியைப் பார்த்தனர்.
அதிரியன் நினைவுகள் -14
சமாதான நடவடிக்கைகளுக்குப் பிறகு கிளர்ச்சியின் காய்ச்சல்களைத் தணிக்க வேண்டிய அவசியம். எகிப்தில் அதன் வீரியம் மிகவும் அதிகமாக தெரியவர, கூடுதல் துருப்புகள் வரும்வரைக் காத்திராமல் விவசாய போராட்டக்காரர்களுக்கு அவசரகதியில் வரிவிதித்து அவர்களை அடக்க முயற்சித்தேன். எனது தோழர் மார்சியஸ் டர்போவிடம், அங்கு ஒழுங்கை நிலைநாட்டும்படி கேட்டுக்கொண்டேன், அவரும் அப்பிரச்சனையைச் சற்று கடுமையான சாதுர்யத்துடன் கையாண்டு இட்ட பணியை நிறைவேற்றினார்.
அதிரியன் நினைவுகள் – 13
பேரரசர் இறுதியாக ஹத்ராவின்(Hatra) முற்றுகையை நிறுத்திக்கொண்டு, யூப்ரடீஸ் நதியைத் திரும்பக் கடக்க முடிவு செய்தார், அது நிறைவேறாமலேயே போனது. ஏற்கனவே சுட்டெரிக்கும் வெப்பம், இதனுடன் பார்த்தீனிய வில்லாளர்களின் உபத்திரவமும் சேர்ந்துகொள்ள அவர்கள் திரும்பிய பயணம் பெரும்சோதனையாக இருந்துள்ளது. ஒரு சுட்டெரிக்கும் மே மாத மாலையில், நான் நகரத்தின் நுழை வாயில்களுக்கு வெளியே, ஓரோண்டஸ் நதிக்ரையில் நலிவுற்ற நிலையில் பேரரசர், அட்டியானுஸ், மற்றும் அரசகுடும்ப பெண்கள் என்கிற சிறு கூட்டம் காய்ச்சல், பதற்றம், சோர்வு ஆகியவற்றால் பாதித்திருக்க கண்டேன். மன்னர் திராயான் அரண்மனைக்குத் தான் குதிரையில் திரும்பவேண்டுமென தெரிவித்தபோதும், அதற்குரிய உடல்நிலையில் அவரில்லை
அதிரியன் நினைவுகள் – 12
மத்தியகிழக்கு பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு எல்லா இடங்களிலும் திடீரென ஒரேநேரத்தில் பரவியது. யூதவணிகர்கள் செலூசியா(Séluicie)வில் வரி செலுத்த மறுத்தனர். சைரீன்(Cyrène) மக்களும் கிளர்ச்சியில் இறங்கினர். விளைவாக கிழைக்கூறுகள் கிரேக்க கூறுகளை துவம்சம் செய்தன. எங்கள் படைதுருப்புகள் முகாமிட்டிருந்த பகுதிவரை எகிப்து கோதுமையைக் கொண்டுவர சாலைகள் இருந்தன, அவற்றை ஜெருசலத்தைச் சேர்ந்த ஜெலட்ஸ்(Zélotes) என்ற கும்பல் துண்டித்தனர். சைப்ரஸில் குடியிருந்த கிரேக்க மற்றும் உரோமானிய குடிகள் பாமர யூதர்களின் பிடிக்குள் சிக்கி, கிளாடியேட்டர் சண்டைகளில் ஒருவரையொருவர் வெட்டிமடியவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்.
