உ.சு.வா

உரிமைக்குரல் பார்க்க காலையில் அப்ஸரா பார்பர் ஷாப்பில் தினத்தந்தி படிக்கும் போதே முடிவு செய்து விடுவான். ‘என்னைக்கு பரிட்சைக்கு போகாம படகோட்டிக்கு போனானோ, அன்னைக்கே இந்த தாயளி வெளங்க மாட்டான்னு நான் முடிவு பண்ணிட்டெம்லா?’ தனது தகப்பனார் லெட்சுமண பிள்ளையின் வழக்கமான ஏச்சுக்கள் கபாலி மாமாவின் காதுகளில் மோதி மறுபடியும் பத்திரமாக அவரிடமே திரும்பிச் சென்றன. கபாலி மாமா நாளுக்கு நாள் எம்.ஜி.ஆரிடம் நெருங்கிக் கொண்டேதான் இருந்தான்.

காகித உலகம் – அனிமேஷன் படம்

பராகுவேயைச் சேர்ந்த ஜோக்வின் பால்ட்வின் (Joaquin Baldwin) லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அனிமேஷன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது உருவாக்கிய Papiroflexia என்ற அனிமேஷன் குறும்படம் இது. இயந்திரமயமாகி வரும் உலக வாழ்க்கையை வெகு அழகாகக் காட்சிப்படுத்திய இப்படம் யாருமே எதிர்பாராத வகையில் 2008-ஆம் ஆண்டின் கான் திரைப்படவிழாவின் இறுதிச்சுற்றுக்குச் சென்றது. “காகித உலகம் – அனிமேஷன் படம்”

அட்டவணையில் இடம் கோரும் குண்டுத்தனிமம்

திடீரென்று இப்படி ஒரு கட்டுரையை சொல்வனத்தில் எழுதுவதற்குக் காரணம், ஒரு புதிய தனிமத்தைக் கண்டுபிடித்திருக்கிறோம் என்று ஒரு ஆராய்ச்சிக்குழு சொல்லியிருக்கிறது. அந்தப் புதிய தனிமத்தின் அணு எண் 117. அமெரிக்க, ரஷ்ய விஞ்ஞானிகள் கூட்டாக வேலை செய்த இந்தக் குழு, ரஷ்யாவில் இந்த கண்டுபிடிப்பை நடத்தியிருக்கிறது.

அகிரா குரோசவா – நூற்றாண்டுக் கலைஞன்

அகிரா குரோசாவின் திரைப்படங்களின் மிகவும் முக்கியமான சிறப்பம்சம் காட்சிகளின் அமைப்புகள். அவரது காட்சியமைப்புகளில் இரண்டு பிராதன அம்சங்கள் – ஒன்று நிலப்பரப்பு குறித்த காட்சியமைப்பு; இரண்டாவது ஒரு கதாபாத்திரம் போலவே வந்து போகும் காலம்.

மேல்கோட்டையில் ஒரு நாள்

ராஜவீதி என்னும் கடைத்தெருவில் திருவிழாக் கூட்டம். முதலில் என் கண்களில் பட்டது இனிப்புக்கடைதான். செங்கலை விடக் கொஞ்சம் பெரிசாக மைசூர் பாக் இருப்பதைப் பார்க்க வியப்பாக இருந்தது. அவரிடம் ஒரு மைசூர் பாக் என்ன கிலோ இருக்கும் என்று கேட்க நினைத்துக் கிட்ட போக உடனே அவர் நான் ஏதோ வாங்க வந்திருக்கும் கஸ்டமர் என்று நினைத்து, நம்ப மாட்டீர்கள், ஒரு பாதி மைசூர் பாக்கை என்னிடம் சாம்பிளுக்குச் சாப்பிடக் கொடுத்தார். பயந்து கொண்டு ஓடிவிட்டேன்.

