தேளும் – கொஞ்சம் நினைவுகளும்

”பால்மாறாம பயல காளி கோயில் பூசாரிகிட்டக் கூட்டிட்டுப் போயி மந்திரிச்சு தின்னூரு பூசிக் கூட்டிட்டு வா… காளியாத்தா எந்த விஷச் சந்தும் அவன அண்ட விடாமப் பார்த்துக்குவா…..” என்றாள் அம்மி. அம்மா விஷயத்தைச் சொல்லவும் பூசாரி தாத்தாவுக்கு வெலம் வந்து விட்டது. “எந்தப்பய தொட்டான்னு சொல்லும்மா….! எலும்ப எண்ணீடலாம்; வரவர அவனுங்களுக்கு துளிர் விட்டுப் போயிருச்சு…. பத்து நாளைக்கு முன்னால இப்படித்தான் வெள்ளிக் கெழமை பூசையப்ப, ஒரு எளந்தாரிப் பய கோயிலுக்குள்ள ஏறீட்டான்; எறங்குடா, நீயெல்லாம் கோயிலுக்குள்ள கால் வைக்கக் கூடாதுன்னா, இப்ப என்னன்னு சிலுத்துக்கிட்டு நிக்குறான்…. அவனுக்கு நம்ம பயலுக நாலு பேரு சப்போர்ட்டு வேற…. அதான் இந்தக் கழிசடைகள் எல்லாம் கண்ணு மண்ணுத் தெரியாம ஆடுறானுங்க…. யாருன்னு மட்டும் சொல்லும்மா பொலி போட்றலாம் அவனுங்களை……”