அதிரியன் நினைவுகள் – 11
எனது கணிப்புகள் பொய்த்துவிடும் போலிருந்தன. யூத மற்றும் அரேபிய தரப்ப்பினர் போருக்கு விரோதமாக இருந்தனர்; மாகாணச் செலவதர்களான பெரும் நிலவுடமையாளர்கள் தங்கள் பகுதியைத் துருப்புக்கள் கடந்து செல்வதால் ஏற்படும் செலவினங்களால் எரிச்சலுற்றனர்; படையெடுப்பு காரணமாக விதிக்கப்பட்ட புதிய வரிகளை நகரங்களால் சமாளிக்க முடியவில்லை. பேரரசர் திரும்பிய மறுகணம், இவை அனைத்தையும் தெரிவிக்கின்றவகையில் பேரழிவு ஒன்று நிகழ்ந்தது: டிசம்பர் மாத நடுநிசியொன்றில் ஏற்பட்ட நிலநடுக்கம், அந்தியோக்கியாவின் கால்வாசிப் பகுதியை ஒரு சில நிமிடங்களில் நாசமாக்கியது. ஒர் உத்திரமொன்று விழுந்ததில் திராயான் காயமுற்றிருந்தார், இருந்தபோதும் பேரிடரில் காயமுற்ற பிறருக்கு உதவுவதில் அவர் காட்டிய ஆர்வம் போற்றுதலுக்குரிய அபாரமான செயல். மன்னருடன் இருந்தவர்களில் சிலரும் விபத்தில் மாண்டிருந்தனர்
அதிரியன் நினைவுகள் – 10
ஈரப்பதமான கோடையைத் தொடர்ந்து, பனிமூட்டத்துடன் ஓர் இலையுதிர் காலம், பின்னர் கடுங் குளிர்காலம். எனக்கு மருத்துவம் பற்றிய அறிவு தேவைப்பட்டது, முதலில் என்னை நானே குணப்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லையோரங்களில் நான் வாழ்ந்த வாழ்க்கை மெல்லமெல்ல என்னை சார்மேத்தியினர் நிலைக்கு கொண்டு வந்தது: கிரேக்க தத்துவஞானிக்குரிய குறுந்தாடி, காட்டுவாசிகள் தலைவன் ஒருவனின் குறுந்தாடியாக மாறியது. டேசியர்களுடன் சண்டையிட்ட நாட்களில் என்னவெல்லாம் கண்டேனோ அவற்றைத் திரும்பவும் நானே வெறுக்கின்ற அளவிற்கு திரும்பக் காண நேர்ந்தது. நம்முடைய எதிரிகள் தங்கள் கைதிகளை உயிரோடு எரித்தனர்;
அதிரியன் நினைவுகள் – 9
இவ்விவகாரத்தில் வேறு சில விஷயங்களும் இருக்கின்றன: நானும் தக்க தருணத்திற்கென்று திரைமறைவில் காத்திருக்கும் (நாடக) நடிகன் போல, முன்பின் தெரியாத ஒரு நபர் உள்ளே பரபரப்புடன் தெரிவிக்கும் சங்கதிகளை, குறிப்பாக சலசலவென்று பேசுகிற பெண்களின் குரல்களை, வெடிக்கும் கோபத்தை அல்லது சிரிப்பை, சொந்த வாழ்க்கையின் முணுமுணுப்புகளை, மொத்தத்தில் நானிருக்கிறேன் என்பது தெரியவந்த மறுகணம் அடங்கிப்போகும் ஒலிகளை ஆர்வத்துடன் ஒட்டுக்கேட்பதுண்டு. குழந்தைகள், ஆடைகுறித்த தீராத பிரச்சனைகள், பணத்தைப் பற்றிய கவலைகளென, நான் இல்லாத நேரத்தில் பேசப்படும் பொருள் எதுவென்றாலும் எனக்குத் தெரியக்கூடாத முக்கியமானதொரு விஷயம்
அதிரியன் நினைவுகள் – 8
எனது இராணுவ வெற்றிகள் மன்னர் திராயானைப் போன்ற மாவீரர்களிடத்தில் பகை உணர்வை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. துணிவென்ற மொழியை மட்டுமே உடனடியாகப் புரிந்துகொள்ளக்கூடியவராக அவர் இருந்தார். அதன் சொற்கள் நேரிடையாக அவர் நெஞ்சத்தைத் தொட்டன. என்னைத் தம்முடைய வலதுகையாக, ஏன் கிட்டத்தட்ட ஒரு மகனாகவே கருதினார். அதன் பின்னர் எங்கள் இருவரையும் முழுமையாக பிரிக்கின்ற வகையில் எந்தச் சம்பவமும் குறுக்கிடவில்லை. என்னைப் பொறுத்தவரை, அவரது கருத்துக்களைப் பற்றிய எனது ஆரம்பகால ஆட்சேபணைகளை அவர் இராணுவத்தில் வெளிப்படுத்திய போற்றத்தக்க மேதமையை அறிந்தமாத்திரத்தில் குறைந்த பட்சம் தற்காலிகமாக ஒதுக்கிவைக்க ஆரம்பித்து, பின்னர் மறக்கவும் செய்தேன். கைதேர்ந்த நிபுணர்கள் செயல்படும் விதத்தைக் காண்பதில் எனகெப்போதும் மகிழ்ச்சி.
