நன்நம்பிக்கையுடன் ஆவலாய் இருந்த மாணவர்களை அவனுக்குப் பிடித்திருந்தது. தன்னை பெயர் சொல்லி அழைக்கும்படியே அவர்களைக் கேட்டுக்கொண்டான். அவர்களும் அப்படியே அழைத்தார்கள் பில்லைத் தவிர. முரட்டுத்தனமான மாஜிமிலிட்டரிக்காரனான பில் அவனை ‘காப்டன்’ என்றழைக்கவே ஆசைப்பட்டான். அவர்களுள் சிலர் இலக்கியத்தை விரும்பிய அளவிற்கு அதை புரிந்துகொள்ளவில்லை என்பதென்னவோ உண்மைதான். அவர்கள் புனைவை சுயசரிதையின் ஓர் திரிபாகத் தான் கற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.
Tag: 108
கருங்காலி
எல்லோரும் மகிழ்ச்சியாக ஒன்று கூடி வாழ்ந்தனர். ஓருவர் அடுத்தவரிமிருந்து அடுத்தவர் அவருக்கு அடுத்தவரிடமிருந்து அவருக்கு அடுத்தவர் அவருக்கு அடுத்தவரிடமிருந்து, கடைசியிலிருந்தவர் முதலிலிருந்தவரிடமிருந்துமாக திருடியதால் யாரும் தோற்கவில்லை. விற்பவரும் வாங்குபவரும் ஏமாற்றுவதென்பது வியாபாரத்தில் தவிர்க்க முடியாததாயிற்று. அரசாங்கம் குடிகளிலிருந்து திருடும் ஒரு குற்ற அமைப்பாய் செயல் பட்டது. குடி மக்களும் அரசாங்கத்தை ஏமாற்றுவதையே குறியாய் கொண்டிருந்தனர். ஏழைகள் என்றும் பணக்காரென்றும் எவரும் இல்லாததால் வாழ்க்கை அமைதியாக சென்றுகொண்டிருந்தது.
கவிதைகள் சொல்லும் (சிறு)கதைகள்
கதை சொல்லுவதில் ஆர்வம் கொண்ட மனிதன் எவ்வாறு அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டான் என்று யோசிக்கிறோம். வாய்மொழியாகவே சிறுகதைகள் வெகுகாலத்திற்கு முன் வழங்கப்பட்டன. பாட்டிகள் சொல்லும் பல கதைகள் இன்றைக்கும் இதற்குச் சான்றாக உள்ளன! உலகில் எல்லா மொழிகளிலும் எழுத்தும் இலக்கியமும் வளரத் துவங்கியதும், கவிதை (அ) செய்யுள் ஒன்றே இலக்கிய வடிவமாகக் கருதப் பட்டிருந்தது. கதை சொல்லும் மனிதன் எவ்வாறு அதைச் சொன்னான்?
