முகுந்தன்

இவையெல்லாம் படிப்பதற்குக் கஷ்டமாகவே இருக்கும். மகாகொடுமை! ஆனால் இவ்வளவும் உண்மையேயல்லவா? ஏழைத் தீண்டாதாரின் துயரம் இதுதான். உலகத்தில் புண்ணிய பூமியும், தர்ம்ம் என்பதற்குப் பிறப்பிடமுமானது நமது பாரததேசம், அன்பும் தெய்வ பக்தியும், பாவத்தை கண்டு அஞ்சும் குணமும், நம் நாட்டில் வாழும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இயல்பானவை. ஆனால் நீசர் என்று பெயரிட்டு சிலரை ஒதுக்கி வைக்கிறோம். அக்கொடிய வழக்கத்தின் வெப்பத்தில் நமது தர்ம்ம், அன்பு, தெய்வ பக்தி, நல்லொழுக்கம் எல்லாம் எரிந்து சாம்பலாகி வருகின்றன. அவ்வழக்கம் தொலைய வேண்டும், தெய்வம் கொடுக்கும் சுக துக்கங்களை அனைவரும் சமமாகப் பகிர்ந்து அனுபவிப்பதல்லவா தர்ம்ம?சில பேரில் பொறுக்க முடியாத சுமை போடுவது பாவம் அல்லவா?