அதிரியன் நினைவுகள் – 7
எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்ததொரு சம்பவம் கிட்டத்தட்ட சீரழிக்கும்நிலமைக்கு என்னைத் தள்ளியது. விஷயம் இதுதான், அழகான முகமொன்று என்னை வென்றிருந்தது, இளைஞன் ஒருவனிடம் அன்பின் வசப்பட்டு மிகநெருக்ககமாக இருந்தேன், பேரரசர் திராயான் அவனை அறிந்திருந்தார். ஆபத்தான விளயாட்டு என்றாலும்கூட எனக்கது சுவையான அனுபவம். காலுஸ்(Galus) என்ற பெயரில் மன்னருக்கு ஒரு செயலாளர் இருந்தார், நீண்ட காலமாக மன்னரிடம் எனது கடன்கள் பற்றிய தகவல்களை விவரமாக எடுத்துரைத்தும் வந்தார். இந்நிலையில் என்னுடைய சமீபத்திய நடத்தைப் பற்றியும் தெரிவித்துள்ளார். மன்னரின் கோபம் உச்சத்தை எட்ட என்வாழ்க்கையில் மிகமோசமான தருணம் அது. என்னுடைய நண்பர்கள் சிலர், குறிப்பாக அச்சீலியுஸ், அட்டியாயூனுஸ் முதலானோர் ஒன்றினைந்து எனக்காக வாதிட்டு மன்னரை என்மீது கொண்டிருந்த அந்த அபத்தமான வெறுப்பிலிருந்து மீட்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கு முடிவில் அவர் இறங்கியும்வந்தார்.
அதிரியன் நினைவுகள் – 6
இப்படியொரு எண்ணத்திற்கு நான் தள்ளப்பட புதிய அனுபவங்களில் எனக்கிருந்த ரசனையும் ஈடுபாடும் காரணமாகும், விளைவாக காட்டுமிராண்டிகள், மிலேச்சர்கள் போன்றவர்களிடமும் விரும்பிப் பழகினேன். இப்பெரிய பிரதேசம் தன்யூபு மற்றும் போரிஸ்தீனஸ் நதிகளின் முகத்துவாரங்களுக்கு இடையில் அமைந்த ஒரு முக்கோண நிலப்பரப்பு, இதன் மூன்று பக்கங்களில் இரண்டு எனக்கு நன்கு பரிச்சயமானவை. நிலத்தை ஊடுருவிய கடலின் கரையோரங்களில் பிறந்து, இயற்கையாக அமைந்த இப்பகுதியின் தூய்மை, வறட்சி, குன்றுகள், தீபகற்பத்தையொத்த நிலப்பகுதிகள் அனைத்தையும் நன்கறிந்த நமக்கு, உலகின் அதிசயிக்கத் தக்க பிராந்தியங்களில் இதுவுமொன்று என்கிற எண்ணத்தை இப்பகுதி தரும்.
அதிரியன் நினைவுகள் – 5
ஏதன்ஸ் நகரை அடைந்த மறுகணம் என்னுடைய மனதைப் பறிகொடுத்திருந்தேன்; நானோ, பிறர் சந்தேகிக்கிற விரும்பத்தகாத தோற்றம்கொண்ட மாணவன், அங்கு நிலவிய கலகலப்பான சூழல், வேகமாக பரிமாறிக்கொள்ளப்பட்ட உரையாடல்கள், நீண்ட ரம்மியமான மாலைப்பொழுதுகளில் காலாற நடக்கும் தருணம், வேறெங்கும் அறிந்திராத விவாதங்கள், தர்க்கங்கள், ..அனைத்தையும் முதன்முறையாக அங்குதான் சுவைத்தேன். கணிதம், கலை இரண்டுமே சுழற்சிமுறையில் எனது தேடலுகேற்ப தங்கள்பால் அக்கறை கொள்ளவைத்தன. …மருத்துவர் தொழில் எனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும்; அப்பணியின் அடிப்படை அணுகுமுறை, எனது சக்கரவர்த்தி தொழிலுக்கென முயற்சித்துப் பெற்ற அணுகுமுறையை ஒத்திருந்தது.
அதிரியன் நினைவுகள் – 4
என் தந்தை, ஏலியஸ் அஃபர் அத்ரியானுஸ்(Aelius Afer Hadrianus) நல்லொழுக்கங்கள் நிறைந்த மனிதர். தேசம், அரசாங்கம் என அவர் உழைத்தபோதும், பலனடைந்தவரில்லை. செனெட் அவையில், அவர் குரல் எடுபட்டதில்லை. வழக்கமாக நம்முடைய ஆதிக்கத்தின் கீழிருக்கும் ஆப்ரிக்க பகுதி நிர்வாகிகள் செல்வத்தில் கொழிப்பதுண்டு, ஆனால் இவர் அங்கும் எதையும் சம்பாதித்தவரில்லை. திரும்பிய பின் இங்கும் ஸ்பெயின் நாட்டில் நமது கைவசமிருந்த இட்டாலிகா (Italica) நகராட்சியில் ஓயாமல் உள்ளூர் சர்ச்சைகளைத் தீர்த்துவைத்து சோர்வுற்றதுதான் அவர் கண்ட பலன். இலட்சியங்களற்ற மனிதர், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் பெரிதாக அனுபவித்தவரில்லை. பெரும்பாலான மனிதர்களைப்போலவே ஆண்டுதோறும் மேலும்மேலும் நிறமிழந்து, இறுதியில் அற்பவிஷயங்களில் வெறித்தனமாக ஒரு முறைமையைக் கையாண்டு தம்மை சிறுமைபடுத்திக்கொண்டார்.