மகரந்தம்

போர்க்காலத்தில் இரு தரப்பினரும் தமிழர் வாழ் பகுதிகள் முழுதும் எங்கெல்லாமோ கண்ணி வெடிகளைப் புதைத்து இருந்தனர் என்பது நமக்கு ஒரு தகவலாகத் தெரியும், ஆனால் அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு அவை அன்றாடத் தாக்குதல்கள், பெரும் பயம் தரும் ஆபத்துகள், அவர்களைத் தம் வீடுகளருகேயோ, வயல்களிலோ சுதந்திரமாக நடமாடவோ, அவற்றில் உழைத்து வாழ்வாதாரம் தேடுவதோ சாத்தியமில்லாமல் ஆக்கும் பயங்கரங்கள்.

மண்ணை வளர்த்த மாமனிதர்கள்

மண்ணை வளப்படுத்துவதுதான் நலவாழ்வு விவசாயம். ரசாயனம் இட்டு மண்ணைச் சுரண்டுவது நோய் விவசாயம். மண் என்பது வெறும் ரசாயனங்கள் மட்டும் நிரம்பிய பொருள் அல்ல. அது உயிருள்ள, மேலும் உயிரினங்கள் நிரம்பிய ஒரு பொருள். அதை வெறும் ரசாயனச் சத்துகளால் நலமாக வைத்திருக்க முடியாது. அதில் வாழும் உயிரினங்கள் நலமாக இருந்தாலே மண் ஆரோக்கியமாக இருக்கும்.

பொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீரங்கம் வி. மோஹனரங்கன்

நாற்பது வருடங்களுக்கும் மேலாக கவிஞர்களாக உலா வருகிறவர்கள், விருதும் பாராட்டு விழாக்களுமாகத்தான் உலா வருகின்றனர். கவிதை எனச் சொல்லத் தக்க எதுவும் எழுதியறியாதே. அவை கவிதை இல்லை என்று நான் தர்க்கித்து நிறுவ முடியாது. தர்க்கித்தல் விதிகள் சார்ந்தது.

கன்னி வெடி

மனித வெடிகுண்டு தாக்குதலில் பெண்களை உபயோகிப்பது நல்ல பலன்களை(?!) அளிப்பதாக கூறப்படுகிறது. ஒரு ஆண் மனித வெடிகுண்டு சராசரியாக 13 மனித உயிர்களை மட்டுமே கொல்கிறான். ஆனால் ஒரு பெண் மனித வெடிகுண்டு சராசரியாக 21 மனித உயிர்களை கொல்கிறாள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது.

2012 – இல்லாத அறிவியலும், இருக்கும் இறையியலும்

இந்த 2012 உலக அழிவு குறித்த வதந்திகள், கதைப்பின்னல்கள் இத்திரைப்படத்தைக் காட்டிலும் பழமையானவை. அவற்றின் சரடுகள் (pun intended) படு-சுவாரசியமானவை. சுமேரிய க்யூனிஃபார்ம் எழுத்துப் பலகைகளிலும் அப்பண்பாட்டின் சித்தரிப்புகளிலும் ஒரு மர்மமான கிரகம் குறித்து சொல்லப்பட்டிருப்பதாகவும் அது 2003 இல் தோன்றி உலகத்தில் பேரழிவை உருவாக்குமெனவும் பரவலாக நம்பப்பட்டது.

பூச்சுகளற்ற எதார்த்தம், இடரில் நகைப்பு- போலிஷ் கவிதைகள்

இவருடைய பல கவிதைத் தொகுப்புகளும், படித்தவர் மனதில் ஸ்டாலினிய காலத்து அடக்கு முறை ஆட்சியில் மக்கள் பட்ட பெருந்துன்பங்களையும், யூரோப்பின் இருண்டகாலம் எனப்படும் அந்த வருடங்களையும் ஒருக்காலும் மறக்க் முடியாமல் பதிப்பன எனச் சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் பரபரப்பான முழக்கங்கள் நிறைந்த, ஆரவாரிப்புகள் உள்ள கவிதைகள் அல்ல இவருடையவை. அவை அரசியல் கவிதைகளே அல்ல, கவனமான உளவியல் பார்வை கொண்டவை.

