ஜஸ்டின் எனும் ஒரு சிறு பெரும்பாத்திரம்

இப்படி யோசித்துக் கொண்டே போகையில் யதார்த்தத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற உங்கள் விழைவு தவிர்க்க இயலாத பல அத்தியாவசிய கதாபாத்திரங்களை உங்கள் முன் நிற்க வைத்திருப்பதை உணர்கிறீர்கள் : கனவான், பாதிரியார், குதிரைக்காரன், கடைக்காரர், சவக்குழி தோண்டுபவன், இப்படிப் பல.. கதையில் பிரயாண விடுதி வருவதால் அதை நடத்துவதற்காக ஒரு விடுதிக்காரரை வைத்திருக்கிறீர்கள்; கதையில் வருபவர்கள் குதிரையோட்டுவதால் கதைக்களத்தில் எங்கேயாவது ஒரு கொல்லன் இருந்தாக வேண்டும். உங்களால் இம்மாதிரியான கதாபாத்திரங்களை  பெரும்பாலும் தவிர்க்க இயலாது – ஒருகால் புனைவில் அவர்களின் இருப்பை நீங்கள் தவிர்க்க முயன்றாலும் கதை எழுதும்பொழுது கருத்தளவிலாவது அவர்கள் உங்களுள் இருந்து கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான தவிர்க்கமுடியாமையும் கட்டுப்பாடும் சில நாவலாசிரியர்களுக்கு உவந்ததாக இருக்கலாம். ஆனால் …

மௌனம்

இசையைப் படைப்பவனுக்கு வயோதிகம் எவ்வளவு கொடூரமானது! முன்னைப் போல் வேகமாக எதுவும் நிறைவேறுவதில்லை. சுயவிமர்சன கண்டனமோ ஸ்தம்பிக்கச் செய்யுமளவிற்கு பூதாகாரமாக வளர்கிறது. புகழ், கைத்தட்டல்கள், அலுவல் சார்ந்த விருந்துகள், அரசாங்கமளிக்கும் பென்சன், விசுவாசமான குடும்பம், கடல்களுக்கு அப்பாலுமுள்ள ரசிகர்கள், இவை மட்டுமே மற்றவர்கள் கண்களுக்கு புலப்படுகின்றன.

ஹெமிங்வேயிற்கு அஞ்சலி

நன்நம்பிக்கையுடன் ஆவலாய் இருந்த மாணவர்களை அவனுக்குப் பிடித்திருந்தது. தன்னை பெயர் சொல்லி அழைக்கும்படியே அவர்களைக் கேட்டுக்கொண்டான்.  அவர்களும் அப்படியே அழைத்தார்கள் பில்லைத் தவிர.  முரட்டுத்தனமான  மாஜிமிலிட்டரிக்காரனான பில் அவனை ‘காப்டன்’ என்றழைக்கவே  ஆசைப்பட்டான். அவர்களுள் சிலர் இலக்கியத்தை விரும்பிய அளவிற்கு அதை புரிந்துகொள்ளவில்லை என்பதென்னவோ உண்மைதான். அவர்கள் புனைவை சுயசரிதையின் ஓர் திரிபாகத் தான் கற்பனை  செய்து கொண்டிருந்தார்கள்.