அதிரியன் நினைவுகள் -3
அனைவரையும் போலவே எனது பணியிலும் மனிதர் இருப்பை மதிப்பிட மூன்று வழிமுறைகள். முதலாவது சுயபரிசோதனை, இது மிகவும் கடினமானது மட்டுமல்ல ஆபத்தும் இதில் அதிகம், இருந்தும் பயனுள்ள வழிமுறை. இரண்டாவது மனிதர்களை அவதானிப்பது. பொதுவில் மனிதர்கள் மொத்தபேரும் அவ்வப்போது இரகசியங்களை பொத்திவைப்பதில் கெட்டிக்க்காரர்கள் என்பதோடு தங்களிடம் அவை கணிசமாக உள்ளதென்பதை பிறர் நம்பவேண்டும் என்பதுபோல அவர்கள் நடத்தையும் இருக்கும். மனிதர் இருப்பை அளவிட நான் கையாளும் மூன்றாவது வழிமுறை புத்தகங்கள், வாசிக்கிறபோது, தீர்க்கதரிசனமாக சொல்லப்படும் வரிகளுக்கிடையில் உணரப்படும் பிழைகளும் எனக்கு முக்கியம். சரித்திர ஆசிரியர்களின் எழுத்துகள் கவிஞர்கள் எழுத்துக்ளைபோல பெரிதாகக் கொண்டாடக்கூடியவை அல்ல.
அதிரியன் நினைவுகள்-2
காதலென்கிற வியத்தகு மனித உறவிற்கு முன்பாக, அதிலும் குறிப்பாக மற்றொரு உடல் மீதான அதன் அவாவிற்குச் சொல்லப்படும் நியாயங்கள் குழப்பமானவை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இப்புதிய மற்றொரு உடலும் குளிப்பாட்டுவது, உணவு தருவது, முடிந்தவரை அதன் இன்னல்களை தவிர்ப்பது இவற்றைத் தவிர பெரிதாக அக்கறைகாட்டாத நமது சொந்த உடலைப் போன்றதுதான், இருந்தும் புதிய உடலின் ஸ்பரிஸத்திற்குத் தவிக்கிறோம். ஏனெனில் இப்புதிய உடல் வேறொர நபரால் இயக்கப்படுகிறதென்கிற எளிமையான காரணம் ஒருபுறம், இன்னொருபுறம் அவ்வுடலில் நாம் காண்கிற வசீகர அம்சங்கள்.
அதிரியன் நினைவுகள்-1
அதிரியன் நினைவுகள் அல்லது Mémoires D’Hadrien, புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியை மார்கெரித் யூர்செனார் (MargueriteYourcenar) என்பவரால் 1951 எழுதப்பட்ட ஒரு வரலாற்று நாவல். ரோமானிய அரசன் தமது முதிர்ந்த வயதில் தமக்குப் பிறகு முடிசூட்டிக்கொள்ளவிருந்த மார்க் ஒரேல்(Marc Aurèle) என்கிற வாலிபனுக்கு எழுதும் மடலாக சொல்லப்பட்டுள்ள இப்படைப்பு ஆசிரியரின் கற்பனை. ரோமானிய பேரரசன் அதிரியன் தனது வாழ்க்கையில் குறுக்கிட்ட அத்தனை அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதாக, விமர்சிப்பதாக நாவல் விரிகிறது. 2002ஆம் ஆண்டு நார்வே இலக்கிய வட்டம் எக்காலத்திலும் வாசிக்கப்படவேண்டியவையென உலகின் 54 நாடுகளைச் சேர்ந்த மிக முக்கிய 100 படைப்புகளை பட்டியல் இட்டுள்ளது, அவற்றில் இந்நாவலும் ஒன்று
அவள்
தலையில் ஏதோ எறும்புகள் ஊர்வதுபோல பரபரப்பு. கண்களைத் திறந்து பார்த்தார். வெயில் பாதங்களைத் தின்று கொண்டிருந்தது. மணி காலை ஒன்பது. வேலைக்காரி வருவதாக இல்லை. பால் இருக்கிறது, காப்பிப் பொடியும் இருக்கிறது. அப்படியே அவள் நேரத்திகு வந்து காப்பிப் போட்டாலும் வாயில் வைக்க சகிப்பதில்லை. மெள்ள இருகைகளையும் சாய்வு நாற்காலி கைப்பிடியில் ஊன்றி எழுந்தார். மெள்ள அடுப்படியை நோக்கி நடந்தார்.