துயரில் விளைந்த ஜனநாயகம் – போலந்து

சென்ற வார இறுதியில் – சனிக்கிழமையன்று, போலந்து நாட்டின் அதிபர் லெஹ் கசின்ஸ்கியும், அவருடன் சுமார் 95 போலிஷ் தலைவர்களும், பல முக்கியஸ்தர்களும் பயணித்த ஒரு விமானம் ரஷ்யாவில் ஒரு விமானதளத்தில் இறங்க முயற்சித்தபோது ஏற்பட்ட விபத்தில் இறந்தார்கள். போலந்தின் தற்போதைய அரசின் பல முக்கிய தலைவர்கள் இதில் இறந்தார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தால் பெரிதும் அதிர்ச்சி அடைந்த போலிஷ் மக்கள் மிகவும் ஆத்திரமடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ரஷ்யா ஏதோ சதி செய்து தம் அதிபரைக் கொன்றதாகப் போலிஷ் மக்கள் கருதுகின்றனர் எனத் தெரிகிறது. இது குறித்து மாஸ்கோ டைம்ஸ் என்கிற ரஷ்யப் பத்திரிகையே கூட ரஷ்ய அரசு ஏதோ சதி செய்திருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டு, அந்த சம்பவம் திறந்த ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்று சொல்கிறது.

போலந்தில் சமீபத்தில் ஷேல் எனப்படும் மண்ணடுக்குகளில் எரிவாயு கிடைப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. யூரோப்பின் எரிவாயுச் சப்ளை மீது ரஷ்யாவுக்கு இன்று இருக்கும் இரும்புப்பிடி பயனற்றுப் போய்விடும்.

இணையத்தின் திடீர் சாமியார்கள் – அந்தரங்கம் யாவுமே

விபூதி கொடுத்து உங்களுடைய பிரச்சினைகளை தீர்க்கிறோம் என்று கிடைத்ததை சுருட்டும் சாமியார்களை பற்றி அறிந்து இவர்களை தவிர்க்கக் கற்றுக் கொண்டுவிட்டோம். ஆனால், இணையத்தில் உங்கள் அந்தரங்க விஷயங்களைப் பெறத் துடிக்கும் மோசடிக் கூட்டம் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை.

அங்காடித்தெரு – ஒரு பார்வை – பகுதி 2

இதைப் பார்க்கையிலேயே நமக்குத் தோன்றும் முதற்கேள்வி, இவ்வளவு எளிதாகக் காணக் கிடைக்கும் ஒரு பெரும் சோக நாடகத்தை ஒரு திரைப்படமாக்க தமிழ் சினிமாவுக்கு ஏன் இத்தனை பத்தாண்டுகள் ஆயிற்று என்பதுதான். இப்போதுமே நம் மக்கள் இத்தகைய சினிமாவைப் பார்த்து முழு ஈடுபாட்டுடன் அதைக் கவனிப்பார்களா என்பது குறித்தும் எனக்கு ஐயம் உண்டு.

பட்டம்

இது மூட நம்பிக்கை என்று கருதப்படக் கூடும். எனினும், முழுக்கவும் காரணங்களில்லாமல் இவ்வாறு நம்பப்படவில்லை என்பதே சீனத்தில் பலரும் சொல்கிறார்கள். மைதானத்தில் இறங்கி நல்ல காற்றைச் சுவாசித்துக் கொண்டு பட்டம் விட்டால் உடல் நோயும் மனநோயும் விலகி உற்சாகம் பிறக்கத்தானே செய்தது…

வரம்

ஜெயப்பிரகாஷையும் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அவன் நிறைய கெட்ட வார்த்தை பேசுவான். அவனை மாதிரி யாராலும் குத்துச் சண்டை போட முடியாது. அவன் சட்டை எப்போதும் கிழிந்தே இருக்கும். அதன் வலது புறக் காலர் அவன் வாயில்தான் இருக்கும். அவன் அருகில் சென்றாலே அந்த எச்சில் வாடை அடிக்கும்.